Sunday, October 2, 2016

MS தோனி -சினிமா விமர்சனம்

தோனி 

ஸ்பெஷல் 26 என்ற அதி அற்புத படமெடுத்த இயக்குனர்.. கிரிக்கெட் குறித்து அதிலும் நம்ம தல தோனி குறித்து எனவே எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம்

Image result for ms dhoni movie

கதை 

ராஞ்சி என்கிற சிறு நகரில் பிறந்து - கோல் கீப்பர் ஆக வாழ்க்கை துவக்கி, பள்ளி அணியில் விக்கெட் கீப்பர் இல்லாததால் - கிரிக்கெட்டில் நுழைந்து- அப்பாவின் ஆசைக்காக ரயில்வேயில் சேர்ந்து - பின் இந்திய அணியில் புகுந்து புயல் போல் கலக்கிய தோனி - அநேகமாய் கிரிக்கெட் தெரிந்த அனைவருக்கும்  தெரிந்த கதை !

பாசிட்டிவ் 

முதல் பகுதி.. மிக அட்டகாசம் ! உலக கோப்பை பைனலில் - 3 விக்கெட் விழுந்து விட - தோனி களமிறங்குவதில் துவங்கும் முதல் காட்சியே கலக்கல்.

பிளாஷ் பேக்கில் செல்லும்  தோனியின் இளமை கால வாழ்க்கையுடன் இயல்பாய் பொருந்த முடிகிறது.

1983 மலையாள படம் போல் மிக இயல்பாய் செல்கிறது கதை.. கிட்டத்தட்ட அன்லக்கி என்று சொல்லி விடுமளவு அவ்வளவு வாய்ப்புகள் கைக்கருகில் வந்து தப்பி செல்கிறது; அணிக்குள் வந்த பின்னும் முதல் 3-4 மேட்ச்கள் சொதப்பல். இந்த பாகிஸ்தான் டூர் தான் தோனிக்கு ஒரு திருப்புமுனை; அவர்களுக்கு எதிராக அவர் அதிரடியாய் அடித்த   145 ரன்கள்.. அப்புறம் நோ லுக்கிங் பேக் ...

வாழ்க்கையில் நல்ல வேலைக்கு போகணும் என மட்டுமே சிந்திக்கும் தோனியின் தந்தை; தோழி போன்ற அக்கா; தோணிக்காக எப்போதும் பிரார்த்தனை  செய்யும் அம்மா - அவருக்காக எந்த அளவும் இறங்கி உதவும் நண்பர்கள் என மனதில் பதியும் பாத்திரங்கள்

தோனியாக நடிப்பவர் துல்லியம்.. ! அதிலும் கிரிக்கெட் மேட்ச்களில் நிஜமாய் நடந்த மேட்ச் க்ளிப்பிங் அற்புதமாக பயன்படுத்தியுள்ளனர். கம்பியூட்டர் கிராபிக்ஸ்க்கு நிச்சயம் பாராட்டு !

Image result for ms dhoni movie

மைனஸ் 

முதல் பகுதி எந்த அளவு ரசிக்க வைக்கிறதோ - அதற்கு நேர் எதிராய் இரண்டாம் பகுதி.. அவரது காதல் பற்றி அவ்ளோ டீடைலிங் மற்றும் பாட்டுகள் தேவையா? கதை அதள பாதாளத்தில் விழுவது இங்கு தான்.

கிரிக்கெட் மேட்ச்கள் ஹைலைட் பேக்கேஜ் போல் மட்டுமே காட்டப்படுகிறது

முதல் பகுதியில் இருந்த சின்சியாரிட்டி மற்றும் அழகு இரண்டாம் பகுதியில் இருந்தால் படம் லகான் அடைந்த புகழில் பாதியாவது அடைந்திருக்கும்


இறுதி வெர்டிக்ட் 

கிரிக்கெட் அல்லது தோனி ரசிகர்.. இரண்டில் எந்த ஒரு வகையில் நீங்கள் வந்தாலும் நிச்சயம் ஒரு முறை கண்டு மகிழலாம்.. இரண்டாம் பகுதியை பொறுத்தருள்க !

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...