Thursday, February 3, 2011

ஹைதராபாத் பயண கட்டுரை: First ஏசி அனுபவம்

செப்டம்பர் 2010-ல் குடும்பத்துடன் டில்லி செல்வதாக  திட்டம்  இருந்தது. கல்லூரி கால நண்பன் தேவா வீட்டில் தங்கும் எண்ணம். டிக்கட் எல்லாம் புக் செய்து கிளம்பும் நாள் நெருங்கிய போது டில்லியில் பல பிரச்சனைகள். வெள்ளம் ஒரு புறம், டெங்கு மறு புறம். காமன் வெல்த் போட்டிகளால் பல இடங்கள் பார்க்க முடியாமல் போகும் நிலையும் இருந்தது . எனவே ஹவுஸ் பாஸ் அறிவுரை படி அந்த பயணம் கேன்சல் ஆனது. அப்போது தில்லி பதிவர் நண்பர்கள் (குறிப்பாய் வெங்கட் & விக்னேஸ்வரி)  "ஏம்பா..  இங்கே இருக்கோமே; நாங்கெல்லாம் மனுஷங்க இல்ல? ஏன் இப்படி பயப்படனும்?" என்று என்னை ஓட்டி தள்ளினார்கள். விடுங்க. ஹவுஸ் பாஸ் ஒன்னு சொல்லியாச்சுன்னா அப்புறம் அதை மீற முடியுமா 

2010  இறுதிக்குள் LTA எடுத்தாக வேண்டும், எனவே டிசம்பர் மாதம் எங்காவது செல்லலாம் என யோசித்தோம். தில்லி மற்றும் வட இந்தியா டிசம்பரில் குளிரின் பிடியில் இருக்கும் என்பதால் ஹைதராபாத் தேர்ந்தெடுத்தோம். ஹைதராபாத் டிசம்பரில் நல்ல கிளைமேட் இருக்கும் என்று சொன்னார்கள். அங்கு எங்கள் அலுவலகத்தின்  பிரான்ச் உள்ளது. எனவே தங்க, சாப்பிட, சுற்றி பார்க்க (எல்லாம் காசுக்கு தான் நைனா !) நல்ல இடம் அறிமுக படுத்தினார்கள். 

டிசம்பர் கடைசி வாரத்தில் நான்கு நாட்கள் ஹைதராபாத் சென்று வந்தோம். அது குறித்த பதிவே இது. இந்த குறுந்தொடர் நான்கிலிருந்து ஆறு பதிவுகள் வர கூடும். (எச்சரிக்கை?)

ஹைதராபாத் என்பதால் ரயில் பயணமே போதும்,12 மணி நேரத்திற்குள் சென்று விடலாம் என முடிவு செய்தோம். போகும் போது முதல் முறையாக First கிளாஸ் ஏசியில் சென்றோம். தலைவர் சுஜாதா சொல்வது போல் "எதையும் ஒரு முறை" முயற்சிப்பது வழக்கம். அப்படி பர்ஸ்ட் கிளாஸ் ஏசி எப்படி தான் இருக்கு என பார்க்கவே சென்றோம். (தொடர்ந்து செல்வது கஷ்டம். பர்ஸ் பழுத்துடும். மேலும் முன்னரே  திட்டமிட்டு டிக்கட் புக் செய்தால் விமான பயணமும் இந்த டிக்கட்டும் ஏறக்குறைய ஒரே விலை தான்! எனவே விமானத்தில் சில மணி நேரத்தில் போயிடலாமென நினைக்க கூடும்) இந்த பர்ஸ்ட் ஏசி ரயில் பயணத்தில் கவனித்தவை (எனக்கு முதல் முறை என்பதால் பல விஷயங்கள் புதுசு!!) சற்று பகிர்கிறேன் : 

