Monday, June 24, 2013

ICC உலக கோப்பை இந்தியா வெற்றி - வீடியோ + விமர்சனம்

கிரிக்கெட்டில் இந்தியா கோப்பையை வெல்வது எப்போதேனும் தான் நடக்கிறது ! அப்படி ஒரு அறிய தருணத்தை - அதன் ஹைலைட்சை இங்கு பகிர்ந்து வைப்போம் !



மேட்ச்சின் முக்கிய தருணங்கள் 4 பகுதிகளாக இதில் உள்ளது ; ஐந்தாவது கடைசி பகுதி வென்ற பிறகு இந்திய வீரர்கள் வெற்றியை கொண்டாடியது !

பிக்சிங் போன்ற செய்திகளை முழுதும் புறக்கணித்து இந்தியா விளையாடும் மேட்ச்களில் அரங்கை நிறைத்தனர் இங்கிலாந்து வாழ் இந்தியர்கள்.

நேற்று மேட்ச்சில் - இங்கிலாந்து சப்போர்ட்டர்கள் வெறும் 10 % - நம்ம மக்கள் தான் 90 %

மேட்ச் மழையால் 20 ஓவர் ஆனபின் இந்தியா ஆடிய போது - 3 முறை மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து ஆடியபோது எந்த தடையும் இல்லை. ஸ்கோர் எளிதில் எடுக்க கூடிய 130 என்பது அவர்களுக்கு முன்பே தெரிந்தும் இருந்தது. அவர்கள் நாட்டு மழை, கிளைமேட், பிட்ச் அவர்களுக்கு பழக்கமான ஒன்று. எனவே இங்கிலாந்து வெல்லவே வாய்ப்புகள் மிக அதிகம். இவற்றை மீறி அவ்வளவு சின்ன ஸ்கோரை இந்தியா defend செய்தது பெரிய விஷயம் தான் !

Part I




தவான் & ரோஹித் ஷர்மா பல மேட்ச்களில் நல்ல அடித்தளம் தந்தனர். தினேஷ் கார்த்திக் தோனி மற்றும் ரைனா பேட்டிங்கில் சீரிஸ் முழுக்க பிரகாசிக்கலை !

Part II




ஜடேஜா சீரிஸ் முழுக்க அசத்தி விட்டார் ! இந்த மேட்சில் அவர் அடித்த ரன்கள் வெற்றிக்கு மிக மிக முக்கியமாய் அமைந்தது


Part III



முதல் கேட்ச் ஸ்லிப்பில் தாவி பிடித்தது அஷ்வின் தானா? ஆச்சரியமாய் இருக்கு ! பீல்டிங்கில் இஷாந்த் போன்ற ஒரு சிலர் தவிர்த்து மற்ற எல்லோரும் செம ஷார்ப்.

 Part IV

 

இஷாந்த் போட்ட அந்த 18 வது ஓவர் அடடா ! ஒரு சிக்ஸ் மற்றும் ஒயிட் போனதும் 16 பந்தில் 20 ரன் - கையில் ஆறு விக்கெட் என்ற எளிய இலக்கு வந்தது. அடுத்தடுத்த பந்தில் செட்டில் ஆன வீரர்கள் மார்கன் மற்றும் போபாரா அவுட் !

பைனலில் - அதுவும் பாஸ்ட் பவுலிங்கிற்கு பெயர் போன இங்கிலாந்தில் கடைசி 2 ஓவர் வீசியது - ஜடேஜா மற்றும் அஷ்வின் என்ற 2 ஸ்பின்னர்கள் ! என்னா கேப்டன்சி ! சான்சே இல்லை ! அஷ்வின் பொறுமையாய் , தைரியமாய் கடைசி ஓவர் வீசியது அமர்க்களம் !

பைனல் ஜெயித்தும் தோனியின் மகிழ்ச்சி மும்பையில் உலக கோப்பை வென்ற போது கூட காட்டலை !

Part V  Celebration Time



*********
என்னா செலிபரேஷன் ! கோப்பையை கையில் வாங்கியதும் - அடுத்த நொடி சக வீரர்களிடம் தந்து விட்டு பின்னே சென்று விடும் தோனியை கவனித்தீர்களா?




Well done Team India !

***********
அண்மை பதிவுகள் 

லப்புழா எப்போது செல்லலாம்; எங்கு தங்கலாம் FAQ

திங்க கிழமை - தீயா வேலை செய்யணும் - விமர்சனம் 

8 comments:

  1. Well done. And well presentation.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகிழ்ச்சி மேடம்

      Delete
  2. தகவல்களுக்கும் காணொளிகளுக்கும் நன்றி.

    பேப்பரில் வெற்றி பற்றி படித்ததோடு சரி.....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? வேலை அதிகம் போல வெங்கட் !

      Delete
  3. Nice presentation sir.

    //என்னா செலிபரேஷன் ! கோப்பையை கையில் வாங்கியதும் - அடுத்த நொடி சக வீரர்களிடம் தந்து விட்டு பின்னே சென்று விடும் தோனியை கவனித்தீர்களா?//

    Not only here, he is always like that. Getting the trophy from the presenter & then immediately hands over it to the teammates. After that, he is mostly not available for photo or video also.

    What a captain We should be very proud of him.

    ReplyDelete
  4. மேட்ச் ஜெயித்தக்கணத்தில் தோனி முதலில் உற்சாகத்தைப் பகிர்ந்தது எங்கோ நின்றுக்கொண்டிருந்த இஷாந்திடம்தான். கவனீத்தீர்களா ?!!

    ReplyDelete
  5. நான் மேட்ச் பார்கவில்லை படித்து தான் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...