சனிக்கிழமை மதியம் ரயிலில் கே. ஆர். பி செந்தில், மெட்ராஸ் பவன் சிவகுமார், Philosophy பிரபாகரன், ஆரூர் மூனா செந்தில், ரமேஷ் (KRP செந்தில் தம்பி) ஆகியோருடன் புறப்பட்டோம்.
ரயிலில் ஏறியது முதல் செம அரட்டை. பதிவர்கள் சேர்ந்தால் வேறென்ன பேச்சு… பதிவுலகம் பற்றி தான் !! பதிவர்கள் அனைவர் பற்றியும் பிரித்து மேய்ந்தனர். நிறைய காமெடியான பதிவுலக அனுபவங்கள் பகிரப்பட்டன. அவையெல்லாம் இங்கு கூறாமல் விடுகிறேன்..எழுதி விட்டால், இனி இது மாதிரி தகவல்கள் நம்மை நம்பி சொல்ல மாட்டார்கள் :))
ரயிலில் சுற்றி இருந்தவர்கள் பலருக்கும் ப்ளாக் பற்றி தெரியாவிடினும் எங்கள் பேச்சை சிரிப்புடன் கேட்டு கொண்டு தான் இருந்தனர். நாத்திகம் -ஆத்திகம் என ஒரு விவாதம் கிளம்பியது. KRP செந்தில் நாத்திகம் பற்றி பேசியதும் அங்கிருந்த இளம் பெண்கள் இருவர் (வயது 52 & 56 ) அவருடன் கார சாரமாகவும் ஆணித்தரமாகவும் கடவுள், விதி பற்றியெல்லாம் விவாதித்தனர். மெட்ராஸ் பவன் சிவகுமார் வக்கீல் ஆகியிருக்க வேண்டியவர். செமையாக argue செய்கிறார். வேறு compartment -ல் இருந்து பாதியில் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்ட ஆரூர் மூனா செந்தில் எதுவும் பேசாமல் இருந்தார்.
"பேருந்து பயணத்துக்கே மூணு பதிவு எழுதினார்.இப்போ ரயில் பயணத்துக்கு எத்தனை பதிவு வர போவுதோ? அவர் இப்போ தலைப்பு தான் யோசிசிட்டுருக்கார். ரயிலில் பெண் பயணிகளுடன் சண்டையிட்ட பதிவர்கள் -ன்னு தலைப்பு வைங்க. ஹிட்ஸ் பிச்சிக்கிட்டு போகும்" ... என ஆரூர் மூனாவை ஓட்டினர்
பதிவர்கள் எது பத்தி பேசினாலும் ஹிட்ஸ், பின்னூட்டம், தலைப்பு மாதிரி சமாச்சாரங்கள் இல்லாமல் பேசுவதே இல்லை. ஐந்து நிமிஷம் பேசினால் இவை எல்லாம் ஓரிரு முறையாவது வந்துடும் !!
மேலும் ரயிலில் மட்டுமன்றி ஈரோடிலும் சாம் ஆண்டர்சன், புரட்சிக்காரன் போன்றவர்கள் பற்றி நிறைய பேச்சு இருந்தது. "அவர் தான் சாம் ஆண்டர்சன் " " ஏம்பா நீதானே புரட்சி காரன்" என்றெல்லாம் அடிக்கடி கேள்விகளும் பேச்சும் இருந்தது
ஈரோடு இறங்கி பல புதிய நண்பர்களை சந்தித்தோம். நான் முதல் முறை சந்தித்த சில நண்பர்கள் பற்றி :
ஈரோடு கதிர்: பல முறை போனில் பேசினாலும் முதல் முறை நேரில் பார்க்கிறேன். மனிதர் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.மிக சிறந்த organizer .
