Tuesday, May 7, 2013

தமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்

ண்பர்- பதிவர் ஆதி மனிதன் தமிழக அரசால் நடத்தப்படும் சேவை இல்லம் பற்றி சில முறை கூறியுள்ளார் அவரது தாயார் திருமதி. அபிராமி இந்த சேவை இல்லத்தில் பல ஆண்டுகள் Superintendent -ஆக சேவை செய்து ஓய்வு பெற்றவர்.அண்மையில் (5 மாதம் முன்பு.. அண்மை தானே?) தஞ்சை சென்ற போது சேவை இல்லத்தின் மேலாளர் திரு. அசோகன் அவர்களை ஆதி மனிதன் மூலம் சந்திக்க முடிந்தது.

தஞ்சையில் சேவை இல்லம் - நாஞ்சி கோட்டை சாலையில் பர்வீன் தியேட்டர்/ உழவர் சந்தைக்கு அருகில் உள்ளது.

ஓரிரு ஏக்கரில் பெரிய காம்பஸ் அது. ஆதி மனிதனின் தாயார் திருமதி. அபிராமி சொல்லி சென்றதால் நமக்கு அங்கு நல்ல மரியாதை  !

இனி அசோகன் சேவை இல்லம் பற்றி பேசியதில் இருந்து :

திரு. அசோகன் மற்றும் இன்னொரு ஆசிரியருடன் 
" தமிழக அரசாங்கத்தால் நடத்தப்படுவது இந்த சேவை இல்லம்.

இங்கே மொத்தம் 105 பெண்கள் இருக்காங்க. இதில் சில பேர் விதவைகள், சிலர் கணவனால் கை விடப்பட்டவர்கள், சிலர் அனாதைகள், இதை தவிர வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் ஏழை பெண்களும் தங்கி படிக்கிறாங்க.

முன்னே எல்லாம் விதவைகள், வயதானவர்கள் நிறைய இருந்தாங்க. இப்ப ஏழை பெண்கள் எண்ணிக்கை தான் அதிகம். வயதாகி தங்கி படிப்போர் எண்ணிக்கை குறைஞ்சுடுச்சு.

வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் மிக ஏழ்மையான குடும்பம் அப்படிங்குறதுக்கு தாசில்தார் சர்டிபிகேட் தரணும். அதன் அடிப்படையில் நாங்க சேர்த்துப்போம்

(சேவை இல்லம் பற்றி அறிய கீழே உள்ள அறிவிப்பு பலகையை அவசியம் வாசியுங்கள்)105 பேரில் ஒவ்வொருதங்களும் வெவ்வேறு வகுப்பு படிக்கிறாங்க. ஆறாவது முதல் + 2 வரை இங்கு வகுப்புகள் இருக்கு. ஆறு டீச்சர்ஸ் இவங்களுக்கு பாடம் சொல்லி தர இருக்காங்க.

இந்த இல்லம் துவங்கியது 1964 -ல். இப்போ - அம்பதாவது வருஷம்.

இது மாதிரி சேவை மையம் தமிழகத்தில் - தாம்பரம், கடலூர், மதுரை, திருநெல்வேலி, தஞ்சை உள்ளிட்ட 7 ஊரில் இருக்கு. எல்லா இடத்திலும் தங்கும் வசதி, சாப்பாடு, படிப்பு செலவு என எல்லாமே ப்ரீ தான்

இங்கே நிறைய வித்யாசமான மாணவிகளை சந்திச்சிருக்கோம். குறிப்பா தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகமான போது - முதல் குழந்தையா வந்த பெண் - தாம்பரத்தில் படித்து வளர்ந்தார். அப்புறம் + 2 வில் கணித க்ரூப் அங்கில்லை என இங்கு வந்து சேர்ந்து படித்தார்

இங்கு படித்த பல பெண்களுக்கு நாங்களே திருமணம் செஞ்சு வச்சிருக்கோம். அந்த பெண்களுக்கு எங்களோட சமூக நலத்துறை தான் பெற்றோர் மாதிரி இருப்பாங்க.

