பெட்ரோல் பங்குகளில் நம்மை பல விதமாய் ஏமாற்றுவது பற்றி இந்த கட்டுரையில் எழுதியதை நீங்கள் வாசித்திருக்கலாம். நல்ல பெட்ரோல் பங்க் கிடைப்பதே மிக அதிசயம். அப்படி ஒரு நல்ல பங்க் பற்றியும் அங்கு கிடைக்கும் வித்தியாச அனுபவம் பற்றியும் இப்பதிவு....
##########
பெட்ரோல் நிலையத்துக்குள் நுழைந்த பின் யாருக்கும் செல்போன் பேசவோ, உபயோகிக்கவோ அனுமதி இல்லை. நீங்கள் பேசினால், ஒரு சில நொடிகளில் உங்களை ஒருவர் அணுகி, " செல்போன் பேசாதீர்கள், அணைத்து விடுங்கள் " என்பார்.
பெட்ரோல் போட நெருங்கியதும், பெட்ரோல் போடும் நபர் உங்களுக்கு இரு கையும் கூப்பி " வணக்கம் சார்" என சொல்வார். பின் நீங்கள் வண்டி மீது அமர்ந்திருந்தால், உங்களை வண்டியை விட்டு இறங்க சொல்லுவார். வண்டியில் அமர்ந்த படியே யாருக்கும் பெட்ரோல் போடவே மாட்டார்கள். அடுத்து " டேன்க் பில் பண்ணிடலாமா?" என்பார். இருந்தாலும் விடாமல் இதே கேள்வி கேட்கிறார்கள். அவங்க கேட்பதால் நாம் டேன்க் பில் பண்ணிட போறாமா என்ன? இருக்க காசுக்கு தானே போட முடியும்? .
அடுத்தது தான் முக்கிய கட்டம். நான் தொடர்ந்து ஷெல் போக அதுவே காரணம். பல கடைகளில் பெட்ரோல் போட ஆரம்பித்ததும் "0 " விலிருந்து முதல் ஜம்பே இருபது அல்லது முப்பது ரூபாய்க்கு இருக்கும் (அளவில் 0. 20 அல்லது 0. 30 லிட்டராவது சாபிட்டுருவாங்க). இங்கு மீட்டர் "0 " விலிருந்து தொடர்ந்து ஜம்ப் ஆகாமல் ஓடுவதை காணலாம். மற்ற பெட்ரோல் பங்குகளை விட இங்கு போடும்போது மயிலேஜ் அதிகம் வருவதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்
பெட்ரோல் போடுவதற்கு முன் நீங்கள் பணம் குடுத்தால் வாங்கி கொள்ளவே மாட்டார்கள். பெட்ரோல் போட்டு முடித்த பின் மட்டுமே பணம் வாங்குவர். மீண்டும் உங்களுக்கு ஒரு கும்பிடு போட்டு " ப்ரீ ஏர் செக் அப் பண்ணிக்குங்க சார்" என்று சொல்லி அனுப்பி வைப்பார்கள்.
உண்மையிலே இங்கு ப்ரீ ஏர் செக் அப் தான். காற்றடிக்க எந்த பணமும் வாங்குவதில்லை. இதனாலேயே அங்கு சற்று கூட்டம் அதிகமாய் இருக்கும். சில நேரம் இங்கு காற்றடிப்பேன். கூட்டம் அதிகமெனில் சென்று விடுவேன்.
செல்போன் பேச விடாமல் தடுப்பது, வண்டியிலிருந்து இறங்கிய பின் தான் பெட்ரோல் போடுவோம் என்பது போன்றவை சிலருக்கு எரிச்சல் தரும் எனினும், நானும் முன்பு ஒரு பெட்ரோல் நிறுவனத்தின் லீகல் டீமில் இருந்ததால், இது ஏன் செய்கிறார்கள் என தெரியும். " பாதுகாப்பு உணர்வு" தான் ( Safety ) இத்தகைய முன் ஜாக்கிரதை செயல்கள் செய்ய ஒரே காரணம். இவை நமக்கும் நல்லதே !
