Friday, December 23, 2011

வானவில்: முல்லை பெரியாறு அணை - ரங் தே பசந்தி

பார்த்த படம்: ரங் தே பசந்தி

அமீர்கான் பற்றிய பதிவு எழுதிய போது அவரது இந்த படம் அவசியம் பாருங்கள் என பல நண்பர்களும் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தனர். அது தான் இப்படம் பார்க்க காரணம்.

இங்கிலாந்து நாட்டு பெண் ஒருவர் இந்தியா வந்து விடுதலை போராட்டம் குறித்து ஒரு படம் எடுக்கிறாள். அமிர்கான், சித்தார்த் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் அதில் நடிக்கிறார்கள். நடிக்கும் போது விளையாட்டு தனமாக நடித்தாலும், படம் முடிக்கும் போது தான் சுதந்திர போராட்ட வீரர்கள் மேல் மிகுந்த மரியாதை அவர்களுக்கு வருகிறது. நாட்டில் அரசியல் வாதிகளால் நடக்கும் சில விஷயங்களால் அவர்கள் நேரடியே பாதிக்க பட, சம்பந்த பட்ட அமைச்சரை அவர்கள் கொல்கிறார்கள். ஆனால் இறந்த அமைச்சருக்கு "தியாகி" பட்டம் கிடைக்கிறது. அவர் செய்த ஊழலை அம்பல படுத்தும் போது, மாணவர்கள் நால்வரும் கொல்ல படுகிறார்கள்.

அருமையான படம் ! பார்த்து முடித்ததும் லஞ்சம் சூழப்பட்ட நம் அரசியல் முறை மீது நிறைய கோபம் வருகிறது. அமீர் என்கிற பெரிய ஹீரோ இருந்தும் அனைவருக்கும் சமமான பங்களிப்பு உண்டு. அமீருக்கு ஹீரோயின் இல்லை. டூயட் இல்லை. சித்தார்த்தும் என்னமாய் நடித்துள்ளார் ! நம் மாதவன் கூட குறிப்பிடத்தக்க ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை பார்க்காவிடில் அவசியம் பாருங்கள் !

விகடனில் ராஜூ முருகனின் வட்டியும் முதலும் தொடர்

விகடனில் தொடர்ந்து மண் மனம் கமழும் ஏதாவது ஒரு தொடர் வெளியிடுகிறார்கள். சுகாவின் தொடர் முடிந்ததும், ராஜூ முருகனின் வட்டியும் முதலும் தொடர் ஆரம்பித்து விட்டனர். ராஜூ முருகன் தஞ்சை காரர். சுந்தர சுகன், தஞ்சை பிரகாஷ், தஞ்சை வாசன் என தொடரில் அவர் சொல்லலும் ஆட்களையெல்லாம் நானும் சந்தித்துள்ளேன். இரவு முழுதும் டீ மட்டும் குடித்து விட்டு இலக்கியம் பேசும் நண்பர்கள் அவர்கள். ராஜூ முருகனையும் சந்தித்திருக்க கூடும். நேரில் பார்த்தால் தெரியும் !

சுகா தொடர் வந்த போது திருநெல்வேலி காரர்கள் "எங்க ஆளு பாத்தியா?" என செம ரவுசு விட்டனர். (எங்கேப்பா ராம லட்சுமி மேடம்?) இப்போ எங்க நேரம் !! தஞ்சாவூருன்னா சும்மாவா? அசத்துங்க ராஜூ முருகன் !

டிவி பக்கம்

மக்கள் தொலை காட்சியில் ஒரு நல்ல நிகழ்ச்சி ஞாயிறு மாலை ஒளி பரப்பாகிறது. குடிசை வாழ் குழந்தைகளை நல்ல கடைக்கு அழைத்து சென்று நல்ல துணிகள் வாங்கி தந்து, பின் VGP கோல்டன் பீச் அல்லது MGM போன்ற ஏதாவது இடத்துக்கு கூட்டி சென்று விளையாட வைக்கிறார்கள். அவர்களுக்கு இந்த இடங்களை பார்க்க ஒரு வாய்ப்பு மற்றும் நல்ல உடை கிடைக்கிறது. டிவியில் தங்களை பார்க்கவும் முடிகிறது. நிகழ்ச்சி நடத்துபவர் சுத்த தமிழில் பேச அந்த குழந்தைகள் ஆங்கிலம் கலந்து தான் பேசுவர். அந்த வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தை சொல்லி பேச சொல்வது செமையாக இருக்கும். முடிந்தால் ஞாயிறு மாலை ஆறு மணிக்கு மக்கள் தொலை காட்சியில் இந்த நிகழ்ச்சி பாருங்கள் !

