Wednesday, May 29, 2013

வானவில்- கௌரவம் -ஜனனி ஐயர் -சீனு மாமா

பார்த்த படம் : கௌரவம் 

பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் ராதா மோகன் இயக்கிய கௌரவம் சமீபத்தில் தான் பார்க்க முடிந்தது. சாதி மாறி திருமணம் செய்யும் பெண்- மற்றும் மாப்பிள்ளையை குடும்பமே கொன்று போடும் கதை- ஆனால் கல்லூரி மாணவர்கள் புரட்சி - அது இதென்று நாசம் செய்து விட்டார்

தெலுகு ஹீரோ மகா கொடுமை ! எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் அவர் வந்து போவது வெறுக்கடிக்கிறது. (மறைமுக தயாரிப்பாளரோ?)

ஹீரோயின் யாமி கெளதம் தான் ஒரே ஆறுதல்

ராதாமோகன் இதுவரை இயக்கிய படங்களில் மிக பெரும் அறுவை - என்கிற ஒன்று தான் இப்படம் பற்றி மனதில் தங்க போகிறது !

அழகு கார்னர்

அவன் இவன் படத்தில் ரசிக்க வைத்தவர்.  கண்களும் புன்னகையும் பெரிய பிளஸ்.



சமச்சீர் கல்வியில் அதிகமாகும் மதிப்பெண்கள்

பன்னிரெண்டாம் வகுப்பு வரை - CBSE தவிர மற்ற அனைத்து பள்ளிகளும் சமச்சீர் கல்வி முறைக்கு மாறியதும் - மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் மதிப்பெண்களை அள்ளுகிறார்கள் ! பத்தாம் வகுப்பு பேப்பர் திருத்திய ஒரு ஆசிரியருடன் சமீபத்தில் பேசியபோது அவர் பகிர்ந்த தகவல் இது:

ஒரு நாளைக்கு 24 பேப்பர் திருத்தணுமாம். ஒரு பேப்பர் திருத்த 12 ரூபாய் தரப்படுகிறது. தவிர தினசரி பேட்டா 150 ரூபாய் என பேப்பர் திருத்தும் ஆசிரியர்க்கு தினம் கிடைப்பது 440 ரூபாய்.

அவர் திருத்திய பேப்பர்களில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுத்தவர்களே 80 %க்கும் மேல் இருக்குமாம் ! மூன்று பேப்பர்களில் நூறு மார்க் எடுத்தவர்களே எக்கச்சக்கம் என்கிறார். அரசு தரும் சலுகை மார்க்கும் சேர்ந்து கொள்ள - இப்போதெல்லாம் மார்க் வாங்குவது ரொம்ப எளிதாகிடுச்சு ; மெட்ரிகுலேஷன் மாணவர்கள் இப்படி மார்க்கை அள்ளுவதால் பாதிக்கப்படுவது அரசு பள்ளி மாணவர்கள் தான் என்றார் அவர் !

சிந்திக்க வேண்டிய விஷயம் தான் !

BCCI தலைவர் பதவியை ராஜினாமா செய்யணுமா சீனிவாசன் ?

குருநாத் மெய்யப்பன் கைதை தொடர்ந்து சீனிவாசன் BCCI தலைவர் பதவியை ராஜினாமா செய்யணும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. இன்னொரு பக்கம் தெற்கை அடிக்க நினைக்கும் வடக்கின் சூது இது என்றும் பேச்சு உலவுகிறது.

நடந்த சம்பவங்களை அடுத்து சீனிவாசன் நிச்சயம் பதவி விலக வேண்டும் என்று தான் நினைக்கிறேன். அவர் நேரடியே பெட்டிங் அல்லது ஊழலில் ஈடுபடாவிட்டாலும் கூட - அவர் விலகுவது தான் தார்மீக ரீதியில் சரியான ஒன்றாய் இருக்க முடியும்

- குருநாத்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இப்போது சொல்வது

- குருநாத் டுவிட்டர் உள்ளிட்ட கணக்குகளில் முன்பு சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஓனர் என்று இருந்ததை தற்போது அவசரமாக அகற்றுவது

- இவையெல்லாம் சீனிவாசன் மீதிருந்த கொஞ்ச நஞ்ச நல்ல அபிப்ராயத்தை அகல வைக்கிறது. குருநாத் மீதான குற்றங்களை விசாரிப்பதே BCCI -தான் ; அதன் தலைவர் பொறுப்பில் இருப்பவர் அவரது மாமனார் சீனிவாசன். நியாயமான நடவடிக்கையை எப்படி எதிர்பார்க்க முடியும்?

AVM என்கிற மிக பெரும் குடும்பத்தை சேர்ந்த மெய்யப்பனுக்கு இது தேவையா? சீனிவாசன் அவர்களுக்கு தன் மகன் மற்றும் - மகள் 2 பேராலும் நிம்மதி இல்லை !