சங்கவி: "அண்ணே அண்ணே" என அன்பை பொழிந்தார். நாங்கள் இருந்த வரை பல முறை எங்களை வந்து பார்த்து எல்லாம் சரியா இருக்கா என கேட்டு கொண்டே இருந்தார். இரவு நெடு நேரம் அணைத்து ரூம்களுக்கும் சென்று பேசியவர், இரவு தூங்கினாரா இல்லையா என தெரியலை... காலையும் எங்களை வந்து எழுப்பினார். இவருடன் நீண்ட நேரம் பேசியதில் ஈரோடு பற்றி நிறைய அறிய முடிந்தது
கோபி ராமமூர்த்தி: இலக்கிய சூறாவளி. பெங்களூரில் வசிக்கும் Chartered accountant . கும்பகோணம் காரர். நேரில் பார்க்க போட்டோ வில் இருப்பது போல் இல்லாமல் வித்யாசமாய் இருந்தார். இது பற்றி சிவகுமார் கேட்க " ஆமாம் அது பழைய போட்டோ. ப்ளாகில் பாதி விஷயம் மிகை படுத்தல் தானே? " என சொல்லி சிரித்தார். குறைந்த நேரமே பேசினாலும் அவர் தொழில், அதன் பின்னணி பற்றி பேசி அறிய முடிந்தது.
ஷர்புதீன் : வெள்ளி நிலா என்கிற இதழ் நடத்துபவர். என்னை பார்த்தவுடன் " உங்க ஹைதராபாத் பயண கட்டுரை அப்படியே எடுத்து நான் புக்கில் போட்டேன் " என்றார். மகிழ்ச்சி தான் ! ஆனா "நம்ம எழுத்தை புக்கில் பாத்தால் இன்னும் மகிழ்ச்சியா இருக்குமே. புக் அனுப்பி இருக்கலாமே " என்றேன். சென்னை பற்றி "மிக நெரிசலான ஊர், அதான் கோவை வந்துட்டேன்; வாழ்க்கையை அங்கு என்ஜாய் செய்ய முடியாது" என்று அவர் சொல்லி கொண்டே போக, " ஒரு கம்பனிய விட்டு கிளம்பும் போது அங்கு உள்ள குறையெல்லாம் சொல்லிட்டு அதுனால தான் போறேன் அப்படின்னு சொல்ற மாதிரி சென்னை விட்டு கிளம்பியதும் அங்க உள்ள குறையை சொல்றீங்க; ஆனா சென்னை பத்தி தப்பா பேசினா, எனக்கு கோபம் வரும்" என நான் சொல்ல செம சண்டை வர போகுது என சுற்றி உள்ளவர்கள் காதுகளை தீட்டினார்கள். ஆனால் நாங்கள் அடுத்து வேறு தலைப்புக்கு தாவி, ஒன்றாய் சேர்ந்து மதிய சாப்பாட்டுக்கு போய் விட்டோம்.
ஸ்ரீ, மதுரை: மதுரையிலுள்ள பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளர் ஆக உள்ளார். பழக இனிமையானவர். அதிகம் பேச வாய்ப்பு இல்லை
தமிழ் வாசி பிரகாஷ்: அனைவருக்கும் தெரிந்த பதிவர். எங்கள் அறைக்கு வந்து நெடுநேரம் நட்புடன் பேசிகொண்டிருந்தார்.
திரும்ப வரும் போது அண்ணன் உண்மை தமிழனும், நானும் காவேரி கணேஷின் நண்பர் அன்பழகன் அவர்களின் காரில் இரவே ஊர் வந்து சேர்ந்தோம்.

நாய் நக்ஸ்: செம ஜாலி ஆன பதிவர். ஏன் இந்த பேர் என்றதுக்கு " நாய் எனக்கு பிடிக்கும். அதனால் முதல் பாதி. நக்கீரன் என் நிஜ பேர், அதை சுருக்கி ரெண்டாம் பாதி" என்றார். விழா மேடையில் "மனோவுக்கு போன் செய்து ஸ்பீக்கரில் போட்டு மைக் அருகே வைத்தார், அப்போது மாணவன் லைனில் வந்து விட்டார்". செம காமெடி ஆக இருந்தது
சீனா ஐயா & அவர் துணைவியார்: சீனா சாரின் மனைவியும் பதிவர் என இதுவரை தெரியாது. அவர் பேசும் போது " சீனா சார் ரத்தம் ஓ நெகடிவ் எனும் அரிய வகை குருப் என்பதால் ஏராளமான முறை ரத்தம் தந்துள்ளார். நள்ளிரவெல்லாம் ரத்தம் கேட்டு போன் வந்தாலும், அலுக்காமல் செல்வார். பத்து பேருடன் பிறந்து சிறு வயதில் படிக்கவே சிரமப்பட்டவர் இப்போது பலரை படிக்க வைக்கிறார்" என்று மேடையில் பேசியது நெகிழ்வாய் இருந்தது.
