Monday, December 12, 2011

வானவில்: மயக்கம் என்ன.. உங்களில் யார் பிரபு தேவா..?

பார்த்த படம்: மயக்கம் என்ன


விமர்சனங்கள் நிறைய படித்ததால் அதிக எதிர்பார்ப்பு இல்லை. அதனாலோ என்னவோ படம் ஓகே என்கிற அளவு பிடித்தது. குறிப்பாக தனுஷ் நடிப்பு .. அருமை. தனுஷ் என்கிற நடிகர் நினைவுக்கு வராமல் அந்த பாத்திரம் தான் பெரும்பாலும் தெரிவது ஆச்சரியம் ! ரிச்சாவும் கூட புது முகம் என தெரியாத அளவு நன்கு நடித்துள்ளார். செல்வராகவன் தான் சற்று சொதப்பி விட்டார்.

" Follow your passion " என்கிற நல்ல கருத்தை சொல்ல வந்தவர், நண்பனின் காதலியை இன்னொரு நண்பன் காதலித்து மணப்பதுகெல்லாம் ஏன் போக வேண்டும்? முக்கிய விஷயத்துக்கு இது பெரிய diversion ஆக அமைந்து விட்டது. இப்படி நடப்பதே இல்லை என்பதில்லை. இதையெல்லாம் சினிமாவில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படி முற்போக்காக ( !!) கதை சொன்னவர் கல்யாணம் ஆன பிறகு ஹீரோயின் புடவை மட்டுமே கட்டுவதாக காட்டுவது ஏனோ? அப்போது முற்போக்கு என்ன ஆனது? ஹீரோயினுக்கு அம்மா, அப்பா கிடையாதா? இப்படி இயக்குனரிடம் கேட்க எவ்வளவோ உண்டு.

செல்வராகவன் பழைய படங்களை விட, செக்ஸ் சமாச்சாரங்கள் குறைவாக இருப்பது ஆறுதல். படம் முழுதும் பார்க்க மிக முக்கிய காரணம் தனுஷ் நடிப்பும், GV பிரகாஷின் இசையும் தான் ! இருவரையும் அவசியம் பாராட்ட வேண்டும்.

விகடனில் கம்பனி செக்ரட்டரி படிப்பு குறித்து

விகடனின் யூத் விகடன் இணைய தளம் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. இதில் வீடுதிரும்பலில் வெளியான "அன்னதானம் - சில அனுபவங்கள்" குட் ப்ளாக்ஸ் பகுதியில் வந்துள்ளது.

மேலும் கம்பனி செக்ரட்டரி படிப்பு குறித்து நல்ல பதிவொன்று வெளியாகியுள்ளது. இதிலிருந்து சில பகுதி உங்கள் பார்வைக்கு

"என்ஜினீயரிங் படித்த பிறகும் வேலையில்லாதவர்கள் உண்டு. ஆனால், கம்பெனி செகரட்டரிஷிப் படித்து வேலையில்லாதவர்கள் இல்லை. அது மட்டுமல்ல, இன்னும் எத்தனை பேர் வந்தாலும் இப்படிப்பிற்கு வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது" என்கிறார் தி இன்ஸ்டியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியாவின் தென்மண்டல தலைவர், பி.ரவி.

"இந்தியாவில் கம்பெனி செகரட்டரி தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த படிப்பு பற்றி பல மாணவர்களுக்கு தெரிவதில்லை".

"வீட்டில் இருந்தே இந்த படிப்பை படிக்கலாம். ஆரம்ப நிலை, நிர்வாக நிலை, தொழில் நிலை என்று மூன்று வகையாக இந்த படிப்பு உள்ளன. இளநிலை பட்டம் பெற்றவர்கள், நேரடியாக நிர்வாக நிலை படிப்பில் சேரலாம். மூன்று ஆண்டுகளில் இந்த படிப்பை முடித்துவிடலாம்.இதற்கு ரூ.30 ஆயிரம் மட்டும்தான் செலவாகும். இந்த படிப்பை முடித்தவுடனே, ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் வரை சம்பளம் தர நிறுவனங்கள் காத்திருக்கின்றன".