** மொத்தமே பத்து டிக்கட்டுகள் தான் உள்ளன. அவை 4 + 4+ 2 என்று பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது நான்கு பேர் (கீழ் பெர்த் மற்றும் மேல் பெர்த் என ரெண்டு +ரெண்டு) தங்கக்கூடிய அறைகள் இரண்டும், ரெண்டு பேர் மட்டுமே தங்க கூடிய அறை ஒன்றும் உள்ளது.  ஒவ்வொன்றும் கூபே (தனி அறை) தான். இந்த மூன்று அறைகளுக்கும் A. B, C என்று பெயரிட்டுள்ளனர். பசங்க " நம்ம வீடு (!?) A " " நம்ம வீடு B " என சொல்லி கொண்டு  மகிழ்ச்சியாக ஓடுகின்றனர்.  இதில் ரெண்டு பேர் தங்கும் கூபே பற்றி  "ஹனி மூன் Couple  செல்லும் கூபே" என முன்பே அறிந்திருப்போம். நான்கு பேர் உள்ள கூபேயில் கணவன் மனைவி அவர்கள் இரு குழந்தைகள் என நான்கு பேர் சென்றால், அவர்கள் மட்டுமே தனியே இருக்கும் Privacy-ம்  இருக்கும்.  ரயில் பயணத்தையும் ஜன்னல் வழியே பார்த்து என்ஜாய் செய்வார்கள்.  

**நாங்கள் மூணே பேர். நாலாவதாய் வேறு ஒருவர் இருந்தார். அவர் நாங்கள் சென்றது முதல் கண்ணை மூடி மூச்சு பயிற்சியும் பின் தியானமும் செய்தவாரே இருந்தார். முடிச்சுடுவார், முடிச்சுடுவார் என பார்த்தால், அவர் தொடர்ந்து கண்ணை மூடி அவற்றை தொடர, நாங்களோ அந்த இடமே எங்களுடையது போல (அவருக்கு தொந்தரவு இன்றி, சத்தமில்லாமல்) கூத்தடித்து கொண்டிருந்தோம். 

**நாம் இருக்கும் சிறு அறை மூடப்படுவது கண்ணாடி கதவால். இது தானாக மூடி கொள்கிறது. கதவு மூடும் போது சிறு குழந்தைகள் கை அல்லது விரல் மாட்டும் அபாயம் உள்ளது. குழந்தைகளுடன் சென்றால் எச்சரிக்கை தேவை. 

**கூபேக்குள் ஒரு பெல் உள்ளது. நமக்கு ஏதும் தேவை என்றால் பெல்லை அழுத்தினால், அந்த மூன்று அறைகளுக்கு மட்டுமே உள்ள அட்டெண்டர் வந்து என்ன வேண்டும் என கேட்டு வேண்டியதை செய்கிறார். 

**அந்த சிறு அறையில் ஒரு நிலை கண்ணாடி, குட்டி மேசை, சட்டைகளை கழற்றி மாட்ட தனியிடம் என குட்டி குட்டியாய் நிறைய விஷயம் கவர்கிறது. 

இவரு மீனை பிடிக்குறாரா? மீனு இவரை பிடிக்குதா?

**கூபேயில் கண்ணாடி கதவுக்கு மேலே ஒரு லைட் எரிகிறது. அது வெளியே உள்ள டாய்லட்டில் ஆள் இருக்கிறார்களா, இல்லையா என்பதை காட்டுகிறது. யாரும் இல்லை என பார்த்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தால்,  டாய்லட்டின் வெளியே நின்று "தேவுடு" காக்க வேணாம் பாருங்க. அதுக்கு தான். 

**First ஏசியில் உள்ள டாய்லட்டுகளில் கூட Mug கட்டப்பட்டு தான் உள்ளது ! :)))

**கூபேயில் இரு வித விளக்குகள் உள்ளன. சாதாரணமாய் படிக்கும் விளக்கை அனைத்து விட்டு, சீட் மேலே உள்ள விளக்கை போட்டால் மெல்லிய வெளிச்சம் கேண்டில் லைட் டின்னரில் இருக்கும் உணர்வை தருகிறது. (அந்த விளக்கு வெளிச்சத்தில் தான் சாப்பிட்டோம்) 

**வீட்டில் தூங்குவது போல் தொந்தரவில்லாத அற்புதமான தூக்கம் தூங்க முடிகிறது. First Ac-ல் சென்றால் மறு நாள் எந்த tiredness- ம் இன்றி அலுவலகம் சென்று கொட்டாவி விடாமல் வேலை பார்க்கலாம். 

