போராளி இந்த விஷயத்தை தொடுகிறது என்ற அளவில் நிச்சயம் பாராட்ட பட வேண்டிய படம்.
கதை இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருப்பினும் சுருக்கமாக சொல்கிறேன்.
சசி குமாரும், நரேஷும் எங்கிருந்தோ தப்பி ஓடி வருவதில் துவங்குகிறது படம். சென்னை வரும் அவர்கள் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறார்கள். பகுதி நேர வேலை துவங்கி, அதில் வளர்கிறார்கள். இவர்கள் இருக்கும் காலனியில் பல வித்தியாச நபர்கள் !! அனைவர் மனதிலும் இடம் பிடிக்கிறார்கள் . ஒரு நாள் இவர்களை தேடி ஒரு கும்பல் வர, தப்பி ஓடுகிறார்கள். வந்தவர்கள் அவர்கள் இருவரும் மன நிலை பாதிக்க பட்டவர்கள் என்கிறார்கள். அவர்கள் ஏன் அப்படி ஆனார்கள், அவர்களை அப்படி ஆக்கியவர்களை என்ன செய்தார்கள் என்று மறு பாதி பேசுகிறது.
சுவாதி நடிக்க தெரிந்த நடிகை. சுப்ரமணிய புரத்தை விட ரோல் குறைவு என்றாலும், நடிக்க வாய்ப்புள்ள காட்சிகள் அதிகம். படத்தில் இரண்டு காதல் ஜோடிகள் இருந்தும் டூயட்டே இல்லை என்பது ஆச்சரியம் !
நிறைய காட்சிகள் இருட்டில் எடுத்திருக்கிறார்கள். ஓரளவாவது தவிர்த்திருக்கலாம்.
நாடோடிகளில் இருந்தவர்கள் 90 சதவீதம் பேர் இங்கும் வெவ்வேறு பாத்திரங்களில் வருகிறார்கள். வெளியூர் செல்லும் பேருந்து, மோட்டலில் நிற்கும் இடைவெளியில் இறங்கி ஆடும் பாட்டும் கூட நாடோடிகளை நினைவு படுத்துகிறது.
நிறைய காட்சிகள் இருட்டில் எடுத்திருக்கிறார்கள். ஓரளவாவது தவிர்த்திருக்கலாம்.
நாடோடிகளில் இருந்தவர்கள் 90 சதவீதம் பேர் இங்கும் வெவ்வேறு பாத்திரங்களில் வருகிறார்கள். வெளியூர் செல்லும் பேருந்து, மோட்டலில் நிற்கும் இடைவெளியில் இறங்கி ஆடும் பாட்டும் கூட நாடோடிகளை நினைவு படுத்துகிறது.
வசனம் பல இடங்களில் செம ஷார்ப். "முன்னே பின்னே தெரியாதவனையாவது நம்பிடலாம்....ஆனா இந்த சொந்த காரங்க இருக்காங்களே..." என்பதோடு வசனத்தை முடித்தாலும் தியேட்டரில் விசில் பறக்கிறது. சொந்த காரர்களிடம் பாதிக்க படாதவர்கள் யாருமே இல்லை என்பது தெரிகிறது!
க்ளைமாக்ஸ் முடிந்து கஞ்சா கருப்பு குறித்த சிறு காமெடியுடன் முடியும் வரை யாருமே இருக்கையை விட்டு எழ வில்லை. படம் முடிந்த உணர்வு முழுமையாக வர வில்லை என நினைக்கிறேன். சசி குமாரை கொல்ல அலையும் சொந்த காரர்களை, அவர் முழுதும் கொல்லாமல், பழி வாங்காமல் விடுவதால் இன்னும் காட்சிகள் இருக்கும் என மக்கள் நினைத்தார்களோ என்னவோ?
காலனியில் இருக்கும் ஒரு குடிகாரன் பாத்திரம் ரொம்ப நல்லவராக அமைத்துள்ளனர். இது படம் பார்க்கும் "குடி" மக்களிடம் செமையாக எடுபடுகிறது !
படத்தில் பலருக்கும் அடிக்கடி சொல்ல ஒவ்வொரு டெம்ப்ளேட் டயலாக்.
சசிகுமார்: " உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"
ஞான சம்பந்தன்: " எதுவா இருந்தாலும் நான் தான் முடிவு பண்ணுவேன்"
சூரி " நாங்க எல்லாம் முன்னாடியே செமையா செய்வோம். இப்ப கேட்கணுமா?" (இது சற்று போர் அடிக்கும் அளவு மறுபடி மறுபடி வருகிறது)
கணவன் -மனைவி சண்டை என்றால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தான் துயரம். மற்றவர்களுக்கோ அது செம காமெடி. படவா கோபி- சாண்ட்ரா ஜோடி எப்போதும் சண்டை போட காலனி மக்கள் மட்டுமின்றி நாமும் சிரிக்கிறோம்.
வசந்தரா ப்ளாஷ் பாக்கில் ஒரு Powerful ரோலில் வருகிறார். கொடுத்த ரோலை நன்கு செய்துள்ளார்.
பெட்ரோல் பாங்கில் வேலை பார்க்கும் அந்த புதுமுக பெண் (நரேஷ் ஜோடி) யாரென்று தெரியலை. Simple Beauty !
சுவாதி அருகே இருக்கும் மற்றொரு பெண் தான் நான் சொன்ன Simple Beauty ! |
கஞ்சா கருப்பு மற்றும் சூரி என இரு சிரிப்பு பாத்திரங்கள். படத்தின் சூழலே முதல் பாதி முழுக்க சிரிப்பு அலையை எழுப்பி விடுகிறது.
மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி இடைவேளை விடுகிறார்கள். அதன் பின், இன்னொரு பாதி வரை சரியே கொண்டு சென்றாலும் முடிவில் இன்னும் பன்ச் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
குறிப்பாக இந்த விமர்சனத்தின் முதல் பாராவில் சொன்ன விஷயம். மன நிலை சரியில்லாதோர் பற்றி ஆங்காங்கு சில அருமையான காட்சிகள் வைத்துள்ளனர். கணவனால் ஒதுக்க பட்ட பெண் ஒருவரை பற்றி, அவர் குடும்பத்தினரை சரியாக உணர்ந்து கொள்ள வைப்பது, தெருவில் அலைந்து திரியும் நபருக்கு முடி வெட்டி வேலை தந்து சரியாக்குவது இப்படி நம் மனதை தொடும் காட்சிகள் முதல் பாதியில் உள்ளது. " நல்ல மனுஷங்களை இப்படி பைத்தியம் ஆக்கிடாதீங்க" என க்ளைமாக்சில் கொஞ்சமாவது உரைக்கும் படி சொல்லி இருந்தால் இந்த விஷயம் மனதில் இன்னும் நன்றாக தங்கி இருக்கும்.
முழுக்க முழுக்க இந்த விஷயத்தையே சுற்றி வந்தால் படம் டாகுமெண்டரி போல் இருந்திருக்கும். அஞ்சலி படம் இத்தகைய பிரச்னையை தொட்ட மற்றோர் படம். அதில் பாதி படம் வரை இந்த விஷயத்தை தொடாமல் முழுக்க நம்மை entertain செய்து விட்டு இடைவேளைக்கு பின் தான் இயக்குனர் விஷயத்துக்கு வருவார். ஆனால் படம் முடிகிற போது அந்த குழந்தை குறித்தும், மன நிலை சரியில்லாத மற்ற குழந்தைகள் மீதும் நமக்கு எப்போதும் ஒரு இரக்கம் வரும் அளவு முடித்திருப்பார். அந்த impact இங்கு மிஸ்ஸிங் என்பது தான் வருத்தம்.
Having said that, இந்த படத்தை அவசியம் நீங்கள் ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்வேன். காரணம், காப்பி அடித்தே படம் எடுக்கும் இயக்குனர்கள் நடுவே ஓரளவு என்ஜாய் செய்யும் விதத்தில் இப்படி ஒரு படம் தந்தமைக்கு சமுத்ரகனி மற்றும் சசி குமாரை பாராட்ட தான் வேண்டும் !
போராளி: ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம் !
" நல்ல மனுஷங்களை இப்படி பைத்தியம் ஆக்கிடாதீங்க" என க்ளைமாக்சில் கொஞ்சமாவது உரைக்கும் படி சொல்லி இருந்தால் இந்த விஷயம் மனதில் இன்னும் நன்றாக தங்கி இருக்கும்.
ReplyDeleteப்ளஸ், மைனஸ் மாத்தி மாத்தி சொல்லி கடைசில பார்க்கலாம்னு முடிச்சதப் பார்த்தா படத்துல ஏதோ விஷயம் இருக்கும் போல.
இப்படி ஒரு பேர வச்சு படத்த ஓட்டற நெலமைக்கு ஆளாயிட்டு பிறகு ஈழம் கூழம்னு பேசிக்கிட்டு திரியறத விட ஷகீலாவை வச்சு படம் எடுக்கலாம் சசிகுமாரு
ReplyDeleteஇதுக்கு போயி போராளி என்று பெயர் வைத்து ....இது என்னவோ அம்மண படத்துக்கு " துறவு"ன்னு பேர் வச்ச மாதிரி இருக்கு
ReplyDeleteநல்ல விமர்சனம்.
ReplyDeleteஅந்த சிறு பெண்ணை ஏதோ ஒரு குழந்தைகளுக்கான சீரியலில் குழந்தை நட்சத்திரமாக பார்த்திருக்கிறேன். பெயர் தெரியவில்லை. இப்போது கூட அவருக்கு அவ்வளவாய் வயதிருக்காது என நினைக்கிறேன்
ReplyDelete// சொந்த காரர்களிடம் பாதிக்க படாதவர்கள் யாருமே இல்லை என்பது தெரிகிறது! //
ReplyDeleteஇம்சைய்ங்க!
//Having said that//
செலிப்ரிட்டி க்ரிக்கெட் லீக் ஞாபகம் வந்திடுச்சு :)
போராளி சிறப்பான படம்தான் ... சந்தேகமில்லை.
ReplyDeleteஉங்க பார்வையும் கருத்தும் ஏற்புடையதே.
நன்றி.
Thanks for the judicious review!
ReplyDeleteபின்னூட்டமிட்ட
ReplyDeleteரிஷபன் சார்
அமைதி அப்பா
தர்ஷன்
ரகு (நான் ஒரு தடவை தான் சொன்னேனுங்கோ)
கருணாகரசு
மாதவி
அனைவருக்கும் நன்றி.
இன்னும் பார்க்கவில்லை. இதுதான் படம் என்றால் விளம்பரங்களில் வரும் இரட்டைக் குதிரையில் பவனி வரும் காட்சி எதற்க்கு? பில்டப்பா?
ReplyDeleteவாசகன்: அந்த ரெண்டு குதிரை மேல் சவாரி செய்யும் சீன், சசி குமார் கனவில் வருகிற மாதிரி இரு முறை காட்டுகிறார்கள். அவ்ளோ தான்.
ReplyDeleteஅந்த பெண் நிவேதா தாமஸ் [http://en.wikipedia.org/wiki/Niveda]
ReplyDelete