வானம்பாடிகள் பாலா சார்: பல முறை சந்திக்க நினைத்த நபர். இம்முறை சந்திக்க முடிந்தது. தன் காமிராவில் படம் பிடித்து கொண்டு பிசியாக இருந்தார்

ஆரூர் மூனா செந்தில்: ரயில்வேக்கு செலக்ட் ஆகி சேர காத்திருக்கும் சில மாதங்களில் ப்ளாக் உலகம் வந்ததாகவும் இதில் பல புது நண்பர்கள் கிடைத்துள்ளதாகவும் பேசி கொண்டிருந்தார். எங்க ஊர் காரர்
மெட்ராஸ் பவன் சிவகுமார்: இவருடன் நிறைய பேச, பழக முடிந்தது. புத்தகம் மற்றும் ப்ளாக் நிறைய வாசிக்கிறார் . யாருடைய எந்த பதிவை பற்றி பேசினாலும் அதில் உள்ளதை நன்கு நினைவு வைத்து பேசுகிறார். நைட் டியூட்டி பார்ப்பதால், சனி, ஞாயிறில் எழுதி அப்போதே பதிவு போடுவதாக சொன்னார். வெளி இடங்களுக்கே செல்லாதவன் பதிவுலகம் மூலம் தான் வெளியூர் எல்லாம் வருகிறேன் என்றார். நிறைய தெரிந்து கொள்ளும் ஆர்வமும் நட்பான சுபாவமும் கொண்ட நல்ல இளைஞர்.
Philosophy பிரபாகரன்: எழுத்தில் இருக்கும் நக்கல் நேரில் தெரிய வில்லை. வித்யாசமான ஹேர் ஸ்டையில். பாதி நேரம் முடியை ஒதுக்கி விட்டு கொண்டே தான் பேசுகிறார். தம்பி: Girl friend-க்கு புடவை கிடைத்ததா? :))
C.P. செந்தில் குமார்: மனிதர் துறு துறுன்னு இருக்கிறார். இங்கும் அங்கும் ஓடுகிறார். ஒரு இடத்தில் உட்கார முடியலை. நம்ம ஊர் பதிவர் செமையா கலக்குகிறார் என இவர் தன்னை அறிமுகம் செய்ய மேடை ஏறிய போது ஈரோடு மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நான் இவருடன் அதிகம் பேச முடியலை.
கே. ஆர். பி செந்தில்: ஏற்கனவே பல முறை சந்தித்திருந்தாலும் இம்முறை நிறைய பழக முடிந்தது. பழக மிக இனிமையானவர். எல்லோருக்கும் சேர்த்து டிக்கட் புக் செய்ததுக்கு கூட காசு வாங்கிக்க மாட்டேன் என அடம் பிடிக்குமளவு நல்லவராய் இருக்கிறார். மாறு பட்ட கருத்துகளையும் சண்டை போடாமல் சிரித்தவாறே சொல்கிறார் .
நிகழ்ச்சி பற்றி நிறைவாய் சில வரிகள்:
பதிவு மற்றும் இணைய உலகில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களை கௌரவிக்கும் விதத்தில் விழா நடந்தது. விருது பெற்றவர்களும், அவர்கள் பேசியதும் என் நினைவில் இருந்து :

போட்டோ நன்றி: CP . செந்தில் குமார் |
1. உண்மை தமிழன்: அங்கீகாரம் நிறைய மகிழ்ச்சி அளிப்பதாக சொன்னவர், இதனால் இனி ஒவ்வொரு பதிவும் 25 பக்கத்துக்கு பதில் 50 பக்கம் எழுதுவேன் என்றார் :))
2. ஜாக்கி சேகர்: இவர் மேடை ஏறும் போதும் பேசும் போதும் நிறையவே கை தட்டல்கள். இணையம் மூலம் தான் தனக்கு அனைத்தும் கிடைத்தது என்று கூறியவர் உணர்ச்சி வசப்பட்டு " விமர்சனம் எல்லாம் என் கால் தூசிக்கு சமம்" என்றதும் பதிவர்கள் நாளை தங்கள் பதிவுக்கு சூடான தலைப்பு ரெடி என குறித்து கொண்டனர்.
