Sunday, October 23, 2016

வானவில்: தேவி- சென்னை மழை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஓர் அனுபவம்

பார்த்த படம்: தேவி

நீண்ட நாளைக்கு பின் பிரபு தேவா தமிழில் நடித்த படம்- தேவி.

மாடர்ன் பெண்ணை மணக்க நினைக்கும் பிரபு தேவாவிற்கு அக்மார்க் கிராமத்து பெண்ணான தமன்னா மனைவி  ஆகிறார்;திருமணத்துக்கு பின் மும்பை செல்ல - அங்கு தமன்னாவின் நடவடிக்கையில் பெரும் மாற்றம்.. மாடர்ன் பெண்ணாக மாறுகிறார்.. இப்படி இந்த அதிசயம் நடந்தது என்றால் "ஒரு பேய்  தான் காரணம்" என செல்கிறது கதை..

காமெடி படம் நெடுக வருவது பெரும் பலம்; மேலும் வழக்கமாய் பேய் கதைகளில் - பேய் யாரோ ஒருவரை பழி வாங்கும்; இப்படத்தில் அது - நடிகை ஆக வேண்டும் என்கிற தனது  நிறைவேறாத ஆசையை மட்டும் தீர்த்து கொள்கிறது; மற்றபடி எந்த நெகட்டிவ் விஷயம் அல்லது படம் முழுக்க இல்லை !

பாடல்கள் எதுவும் தேறலை; இரு மொழியில் எடுத்ததால் - ஆங்காங்கு சற்று ஹிந்தி வாசம் என சில மைனஸ்கள்..

ஜாலியான டைம் பாஸுக்கு ஒரு முறை காணலாம்.

அழகு கார்னர்


வயசானாலும் ஸ்டைலும், அழகும் இன்னும் குறையவே இல்லை ..அனுஷ்கா  ! 

சென்னையும் மழையும் 

ஐப்பசியில் 10 நாள் கடந்து விட்டது; மழையின் அறிகுறி ஏதும் சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் பல பகுதிகளிலும் காணும் ! ஜூன், ஜுலையில் ஓரளவு மழை பெய்தது; பின் ஆகஸ்ட் துவங்கி இப்போது அக்டோபர் 23 வரை துளி மழை இல்லை. சென்ற வருடம் மழை பெய்து கெடுத்தது; இவ்வருடம் பெய்யாமல் கெடுக்கிறது ! சென்னையில் நீர் தேக்கங்களில் 10 % தண்ணீர் தான் இருக்கிறதாம் ! இன்னும் 3 வாரத்தில் ஏதேனும் மழை பெய்தால் தான் உண்டு.. இல்லையேல் கோடையை நினைத்தால் பயமாய் இருக்கிறது. 

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்- பெயர் குழப்பம் 

அண்மையில் தஞ்சை சென்றபோது நிகழ்ந்த சம்பவம் இது; இரவு 11..15க்கு நாங்கள் கிளம்பிய சென்னை ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்கிறது; வெளியில் உள்ள போர்டில் இதற்கு சென்னை எக்ஸ்பிரஸ் சென்று பெயர் போட்டு பிளாட்பாரம் எண் எல்லாம் சரியாக குறிப்பிட்டிருந்தனர். 

இதே நேரத்தில் ராமேஸ்வரம் நோக்கி இன்னொரு ரயில் செல்கிறது; இதனை வெளியில் உள்ள போர்டில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் பிளாட்பாரம் எண் எழுதியிருந்தனர். இது வரை எந்த பிரச்னையும் இல்லை. 

உள்ளே அறிவிப்பு செய்யும் போது இரண்டு ரயில்களை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் என்றே அறிவித்தனர். இதில் பல பயணிகள் குழம்பி, தவறான பிளாட்பாரம்க்கு செல்ல துவங்கி விட்டனர். 