**ஒரே பிரச்சனை: பிற பயணிகளுடன் பேச முடியாது. வெளியே பார்க்கும் கண்ணாடியில் ஏசியின் பனி படிந்து விடுவதால் இரவுகளில் வேடிக்கை பார்க்க முடியாது.
**
காலை ஏழு மணிக்கு செகந்தராபாத் சென்று சேர்ந்தோம். வெளியே பத்து டிகிரி குளிர். அலுவலக நண்பர் சுப்ரமணியன் அந்த குளிரிலும் எங்களை வரவேற்க வந்திருந்தார். எங்களை கெஸ்ட் ஹவுசுக்கு ஆட்டோ ஏற்றி அனுப்பி வைத்து விட்டு அலுவலகம் விரைந்தார். 


Attention:கேபிள். நாங்களும் நடிப்போம். படத்தில் சான்ஸ் குடுக்கணும்!

நாங்கள் தங்கியது செகந்தராபாத்தில் ஹம்சிகா இன் என்ற கெஸ்ட் ஹவுசில். ஏசி ரூம். (குளிரில் எதுக்கு ஏசி என்று முன்பே கேட்டேன். சுப்ரமணியன், " ஏசி போட்டா 22 , 23 டிகிரியில் வச்சிட்டு தூங்கலாம்; இல்லாட்டி பத்துக்கு குறைவான குளிரில் தூங்குவது சிரமம்" என்றார்). அந்த பில்டிங் ஒரு ரெசிடென்ஷியல் காம்ப்ளக்ஸ். அதில் பத்து ப்ளாட்டு(flat )களை வாங்கி கெஸ்ட் ஹவுஸ் ஆக்கியுள்ளனர். ஓரிரு இளைஞர்கள் சமைக்கவும், அட்டண்டர் வேலை பார்க்கவும் அங்கேயே தங்கியுள்ளனர். நீங்கள் ஹைதராபாத் சென்றால் தங்குவதற்கு இந்த கெஸ்ட் ஹவுசை நிச்சயம் அணுகலாம். தொலை பேசி எண்: 040-42627575.


கெஸ்ட் ஹவுசில்..
சமைக்கும் போதும் தொந்தரவு செய்யுறதா !! அட கடவுளே !!  

அறைக்கு போய் குளித்து முடிச்சிட்டு இன்றைய ப்ரோக்ராம் பற்றி யோசிக்க ஆரம்பித்தோம்.. 

அய்யாசாமி கார்னர் 

அய்யாசாமி வெளியிடங்கள் சென்றால் சில நேரம் தூக்கம் வரலை என புலம்புவார். அப்படி தான் ரயிலிலும் "குளிருது ஏசி அதிகமா இருக்கு" என புலம்ப, அட்டண்டரை அழைத்தார். அட்டண்டர் அய்யாசாமியை வெளியே கூட்டிபோய்,  ஏசி மெஷினில் தெரியும் வெப்பத்தை காட்டி "Temperature 24 தான் வச்சிருக்கோம்; மாத்தனுமா?" என்றார்!  "வேண்டாம்..ஹி ஹி" னு சொல்லிட்டு வந்து அடுத்த சில நிமிடங்களில் அய்யா சாமி "கொர்கொர்"

கேரக்டர் 

இன்றைய கேரக்டர் ரயிலில் உடன் பயணித்த சக பயணி. ஆம் எங்களுடன் தங்கிய அந்த நான்காவது நபர் தான்.   ஒரு வழியாய் பல மணி நேரங்களுக்கு பின் கண் விழித்த அவரிடம் பேசிய போது, ஆந்திராவில் பிறந்து, தற்சமயம் அமெரிக்காவில் செட்டில் ஆகிய கல்லூரி பேராசிரியர் (சமூகவியல்) என்பது தெரிந்தது.  அமெரிக்காவிலிருந்து வருடம் ஒரு முறை இந்தியா வருவாரென்றும் அப்போது சென்னையில் நடக்கும் ஒரு conference-ல் அவசியம் கலந்து கொள்வதாகவும் சொன்னார். அந்த conference-நடத்துபவர் எங்கள் கம்பனி சேர்மேன் டாக்டர். பாலா பாலச்சந்திரன் !!

