மீண்டும் தூண்டில் கதைகள் 1995-ல் ஆனந்த விகடனில் வெளிவந்த சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு. ஒவ்வொரு வாரமும் அதன் பக்கங்களை கத்தரித்து, பத்திரமாய் எடுத்து வைத்து இன்னும் பாதுகாப்பாய் என்னிடம் பத்திரமாய் உள்ளது. சமீபத்தில் அதை மீண்டும் எடுத்து தலைவரின் மாஜிக்கை முழுமையாய் அனுபவித்தேன்.
மிக பிரசித்தி பெற்ற முதல் கதை (" கருப்பு குதிரை") - மேட்ச் பிக்சிங் பற்றியது. ஒரு அம்பயரின் பார்வையில் சொல்லப்படும் கதை ( அந்த அம்பயர் நம் வெங்கட் ராகவனை கண் முன் கொண்டு வருகிறார்). ஒரு மேட்சில் ஜெயிக்க அந்த அம்பயரை அணுக ( 50000௦௦௦ US டாலர்), அவர் மறுக்கிறார். ஆனால் இறுதியில் அங்கு விளையாடிய எதிர் அணி கேப்டன் மூலம் அதை போல இரு மடங்கு பணம் கொடுத்து மேட்ச் பிக்சிங் நடந்தது இறுதியில் தெரிகிறது ! இதன் பிறகு மேட்ச் பிக்சிங் பற்றி வேறு சில கதைகள் வந்திருக்கலாம். ஆனால் தம்ழில் இவ்வகை கதைகளுக்கு இது முன்னோடி என்று சொல்லலாம்
பெரியவர்கள் உலகம் என்கிற கதை ஒரு பள்ளி செல்லும் மாணவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. நல்ல தலைமை ஆசிரியர் மாற்றலாகி வேறு ஊருக்கு செல்ல போவதாக தெரிய வரும் மாணவர்கள் மிக அப்செட் ஆகிறார்கள். தலைமை ஆசிரியர் மனைவிக்கு மற்றொரு ஆசிரியருடன் உறவு இருப்பது அந்த சிறுவனுக்கு தெரிய வருகிறது. தலைமை ஆசிரியர் மாற்றலாகி போவதே இந்த தவறான உறவிலிருந்து பிரிக்கத்தான் என்றும் புரிகிறது அவனுக்கு ! இந்த விஷயம் கேள்வி பட்டதும் திடீர் பெரியவனாகி " நான் படிக்கணும்" என தான் டாவ் அடிக்கும் பெண்ணிடம் சொல்வதாக சொல்வது மட்டும் சற்று உறுத்துகிறது ! மாறுதல்கள் அவ்வளவு சீக்கிரமாய் நடக்குமா?
கார்பெட்டில் ரத்தம் முகத்தில் புன்னகை : இதுவும் கூட கணவன் இருக்கையில் இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணின் கதை. ஒரு மரணம் நிகழ்கிறது, அது கொலையா தற்கொலையா என்பது தான் கதை.
"எல்லாமே இப்பொழுதே" - கதை செம சுவாரஸ்யம் ! சாதாரண வேலையில் இருக்கும் ஒருவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவனது பணக்கார பாசும் அந்த பெண்ணை காதலிக்க, காதலன் விட்டு கொடுக்கிறான். ஒரு பணக்காரன் - ஒரு ஏழை எனும்போது அந்த பெண் பணக்காரனை தான் தேர்ந்தெடுப்பாள் என்பது யூகிக்க முடிந்தாலும் கதையின் இறுதியில் வரும் டுவிஸ்ட் அதிர வைக்கிறது. அங்கு கூட விஷயத்தை சுஜாதா முழுசாய் சொல்லாமல் நம் ஊகத்துக்கு விட்டு செல்வது அட்டகாசம் !
2887-ல் சில விலாசங்கள் என்கிற வருங்காலம் குறித்த கதை ஒன்று. செக்ஸ் என்பதே தடை செய்யப்பட காலம். ஒரு பையன் ஒரு பெண்ணின் விலாசம் தேடி போகிறான். எல்லாம் முடிகிறது. கடைசியில் தான் தெரிகிறது. அந்த பெண் கால் கேர்ள் அல்ல, வந்த பயன் தான் கால் பாய் என்பது ! இப்போதே இந்த "கால் பாய்" கலாசாரம் சென்னைக்கு வந்து விட்டது நடப்பதை சென்னையில் உள்ள பலரும் அறிவர் !
சொல்லும் விதம் நகைச்சுவையாய் இருந்தாலும் பல கதைகளில் முடிவில் சோகம் இழையோடுகிறது.
மொத்தத்தில்:
கையில் எடுத்தால் முடித்து விட்டு தான் வைக்கிற மாதிரியான சுஜாதா ஸ்பெஷல். இதுவரை வாசிக்கா விடில் அவசியம் வாசியுங்கள் !