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலை சென்னை எக்ஸ்பிரஸ் என்றும், போலவே ராமேஸ்வரத்தில் நோக்கி செல்லும் ரயிலை ராமேஸ்வரத்தில் எக்ஸ்பிரஸ் என்றும் எப்படி போர்டில் எழுதியிருந்தார்களோ அதே விதமாய் அறிவிப்பும் செய்திருக்கலாம்.. இரண்டையும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் எனும்போது தான் குழப்பம் அதிகரிக்கிறது. 

வயதான கணவன்- மனைவி என்னிடம் சந்தேகம் கேட்க, நான் " இந்த பிளாட் பாரத்தில் தான் வரும்; நேரம் இருக்கு; நான் வெளியில் போய் கேட்டு வருகிறேன் " என்று சென்றேன்; திரும்ப வருவதற்குள் அவர்கள் காத்திராமல் தவறான பிளாட் பார்த்திற்கு செல்ல துவங்கி விட்டனர் !  நல்ல வேலையாக ரயில் கிளம்பும் முன் சரியான இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தனர். 

இதில் வருந்த வேண்டிய இன்னொரு விஷயம் நான் வெளியில் சென்று சொன்ன போது ரயில்வே ஊழியர் யாரும் அதை கண்டு கொள்ளவே இல்லை; "இரண்டு ரயிலும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் என்றால் பலர் மாறி போய் நிற்கிறார்கள் " என்றால் அதற்கு நாங்க என்ன செய்ய முடியும் என்கிறார்கள்.. ஹூம் !

QUOTE CORNER


இதில் ஒரு சுவாரஸ்ய முரண் (irony) : இந்த தகவலும் சோஷியல் மீடியாவில் தான் படிக்கிறோம் :)

என்னா பாட்டுடே : உன் மேலே ஒரு கண்ணு 

ரஜினி முருகன் படத்தில் வரும் இந்த பாட்டு கீர்த்தி சுரேஷின் ரீ ஆக்ஷன்களுக்காகவே ரசிக்க கூடிய ஒன்று; கெமிஸ்ட்ரி,  கெமிஸ்ட்ரி என்கிறார்களே.. அது சிவகார்த்திகேயன் -கீர்த்தி சுரேஷிற்கு அட்டகாசமாக ஒர்க் அவுட்  ஆகியிருக்கும் !


டிவி கார்னர் : கல்யாணம் முதல் காதல் வரை

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மக்கள் மிக அதிகம் காணும் சீரியல்களில் ஒன்றாய் இருக்கும் என நினைக்கிறேன்; இதற்கு முதல் முக்கிய காரணம் ஹீரோயின் ப்ரியா; அடுத்த காரணம் திரைக்கதை: வழக்கமாய் எல்லா சீரியல்களில் வருகிற மாதிரி குடும்பத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனை.. பின் அது எப்படி சரியானது என்று தான் போகிறது; ஆனால் ஒரு முக்கிய வித்யாசம்; இந்த சீரியலில் ஒவ்வொரு சின்ன சின்ன பிரச்சனை அல்லது எதிர் அணியுடனான சாலஞ்சில் ஹீரோ- ஹீரோயின் அணி தான் எப்பவும் ஜெயிக்கும். இதனால் கண்ணீர்- அழுகை மிக குறைவு. 

ஆனால் இதற்கு நேர் மாறாக கடந்த சில வாரங்களாக இந்த சீரியலும் ஒரே அழுகையாக மாறி கொண்டிருக்கிறது; ஆண்கள்- பெண்கள் என வீட்டில் உள்ள அனைவரும் அழுகிறார்கள். 

பல சீரியல்களிலும் கவனிக்கும் ஒரு விஷயம்: வீட்டில் ஏழெட்டு பேர் இருப்பாங்க; அவர்களில் முக்கால் வாசி பேர் புல் மேக் அப் போட்டு கிட்டு எப்பவும் ஹாலில் நின்னு பேசி கிட்டே இருப்பாங்க.. 

என்னய்யா  விளையாடுகிறீர்களா? எந்த வீட்டில் இப்படி நடக்குது.. !

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...