ஆனந்த் SMS கார்னர்

If people criticise you, hurt you or shout at you, dont be bothered. Just remember, in every game, it is the audience who make the noise, not the players.

போஸ்டர் கார்னர் 
முல்லை பெரியாறு அணை


முல்லை பெரியாறு அணை குறித்து கல்கியில் ஞானி மிக எளிமையாக பல விஷயங்கள் சொல்லியிருந்தார். நீங்கள் வாசிக்கா விடில் அதிலிருந்து சில தகவல்கள்:


முல்லை பெரியாறு அணை இருக்கும் இடம் கேரளா எனினும், அந்த அணையை தமிழகத்துக்கு 999 வருட லீஸ் விட்டுள்ளனர். இப்படி தங்கள் மாநிலத்தில் உள்ள அணையில் தமிழகத்துக்கு உரிமை இருப்பது தான் கேரளா காரர்களுக்கு செம கடுப்பு. மேலும் அவர்களுக்கு அரசியல் செய்ய இது ஒரு வாய்ப்பு.

தமிழகம்-கேரளா பிரிக்க பட்ட போது இந்த அணை இருக்கும் இடம் தமிழத்துடன் சேர வேண்டியது. சில அரசியல் குழப்பங்களால் கேரளாவிற்கு போய் விட்டது.

"அணை பலவீனம்" என்கிற பொய்யை கேரள அரசியவாதிகள் நாற்பது ஆண்டுக்கு மேலாக சொல்லி வருகிறார்கள். பல ஆய்வுக்கு பிறகு அறிஞர் குழுக்களும், உச்ச நீதிமன்றமும் இது தவறு என சொல்லியும், இதே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி கேரள மக்களை நம்ப வைக்க பார்க்கின்றனர்.

அணையை நல்ல விதமாக பராமரித்தால் எந்த பிரச்னையும் இல்லை. அணை தமிழகத்தால் மிக நன்றாக பராமரிக்கபடுகிறது.

அணை உடைய வாய்ப்பே இல்லை. அப்படி வாதத்துக்கு சொன்னாலும் அதிலிருந்து வெளியாகும் நீர் மற்றொரு நீர் தேக்கத்துக்கு செல்வது போல் தான் உள்ளது. சுற்றி இருக்கும் கிராம மக்களில் 90 % தமிழர்கள். ஒருவேளை மக்கள் பாதிப்பு எனில் தமிழர்கள் தான் அதிகம் பாதிப்படைவார்கள்.

**
எனக்கு தெரிந்து இதற்கு ஒரே தீர்வு உச்ச நீதி மன்றத்திலிருந்து வரும் தீர்ப்பு தான். ஆனால் கர்நாடகா, கேரளா இரு மாநிலங்களும் உச்ச நீதி மன்ற தீர்ப்பையே தங்களுக்கு எதிராக இருந்தால் என்றும் மதிப்பதில்லை. இப்படி மதிக்காத பட்சம் "நீதிமன்ற அவமதிப்பு" என அரசை டிஸ்மிஸ் செய்ய சொல்லவேண்டும் !


நிற்க. வருகிற ஞாயிறு அன்று மெரினாவில் இது குறித்த கூட்டம் நடக்கவுள்ளது. சென்னை நண்பர்கள் அனைவரும்  கலந்து  கொள்ளவும்

அய்யா சாமி


காலையில் எழுந்ததும் போர்வையை மடிப்பதென்பது அய்யா சாமிக்கு ரொம்ப பெரிய வேலை மாதிரி தெரியும். போர்வையை மடிக்கணுமே என்றே படுக்கையில் இருந்து எழாமல் உருளுவார். எழுந்து விட்டாரென்றால் மிக விரைவாய் அடுப்படிக்கு போய் வேலையில் குதித்து விடுவார் தான். ஆனால் கொஞ்சம் Starting trouble ! நடத்துங்கையா ! வீட்டம்மா கிட்டே பாட்டு வாங்கினா தான் நீர் எல்லாம் திருந்துவீர் !

18 comments:

  1. இங்கேதான் இருக்கிறேன்:)!சரிசரி இப்ப உங்க நேரமே:)!!