துவக்கத்தில் தொடர்ந்து ஷெல் மட்டுமே சென்று வந்த நான், பின் மற்ற இடங்களை விட இங்கு லிட்டருக்கு ஏழெட்டு ரூபாய் விலை அதிகமான பின் செல்வதில்லை. ஆனால் இப்போது பெட்ரோல் விலை மிகவும் ஏறிய பின், வெளி மார்கெட்டில் என்ன விலையோ அதே விலைக்கு (same price no change ) ஷெல்லில் பெட்ரோல் கிடைக்கிறது. இதற்காக வெளி மார்கெட் விலை; எங்கள் விலை என இரண்டையும் எழுதி; வெளியிலும் இங்கும் பெட்ரோல் ஒரே விலையே என்ற பெரிய போர்டு எல்லா ஷெல் ஷோ ரூமிலும் வைத்துள்ளனர். ஆனாலும் மக்களுக்கு ஷெல்லில் பெட்ரோல் விலை அதிகம் என்று எண்ணம் உள்ளது. ஷெல் பெட்ரோல் பங்குகளில் அதிக கூட்டம் இல்லாததே இதை சொல்கிறது.
நல்ல குவாலிட்டி பெட்ரோல், சரியான அளவில் கிடைப்பதால்.. .. ஷெல் பெட்ரோல் பங்கை நிச்சயம் நாடுங்கள் ! மைலேஜ் கவனித்து பார்த்தால், நிச்சயம் எனக்கு நன்றி சொல்வீர்கள் !
##########
ஷெல் பெட்ரோல் பங்குக்கு சென்றுள்ளீர்களா? இங்கு கிடைக்கும் அனுபவம் மற்ற பெட்ரோல் பங்கிலிருந்து முற்றிலும் வேறாய் இருக்கும். வாங்க ஷெல் பெட்ரோல் பங்கிற்குள் நுழைவோம்.
எல்லா பெட்ரோல் பங்கிலும் இரண்டு புறமும் நுழையலாம். இங்கு குறிப்பிட்ட ஒரு பக்கம் மட்டும் தான் நுழைய முடியும். நுழைகிற இடத்தில் ஸ்பீட் பிரேக்கர் போட்டு வேகமாய் வண்டி ஓட்டி வர முடியாத படி செய்துள்ளனர்.
இங்கு ஆண், பெண் ஊழியர் அனைவரும் சிகப்பு சட்டை நீல பேன்ட் அணிந்து "சட்டையை இன்" செய்து கொண்டு தலையில் தொப்பியுடன் தான் இருப்பர். இதில் மாறுதலே இருக்காது.

நல்ல அனுபவம் தான்....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
த.ம. 2
பலருக்கும் பயனாகக் கூடிய தகவல்கள்.
ReplyDelete// மற்ற பெட்ரோல் பங்குகளை விட இங்கு போடும்போது மயிலேஜ் அதிகம் வருவதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் //
ReplyDeleteமோகன் அண்ணே,
எனக்கு ஷெல் பெட்ரோலுக்கும் , HP,BP பெட்ரோலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. மைலேஜ் வித்தியாசம் இல்லையே என்று கேட்டால் தொடர்ந்து ஷெல் பயன்படுத்தினால்தான் மைலேஜ் அதிகம் தரும் என்று வடபழனி ஷெல்-லில் சொகிறார்கள். 3 மாதம் பயன் படுத்திப் பார்த்து ஏமாற்றம்.
இது என் அனுபவ கருத்து.
அவன் வணக்கம் போடுவதே, "யோவ், முதலில் கீழே இறங்கு" என்பதை கெளரவமாகச் சொல்லத்தான்!!
ReplyDeleteஷெல் விலை வெளி விளையும் ஒண்ணா!! பரவாயில்லையே!! இனி ஷெல் தான்.
Thanks for sharing.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeletein Bangalore shell petrol is cheaper than state owned companies.
ReplyDeleteyesterday i filled petrol in Sheel
1 Lt - 74.00
Indian Oil - 74.70
BP and HP - 75.50
(Bangalore Rate)
there is an issue with card payment with shell. the addtional surcharge collected during the filling time by the bank , will be credited back with state owned outlets. but in the shell case the surcharge is not returned by this banks
ReplyDeleteFor Rs 1000 the surcharge is 25 Rs.
plz correct it if its wrong.
The other interesting act is cleaning of windshields for cars. They do this as a free service and never accept tip for the same.
ReplyDeleteWe have one near Pallikaranai Kamatchi hospital.Service is good but the lack man power so always there is a delay in service.