3. சீனா ஐயா
4. யுவக்ரிஷ்ணா
5. அதிஷா
6. பால பாரதி (சக பதிவர்களால் பதிவரான தனக்கு இந்த அங்கீகாரம் கிடைப்பது மகிழ்ச்சி என்றார்)
7. தேனம்மை லட்சுமணன் (தன் இரு புத்தகங்கள் இவ்வருடம் வெளியாகிறது. அதற்கு உங்கள் ஆதரவு தேவை என்றார்)
8. வெயிலான் (சேர்தளம் நபர்களால் உழைப்பால் தான் இது கிடைத்தது என்றும் அவர்களுக்கும் இப்பரிசு சேரும் என்றும் சொன்னார்)
9. கே. ஆர். பி செந்தில் குமார்: Illegal migration குறித்த sensitive பதிவான பணம் புத்தகத்துக்காகவும், பிற சமூக அக்கறை பதிவுகளுக்ககவும் விருது பெற்றார்
10. ரவிக்குமார் : நாளைய இயக்குனர் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற இளைஞர். "இந்த பரிசுக்கு உரியவனாக என்னை இனி ஆக்கி கொள்வேன்" என்றார் பணிவுடன்.
11. ஜீவ்ஸ், புகை பட கலை, PITS (தமிழில் புகை படக் கலை) நிர்வாகி
12. ஓவியர் ஜீவா
13. சுரேஷ் பாபு
14. இளங்கோவன்
15. மகேந்திரன்
***
ரோடோரம் இருக்கும் மன நிலை குன்றியவர்களையும், முதியவர்களையும் தகுந்த இல்லங்களிலோ, அவர்கள் வீடுகளிலோ சேர்க்கும் மகேந்திரனுக்கு விருது வழங்கப்பட்ட போது, " இது சாதனை அல்ல, இது என் கடமை. உங்கள் அனைவரின் கடமையும் கூட" என்று பேசி நெகிழ வைத்தார்.
பதிவர் செல்வாவின் "மனசு" குறும்படம் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது
விழாவை ஈரோடு கதிர், அருள்மொழி மற்றும் மகுடேஸ்வரன் தொகுத்து வழங்கினர்.
பரிசு பெற்ற ஒவ்வொரு பதிவர் குறித்தும் மிக விரிவான, அழகான குறிப்புகள் தயார் செய்து வீடியோவில் காண்பித்தனர். இதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஈரோடில் ஆண்டு தோறும் புத்தக சந்தை ஏற்பாடு செய்யும் திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பரிசளித்து சிறப்புரை ஆற்றினார். பின் பரிசு பெற்றோர் ஏற்புரை, பதிவர்களின் அறிமுகம் கலந்துரையாடலுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

பரிசு பெற்ற 15 பேர் குறித்த விரிவான தகவல் இந்த பதிவில்
பதிவர் செல்வாவின் "மனசு" குறும்படம் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது
விழாவை ஈரோடு கதிர், அருள்மொழி மற்றும் மகுடேஸ்வரன் தொகுத்து வழங்கினர்.
பரிசு பெற்ற ஒவ்வொரு பதிவர் குறித்தும் மிக விரிவான, அழகான குறிப்புகள் தயார் செய்து வீடியோவில் காண்பித்தனர். இதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஈரோடில் ஆண்டு தோறும் புத்தக சந்தை ஏற்பாடு செய்யும் திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பரிசளித்து சிறப்புரை ஆற்றினார். பின் பரிசு பெற்றோர் ஏற்புரை, பதிவர்களின் அறிமுகம் கலந்துரையாடலுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
திரும்ப வரும் போது அண்ணன் உண்மை தமிழனும், நானும் காவேரி கணேஷின் நண்பர் அன்பழகன் அவர்களின் காரில் இரவே ஊர் வந்து சேர்ந்தோம்.
பரிசு பெற்றவர்களுக்கும் விழாவை சிறப்பாக நடத்திய ஈரோடு நண்பர்களுக்கும் வாழ்த்துகள் !
அடியேனுக்குதான் ஒத்துவரவில்லை சென்னை!!, அடியேனின் இயல்பான குணாதிசயங்கள் வித்தியாசப்பட்டிருப்பின் சென்னை என்ன செய்யும்! எழுபது லட்சபேருக்கு ஒத்து வரும் சென்னை எனக்கு ஒத்துவரவில்லை எனில் என்னிடம்தான் பிரச்சனை என்பதை உணர்ந்தே இருக்கிறேன். சந்தித்ததில் மிக மகிழ்ச்சி மோகன்!
