பார்த்த படம்: வித்தகன்
பார்த்திபன் ஓரிரு நல்ல படங்களை இயக்கி இருக்கிறார். சில நல்ல படங்களில் நடித்தும் இருக்கிறார். மீண்டும் மீண்டும் தோல்வியுற்றாலும் விக்ரமாதித்தன் போல் மறுபடி ஒரு படம் எடுத்திருக்கிறார்.. அது தான் வித்தகன். ரவுடிகள் தான் படம் முழுதும் வருகிறார்கள். தொடர்ந்து ரவுடிகளையும், துப்பாக்கி வெடிப்பதையும் பார்க்க ஆயாசமாக உள்ளது. பார்த்திபன் ஒன் மேன் ஆர்மியாக ரஜினி போல் அனைவரையும் அழிக்கிறார். முடியல ! பூர்ணா சில நேரம் ஸ்ரேயா போலவும் சில நேரம் அசின் போலவும் இருக்கார். எப்போ பூர்ணா போல இருப்பார் என தெரியலை. பார்த்திபன் படம் இயக்குவதை இத்துடன் (ஆவது) நிறுத்தி கொண்டு நல்ல கதா பாத்திரங்களில் மட்டும் நடிக்க பார்க்கலாம்.
லீவு எடுக்காத இந்தியர்கள்
உலகிலேயே தங்களுக்கு உள்ள விடுமுறையை எடுக்காமல் விடும் நாட்டில் நம் இந்தியா முன்னணியில் உள்ளது என சமீபத்தில் வாசித்தேன். நம்ம மக்களின் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? நம் மக்கள் லீவு எடுப்பதானால் அது தங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் தான் ! தப்பி போனால் பெற்றோரை பார்க்க அல்லது மச்சினன் கல்யாணம் என்று எப்போதேனும் லீவு எடுப்பார்கள். வருடம் ஒரு முறை லீவு எடுத்து விட்டு இது வரை போகாத இடத்துக்கு போகணும் என பலரும் நினைப்பதே இல்லை. தமிழர்கள் இதில் இன்னும் மோசம் ! மாதா மாதமே ப்ளான் பண்ணி ஓரிரு நாள் லீவு எடுத்து விடுபவர்கள் சிலர் உள்ளனர். இவர்கள் மட்டுமே முழு விடுமுறை நாளையும் எடுப்பவர்கள். சில நிறுவனங்கள் மட்டுமே லீவு எடுக்காத நாளுக்கு சம்பளம் (Encashed leave ) தருகின்றன. எனவே நமக்கு eligible ஆன லீவை, முடிந்த வரை எடுத்து விடுவதே நல்லது !
ஆனந்த் SMS கார்னர்
Free your heart from hatred. - Forgive

Free your mind from worries - Most never happen.
Live simply.
Appreciate what you have.
Expect less from people and more from God.
ஐஸ்வர்யா ராய்
மிக தாமதமாக எழுதினாலும் இதை சொல்ல தான் வேண்டும். இப்போதெல்லாம் நார்மல் டெலிவரி என்பதே மிக அரிதாக ஆகி விட்டது. இந்நிலையில் 37 வயதான ஐஸ்வர்யா ராய் நார்மல் டெலிவரி ஆனது பாராட்ட வேண்டிய விஷயம். "Too rich to push "என்பார்கள். அதாவது மிக பணக்காரர்கள் நார்மல் டெலிவரியில் இருக்கும் சிரமத்துக்காகவே சிசேரியன் விரும்புவார்களாம் ! ஆனால் ஐஸ்வர்யா ராய் தனக்கு நார்மல் டெலிவரி தான் ஆக வேண்டும் என மிக உறுதியாக இருந்துள்ளார். 35 வயதுக்கு மேல் ஆனவர் என்பதால் சிசேரியன் வாய்ப்புகள் அதிகம், இருந்தும் அவர் இப்படி உறுதியாக இருந்தது பாராட்டுக்கிரியது. பெண்களுக்கு இந்த விஷயத்தில் அவர் முன் உதாரணமாக உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ( நான் ஐஸ்வர்யா ராய் ரசிகன் அல்ல; நல்ல விஷயம் என்பதால் மட்டும் பாராட்டுகிறேன்)
நாட்டி கார்னர்

போஸ்டர்/ அய்யா சாமி கார்னர்
சுஜாதா எழுத்து
திடிரென்று சுஜாதா எழுத்தை மறுபடி வாசிக்க ஆர்வம் பீரிட்டு கிளம்பியுள்ளது. ஏற்கனவே வாசித்த/ வாசிக்காத அவர் நாவல்களை தேடி தேடி வாசித்து வருகிறேன். இந்த வாரம் படித்தவை சொர்க்க தீவு, ஏறக்குறைய சொர்க்கம். இந்த புத்தகங்கள் பற்றி ஒவ்வொன்றாக இங்கு பகிரவும் போகிறேன். சுஜாதா ரசிகர்களுக்கு அவர் எழுத்து பற்றி அறிய இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம் !
உங்களுடைய சுஜாதா நாவல்கள் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...
ReplyDeleteஉங்கள் சேவை தொடரட்டும்...
உங்களுக்கு பொறுமை அதிகம் என்பதை நான் அறிவேன். இருந்தாலும், வெளியாகிற அனைத்துப் படங்களையும் பார்க்கும் அளவுக்கு பொறுமை உள்ளவர் என்று நான் நினைக்கவில்லை:-)))))!.