"எப்படி சார் இவ்வளவு நேரம் யோகா செய்கிறீர்கள்? நான் கூட செய்கிறேன், ஆனால் இவ்வளவு நேரம் இல்லை" என்ற போது, கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகரித்து விட்டதாக சொன்னார். ஐம்பதுக்கும் மேல் வயதான அவர் பார்க்க நாற்பது போல் தெரிந்ததற்கு யோகா நிச்சயம் ஒரு காரணமாய் இருக்க வேண்டும். அமெரிக்காவில் இருந்தாலும் இன்னும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் பற்றியும் கவனிக்கிறார் இவர். என்னிடம் தமிழக தேர்தல் பற்றியும் விஜய காந்த் யாருடன் கூட்டணி சேர்வார், இம்முறை தமிழக தேர்தலில் யார் வெல்வார்கள் என ஆர்வமாய் கேட்டு கொண்டிருந்தார்!!

(அடுத்த பதிவில் சாலர்ஜங் மியூசியம்,  சார்மினார், மெக்கா மசூதி,  என்.டி.ஆர்  பார்க் & ஹைதராபாத் ஸ்பெஷல் முத்துக்கள்  ..) 

32 comments:

  1. Looks like, you had great time! Cool!

    ReplyDelete
  2. ரொம்ப விரிவா சொல்லி இருக்கீங்க. நானும் இன்னும் ஏ சி வகுப்பில் சென்றது இல்லை

    ReplyDelete
  3. ஏசி போர் தலைவா.. அப்படியே காலாற் நடந்து சைட் அடித்துக் கொண்டே போவதுபோல எதுவும் கிடையாது..:))

    ReplyDelete
  4. //அடுத்த பதிவில் சாலர்ஜங் மியூசியம், சார்மினார், மெக்கா மசூதி, என்.டி.ஆர் பார்க் & ஹைதராபாத் ஸ்பெஷல் முத்துக்கள் .//

    ஹ்ம்ம். அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம். அதைவிட எங்களின் ஹைதராபாத் விடுமுறையில் நாங்கள் பார்க்க விட்டுப்போனது ஏதாவது இருக்கிறதா என தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக உள்ளேன்.

    ReplyDelete
  5. First Class Ac பற்றி நல்ல சொல்லிருக்கறீங்க..

    உங்க பதிவில் எனக்கு மறக்க முடியாத நபராக அந்த சமூகவியல் பேராசிரியர் இருக்கிறார்...

    வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு அனுபவம் தான் நமக்கு...

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு மோகன்! தில்லி உங்களை வரவேற்கிறது - இப்பவும்.... :) ஹவுஸ் பாஸ் அனுமதி :) கிட்டியவுடன் அடுத்த பயணம் இங்கே! சரியா.

    முதல் வகுப்பு பயணம் பற்றிய விஷயங்கள் - அங்கேயும் மக் கட்டி வைக்கப்பட்டது - நகைச்சுவை!

    பகிர்வுக்கு நன்றி மோகன்.

    ReplyDelete
  7. // அலுவலக நண்பர் சுப்ரமணியன் // Hope you are saying about subbu sir.?
    Then you should be very comfortable there. He is expert in hospitality & administration.

    ReplyDelete
  8. கூபேயில் உள்ளேயே ஒரு வாஷ் பேசின் இருக்கும். நீங்கள் பார்க்கவில்லையா ?

    பர்ஸ்ட் எ.சி பயணம், விமானப் பயணம், வெளிநாட்டு அனுபவம்..
    இதெல்லாம் நாங்களும் பதிவு போடலாம்.. ஒரு பத்து பதிவாது தேறும்..
    தன்னடக்கம் காரணமா எழுதல.. . ஹி.. ஹி..

    ReplyDelete
  9. Anonymous11:20:00 AM

    பயணம் ஸ்டார்ட் ஆயிடுச்சு! நானும் கூடவே வர்றேன்! :)

    ReplyDelete
  10. //படத்தில் சான்ஸ் குடுக்கணும்!//

    படம் தயாரிக்கிற ரிஸ்க் நீங்க எடுக்கணும், சரியா? :-)))))

    ஃபர்ஸ்ட் ஏஸிக்கும், ஃப்ர்ஸ்ட் கிளாஸ் நான்-ஏஸிக்கும் அந்த பாத்ரூம் லைட்டைத் தவிர வேற பெரிசா வித்தியாசம் இல்லை போல!!

