Wednesday, February 13, 2013

வானவில் :10ஆம் வகுப்பு குழப்பங்கள் - வினோதினி - Dr.வரதராஜன்

சென்னை ஸ்பெஷல் : டாக்டர் V.V. வரதராஜன்

டாக்டர் V.V. வரதராஜன் - அசோக் நகர் அருகே இருக்கும் புகழ் பெற்ற குழந்தை மருத்துவர். எங்கள் பெண் மிக சிறியவளாக இருந்தபோது குறிப்பிட்ட விஷயத்துக்கு இவரை அணுகினோம். மிக சின்ன பிரச்னையை சில டாக்டர்கள் பயமுறுத்திவிட, நடுங்கி கொண்டே தான் இவரிடம் சென்றோம் ஆனால் " ஒண்ணுமே இல்லை" என்று முதலில் தைரியம் தந்து சில மாதங்களில் சரி செய்தார். அவள் வளர்ந்து, நாங்கள் மடிப்பாக்கம் வந்த பின் அவரிடம் இப்போது செல்வதில்லை.(தூரம் அதிகம்)

சினிமா நடிகர்களில் பலரின் குழந்தைகளுக்கு இவர் தான் டாக்டர். நாங்கள் இவர் கிளினிக் சென்றபோது பார்த்த சில திரை நட்சத்திரங்கள்: ராஜ்கிரண், சரண்யா, விஜய் மனைவி சங்கீதா உள்ளிட்டோர் ...

இவரை பார்க்க குறைந்தது இரண்டு மணி முதல் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும். குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு மரம் மேலும் டிவி போன்றவை இருப்பதால் நன்கு பொழுது போயிடும். காலை பன்னிரண்டு மணி முதல் இரவு பன்னிரண்டு வரை தன் வீட்டின் கீழ் இருக்கும் கிளினிக்கிலேயே பார்ப்பார். போனில் அப்பாயின்ட்மன்ட் வாங்கி கொண்டு தான் பார்க்க முடியும் !

சென்னையில் ஒரு நம்பகமான குழந்தை டாக்டர் என நிச்சயம் இவரை சொல்லலாம் !

வினோதினி

ஆசிட் வீச்சில் காயம் பட்ட வினோதினியின் மரணம், மிகுந்த மன வேதனையை தருகிறது. ஆசிட் வீசப்பட்டது முதல் இறக்கும் வரை அவளும், அவள் பெற்றோரும் எவ்வளவு துடித்திருப்பார்கள் !

ஒரு தலை காதல் என்பதெல்லாம் காதலே அல்ல . இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதை மட்டுமே காதல் என்ற வகையில் சேர்த்து கொள்ளலாம். ஒருதலையாய் ஆசை வைத்து , அது காதலாக மாறா விடில் இப்படியா செய்ய வேண்டும் ! எனது பள்ளி காலம் துவங்கி தொடர்ந்து இத்தகைய செய்திகளை கேள்விப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன் :((



பெண்கள் படிக்கவும் வேலைக்கும் செல்ல ஆரம்பித்து விட்டாலும் கூட ஆணின் வன்முறையில் இருந்து இன்னும் முழுதாய் மீள வில்லை. பெண்ணை விட உடல்வலிமை மிக்கவன் என்பதால் ஆண்கள் மூலம் இன்னும் சில கொடுமைக்கு ஆளாகவே செய்கிறார்கள்.

வினோதினியின் பெற்றோருக்கு இதிலிருந்து மீண்டு வரும் மன தைரியத்தை ஆண்டவன் அருள்வாராக !

QUOTE CORNER

Life will knock us down. But you have the choice whether to get up and move along or stay down.

பதிவர் பக்கம் - தேன்கிண்ணம் 

தேன்கிண்ணம் என்கிற வலை பதிவில் தொடர்ந்து பிரபல தமிழ் பாடல்களின் வரிகளையும், அந்த பாடலின் ஒலி வடிவத்தையும் பகிர்ந்து வருகிறார் நாகை சிவா. நேயர் விருப்பம் போல, உங்களுக்கு பிடித்த பாடலை சொன்னால் அதனை அடுத்த சில நாட்களில் வெளியிட்டு விடுவார். அநேகமாய் தினம் ஒரு பாடலாவது பகிர்கிறார் பாட்டு ரசிகர்களுக்கு இந்த ப்ளாக் நிச்சயம் பிடிக்கும்.

