Friday, October 28, 2016

கொடி : சினிமா விமர்சனம்

தனுஷுக்கு கடந்த சில வருடங்களில் வேலை இல்லா பட்டதாரி தான் மாஸ் ஹிட்; மாரி  போட்ட பணத்தை எடுத்ததால் சுமாரான ஹிட் என்று கேள்வி. (படம் மற்றும் பொதுவான ரிவியூ மிக மோசம் !)

கொடியாவது கை  கொடுத்ததா?

கதை 

இரட்டை பிறவிகள் தனுஷ்.. ஒருவர் நேர்மையான அரசியல் வாதி.. தம்பி கல்லூரி ஆசிரியர்.. த்ரிஷா மற்றும் அனுபமா இருவருக்கும் காதலிகள்..

தனுஷ் மற்றும் அவரது காதலி த்ரிஷா தேர்தலில் எதிர் எதிரே போட்டியிடும் சூழல்.. இதற்கு பின் நிகழும் விஷயங்கள் நிச்சயம் திடுக்கிட வைப்பவை  !

தனுஷ் - த்ரிஷா 

படத்தை அசால்ட்டாக சுமப்பது தனுஷ்.. 2 பாத்திரத்துக்கு நல்ல வித்யாசம் காட்டுகிறார்.

த்ரிஷா - பாத்திரம் செம வித்யாசம் ! நீலாம்பரியை மனதில் வைத்து - அந்த அளவு வரணும் என நினைத்து  செய்துள்ளனர். நீலாம்பரி அளவு இல்லா விடினும் - நிறைய சர்ப்ரைஸ் இருக்கு இவர் பாத்திரத்தில்

மற்றொரு நாயகி அனுபமா ப்ரேமம் படத்தில் நடித்தவர். அழகு + நடிப்பு இரண்டிலும் அருமை; தமிழில் நிறைய நடிங்க மேடம் !

Image result for kodi film

கதை மற்றும் இயக்கம் 

அரசியல் மற்றும் தேர்தல் என வித்தியாச கதை களம் .. தேவையற்ற காட்சிகள் அநேகமாய் இல்லை (சில சண்டை அல்லது பாடல் காட்சிகள் தவிர்த்து ) கதை எடுத்து கொண்ட விஷயத்தில் சரியே பயணிக்கிறது.

நேர்மையான அரசியல் வாதி (தனுஷ்) Vs நேர்மையற்ற அரசியல் வாதி (த்ரிஷா) என இரண்டு பாத்திரங்களை அமைக்கும் போதே சுவாரஸ்ய காட்சிகளுக்கு பேஸ் அமைந்து விடுகிறது !

இரண்டாம் பகுதியில் பல சின்ன சின்ன சர்ப்ரைஸ் உள்ளது; கதை தெரியாமல் பார்த்தால் அவற்றை ரசிக்கலாம்.

Image result for kodi film

மண்ணாசை பெண்ணாசை இந்த இரண்டையும் விட மோசமானது பதவி ஆசை என்பார்கள். படம் இந்த கருத்தை சுற்றியே தான் சுழல்கிறது .

மொத்தத்தில் 

படம் எங்களுக்கு நிரம்ப பிடித்திருந்தது; ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்சும் தியேட்டரில் நன்றாகவே இருந்தது; (நான்கைந்து குட்டி பசங்க படம் முடிந்து வரும் போது " செமையா இருந்துச்சு படம்" என பேசிக்கொண்டு போனது ஸோ சுவீட்)

 இருப்பினும் தேர்தல் - அரசியல் போன்ற விஷயங்கள் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் பிடிக்காமல் போகவும் செய்யலாம் !

கொடி - நிச்சயம் ஒரு முறை காண வேண்டிய படம்  !

***********
அண்மை பதிவு : 

காஷ்மோரா சினிமா விமர்சனம்

4 comments:

  1. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete

  2. //கொடி - நிச்சயம் ஒரு முறை காண வேண்டிய படம் தான் !//

    நண்பரே இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்லிய நீங்கள் ஆன்லைனிலா அல்லது தியோட்டரிலா என்று சொல்லாமல் போயிட்டீங்களே

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

      முதல் நாள்: தியேட்டரில் தான் பார்த்தேன் நண்பா ! அதுக்குள் ஆன்லைனில் வந்துடுச்சா ???

      Delete
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...