ReplyDeleteநம்பர் பத்திரமா இருக்கில்லே ?
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி தலைவரே..:-))
ReplyDeleteஇதுவரை பதிவர்களின் எழுத்துகளை ரசிப்பேன் வியப்பேன் - பதிவர்கள் பற்றிய தங்களின் கருத்து என்னை மேலும் வியப்படைய வைத்தது/ரசிக்க வைத்தது. சந்திக்கணும் நா நேசித்த எழுத்துகளை எழுதிய பதிவர்களை - உங்களை நினைத்தால் பொறாமையாக இருக்கு - பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅண்ணே தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...
ReplyDeleteஅருமையான தொகுப்பு...
அண்ணே நீங்கள் கேட்டதை மறந்துவிட்டேன் அடுத்தமுறை நிச்சயம் மறக்காமல் கவனிக்கிறேன்...
அண்ணே, தங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்.....
ReplyDeleteஉங்க ட்ரெயின் பயண பகிர்வை இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாமே... ரொம்பவே என்ஜாய் பண்ணிட்டு வந்திங்களாமே.....
வாசிக்க:
ஈரோடு பதிவர் சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...
மிக்க நன்றி அண்ணே...
ReplyDeleteபதிவர்களை பற்றிய சுவையான சுருக்கமான அறிமுகத்துக்கு நன்றி மோகன் குமார்.
ReplyDeleteவிழா நிகழ்வுகளை அருமையாக தொகுத்து எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
பதிவர்கள் பலரை அவர்களின் குணங்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி, இனி அவர்களை புதிதாக சந்திக்கும் பொது இது எனக்கு உதவியாக இருக்கும் நன்றி...!!!
ReplyDeleteஅழகான தொகுப்பு. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல பகிர்வு...
ReplyDeleteஎளிமையான, அழகிய தொகுப்பு. தங்களை சந்தித்ததில் சந்தோஷம் சார்.
ReplyDelete// Philosophy பிரபாகரன், Girl friend-க்கு புடவை கிடைத்ததா? :)//
ReplyDeleteஅவருக்கு பூனை பொம்மைதான் கிடைத்தது!!
பகிர்வு அருமை.
ReplyDeleteஅன்பின் மோகன் குமார் - அருமையான நினைவாற்றல் - அழகான விரிவுரை. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபேசியதைப்பற்றி அதிகம் பதிவு இல்லையே...
ReplyDeleteசிவபார்க்கவி
http://sivaparkavi.wordpress.com/
நன்றி சர்புதீன். உங்க போன் நம்பர் என்னிடம் இருக்கு
ReplyDelete**
எனக்கும் மகிழ்ச்சி சத்யராஜ் (கா.பா)
**
நன்றி மனசாட்சி. தூரம் இருந்து பார்க்கும் போது அழகு தான்
**
சங்கவி: அன்பால் அனைவரையும் கவர்ந்து விட்டீர்கள் நன்றி
பிரகாஷ்: நன்றி. ஒரு பதிவில் முடிக்க நினைத்ததால் சுருக்கமாய் எழுதி உள்ளேன்
ReplyDelete**
நன்றிக்கு நன்றி கே.ஆர். பி செந்தில்
**
நன்றி ராம்வி
**
மகிழ்ச்சி நன்றி சரவணா
நன்றி மனோ
ReplyDelete**
நன்றி பாலகுமார்
**
நன்றி வித்யா
**
நன்றி சிவா. Purchase குறித்த தகவல்களுக்கும்
ராமலட்சுமி: நன்றி
ReplyDelete**
சீனா :ஐயா உங்களையும் தங்கள் துணைவியாரையும் சந்தித்ததில் மிக மகிழ்ச்சி
**
சிவபார்கவி : நன்றி
ஈரோடு வராவிட்டாலும் உங்கள் பதிவில் நிகழ்ச்சி பார்த்த திருப்தி
ReplyDeleteதக தகவென ஒரு பொறாமை எல்லோர் மீதும்!