+ 2 வரை இருக்கும் படிப்புகள் தவிர வேறு நிறைய கோச்சிங்கும் இங்கு தர்றோம். குறிப்பா 6 மாச கம்பியூட்டர் ட்ரைனிங் கோர்ஸ் பிரபலம். அது கத்துகிட்ட பெண்களுக்கு குறைஞ்சது 3,000 ரூபா சம்பளத்தில் உள்ளூரில் டேட்டா என்ட்ரி வேலை கிடைக்குது

டைப் ரைட்டிங், தையல் போன்ற வகுப்புகளும் தனி கோர்சாக இங்கு எடுக்கிறோம்

இங்கு படிக்கிற பசங்க கல்லூரியில் சேர்ந்து படிச்சா அவங்க செலவுக்குன்னு அரசாங்கமே வருடத்துக்கு 30,000 பணம் தருது. அதை வச்சிக்கிட்டு அவங்க கல்லூரி படிப்பை முடிக்கலாம்.இதை பயன்படுத்தி எஞ்சினியரிங், டாக்டர் படிப்புக்கு படிச்ச பசங்க கூட இருக்காங்க

அரசாங்கம் இவங்களுக்கு வருடத்துக்கு 2 செட் யூனிபார்ம் தரும். இங்கே வேலை செய்யும் டீச்சர்ஸ் , நாங்க எல்லாம் பணம் போட்டு ஒவ்வொரு வருஷ தீபாவளிக்கும் இவங்களுக்கு புது துணி எடுத்து தருவோம்.கிராமத்தில் படிச்சா பெண்களை பாதியிலேயே படிப்பை நிறுத்துற பிரச்சனை ( டிராப் அவுட்) இங்குள்ள பெண்களுக்கு இருப்பதில்லை. +2 வரை  இங்கே படிச்சுடுறாங்க

தாம்பரத்தில் மட்டும் டீச்சர் ட்ரைனிங் இன்ஸ்டிடியூட் கூட இருக்கு. வேலை வாய்ப்பில் சலுகை சில குறிப்பிட இடங்களில் மட்டும் இருக்கு

இந்த பள்ளிக்கோ இங்கிருக்கும் மாணவிகளுக்கோ என்ன உதவிகள் வேண்டும் என்று கேட்டபோது

சில பேர் கல்யாண நாள் போன்றவற்றில் உணவு கொண்டு வந்து தருகிறேன் என கேட்கிறாங்க ஆனா
வெளி உணவுகளை நாங்க உள்ளே அனுமதிப்பதில்லை ஒரு சில முறை சாப்பிட்டு பசங்களுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு

(வீடியோவில் சேவை இல்லம் சுற்றி பார்க்கலாம்)" ரொம்ப முக்கியமான உதவி பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு சில பாடங்களுக்கு தான் தேவையான டீச்சர்ஸ் இருக்காங்க. ஆங்கிலம் உட்பட சில பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லை. இதனால் அரசு தேர்வு எழுதும் போது ரொம்ப சிரமப்படுறாங்க. யாராவது வாரத்தில் ஒரு சில நாள் வந்து பாடம் சொல்லி குடுத்தா கூட உதவியா இருக்கும்

அடுத்து சில வகுப்புகளில் உட்கார பெஞ்ச்கள் இல்லை. எட்டாவது ஒன்பதாவது படிக்கும் பெண்கள் தரையில் அமர்ந்து குனிந்து எழுதுவதற்கு சிரமப்படுகிறார்கள். முடிந்தால் பெஞ்ச் மற்றும் டேபிள் உதவினால் நன்றாயிருக்கும்இந்த பதிவை இங்கு பகிர முக்கிய காரணம் - தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த அரசியல் கட்சிகளை தாண்டி - எந்த அரசாங்கம் வந்தாலும் மாறாமல் தொடரும் ஒரு சில நல்ல விஷயங்களில் இந்த சேவை இல்லமும் ஒன்று. உங்கள் ஏரியாவில் ஏழை பெண்கள் யாரேனும் இருந்தாலும் சேவை இல்லம் பற்றிய தகவல்கள் பகிரலாம் !