ஆனந்த விகடனில் அப்போது படித்த கதைகளை ஞாபகத்துக்கு கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி! மேட்ச் பிக்சிங்க் கதையான கறுப்பு குதிரை நான் மிகவும் ரசித்த ஒன்று!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteஎனக்கு சுஜாதான்னாலே கொஞ்சம் அலர்ஜி. ரொம்ப அறிவாளிகளுக்கு மட்டுமே அவர் எழுத்து புரியும் என்பது என் தனிப்பட்ட கருத்து. அவர் புத்தகத்துல ஏன்? எப்படி? எதற்கு? மட்டுமே என்னிடம் இருக்கு.
ReplyDeleteசாதாரண மக்களுக்கும் சுஜாதா பிடிக்கும் தான் ! 25 வருஷத்துக்கும் மேல் வாசித்தும் அலுக்காத ஒரே எழுத்தாளர் இவர் மட்டுமே ; ரஜினிக்கு இருக்கும் அளவு ரசிகர் கூட்டம் இவருக்கு புத்தகம் வாசிக்கும் மக்களிடம் உண்டு
Deleteவிஞ்ஞான கதைகளை சொல்லிவந்த எனக்கு பிடித்த எழுத்தாளர் சுஜாதாவை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteநன்றி கண்ணதாசன் சார்
Deleteபடித்திருக்கிறேன்..
ReplyDelete
Deleteநன்றி ஸ்ரீராம்
கதையின் முடிவை சொல்லிடாதீங்க மோகன்......அப்புறம் வாசிக்கும்போது சுவாரஸ்யம் போயிடும் :(
ReplyDeleteபை த வே, புக் எடுத்து பத்திரமா வெச்சிருங்க :)
Deleteஓகே ரகு; இது பக்கம் பக்கமாய் உள்ளது. உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னா படிங்க
படித்திருக்கிறேன். தூண்டில் போட்டு நம்மை இழுக்கும் கதைகள்!
ReplyDeleteஆம் வெங்கட் நன்றி
Deleteசுவாரஸ்யமான கதைகள்...பகிர்விற்கு நன்றி சார்
ReplyDeleteசமீரா: ஆம் நன்றி
Deleteநான் படிக்க தவறிய கதைகளுக்கு அறிமுகம் தந்தமைக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteவாங்க ப்ளாக் பாண்டி; முதல் வருகைக்கு நன்றி
Deleteபுத்தகமா வந்திருக்கா என்ன? தங்களது அறிமுகத்திற்கு நன்றி. நான் அந்த தொடரை படித்ததில்லை. ஆனால் சுஜாதா என் மனம் கவர்ந்த எழுத்தாளராவார். பகிர்வுக்கு நன்றி சகோ.
ReplyDeleteநன்றி துரை டேனியல். தூண்டில் கதைகள் மூன்று பாகமாவது புத்தகமாய் வந்திருக்கு என நினைக்கிறேன்
Deleteகறுப்புக் குதிரை
ReplyDelete==============
http://udumalai.com/?prd=karuuppu%20kuthirai&page=products&id=2525
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் 'புதிய தூண்டில் கதைகள் ' என்ற பொதுத்தலைப்பில் ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை.மேட்ச்ஃ பிக்ஸிங் என்றால் என்ன என்று தெரிந்திராத காலத்தில் எழுதப்பட்டது என்று இந்த கதை உண்மைக்கு மிக அருகில் வந்து விட்டது. சுஜாதாவிற்கே ஆச்சர்யம் அளித்ததாக எழுதியிருக்கிறார்.தூண்டில் கதைகள் என்கிற தலைப்பில் இவர் முதலில் எழுதிய 12 கதைகளும் தொகுப்பாக வந்துள்ளன. அவைகளை தொடர்ந்து அதே வகையில் கடைசியில் எதிர்பாராத திருப்பம் தரும் கதைகளை எழுத வாசகர்கள் கேட்டுக்கொண்டதால் எழுதப்பட்ட கதைகள் இவை.
லின்குகளுக்கு நன்றி பாலஹனுமான்
Deleteமீண்டும் தூண்டில் கதைகள்
ReplyDelete==========================
http://udumalai.com/?prd=meendum%20thondil%20kathaigal&page=products&id=2534
சுவாரசியமான கதைகளைப்பற்றிய பகிர்வு.மீண்டும் படிக்கத்தூண்டும் விதமாக இருக்கு உங்களுடைய விமர்சனம். நன்றி.
ReplyDeleteசமீபத்தில் 6 அம்பயர்கள் மேட்ச் பிக்சிங்கில் மாட்டியபோது சுஜாதாவின் இந்த ‘கருப்பு குதிரை’ கதை ஞாபகம் வந்தது. ஆ.வி.யில் தொடராகப் படித்தது. தொகுப்பாகப் படிக்கவில்லை.
ReplyDeleteவிமர்சனத்திற்கு நன்றிகள்.
ReplyDeleteசீனி: அருமை நன்றி
உங்க விமர்சனம் புத்தகத்தை படிக்கத் தூண்டுகிறது.
ReplyDeleteசுஜாதா நவீன வணிக தமிழ் இலக்கியத்தின் அற்புத நிகழ்வு.
ReplyDelete