சம்பவம் - சாலை ஒர சிக்னலும், இளம் பெண்ணும்

ஆழ்வார்பேட்டை TTK சாலை உள்ளே இடது பக்கமாய் நுழைய சிக்னலை டூ வீலரில் கடக்கிறேன். பச்சை சிக்னல் இருந்தும் ஒரு கார் நகராமல் வழியை முழுதும் மறைத்த படி நின்று கொண்டிருந்தது. பின்னால் இருக்கும் வாகனம் எதுவும் கடக்க முடிய வில்லை .

என்னையும் சேர்த்து பலர் ஹாரன் அடித்து தள்ளினர். மனுஷன் அசரவே இல்லை. சரியாய் சிக்னல் சிகப்பிற்கு மாறும் முன் அந்த கார் முன்னே நகர, வேகமாய் சைட் வாங்கி சற்று திட்டலாம் என்று பார்த்த போது தான் அந்த காட்சியை கண்டேன்.

சாலையின் ஓரத்தில் ஒரு பள்ளி செல்லும் சிறு பெண் தனது சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு கீழே விழுந்த புத்தகங்களை பொறுக்கி எடுத்து,  மீண்டும் சைக்கிளை கிளப்பி கொண்டிருந்தாள். நாங்கள் ஆள் ஆளுக்கு ஹாரன் அடித்து டென்ஷன் செய்தும், கார் ஓட்டுனர் - அந்த சிறு பெண்ணை ஹாரன் அடித்து டென்ஷன் செய்யாது, சிக்னல் இருந்தும் கடக்காமல்,  அமைதியாய்  நின்றிருக்கிறார்

இது புரிந்ததும் மனது "பாராட்ட வேண்டிய ஆளை போய் கோபப்பட்டோமே " என என்னவோ போல் ஆனது. இப்படி தான் பல விஷயங்களில் முதலில் நம் புரிதல் ஒன்றாகவும், பின்னர் வரும் புரிதல் வேறாகவும் உள்ளது !

பத்தாம் வகுப்பு.. 

எங்கள் பெண் இவ்வருடம் பத்தாம் வகுப்பு செல்கிறாள். (நமக்கு மனசுல வயசு 25 தான் ! நம்ம பெண் படிப்பது பத்தாவதா? ஓ காட் !) இந்த வருட பாடங்கள் பிப்ரவரியிலேயே துவக்கப்பட்டு விட்டன. ஒரே பீரியடில் பாதி நேரம் ஒன்பதாம் வகுப்பு பாடமும், மீத நேரம் பத்தாம் வகுப்பும் எடுக்கிறார்கள். பிள்ளைகள் எதை தான் படிப்பார்களோ? இதில் பத்தாம் வகுப்பு பாட நூல்கள் வழங்கப்படவே இல்லை. பிள்ளைகள் இணையத்தில் இருந்து டவுன் லோடு செய்து தான் வாசிக்கிறார்கள். புத்தகமே வரமால் இம்புட்டு அவசரமாய் எதற்கு எடுக்கணுமோ ? இதையெல்லாம் போய் பிரின்சிபாலிடம் கேட்கலாம். கேட்டால் மிக பொறுமையாய், அன்பு வழிய " இங்கே அப்படித்தான்; கஷ்டமா இருந்தா, டி. சி வாங்கிட்டு வேற ஸ்கூல் போயிக்குங்க" என்பார். இதனால் அவரை பார்க்கும்போது கும்பிடு போடுவதோடு சரி.

பெற்றோர் ஆசிரியர் கழகமெல்லாம் காகிதத்தில் தான் இருக்கு. நிஜத்தில் இல்லை :(

அய்யாசாமி கார்னர்

இண்டோ அமெரிக்கன் சாம்பரில், முக்கிய தலைப்பொன்றில் பேச - அய்யாசாமி பெயர் போட்டு, இன்விடேஷன் அச்சடித்து வந்திருந்தது. நம்ம ஆள் பந்தாவாய் இன்விடேஷனை வீட்டுக்கு எடுத்து கொண்டு போய் மனைவியிடம் காட்டி , அவர் ரீ -ஆக்ஷனுக்காக காத்திருந்தார்.