    இதே போல, விமானத்தில் ஃப்ர்ஸ்ட் கிளாஸ் பயணம் பத்திப் பதிவு போட ஆசை!! ஹூம், எங்கே....

    ReplyDelete
  11. ஹைதராபாத் பற்றி சீக்கிரம் எழுதுங்கள். இந்தக் கோடை விடுமுறைக்குப் போகலாம் என ஐடியா.. (ரிசர்வேஷன் பண்ணனுமே!)!!

    ReplyDelete
  12. //**First ஏசியில் உள்ள டாய்லட்டுகளில் கூட Mug கட்டப்பட்டு தான் உள்ளது //

    அட கொன்னியா இங்கேயுமா......!!!
    ம்ம்ம் இந்தியா ஒளிர்கிறது....!!!

    ReplyDelete
  13. நானும் இன்னும் ஏ சி வகுப்பில் போனதில்லீங்க. ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.
    //குறுந்தொடர் நான்கிலிருந்து ஆறு பதிவுகள் வர கூடும். (எச்சரிக்கை?)//
    அதனால் என்ன, எழுத நீங்க ரெடின்னா.. படிக்க நாங்களும் ரெடி :)

    ReplyDelete
  14. ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஏசி ரயில் பயணத்தை பற்றிய விவரங்கள் நன்று. ஹைதராபாத்தை சுற்றி பார்க்க தயாராக இருக்கிறோம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  15. கூல்.இந்தியா முழுவதும் செகண்ட் க்ளாஸ் ஏசியில் ஓசியில் சுத்துகிறோம்.(கணவர் ரயில்வே) விவரமாய் எழுதி இருக்கிறீர்கள்.தொடரட்டும்.

    ReplyDelete
  16. Yes Chitra Thanks
    **
    எல். கே. ஒரு முறை போய் பாருங்க வித்யாசமான அனுபவம்
    **
    கேபிள்: நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்ன விளையாட்டு ??
    **
    ஆதி மனிதன்: ஆம் நண்பா. நாம மிஸ் பண்ண இடங்களை கேட்டு வருத்தபடுவோம். இது வழக்கம் தானே. நானும் சில இடம் மிஸ் செய்துட்டேன்
    **
    சங்கவி: நன்றி ஆம் ஒவ்வொரு மனிதரும் தனி விதம் தான்

    ReplyDelete
  17. அன்பிற்கும் அழைப்பிற்கும் நன்றி வெங்கட். இந்த வருட செப்டம்பர் இறுதியில் கஜினி முகமது போல் டில்லிக்கு மறுபடி முயற்சிக்கணும் :))
    **
    ees said...

    // அலுவலக நண்பர் சுப்ரமணியன் // Hope you are saying about subbu sir.?
    Then you should be very comfortable there. He is expert in hospitality & administration.


    ஆம். அவரே. எங்கள் அலுவலத்தில் பணி புரிந்த உங்களுடன் பதிவின் மூலம் பேசியது மகிழ்ச்சி

    ReplyDelete
  18. Madhavan said...
    //கூபேயில் உள்ளேயே ஒரு வாஷ் பேசின் இருக்கும்//
    இல்லியே மாதவா.
    //ஒரு பத்து பதிவாது தேறும்..தன்னடக்கம் காரணமா எழுதல// Any உள் குத்து??
    **
    பாலாஜி said
    //நானும் கூடவே வர்றேன்! :) // வாங்க பாலாஜி. Welcome !!
    **
    ஹுஸைனம்மா said...
    //படம் தயாரிக்கிற ரிஸ்க் நீங்க எடுக்கணும், சரியா? :-)))))

    நான் இந்த விளையாட்டுக்கு வரலை. (கேபிளுக்கு சொல்லி குடுக்குறீங்கலே!! நற நற)
    //விமானத்தில் ஃப்ர்ஸ்ட் கிளாஸ் பயணம் பத்திப் பதிவு போட ஆசை!!//
    செய்யுங்க மேடம்.
    **

    ReplyDelete
  19. middleclassmadhavi said...