Nalla thagaval.
ReplyDeleteஎண்ணெய் கம்பெனிகளில் பொதுவாகவே பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். அதைத்தான் தனது பெட்ரோல் பங்க்களில் நடைமுறைப்படுத்துகிறார்கள்.
ReplyDeleteஷெல் மற்றும் சில எண்ணெய் துறையில் இருக்கும் நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளர்களாக இருப்பதால் அதன் அலுவலங்களுக்கு சென்ற அனுபவத்தில் இதைச்சொல்கிறேன். சாதாரணமாக இவர்களின் அலுவலகம் செல்லும்போது ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் நமது பிரதமர் அலுவலுகத்தில் கூட இருக்கிறதா, அதை பின்பற்றுவார்களா என்பது சந்தேகம்தான். தனிமனித ஒழுக்கத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
நண்பர் திரு மோகன் குமார் அவர்களின் பயனுள்ள பதிவு.
ReplyDeleteஒரு நேர்மையான பெட்ரோல் பல்க்கை அடையாளம் காட்டுகிறார்.
நன்றி. வாழ்த்துகள்.
சார் எதுக்காக பெட்ரோல் போடும் போது வண்டியை விட்டு இறங்கிக்கொள்ளச் சொல்கிறார்கள்...?
ReplyDeleteஉண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை.
உபயோகமான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteராமலட்சுமி மேடம்: நன்றி
ReplyDeleteஜெய்: ஷெல் பங்கிலும் வெவ்வேறு இடத்தில் குவாலிட்டி மற்றும் மைலேஜ் மாறுது என நீங்கள் சொல்லும் போது அதிர்ச்சியாக உள்ளது
ReplyDeleteதாஸ்: நன்றி. பெட்ரோல் விலை எல்லா நிறுவனமும் மாற்றி கொண்டே தான் இருக்கிறார்கள். பின்னூட்டத்தில் அருண் என்கிற நண்பர் சொல்லிய படி, இப்போது பெங்களூரில் ஷெல் மற்ற பங்க் விட விலை குறைவு போலும். நாம் சற்று வாட்ச் செய்து கொண்டு தான் இருக்கணும். 1 அல்லது 2 ரூபாய் வரை அதிகம் என்றாலும் ஷெல்லில் பெட்ரோல் போடுவதை நான் வழக்கமாய் வைத்துள்ளேன். ஏழெட்டு ரூபாய் வித்யாசம் என்றால் வேறு நல்ல பங்க் சென்று விடுவேன்
ReplyDeleteநன்றி ஆதிமனிதன்
ReplyDeleteகந்தசாமி சார்: நன்றி
ReplyDeleteஉங்கள் அனுபவம் சொன்னமைக்கு நன்றி அருண்குமார்
ReplyDeleteநன்றி பிரசன்னா. பள்ளிக்கரணை பங்க் தான் நான் ரெகுலர் ஆக செல்கிறேன்
ReplyDeleteதுரை டேனியல்: நன்றி
ReplyDeleteநாஞ்சில் பிரதாப்: உங்கள் அனுபவம் சொன்னதற்கு மிக நன்றி.
ReplyDeleteநன்றி ரத்னவேல் ஐயா முகநூலில் பகிர்ந்தமைக்கும்
ReplyDeleteவீரக்குமார்: வண்டியில் அமர்ந்திருக்கும் போது பெட்ரோல் பீய்ச்சி நம் மீது அடித்து விட்டால் (அதற்கு வாய்ப்பு மிக குறைவே) அதன் மூலம் அங்கோ பிறகோ விபத்து ஏற்படலாம் என்பதால் இருக்க கூடும். பொதுவாய் விபத்தை தவிர்க்க தான் இவர்கள் பல கண்டிஷன்கள் போடுகிறார்கள்
ReplyDeleteநன்றி நடன சபாபதி சார்
ReplyDeleteநானும் பல முறை இதேமாதிரி நினைச்சி இருக்கேன் சார்.. எப்படி எல்லார்கிடும் பொறுமையா வணக்கம் சொல்றத பாலோ பண்ண முடியுதோன்னு.. மற்ற இடங்கள விட இங்க பெட்ரோல் pure இருகரதவிட காசு கூட இருக்கறது தான் மக்கள் பெருசா நினைச்சாங்க.. இப்போ அதும் இல்ல ஒரு விலை என்பதால!!