ReplyDeleteசந்தோஷம் மோகன்குமார்.:)
ReplyDeleteஅண்ணே காலையிலிருந்து வேறுபக்கம் வேலையிருந்ததால் பதிவெழுதி விட்டு ஓடிவிட்டேன். எந்த பதிவையும் வாசிக்கவில்லை. எனவே தான் படித்து பின்னூட்டமிட தாமதமாகி விட்டது. அருமையான கட்டுரையாக வந்திருக்கிறது. சிவாவிடம் சொந்த காரணமாக இனி வரபோவதில்லை என்று பின்னூட்டமிட்டதன் காரணம் தனியாக சொல்லவும். வரப்போவதில்லை என்றதும் எனக்கு கஷ்டமாக இருந்தது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete///ஈரோடு நண்பர்களின் அன்பை உபசரிப்பை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது !///
ReplyDeleteநன்றிங்க...சென்னை நண்பர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
ஈரோடு பதிவர்கள் சந்திப்பு பற்றிய உங்கள் பதிவினைத் தான் எதிர்பார்த்திருந்தேன் மோகன். நாம் 14-ஆம் தேதி சந்தித்த போதே சொல்ல நினைத்தேன்... :)
ReplyDeleteநல்ல தகவல்கள்.....
Sir arumaiyana pathivu. Virivaga thelivaga pakirnthu irukkirirgal. Nanri.
ReplyDeleteTM 8.
சென்னையில் இருந்து உங்க கூடவே பயணித்து ஈரோடு வரை வந்து நிகழ்வில் கலந்து கொண்ட திருப்தியை தந்த பகிரவு,மிக்க நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி!
ReplyDeleteநல்ல தொகுப்பு மோகன்
ReplyDeleteநன்றி!
மிகவும் சிறப்பான தொகுப்பு! பதிவர்களை சந்தித்த விபரங்களை விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteநன்றி.
***********
பரிசு பெற்றவர்களுக்கும் விழாவை சிறப்பாக நடத்திய ஈரோட்டு நண்பர்களுக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்...!
இங்கு (அமெரிக்காவில்) பதிவர் சங்கமம் ஏதாவது நடந்தால் சொல்லுங்கப்பா...நாங்களும் வந்து கலந்துக்கோவும்ல...
ReplyDeleteஆமா, அது என்ன //இளம் பெண்கள் இருவர் (வயது 52 & 56 )// பெண்கள் ஐம்பதை தாண்டினால் இளமையானவர்களா?
சுருக்கமாகவும் தெளிவாகவும் பகிர்ந்து விட்டீர்கள். நீங்கள் புகைப்படங்கள் எடுக்கவில்லையா?
ReplyDeleteமுதல்முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். ஈரோடு பதிவர் சந்திப்பில் எடுத்த போட்டோக்கள், அங்கே இடம்பெற்ற நிகழ்வுகளை பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்தலுக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநன்றி ரிஷபன் சார்
ReplyDelete***
அருணா டீச்சர் : ஏன்?? :))
**
நன்றி வானம்பாடிகள் சார்
***
நன்றி செந்தில். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
***
நன்றி வீடு செந்தில்
நன்றி வெங்கட். சென்னையில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
ReplyDelete**
நன்றி துரை டேனியல்
***
நன்றி ரத்னவேல் சார்
***
நன்றியும் மகிழ்ச்சியும் கோகுல்
***
நன்றி ரவி. வாழ்த்துக்கள்
***
தங்கள் உபசரிப்புக்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் கதிர்
ReplyDelete**
நன்றி அமைதி அப்பா
**
ஆதி மனிதன். சும்மா கலாய்க்க தான் அப்படி சொன்னேன் நன்றி. அமெரிக்காவில் பதிவர் சந்திப்பு நீங்க தான் நடத்தனும் :)) எங்களை இன்வைட் பண்ணுங்க
**
நன்றி ஸ்ரீராம். ஆம் நான் புகை படங்கள் எடுக்கலை
**
நன்றி மகிழ்ச்சி பிரசாத்
அருமையான பகிர்வு மோகன் சார். நேரில் செல்லமுடியாத குறையை போக்கியது உங்க பதிவு. நன்றி நன்றி.
ReplyDeleteகலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள்.
உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தல :-)))
ReplyDeleteமிக்க நன்றி மோகன்.
ReplyDelete