முழுவதும் வாசிக்க இங்கே செல்லவும்

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு

சென்னையில் கடந்த சில காலமாக கடும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து சில மாதங்களுக்கு முன் ஜூனியர் விகடனில் கட்டுரை வந்தது. அப்போது இண்டேன் நிறுவன அதிகாரிகள் பிரச்சனையை கவனித்து வருவதாகவும், விரைவில் நிலைமை சரியாகும் என்றும் சொல்லி இருந்தார்கள். ஆனால் பல மாதங்களாகியும் நிலைமை சீராக வில்லை. கேஸ் சிலிண்டர் புக் செய்தால் கிடைக்க 45 நாட்களுக்கு மேல் ஆகிறது ! இப்படி ஆனால் என்ன செய்வது? பல வீடுகளில் கேஸ் சிலிண்டர் 30 நாள் போல் தான் வரும். புக் செய்தால் கிடைக்கவே 45 நாள் ஆனால் மக்கள் பாடு எவ்வளவு திண்டாட்டம் என்று பார்த்து கொள்ளுங்கள்.

இவ்வளவு ஆகியும் நம் மக்களிடம் எந்த மாறுதலும் இல்லை. பத்து பேர் சேர்ந்து கடைக்கு முன் கத்துவதில்லை. ஒரு பொது நல வழக்கு பதிவு செய்து இண்டேன் நிறுவனத்தை கோர்டுக்கு இழுக்க வில்லை. பொறுமையின் திருவுருவமாக உள்ளனர் சென்னை மக்கள்.

பலரும் வீடுகளில் இண்டக்ஷன் அடுப்பு வாங்கி உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். சிலிண்டர் டெலிவரி ஆன மறு நாளே அடுத்த சிலிண்டருக்கு புக் செய்து விடுகிறார்கள். இதனால் வேறு டிமாண்ட் அதிகரிக்கும். இந்த பிரச்சனை எப்படி,எப்போது சரியாகும் என தெரியவில்லை.

சேவாக்கின் ரெட்டை சதம்

எந்த விஷயமும் முதலில் செய்வது தான் கடினம். நூறு மீட்டர் ஓட்ட பந்தயத்தை முதலில் பத்து நொடிக்குள் ஓட முடியாது என்று நினைத்தனர். முதலில் ஒரு நபர் ஓடி சாதனை செய்த பின் பலரும் பத்து நொடிக்குள் ஓடி முடித்தனர். அது போல தான் ஒரு நாள் போட்டியில் இருநூறு ரன் என்பது முடியாத காரியம் என நினைத்திருக்க, சச்சின் முதலில் அந்த சாதனை செய்தார். அதனை சேவாக முறியடித்தது அட்டகாசம் ! சேவாக எந்த மேட்ச் ஆடினாலும், அவர் அவுட் ஆகும் வரை போர் அடிக்காமல் நிச்சயம் பார்க்கலாம்.  ஒரு நாள் போட்டியில் 219 ரன்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல. இன்னொரு நல்ல ஓபனிங் பேட்ஸ்மனால் மட்டுமே இந்த சாதனையை முறியடிக்க முடியும்.

சேவாகின் அந்த ஆட்டத்தை பலரும் ரிச்சர்ட்ஸ் உடன் ஒப்பிடுகிறார்கள். ஆம். தவறே இல்லை. ரிச்சர்ட்ஸ் சேவாக் இருவருமே King of Entertainment  தான் !

போஸ்டர் கார்னர்


உங்களில் யாரும் ஆக வேண்டாம் பிரபு தேவா

விஜய் டிவியில் " உங்களில் யார் பிரபு தேவா- சீசன் டூ" ஆரம்பிக்கிறது. இதற்கான விளம்பரம் அடிக்கடி வருகிறது. அந்த பாட்டில் " உங்களில் யார் பிரபு தேவா?" என அடிக்கடி கேட்கும் போதே கடுப்பாக வருகிறது. அவர்கள் நினைப்பது, பிரபு தேவா மாதிரி அடுத்த டான்சர் யார் என்கிற அர்த்தத்தில். ஆனால் பிரபு தேவா என்றால் இப்போது நினைவுக்கு வருவது.. காதலித்து ஒரு பெண்ணை மணந்து கொண்டு, மூன்று குழந்தைகள் பெற்ற பின், அவரை ஒதுக்கி விட்டு, ஒரு நடிகையின் பின் போனது தான். இவர் தான் நமக்கு ஒரு Idol-ஆ? இவரை போல் தான் பிறரும் ஆகணுமா? டான்சர்கள் பிரபு தேவா மாதிரி நன்கு ஆடட்டும். ஆனால் அவரை போல் ஒரு குடும்பத்தை அழிக்க கூடாது என நினைவில் வைத்து கொள்ள வேண்டும். பெண்களின் கண்ணீருக்கு நிச்சயம் எந்த ஒரு மனிதரும் ஒரு நாள் விலை கொடுத்து தான் ஆக வேண்டும் !!