மாணவிகளுக்கு பென்ச் போன்றவை வாங்க உதவ முடியும் என்றால் பள்ளியின் மேலாளர் அசோகன் அவர்களது தொலை பேசி எண் தருகிறேன் நேரடியே நீங்களே உதவலாம்

உங்களால் முடிந்தால் தஞ்சை செல்லும்போது இந்த சேவை இல்லத்துக்கு சென்று பாருங்கள் !
*********
அண்மை பதிவுகள் 

நீயா நானா ஜெயித்தொருக்கு நிஜமா பரிசு  தர்றாங்களா? அனுபவம் 

45 comments:

 1. தஞ்சையில் தான் நான் இருக்கிறேன் எனக்கே தெரியாதுண்ணே

  ReplyDelete
 2. மிகவும் பயனுள்ள சமூக பொறுப்புடன் கூடிய பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. பயனுள்ள தகவல். நன்றி!

  ReplyDelete
 4. சேவை இல்லத்தை பற்றி விரிவாக விபரங்களுடன் பதிவிட்டதற்கு நன்றி மோகன். இதன் மூலம் ஓரிருவர் பயன் பெற்றாலோ/சேவை இல்லத்திற்கு தேவையானதை யாரேனும் செய்து கொடுத்தாலோ எங்களை (அம்மாவும், நானும்) விட சந்தோசபடுபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

  மேலும் இது போன்ற பதிவுகள் தங்கள் தளத்தில் வெளிவர என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. Anonymous8:04:00 AM

   may I know your mail address

   Delete
 5. நன்றி சக்கர கட்டி ; ஒரு முறை சென்று பாருங்கள் ; பர்வீன் தியேட்டர் அருகே உள்ளது

  நன்றி + மகிழ்ச்சி நிஷா

  நன்றி அமைதி அப்பா

  நன்றி ராஜன்

  ஆதி மனிதன்: மகிழ்ச்சி; நீங்கள் சேவை இல்லம் பற்றி எழுதிய லிங்குகளை பகிரவும் நன்றி

  ReplyDelete
 6. /வெளி உணவுகளை நாங்க உள்ளே அனுமதிப்பதில்லை ஒரு சில முறை சாப்பிட்டு பசங்களுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு/

  ஆம். பல இல்லங்களில் இதைத் தவிர்க்கக் கேட்கிறார்கள்.

  உங்கள் பகிர்வால் பெஞ்ச் வாங்க உதவி கிட்டியது போல் ஆசிரியர்களும் கிடைக்கட்டும்.

  வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. Suhail: If you are asking for my mail ID, it is:

  snehamohankumar@yahoo.co.in

  Aathimanithan does not reveal his ID or identity normally

  ReplyDelete
 8. பயனுள்ள தகவல். நன்றி.

  ReplyDelete
 9. மிகவும் பயனுள்ள சமூக பொறுப்புடன் கூடிய பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. இப்படி ஒரு சேவை இல்லம் நடாத்தப்படுவது அறிந்து மகிழ்ச்சி. அவர்களுக்கு மேலும் உதவிகள் கிடைக்கட்டும்.

  ReplyDelete
 11. 'சேவை' இல்லத்தின் 'தேவை' அறிந்து உதவ வந்த அந்த தொண்டு நிறுவனத்திற்கு எங்கள் (என், அம்மா சார்பில்) நன்றியை தெரிவிக்கவும்.

  மேலும் 'வீடு திரும்பல்' வாசகர்களில் ஒருவராக, ரூபாய் 1001 என் சார்பாக தங்களுக்கு DD அல்லது தங்கள் வங்கி A/C நம்பர் கொடுத்தால் அனுப்பி வைக்கிறேன். சேவை இல்ல மாணவிகளுக்கு ஏதேனும் சிறு உதவிகள் தேவைபட்டால் (எழுது பொருள்/நோட்டு, புத்தகங்கள்) அதற்க்கு உதவும்படியான என்னால் ஆன ஒரு சிறு தொகை.

  மீண்டும் அம்மா மற்றும் சேவை இல்ல பொறுப்பாளர் திரு. அசோகன் சார்பாக தங்களின் தொடர் முயற்சிக்கு என் நன்றிகள் பல.

  சேவை இல்லம் பற்றிய என் முந்தைய பதிவு...

  http://aathimanithan.blogspot.in/2011/12/blog-post.html

  ReplyDelete
 12. அருமையான பதிவு. நன்றி & வாழ்த்துகள் திரு மோஹன் குமார்.
  எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
  வேலைப் பளு, அதனால் படிக்க தாமதம்.