    //இந்தக் கோடை விடுமுறைக்குப் போகலாம் என ஐடியா..//

    கோடையில் வெயில் கொளுத்திடும் மேடம். டிசம்பர், ஜனவரி தான் இங்கே போக சிறந்த நேரம்
    **
    நன்றி மனோ
    **
    இளங்கோ : நன்றி
    **
    நன்றி கோவை2தில்லி மேடம்
    **
    அமுதா மேடம்: அப்படியா? அப்போ நீங்களும் பயணம் பற்றி எழுதலாமே. (ஒரு வேளை எழுதிருகீங்கலோ? அப்புறம் பாக்குறேன் )

    ReplyDelete
  20. // மோகன் குமார் said...

    Madhavan said...
    //கூபேயில் உள்ளேயே ஒரு வாஷ் பேசின் இருக்கும்//
    இல்லியே மாதவா. //

    ஸ்நாக்ஸ் / மீல்ஸ் சாப்பிட சிறிய அளவில் டேபிள் போல இருக்கும்.. (முகம் பார்க்கும் கண்ணாடி அருகே, இரு ஜன்னல்களுக்கு / பெர்த் களுக்கு நடுவில்) அதன் மேற்புறத்தை தூக்கினால், கீழே குழாயுடன், வாஷ் பேசின் இருக்கும்.

    Better luck next time (to see wash basin)

    ReplyDelete
  21. படிக்கும் பொழுதே ஹைதரபாத்துக்கு நீங்கள் கைபிடித்து கூட்டி கொண்டு செல்லும் லாவகம் உங்கள் எழுத்தில்.

    ReplyDelete
  22. பகிர்வு அருமை:)! தொடருங்கள்.

    ReplyDelete
  23. ம்ம்ம்

    கூர்க் மாதிரி அடுத்த பயணக் கட்டுரையா? ரைட்ட்டு:)

    ReplyDelete
  24. சரி மாதவன், நன்றி
    **
    கணேஷ்: ஆஹா மகிழ்ச்சி நன்றி
    **
    நன்றி ராம லட்சுமி
    **
    வாங்க வித்யா; ரெண்டு வாரம் முன்பே படங்களுடன் ஆரம்பிச்சிட்டேனே :))

    ReplyDelete
  25. AMK. Very detailed comment, great observation. Only you can write like this. Whenever I travel in AC first class, I might not feel as though I am travelling for first time.

    ReplyDelete
  26. interesting மோகன்.

    எழுத்து கையில் இருப்பதால், கூட வருபவர்கள், பார்க்கிற இடம், என எல்லாவற்றையும் எழுதும் கண் கொண்டு பார்க்கிற பக்குவம் வந்துவிடுகிறது இல்லையா?

    தொடருங்கள் மோகன்..

    ReplyDelete
  27. //ஏசி போர் தலைவா.. அப்படியே காலாற் நடந்து "சைட்" அடித்துக் கொண்டே போவதுபோல எதுவும் கிடையாது//

    >>அண்ணே, You Continue….

    ReplyDelete
  28. பயணத்தில் தொடர்கின்றேன்.

    ReplyDelete
  29. நன்றி பாலாஜி.

    பாலாஜி என்னுடன் வேலை பார்த்த நண்பர். கமெண்ட் போட்டது ஆச்சரியம்!!
    **
    அருமையா சொன்னீங்க நன்றி ராஜாராம்
    **
    சிவகுமார் : நன்றி
    **
    துளசி மேடம் மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  30. நம்ம ஹைதை பயணம் இங்கே இருக்கு. நேரம் கிடைச்சால் பாருங்க. நூல் பிடிச்சுக்கிட்டு போகணும். வெறும் 6 பதிவுதான்.


    http://thulasidhalam.blogspot.com/2009/11/blog-post_15.html

    ReplyDelete
  31. Interesting....

    //First ஏசியில் உள்ள டாய்லட்டுகளில் கூட Mug கட்டப்பட்டு தான் உள்ளது //

    நீங்க இந்தியாவுல இருக்கீங்றதை மறந்துடக்கூடாதுங்கறதக்காகத்தான் அது...:))

    ReplyDelete
  32. அழைப்பிதழ்:

    இன்றைய வலைச்சரத்தில் உங்களது வலைப்பூவினை, வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.

    ”செண்பகப்பூ - சுற்றுலாச்சரம்” என்ற தலைப்பில் பயணக் கட்டுரைகள் பற்றிய அறிமுகம் காணச் சுட்டி கீழே:

    http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_03.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...