    தஞ்சைத் தொடர் வாசிக்கிறேன். ஊர் நினைவுகளைப் பேசும் எந்த எழுத்தும் அவரவருக்கு தம் ஊர் ஞாபகங்களைக் கொண்டு வரும். அதிலும் சொந்த ஊர் என்றால் கதைக்குள் நாமும் இறங்கிப் பயணிப்பது இயல்பே.

    ReplyDelete
  2. இந்த படத்தைப்பார்க்கனும்....

    ReplyDelete
  3. //தஞ்சாவூருன்னா சும்மாவா//

    Repeatu....

    ReplyDelete
  4. ஞானி அருமையாக சொல்லி இருக்கிறார், ஏன் கேரள எழுத்தாளர்களும் இதையேதான் சொல்கிறார்கள், ம்ஹும் அரசியல்பீதிகள் கேட்கனுமே...!!!

    ReplyDelete
  5. தஞ்சாவூர்ல அபபடி என்ன விசேஷம் இருக்குங்கறீங்க...

    ரங் தே பசந்தி ஒரு வழியா பார்த்துட்டீங்க போல...

    ReplyDelete
  6. நன்றி ராமலட்சுமி; நீங்கள் வானவில் முழுதும் படிக்கிறீர்கள் என தெரிகிறது :)). எங்கோ ஒரு பகுதியில் இருந்த உங்கள் பெயரை
    கவனித்து விட்டீர்களே :))
    ***
    நன்றி சங்கவி
    ***
    நன்றி ஆதி மனிதன். ஊர் பாசம் உங்களுக்கும் இருக்கும். ராஜூ முருகன் தொடர் வாசிக்கிறீர்களா?
    **
    ஆம் மனோ. கேரள அரசியல் வாதிகள் அடிக்கிற கூத்து தான் அதிகம் :((
    **
    நன்றி ஸ்ரீராம். நீங்க பார்க்க சொன்ன படம் ஆச்சே ரங் தே பசந்தி !! Thanks for referring this good film.

    ReplyDelete
  7. ராஜு முருகன் வட்டியும் முதலும் இதுவரை படிக்காதவர்களுக்கு நீங்கள் செய்த நல்ல அறிமுகம். படித்து ரசிக்கும் நானும் ‘ஆமா’ என்று தலையாட்டுகிறேன் ஆனந்தமாய்.

    ReplyDelete
  8. //சுகா தொடர் வந்த போது திருநெல்வேலி காரர்கள் "எங்க ஆளு பாத்தியா?" என செம ரவுசு விட்டனர். (எங்கேப்பா ராம லட்சுமி மேடம்?) இப்போ எங்க நேரம் !! தஞ்சாவூருன்னா சும்மாவா? அசத்துங்க ராஜூ முருகன் !//

    அட ஆமாம், எனக்கும் ராஜூ முருகனின் 'வட்டியும் முதலும்' படிக்க ஆரம்பிக்கும் போது ஒரு பெருமிதம் வந்து ஒட்டிக்கொண்டது.

    ************

    ஓசியில் விளம்பரம்.

    கூடா(து) நட்பிற்கு - ஒரு பார்வை!

    .

    ReplyDelete
  9. ரங் தே பசந்தி சிடி இருந்தும் ரொம்ப நாளா பாக்காம இருக்கேன். மக்கள் டிவியில் அந்த நிகழ்ச்சியை அவ்வப்போது பார்ப்பேன். இன்னும் கொஞ்சம் செலவு செய்து பிள்ளைகளுக்கு உதவலாம் ராமதாஸ் அண்ட் கோ. ஞாயிறு மெரீனா செல்கிறோம்.

    ReplyDelete
  10. Anonymous9:26:00 PM

    அண்ணே, உண்மையிலேயே ரங்தே பசந்தி அருமையான படம், நான் படம் வெளியான அன்றே தியேட்டரில் பார்த்தவன். அன்று சத்யமில் நல்ல கூட்டம், படம் துவங்கி ஜாலியாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் படம் முடிந்ததும் வெளியில் இந்தியன் என்ற பெருமிதம் வந்தது பாருங்க, அதனை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது.