  ReplyDelete
 13. தொலைபேசி எண் தெரியபடுத்தினால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 14. தொலைபேசி எண் தெரியபடுத்தினால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 15. தொலைபேசி எண் தெரியபடுத்தினால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 16. தொலைபேசி எண் தெரியபடுத்தினால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 17. தொலைபேசி எண் கொடுக்கவும்

  ReplyDelete
 18. Sir, I am senthilkumar trichy,Any orphanage women willing marriage, My brother willing to marriage her.if any probablity? Sir,

  ReplyDelete
 19. இந்த சேவை இல்லத்தில் போன் நெம்பர் கிடைக்குமா. தாேழா

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. இந்த சேவை இல்லத்தின் போன் நேம்பர் எனக்கு வவேனும் என் போன் நம்பர் (7904644875)

  ReplyDelete
 22. இந்த சேவை இல்ல போன் நம்பா் வேண்டும் என் நம்பா்9965336034

  ReplyDelete
 23. இந்த சேவை இல்ல போன் நம்பா் வேண்டும் என் நம்பா்9965336034

  ReplyDelete
 24. Brahmana poor girls irundha sollunga nan marriage panna ready my contact num 7507350053

  ReplyDelete
 25. உங்களுடைய சேவை என்னை எனக்கு தரவும் எம்மை தொடர்பு கொண்டான் உதவி செய்கிறேன்

  ReplyDelete
 26. Please send your contact number. My number is 9443530270

  ReplyDelete
 27. Dear sir an Madame, என்னுடைய பெயர் குணா என்கிற குபேந்திரகுணபலன் ஊர் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி . வயது 31 படிப்பு self-employed படிப்பு diploma engineering, எனக்கு தாய் தந்தையால் கைவிட பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.தங்கள் இல்லத்தில் ஏதேனும் பெண் இருந்தாள் என்னை தோடர்பு கொள்ளுங்கள் நன்றி my number 9944575434

  ReplyDelete
  Replies
  1. Good Brother.., I like yours approach..,

   Delete
 28. Sir,, my name is beermohamed.... 27 years old... From coimbatore... I want marriage for muslim orphan girl... Pls,,, contact number.... 7339094776

  ReplyDelete
 29. I need ur contact no for teaching

  ReplyDelete
 30. என் சகோதரர் க்கு‌ விருப்பம் உள்ளது,எங்களது பெற்றோர்க்கும் இதில் உடன்பாடு உண்டு,ஆதரவற்ற 26 வயதிற்கு உட்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள, தொடர்புக்கு-9080303277, இதன் மூலம் அப்பெண்ணிற்கு நல்ல கூட்டு குடும்பம் கிடைக்கும்.

  ReplyDelete
 31. நெம்பர் சொல்லூங்க இது எனது நெம்பர்9942324061

  ReplyDelete
 32. ஆதரவற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு வழிமுறைகள் என்னா? 9843123342

  ReplyDelete
 33. அங்கு உள்ள ஆதரவற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியுமா .நான் டிப்ளமோ முடிச்சி இருக்கேன் . சொந்த தொழில் ஆட்டோ வாங்கி விக்கறது. மோட்டார் தொழில் .

  ReplyDelete
 34. Hi என் பெயர் ராஜா வயது 33 நான் உடல் ஊனமுற்றவர் படிப்பு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் எனக்கு உடல் ஊனமுற்ற அல்லது ஆதரவு அற்ற மணமகள் தேவை

  ReplyDelete
 35. I am Jagannathan i am a govt teacher

  ReplyDelete
 36. ஜெகன்நாதன் K அரசு ஆசிரியர் உடல்ஊனமுற்றவர்(மெதுவாக நடப்பவர்) D.of.birth 19.04 1972 ,ஆதரவற்ற விதவை பெண்ணை மணந்து கொள்ள விருப்பம் தகவல் இருந்தால் பகிரவும்

  ReplyDelete
 37. ஜெகன்நாதன் K
  9677289845

  ReplyDelete
 38. நம்பர் வேண்டும் 9841391290இது
  என் நம்பர்

  ReplyDelete
 39. ஆதரவற்ற பெண்ணிற்கு வாழ்வளிக்க உதவுங்கள் திருமணம் மூலம்.8122828741

  ReplyDelete
 40. Sir கோவையில் இதுபோன்ற இல்லம் உள்ளதா?

  ReplyDelete
 41. I am a teacher working in government primary school.I like to marry orphan girl.pls contact 8940102913

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...