ReplyDeleteநல்ல ஒரு பதிவு சார்...
நல்லதொரு பகிர்வு! எங்கள் பக்கத்தில் ஷெல் இல்லை! சென்னை வரும் போது பார்க்கலாம்! நன்றி!
ReplyDeleteI always fill petrol for my car in Shell – Bangalore (BLR).
ReplyDeleteIn BLR, there are lot of stories on HP, BP and IO cheating customers. There is a huge post in teambhp.com on this and what are the petrol stations to avoid.
Everyone unanimously agree that there is NO cheating on shell petrol station
The price difference is not much – mostly less than Rs. 2
The shell petrol station is clean, spacious and they fill air in the order you wait…
A good thing is that shell has lot of stations in BLR…
பயனுள்ள பகிர்வு..
ReplyDeleteபயனுள்ள தகவல் பதிவு. நன்றி பகிவுக்கு.
ReplyDeleteAvasaramaga sellumbodhum Entha vanakkam thevaiya ene thondrum. Pagirvirku Bantu
ReplyDeleteமிகவும் பயனுள்ள பகிர்வு.பெட்ரோல் பங்க் வைத்துள்ளதால் சில கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றேன். அளவினை பொறுத்தவரை 99.90% சரியாகவே இருக்கும்.பெட்ரோலில் ஏற்படும் ஆவியாதலின் காரணமாக நீங்கள் பெட்ரோல் போடும் நேரத்தினை பொறுத்து மைலேஜ் அளவுகள் மாறுபடும். வண்டியை விட்டு இறங்க சொல்வது,ஏதேனும் விபத்து ஏற்பட்டால் நாம் சீக்கிரமாக வெளியில் சென்று விட வேண்டும் என்பதற்காக.ஹாஸ்பிடாலிட்டி பொறுத்தவரை எல்லா பங்குகளுமே அதனை பின்பற்ற முடியாமைக்கு காரணம் நேரிமின்மை தான். இவ்வளவு விஷயங்களையும் செய்து பெட்ரோல் போட்டால் பின்னால் நிற்பவர்களுக்கு கால விரயம் ஏற்படும் என்பதால் செய்ய முடிவதில்லை.
ReplyDeleteமேலும் 0விலிருந்து தான் எல்லா பம்ப்களுமே ஆரம்பிக்கும். பம்பின் செயல்பாடுகளை பொறுத்து அவற்றின் வேகம் அமையும்.மேலும் பம்புகள் அனைத்துமே கம்பெனியால் கொடுக்கப்படுபவை தான். அவைற்றை டீலர்களால் எந்த மாற்றமும் செய்ய இயலாது. உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் டீலர்களிடம் சொல்லி செக் செய்யலாம்.வாட்டர்மென் டெஸ்ட், அளவு டெஸ்ட் கண்டிப்பாக நீங்கள் கேட்டால் டீலர் செய்வார்.அதனை பயன்படுத்தவும்.மேலும் விளக்கங்கள் கேட்டால் சொல்ல தயாராக இருக்கின்றேன்.
இதுவரை அறியாத செய்தி!நல்ல தகவல்! நன்றி மோகன்!
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteஅன்பான மனிதர்களைத் தேடியே நம் மனம் அலைகிறது.அப்படிப்பட்டவர்களை சந்திக்கும் போது அது விவரிக்க முடியாத சந்தோசத்தை தருகிறது
ReplyDeleteமதுரையில் இரண்டு இடங்களில் ஷெல் பெட்ரோல் நிலையங்கள் வைத்திருந்தார்கள். போதிய வருவாய் இல்லாததால் மூடி விட்டார்கள். நீங்கள் சொல்லும் இந்த நடைமுறை கொஞ்சம் எரிச்சலை தருவதாகத்தான் இருக்கிறது. நல்லதொரு பகிர்வு!
ReplyDeletei have a doubt, is shell petrol also same as dispensed by HP BP IOCL, why i am asking if my tank already has HPBPIOCL petrol can i fill shell, or should i empty my tank to fill shell only
ReplyDeleteசார் ஷெல் is a US company. We are trying not to buy Chinese crackers. Similarly we should not consider SHELL pumps as well as buying from amazon, coca cola, pepsi etc.etc.
ReplyDelete