புத்தாண்டு சிறப்பு பதிவுகள்

நம் ப்ளாகில் 2011ஆம் ஆண்டு முடிவதை ஒட்டி பல பதிவுகள் தயாராகி வருகின்றன. சினிமா, பதிவுலகம் என பலவற்றிலும் இந்த ஆண்டை திரும்பி பார்க்கிற பதிவுகள் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு வெளியாகும். 

16 comments:

  1. \\ஹீரோவுக்கு ஒரு சிறு தங்கை உண்டு. \\

    அவரத்தான் சுந்தர் கல்யாணம் பண்ணிக்கிறாரே!!! தூங்கிட்டீங்களா??

    ReplyDelete
  2. நல்ல தொகுப்புக்கள் அருமை

    ReplyDelete
  3. வரப்போகும் பதிவுகள் பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டீர்கள்.
    poster சுவை.
    பிரபுதேவா நடனம் பற்றிய நிகழ்ச்சி என்று சொல்லிவிட்டு, நீங்களே தனிமனிதர் நினைவுக்கு வருகிறார் என்றால் எப்படி? விவரங்கள் எனக்குத் தெரியாது, மன்னிக்கவும். நீங்கள் சொல்வதைப் படித்தால் பிரபுதேவா தன் மனைவி குழந்தைகளை தெருவில் நிறுத்திவிட்டு இன்னொருவரை மணப்பது போல எழுதியிருக்கிறீர்களே? அது உண்மையானால் அந்த மனைவிக்கு சட்ட உதவி உண்டே? அப்படி அல்லாமல், இன்னொருவரைப் பிடித்து முதல் மனைவியை சட்டப்படி பிரிகிறார் என்றால் அதில் என்ன தவறு புரியவில்லையே? வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் எந்த வடிவத்திலும் எந்த நேரத்திலும் வரலாம். இன்னொரு காதலில் இவர் காணும் மகிழ்ச்சி அவருடைய மனைவிக்கும் பொதுவான உரிமை தானே? பிரபலமடையாதவர்கள் செய்யாத எதை இவர் செய்தார்?

    ReplyDelete
  4. வித்யா: அப்படியா? நிஜமாவே சரியா கவனிக்கலை. நன்றி
    **
    நன்றி ராஜா
    **
    அப்பா துரை: தேர்ந்த வழக்கறிஞர் போல் எழுதி உள்ளீர்கள். Very good ! விவாகரத்து செய்வதில் தவறில்லை...அது சரியான காரணத்துக்காக எனும் போது!

    ஒன்றை விட சிறந்த ஒன்று எப்போதுமே இருக்க தான் செய்யும். அப்படி போய் கொண்டே இருந்தால் முடிவும் கிடையாது. நிம்மதியும் இருக்காது. பிரபு தேவாவிற்கு திருமணத்துக்கு பின் வந்த கண் மூடி தனமான காதல் தவிர அவர் மனைவியை பிரிய வேறு காரணம் இருந்தது போல் தெரிய வில்லை. அவர் மனைவியும் இது பற்றி பல முறை அழுது புலம்பி விட்டார். பிரபு தேவா நிச்சயம் தன் மகன்களுக்கு ஜீவனாம்சம் தர தான் போகிறார். அது தந்தை என்கிற இடத்தை நிரப்பி விடுமா? இந்த விவாதத்தை மேலும் வளர்க்க விரும்ப வில்லை. நன்றி

    ReplyDelete
  5. வானவில் அழகாக இருக்கு.

    மயக்கம்-விமர்சனம் அருமை.