    ReplyDelete
  11. நன்றி ரிஷபன் சார். காவிரி கரை ஓரம் இருப்பவர் நீங்கள்.. ராஜூ முருகனின் எழுத்து பிடிக்கவே செய்யும்
    **
    நன்றி திண்டுக்கல் தனபாலன்
    **
    நன்றி ரத்னவேல் ஐயா
    **
    நன்றி அமைதி அப்பா
    **
    நன்றி சிவகுமார். வெளியூர் செல்வதால் ஞாயிறு வருவது கஷ்டம். ரங் தே பசந்தி அவசியம் பாருங்கள்
    **
    செந்தில் நன்றி ஆம் அருமையான படம் அது

    ReplyDelete
  12. 2011 இன் மொக்கை படங்களுக்கு கொஞ்சம் அவசரப்பட்டு விட்டுவிட்டீர்கள் போலுள்ளது. 2011 இன் நம்பர் 1 மொக்கை ராஜபாட்டை

    ReplyDelete
  13. தல அது யாரோ ஒரு பொண்ணு இல்ல தல, படத்தின் கதைப்படி பகத்சிங்கை தூக்கிலும்போது சிறை அதிகாரியாக இருந்தவரின் பேத்தி. அவர் எழுதிய நாட்குறிப்பின் பால் பகத்சிங்மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரைப்பற்றிய ஆவணப்படம் எடுக்க இந்தியா வருகிறாள்.
    :-))

    கழிசல்லபோக, இப்படி திட்டுறத கேட்டு எவ்ளோ நாளாச்சு?ராஜூமுருகன் நம்மாளு... :-)

    ReplyDelete
  14. நல்ல பகிர்வுகள்.

    ReplyDelete
  15. //ராஜூ முருகனின் வட்டியும் முதலும் தொடர்//

    தொடரின் பேரைப் பாத்து, நான் அது ஏதோ ஃபைனான்ஸ் பத்தின தொடரோன்னு நினைச்சு படிக்காம விட்டுட்டேன்... ;-)))))

    //மக்கள் தொலை காட்சியில் ஒரு நல்ல நிகழ்ச்சி//
    ரொம்ப வருஷமாவே இந்த நிகழ்ச்சி நடக்குதுபோல.. எனக்கென்னவோ இதன் கான்செப்ட் பிடிக்கவில்லை. சில மணித் துளி மகிழ்ச்சிக்காக இத்தனை சிரத்தை எடுப்பவர்கள், அவர்களின் நிகழ்கால/ எதிர்கால வாழ்க்கை வளத்திற்காக ஏதாவது செய்தால் நல்லா இருக்கும். (ஒருவேளை பேக்ரவுண்டில் செய்கிறார்களா? செய்தா சொல்லிருப்பாங்களே..)

    //காலையில் எழுந்ததும் போர்வையை மடிப்பதென்பது//
    ஹி. ஹி. ஸேம் பிளட்.... ஆனா, நான் “குடும்பத்தலைவி” என்பதால் எல்லாரையும் மிரட்டி அவரவர் போர்வையை மடிக்கச் சொல்வேன். அப்படியே என்னோடதையும்.. ஹி.. ஹி..

    ReplyDelete
  16. வாசகன்: அப்படியா? நான் இன்னும் ராஜ பாட்டை பார்க்கலை
    **
    நன்றி முரளி; சுருக்கமாய் சொல்ல எண்ணி அதை இங்கு சொல்லாமல் விட்டேன். வரலாறு முக்கியம் அமைச்சரே என நீங்கள் பகிர்ந்தது மகிழ்ச்சி
    **
    நன்றி கோவை டு தில்லி Madam
    **
    நன்றி ஹுசைனம்மா. நான் கூட அந்த தொடர் உங்களை போல் நினைத்து வாசிக்காது இருந்தேன். ஒரு வாரம் படித்ததும் தொடர்ந்து வாசிக்க துவங்கினேன். நீங்களும் படித்து பாருங்கள் .

    போர்வை விஷயத்தில் ஐயா சாமி போலவே இன்னொரு ஆள் இருப்பதை அறிந்து சற்று ஆறுதல் :))

    ReplyDelete
  17. ரங் தே பசந்தி எனக்கும் மிக பிடித்த படம்.
    வட்டியும் முதலும் அவ்வப்போது வாசித்தேன்...ரசித்தேன்.
    சமீபத்தில், சண்டிகர் செல்லும் போது அருகில் ஒரு மலையாள( நண்பர்??) பயணித்தார். சிறிது நேரம் கழித்து பேச ஆரம்பித்ததும்.. நான் தமிழ்- அவர் மலையாளி என்று தெரிய ஆரம்பித்ததும்..இருவருக்கும் ரொம்பவே சங்கடம். நீண்ட மௌனம்...சொல்லிக்கொளாமலே இறங்கி விட்டோம். வெறுப்பு விதை??!! தவிர்க்க சிறிது சிரமமே!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...