ReplyDelete//நாட்டி கார்னர் //
உங்களிடம் வந்த போது இருந்ததைவிட, இப்பொழுது நாட்டி அழகாகத் தெரிகிறது.நன்றாகக் கவனித்துக் கொள்கிறீர்கள் என்பது புரிகிறது. தொடரட்டும்!
SMS CORNER நன்றாக இருக்கு!
ReplyDeleteவித்தகன் விமர்சனம் உபயோகமானது தான்! வேறு படமே இல்லாத நிலையில் ஏதாவது பார்க்கலாம் என்று தோன்றினால்கூட இந்தப்படத்தை விட்டு விடலாம்!!
வானவில் அழகாக இருக்கு.
ReplyDelete//இந்த புத்தகங்கள் பற்றி ஒவ்வொன்றாக இங்கு பகிரவும் போகிறேன். சுஜாதா ரசிகர்களுக்கு அவர் எழுத்து பற்றி அறிய இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம் !//
ஆஹா..காத்திருக்கிறோம்.
தொகுப்பு அருமை. நிறைய வாசிப்பதும் வாசித்ததைப் பகிர்வதும் நல்ல விஷயம். தொடருங்கள்.
ReplyDeleteஒரு படம் விடறதில்ல போல:))
ReplyDeleteசொர்க்கத் தீவு நல்லாருந்தது. சமீபத்தில் தான் நான் கொலையுதிர் காலம் திரும்ப படித்தேன். சுஜாதாஆஆஆஆஆஆஅ
நல்ல பதிவு.
ReplyDeleteநன்றி.
அந்த ராய் பத்தின விசயம் நம்மவீட்டு பெண்களுக்கும் தெரியப்படுத்தனும்ணே.
ReplyDeleteநன்றி பால ஹனுமான். சுஜாதா புத்தக விமரசனங்கள் நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்
ReplyDelete**
நன்றி அமைதி அப்பா.. நாட்டி பற்றிய வரிகளுக்கு :))
**
மனோ மேடம் : நன்றி. வித்தகன் பத்தி எழுதியதற்கு நிறைய பேர் கிண்டல் பண்றாங்க :))
**
நன்றி ராம்வி
ReplyDelete**
நன்றி ராம லட்சுமி
**
வித்யா: வீக் எண்டில் வேற எப்படி பொழுதை போக்குறது?
KSS ராஜா: நன்றி
ReplyDelete**
ரத்னவேல் ஐயா: மகிழ்ச்சி நன்றி
**
சத்ரியன்: ஆமாங்கண்ணா நன்றி
expect more from people and less from God?
ReplyDeleteசுஜாதா கணேஷ் vs வசந்த் என்று ஒரு நாவல் எழுதினாரா? என்னவோ ஒரு வாராந்திர சஞ்சிகையில் எப்போவோ படித்தாக ஞாபகம். வசந்தை சாட்சி கூட்டில் வைத்து கணேஷ் குறுக்கு விசாரணை செய்வதாக எல்லாம் காட்சி வரும். இன்றுவரை நானும் எவ்வளவோ புஸ்தக கடைகளில் தேடிவிட்டேன், இன்னும் கிடைக்கவில்லை.
ReplyDeleteசுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு இப்போது என் வாசிப்பில்..
ReplyDeleteசுஜாதா நாவல்கள் பற்றிய உங்கள் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன் நண்பரே...
ReplyDelete//நம்ம மக்களின் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? நம் மக்கள் லீவு எடுப்பதானால் அது தங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் தான் //
ReplyDeleteஇதில், நான் ஒரு வருசமா லீவே எடுக்கல தெரியுமா? என பீற்றி வேறு கொள்வார்கள்.
அப்பாதுரை said...
ReplyDeleteexpect more from people and less from God?
***
Yes. Even I thought in that angle. :))
***
வாசகன்: கணேஷ் Vs வசந்த் அல்ல. கணேஷ் - வசந்த் என்றொரு நாவல் எழுதினார். வாசித்துள்ளேன். ஆனால் எந்த பதிப்பகம் என தெரியலை. நீங்கள் சொன்ன மாதிரி நானும் இணையத்தில் தேடினேன். புத்தகம் கிடைக்கலை.
**
ரிஷபன் சார்: சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகளா? காதில் புகை வருது. சிறுகதை மன்னராச்சே அவர் !
**
நன்றி வெங்கட்
**
ஆதி மனிதன்: உண்மை. நன்றி
sujathaavai patri ezhuthungalen.. www.rishvan.com
ReplyDeleteதம்பி வெட்டோத்தி சுந்தரம், வித்தகன்.....உடம்புக்கு ஒண்ணும் இல்லியே மோகன்? நல்லாத்தானே இருக்கீங்க ;)
ReplyDeleteநாலு நாள் லீவு போட்டுட்டு எங்கேயாவது போய்டலாமான்னு இருக்கு. கால் பண்ணாகூட நாட் ரீச்சபிள்னு வரணும்!
கொலையுதிர் காலம் கண்டிப்பா வாசிங்க. என்னை பொறுத்தவரை சுஜாதா எழுதிய த்ரில்லர்களில், இதுவரை நான் படித்ததில் இதுதான் பெஸ்ட். ஒரு நாள் காலையில் வாசிக்க ஆரம்பித்து, ஆர்வம் அதிகமாகி, ஆஃபிஸுக்கு லீவ் போட்டுட்டு படிச்சு முடிச்சேன். க்ளைமேக்ஸைவிட கதையின் ஃப்ளோ சூப்பராயிருக்கும்!