    குட் பிளாக்ஸ்-வாழ்த்துக்கள்.

    பிரபு தேவா பற்றிய தங்கள் பார்வை சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
  6. எங்க வீட்லயும் கேஸ் புக் பண்ணிட்டு ரொம்ப நாளா காத்துட்டு இருக்கோம்.

    ReplyDelete
  7. சமையல் கேஸ் தட்டுப்பாடு - தனியார் கேஸ் ஏஜன்ஸிகள் உடனே தருவாங்களாமே? (ஆனா விலை ரொம்ப அதிகமாம்)

    இருந்தாலும், கேஸ் தட்டுப்பாடு, விலையேற்றம் காரணமாக, இண்டக்‌ஷன் அடுப்பு, மைக்ரோவேவ் சமையலையும் பழகிக்கிறது நல்லது. பணம் மட்டுமல்ல, நேரமும் மிச்சப்படும்.

    ஆமா, பிரபு-நயன் கல்யாணம் ஆகிடுச்சா, இனிமேத்தானா? (ரொம்ப முக்கியம்... )

    புத்தாண்டு சிறப்புப் பதிவுகள் - எதிர்பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. விமர்சனம் நல்லா இருக்குங்க.
    குட் ப்ளாக்ஸில் வந்ததற்கு வாழ்த்துகள்.
    போஸ்ட் கார்னர் அருமை.
    உங்கள் சிறப்பு பதிவுகளுக்காக வெயிட்டிங்.

    ReplyDelete
  9. //புத்தாண்டு சிறப்பு பதிவுகள்

    நம் ப்ளாகில் 2011ஆம் ஆண்டு முடிவதை ஒட்டி பல பதிவுகள் தயாராகி வருகின்றன. சினிமா, பதிவுலகம் என பலவற்றிலும் இந்த ஆண்டை திரும்பி பார்க்கிற பதிவுகள் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு வெளியாகும். //

    waiting.. waiting..

    ReplyDelete
  10. விஜய் ரிவியில் "கோடீஸ்வரன்" நிகழ்ச்சிக்கு அறிவிப்பு போடுகின்றார்களே, மறு ஒளிபரப்பா? அல்லது புதிதாக ஆரம்பிக்கப் போகின்றார்களா? யார் நடாத்தப்போகின்றார்கள்?

    ReplyDelete
  11. தொகுப்பு சுவாரசியம்

    ReplyDelete
  12. நல்ல செய்தி தொகுப்புகள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. இந்த கேஸ் பிரச்னை பெரிய பிரச்னையாக இருக்கிறது. கணினி வழிப் பதிவு செய்யும் முறையிலும் ஏகப் பட்ட முறைகேடுகள். அவர்கள் விரும்பினால்தான் அதை அப்ரூவ் செய்ய முடியும்...சோதனை என்று தீருமோ...

    ReplyDelete
  14. பல்சுவை தகவல்கள். அருமை!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    சிந்திக்க :
    "இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

    ReplyDelete
  15. நன்றி மகிழ்ச்சி ராம்வி
    **
    சிவகுமார்: ஆமாங்கோ. சென்னை முழுக்க இந்த தொந்தரவு தான்
    **
    ஹுசைனம்மா : நீங்க இன்டேன் வாங்கிட்டா மறுபடி வேற கம்பனிக்கு மாத்த முடியாது. தனியார் கேஸ் விலை மிக அதிகம் கூட

    பிரபு-நயன் கல்யாணம் இன்னும் நடக்கலைன்னு தான் நினைக்கிறேன். கடல் தாண்டி இருந்துக்கிட்டு என்னா மாதிரி கவலை உங்களுக்கு !! :))
    **
    நன்றி கோவை டு தில்லி மேடம்

    ReplyDelete
  16. நன்றி மாதவா
    **
    வாசகன். கோடீஸ்வரன் நிகழ்ச்சி பற்றி தெரியலை நண்பா.தெரிந்ததும் சொல்கிறேன்
    **
    நன்றி ரிஷபன் சார்
    **
    ரத்னவேல் ஐயா: மகிழ்ச்சி நன்றி
    **
    ஸ்ரீ ராம்: நீங்க சென்னையா என்ன?
    **
    நன்றி தனபால்
    **

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...