சீசன் டிக்கெட் - ஒரு அப்டேட்
சென்னை ரயில்களில் பலரும் மாதாந்திர அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை சீசன் டிக்கெட் வாங்குவர். சரியாக அது முடிந்ததும் - முதல் நாள் கியூவில் நிற்பர்; காலை நேரம் கூட்டம் வேறு அதிகமாய் இருக்கும். வாங்கி விட்டு தான் ட்ரெயின் ஏறணும் - தாமதமாகும் டென்சன்...
ஆனால் நமது சீசன் டிக்கெட் எப்போது முடிகிறதோ- அதற்கு ஒரு வாரம் முன்பிலிருந்தே நாம் புதுப்பிக்கலாம் ! என்றைக்கு வரை நமது சீசன் உள்ளதோ - அதற்கு மறு நாளில் இருந்து புதிதாய் தருவார்கள். எனவே - காலை நேரம் என்றில்லாமல் - அலுவலகம் விட்டு வரும் மாலை நேரம் - சற்று கூட்டம் இல்லாத போது சீசன் டிக்கெட் வாங்கி கொள்வது வசதியான முறை..
இப்படி ஒரு வசதி இருப்பது எனக்கே இந்த வாரம் தான் தெரியும். இன்னும் அறியாத நண்பர்களுக்காக பகிர்கிறேன்.
அழகு கார்னர்
எதிர்பார்ப்பில்: காஷ்மோரா
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற அட்டகாச படம் இயக்கிய கோகுல் - அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத genre -ல் இயக்கியிருக்கும் படம் காஷ்மோரா; கார்த்தி, நயன்தாரா,ஸ்ரீ திவ்யா நடிப்பில் தீபாவளிக்கு வருகிறது.
ட்ரைலர் நிச்சயம் எதிர் பார்பை தூண்டுகிறது.. இத்தகைய வித்தியாச படங்களை தியேட்டரில் தான் பார்க்கணும் !
அரசு பேருந்து- ஒரு அனுபவம்
அண்மையில் எங்கள் ஊர் மடிப்பாக்கத்தில் ஒரு முக்கிய சாலையில் செல்லும்போது சற்று டிராபிக் ஜாம். திருப்பத்தில் அரசு பேருந்து வளைந்து செல்கிறது. ஒரு தனியார் நிறுவன பேருந்து ஊழியர்களை ஏற்றி கொண்டு செல்வது ஓரமாய் நின்று கொண்டிருந்தது. அதற்கு எதிர் திசையில் செல்லும் அரசு பேருந்து நன்றாக பின் பக்கத்தில் மோதி விட்டு கண்டு கொள்ளாமல் திருப்பத்தில் திரும்பி விரைவாக சென்று விட்டது..
ஒரு தவறும் செய்யாமல் - டிராபிக்கில் ஓரமாய் நின்ற அலுவலக பஸ்சுக்கு இந்த நிலை.. பாவம் அந்த ட்ரைவர் என்ன பதில் சொல்வாரோ !
என்னா பாட்டுடே : ஓ பட்டர்பிளை
மெலடி என்ற வார்த்தைக்கு அர்த்தம் - இந்த பாட்டு.. அந்த காலத்தில் ராஜாவால் மட்டுமே இவ்வளவு மெதுவான பாடலை ஹிட் அடிக்க வைக்க முடியும் (பின் ரகுமான் மெதுவான பல பாடல்களில் ஜொலித்தார்)
இப்படம் - இந்த பாடலால் பெரும் எதிர் பார்ப்புக்குள்ளானது; கதை சரியில்லை- எனவே ஓடாமல் போனது
இப்பாடலுக்கு PC ஸ்ரீராமின் ஒளிப்பதிவு கணினியை விட பெரிய திரையில் பார்க்கும் போது மனதை கொள்ளை கொள்ளும்..
ஹெல்த் கார்னர்
* ஒரு லிட்டர் குடி நீரில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?
0 !! ஆம் பூஜ்யம்.எவ்வளவு வேணும்னாலும் தண்ணீர் குடிக்கலாம்.. தப்பே இல்லை !
* கேரட், வெள்ளேரி - இவை இரண்டும் கலோரி அளவில் மிக மிக குறைந்தவை;ஆனால் நிறைய சத்துள்ளவை;பல நன்மைகள் பயப்பவை; இவற்றை நமது உணவில் நிறைவே சேர்த்து கொள்ளலாம்; குறிப்பாக மாலை ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை விட இவற்றை சாப்பிட்டால் சர்வ நிச்சயமாக வெயிட் போடாது !

Colourful rainbow
ReplyDeleteInteresting
ReplyDeletecarrot has sugar--high glycemic index. limit required definitely foe diabetic persons.
ReplyDeleteOn the other hand cucumber is perfectly fine.