இடது கையில் வாங்கி அதனை ஒரு பார்வை பார்த்த மிஸஸ்.அய்யாசாமி " இப்ப என்ன அதுக்கு? நாளைக்கு காலையிலே பெண்ணை ஸ்கூலில் விட முடியாது. அவ்ளோ தானே? நான் கொண்டு போய் விடணும் ; ரைட்டா? " என்று கேட்க,

பாராட்டு எதிர்பார்த்த இடத்தில் பல்பு கிடைக்க, மலங்க மலங்க விழித்தார் அய்யாசாமி !

34 comments:

  1. வினோதினி சம்பவம் - கொடுமை...

    இளமை (25-க்கு) வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies

    1. நன்றி தனபாலன் சார்

      Delete
  2. பாராட்டு எதிர்பார்த்த இடத்தில் பல்பு கிடைக்க, பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி

      Delete
  3. //பிள்ளைகள் எதை தான் படிப்பார்களோ?//

    மார்க் பந்தயத்தால் பள்ளிக்கூடங்களில் நாளுக்கு நாள் பிரஷர் எகிறுவது சோகமான உண்மை!

    ReplyDelete
    Replies
    1. உண்மை மதுரை அழகு :(

      Delete
  4. வினோதினி-இவரின் பேட்டியை விகடனில் வாசித்தேன் பேஸ்புக்கில் பலர் பல்வேறுகாரணங்களை கூறுகின்றார்கள் எது எப்படி இருந்தாலும் அசிட் வீசுவது ஓவர்தான்

    ஆத்மா சாந்தியடையட்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆம் க்ரித்திகன் நன்றி

      Delete
  5. பாடங்களை இப்படி சொல்லிதருவதினால் பாடத்தை மட்டும் கற்றுக் கொண்டு வாழ்வில் நடக்கும் மற்றவைகளை கற்றுக் கொள்ள தவறி கிளிப் பிள்ளைகளாகவே இருக்கிறார்கள் இந்திய மாணவர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம் அவர்கள் உண்மைகள் நன்றி

      Delete
  6. இந்த தனியார் பள்ளிகள் பண்ற அட்டகாசம் தாங்கள....

    வினோதினிக்கு உதவ நூலுலகம் என்ற இணைய லைப்ரரியில் கூட, ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.. என்ன செய்து என்ன? அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்!!!

    ReplyDelete
  7. //வினோதினி//

    வெறும் எழுத்தில் சட்டங்களை வைத்துக்கொண்டு, செயல்படுத்தாமல் கோழைத்தனமாக இருப்பதுதான் இது போன்ற சம்பவங்களுக்கு மூல காரணம். தூக்கு தண்டனை கூட வேண்டாம். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, ஒரு கை, கால் எடுத்து உயிரோடு வெளியே விட்டால் என்ன?

    அந்த _____ஐ பார்ப்பவர்களுக்கும் ஒரு பயம் வருமல்லவா? ஆனால் நாம் செய்ய மாட்டோம். சூடு சொரணை ஏதுமின்றி இன்றும் அஹிம்சை அஹிம்சை என புலம்பிக்கொண்டே பெண்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் இம்சை தரும் தேசத்தில்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. முக நூலிலும் இது பற்றி உங்கள் கருத்துகள் பார்த்தேன் ரகு

      Delete
  8. //(நமக்கு மனசுல வயசு 25 தான்//

    ஹலோ என்னாதிது! 24லருந்து 25க்கு மாறிட்டீங்க? ச்சே! காலம்தான் எவ்வளவு வேகம்! :)

    ReplyDelete
  9. வானவில் வர்ணமயம்.

    வினோதினி மரணம் மிகவும் வேதனையானது.

    //(நமக்கு மனசுல வயசு 25 தான்//

    என் கணவரும் இப்படித்தான் தன்னை சொல்லிக்கொள்வார். நான் என் வயதை பற்றி சொன்னால் அவர் அதற்கு போகிற போக்கைப் பார்த்தல் நீ என்னை overtake செய்துவிடுவாய் போல இருக்கே என்பார்.

    எல்லா இடங்களிலும் இப்பொழுது 10 வதும், 12 வதும் ஒன்றே கால் வருடம் படிக்க வேண்டியிருக்கு.குழந்தைகளுக்கு மிகவும் சிரமம்தான்.