போஸ்டர்/ அய்யாசாமி கார்னர்


RJ Balaji Comedy 

சேட்டை படத்தை நம்ம பாலாஜி சிக்கி சின்னாபின்னம் செய்வதை கேட்டு மகிழுங்கள்



IPL 6 Vs சூது கவ்வும் - ஒரு ஒப்பீடு (By நண்பர் கார்த்திக்)

இந்த IPL 6- ன் டைட்டில் SPONSOR எனக்கு என்னவோ பெப்சி இல்லை சூது கவ்வும் படம் தானோ என்று தோன்றுகிறது..

"IPL 6 - சூது கவ்வும்" என்றாலும் "சூது கவ்வும் - IPL 6" என்று IT SERVES TO PROMOTE EITHER. •

* சூது கவ்வும் intended காமெடி IPL 6 unintended tragedy.

• சூது கவ்வும் (SK ) ல 5 rules, IPL 6 - நோ ரூல்ஸ் •

* SK - ஆதிக்கத்தில் கையை வைக்காதே , IPL 6 ஆதிக்கம் தான் கையை வைப்பதே.

* SK - ஆள் கடத்த 45000, இங்கே மேட்ச் கடத்த பல லட்சங்கள். •

* சூது கவ்வுமில் ஒரே ஒரு பொண்ணு HEROINE னு கூட சொல்ல முடியாது .IPL 6 பல பெண்கள். Rochelle Rao டு cheer leaders.

• IPL 6 காமெடி டீம் - சித்து & கோ., SK - சேதுபதி & கோ.

• SK - ஹெலிகாப்ட்டர் SHOOT (ஹெலிகாப்ட்டர் வெச்சு பணத்தை சுடரங்க), IPL - ஹெலிகாப்ட்டர் SHOT .

• SK - தமிழ் என்டேர்டைன்மென்ட் IPL - ஆல் இந்திய என்டேர்டைன்மென்ட்

• SK ல போலீஸ் கு ஆப்பு IPL 6 போலீஸ் வெச்சது ஆப்பு.

• SK ல இருட்டு அறையில் முரட்டுக்குத்து, IPL 6 வெட்ட வெளிச்சத்தில் கும்மாங்குத்து !

• Saving the best for the last - SK - போட்டுக்குடத்தது நம்பிக்கை கண்ணன், IPL - போட்டு வாங்கியது குருநாத் மெய்யப்பன்

Thanks: http://bla-bla-blag.blogspot.in/
********
ஊருக்கு செல்வதால் வரும் ஞாயிறு வரை வீடுதிரும்பலுக்கு விடுமுறை ! எந்த ஊருக்கு என்கிறீர்களா ?

ஞான் திரும்ப வந்து பறையும் :)

6 comments:

  1. //சீனிவாசன் அவர்களுக்கு தன் மகன் மற்றும் - மகள் 2 பேராலும் நிம்மதி இல்லை //

    தவறு! சீனுவாசனனின் பேராசையால் பாதிக்கப்பாடவர்கள் இவர்கள் எல்லோரும்!

    கிருஷ்ணன்-அர்ஜுனன் கதையை நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்; கொன்னவன் கிருஷ்ணன். அப்பாவி அர்ஜுனன் அல்லது இங்கு மெய்யப்பன்.

    நல்லது நடந்தால் சீனிவாச ஐயர், அயோக்கியத்தனம் என்றால் மெய்யப்பன் செட்டியாரா? மாட்டிக்கொண்ட மெய்யப்பனுக்கு என் அனுதாபங்கள்...!

    ஊடகங்களின் ஆப்பு செட்டியாருக்குத்தான். ஐயரை விட்டு விடுவார்கள். ஏன். ஐயரை சென்னை புத்தர் என்று எழுதினாலும் எழுதுவார்கள்!

    ReplyDelete
  2. Anonymous8:41:00 AM

    கேரளத்துக் கப்பங்கிழங்கு வாங்கிட்டுவாங்க வரும்போது..

    ReplyDelete
  3. பார்த்த படம் : கௌரவம் .... nalla print vanthuruchaa??

    ReplyDelete
  4. thanks Mohan
    http://bla-bla-blag.blogspot.in/

    ReplyDelete
  5. பத்மநாபபுரம் அரண்மனைல கிடைச்சதுல பாதி எனக்கு..,

    ReplyDelete
  6. இங்கே ஸ்ரீநிவாசன் ஒன்றும் யோக்கியன் இல்லைதான்...ஆனால் மாட்டிக் கொள்ளாமல் செய்வர்,,,, தன் தொழில் தந்திரத்தை மருமகனுக்கு கற்றுத்தரவில்லை போல..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...