    ReplyDelete
    Replies
    1. அட நம்மை போல இன்னும் சிலர் இருக்காங்க போல நன்றி ராம்வி

      Delete
  10. உங்க கேபின்ல ஒரு சின்னப் பொண்ணு தமிழ் எழுதி ஒரு தடவ பாத்தேன் (திருக்குறளா,எதாவது பாரதியார் பாட்டான்னு நியாபகமில்ல).. உங்க பொண்ணுதானா அது!! அதுக்குள்ள பத்தாவதா !! வருஷம் வேகமாத்தான் போகுது. :)))

    ReplyDelete
    Replies
    1. அட ஆமாம் EES நன்றி

      Delete
  11. வினோதினியின் மரணம் மிகுந்த கவலைக்குரியது. பெண்களுக்கான கொடுமைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

    தேன்கிண்ணம் வலைப்பூவை பதினேழு பதிவர்கள் சேர்ந்து நடத்துகின்றனர். 2000 பாடல்களுக்கு மேல் கடந்து விட்டது..

    ReplyDelete
    Replies
    1. //தேன்கிண்ணம் வலைப்பூவை பதினேழு பதிவர்கள் சேர்ந்து நடத்துகின்றனர். 2000 பாடல்களுக்கு மேல் கடந்து விட்டது..//

      அப்படியா? தகவலுக்கு நன்றி ரோஷினி அம்மா

      Delete
  12. வினோதினியின் மரணம் அதிர்ச்சி தந்தது! மிக கடுமையான தண்டனைகள் இந்த குற்றங்கள் நிகழாமல் தவிர்க்க உதவும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சுரேஷ்

      Delete
  13. வினோதினி மரணம் - மனதை பாதித்த விஷயம். இன்னும் எத்தனை வினோதினைகளை இழக்கப் போகிறோம்..... :(

    அய்யாசாமி - :))))

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட் நன்றி

      Delete
  14. நாங்கள் நுங்கம்பாக்கம் டாக்டர் ஜே வியிடம் சென்றிருக்கிறோம். அவரும் இவர் போலவே...!

    வினோதினியின் மரணம் ஒரு அயோக்யனின் மனதையாவது மாற்றினால் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. சரியாய் சொன்னிர்கள் ஸ்ரீராம் சார்

      Delete
  15. அனைத்து உணர்வுகளும் கொண்ட வானவில்

    ReplyDelete
    Replies
    1. நன்றி TN முரளி Sir

      Delete
  16. //இண்டோ அமெரிக்கன் சாம்பரில், முக்கிய //

    இண்டோ அமெரிக்க சாம்பாரில் முக்கிய. ந்னு படிச்சிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா எழுதும்போதே அப்படி தான் வந்தது :)

      Delete
  17. வழக்கம்போல ஐயாசாமி வாங்கிய பல்பு பிரகாசம்,( பாவம்ங்க வீட்டுஅம்மணி, அப்பப்போ அவங்க தலையை உருட்டுறீங்க)
    வினோதினியின் மரணம்-- இப்படிப்பட்டகொடூர சம்பவங்கள் நிகழும் ஒவ்வொரு முறையும் 10 நாட்களுக்கு புலம்புவதும் அப்புறம் மறந்து அடுத்தவேலையை பார்க்கப்போய்விடுவதுதான் வழக்கமாகிவிட்டது. பெற்றோர் பெண்குழந்தைகளைபத்திரமாகவும், ஆண்குழந்தைகளை ஒழுக்கமுடனும் வளர்ப்பதுதான் நம்மால் செய்யமுடியக் கூடிய காரியம்.

    ReplyDelete
  18. நாளைக்கு காலையிலே பெண்ணை ஸ்கூலில் விட முடியாது.
    அவ்ளோ தானே? நான் கொண்டு போய் விடணும் ; ரைட்டா? " என்று கேட்க,

    பாராட்டு எதிர்பார்த்த இடத்தில் பல்பு கிடைக்க, மலங்க மலங்க விழித்தார் அய்யாசாமி

    VEETTUKKU VEEDU VAASARPADI

    ReplyDelete
  19. தேன் கிண்ணத்தின் சார்பாக நன்றிகள். தேன் கிண்ணம் ஒரு கூட்டு முயற்சி. தொடர்ந்து ஆதரவு அளிக்கவும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...