எந்த வித உணவு பொருட்களும் உள்ளே அனுமதிப்பதில்லை. லாக்கர் ரூமில் வைத்து விட சொல்கிறார்கள். நாங்கள் எடுத்து சென்ற ஸ்நாக்ஸ் கூட அப்படி தான் வைக்க வேண்டியதாயிற்று.
டிக்கட் எடுத்ததும் பஸ்ஸில் நம்மை கூட்டி செல்கிறார்கள். வரிசையாக பஸ்கள் வந்த வண்ணம் மக்களை ஏற்றி சென்ற வண்ணம் உள்ளன. சனி, ஞாயிறுகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ராமோஜி ராவ் என்பவர் ஆந்திராவின் பெரிய பிசினஸ் மேன். சினிமா தொழில் மட்டுமல்லாது ஈ டிவி, பேப்பர், ஹோட்டல் என பலவித வியாபாரம் வெற்றிகரமாக செய்கிறார். அவரின் பல நாள் கனவே இந்த பிலிம் சிட்டி. உங்கள் இடப்பக்கம் நீங்கள் பார்க்கும் படம் பிலிம் சிட்டி உள்ளே உள்ள அவர் வீடு.
பிலிம் சிட்டி 1666 ஏக்கர் நிலபரப்பில் உள்ளது. நாம் பஸ்ஸில் உள்ளே செல்ல இருபது நிமிடம் ஆகிறது. அவ்வளவு இடமும் மலை போல் உள்ளது.
பஸ்ஸில் ஒரு குறிப்பிட இடத்தில இறக்கி விடுகிறார்கள். இங்கு ராட்டினம் போன்ற சில விளையாட்டுகள் உள்ளன. அவற்றை முழுதும் தவிர்த்து விட்டு அருகில் குட்டி பசங்களை கவரும் வண்ணம் உள்ள ஒரு சில விஷயங்களை மட்டும் பார்த்து விட்டு அடுத்த இடம் கிளம்பினோம்.
ஒரு இடத்திலிருந்து அடுத்த இடம் செல்ல மறுபடி பஸ் தான். இம்முறை வெறும் மலைகளாக இல்லாமல் Heart of the Film city-ஐ காட்டினார்கள்.
வழி முழுவதும் நிறைய தோட்டங்கள் .. ஒவ்வொன்றுக்கும் " மொகல் கார்டன்" என்றும் மற்றும் பல்வேறு பெயர்களும் சொல்கிறார்கள். பலவற்றை இறங்கி பார்க்க நேரமில்லை. பசுமையும் மலர்களும் பார்க்க அவ்வளவு அழகு !! இங்கெல்லாம் கூட பிலிம் மற்றும் டிவி ஷூட்டிங்குகள் நடக்கும் போலும்.
திஹார் ஜெயில் செட்டிங் & வசூல் ராஜா படத்து ஹாஸ்பிடல். படங்களை பெரிதாய் பார்க்க படம் மேல் கிளிக் செய்து பார்க்கலாம்.
"பாம்பே ஸ்லம் ஏரியா" , " மெட்ராஸ் ஏரியா" "திகார் ஜெயில்" " "வசூல் ராஜா படத்து ஹாஸ்பிடல்" என சொல்லியவாறே இருக்க பஸ் அவற்றையெல்லாம் விரைவில் கடக்கிறது.
குறிப்பிட்ட ஒரு தோட்டம் அருகே இறக்கி விட, அங்கு அற்புதமான பொம்மலாட்டம் நடந்தது. ஹைதை பயண கட்டுரை முதல் பதிவில் ஒரு படம் போட்டு " இங்கே என்ன நடக்குது?" என கேட்டிருந்தேன். பொம்மலாட்டம் என சரியாய் கணித்தவர்கள் உங்களுக்கு நீங்களே "ஷொட்டு" கொடுத்து கொள்ளலாம்.
பொம்மலாட்ட கலைஞர்களுடன் சிறு அளவளாவல்
இப்படி ஒவ்வொரு இடத்திலும் இறங்கி அங்கு ஒவ்வொன்றாய் பார்த்தாவறே சிறிது நடந்தால், மறுபடி வேறு பஸ், நம்மை வேறு இடத்திற்கு கூட்டி செல்ல தயாராய் நிற்கிறது.
ஹைதை பயண கட்டுரை:
முதல் பதிவு: படங்கள் மட்டும் இங்கே
இரண்டாம் பதிவு : ரயில் பயணம் ( First ஏசி அனுபவம்) இங்கே

மூன்றாம் பதிவு: சார்மினார், சலார்ஜங், NTR பார்க் இங்கே
********
பிலிம் சிட்டியில் மாறி மாறி பார்த்த இடங்களில் குறிப்பிடத்தக்கவை:
1 . "Caves " (குகை) : நிஜமான குகைக்குள் நுழைந்தது போல் உள்ளது. ஆனால் எல்லாம் கார்ட்போடில் ஆனது. உள்ளே சில பொம்மைகள் (நாக்கை நீட்டிய படி நகரும் பாம்பு etc ) குழந்தைகளை கவரும் வண்ணம் உள்ளன. ரொம்ப ரசித்த இடம் இது.
2. ராஜா காலத்து செட்டிங்குகள். உள்ளே நுழையும் போதே சந்திரமுகி வேட்டையன் சிரிப்பு போலவும், படத்தில் வருவது போன்ற மியூஸிக்கும் போட்டு அசத்துகிறார்கள். இங்கு உள்ள அனைத்து ராஜா மண்டப செட்டிங்குகளும் தத்ரூபம்.
3. உலகின் பல்வேறு விஷயங்களும் ஒரே இடத்தில் நகரும் பொம்மைகளாக வடிவமைத்துள்ளனர். இதனை நாம் குட்டி காரில் நகர்ந்தாவறே பார்க்கிறோம். இந்த ஐந்து நிமிடங்களும் மெய் மறந்து தான் போயிடுவோம்.
(ஒரு சில காரணங்களால் சிறு சிறு வீடியோவாக எடுத்துள்ளேன். பொருத்தருள்க).
4. "படம் எடுப்பது எப்படி?" என நிஜமாய் செய்து காட்டுகிறார்கள். உங்களில் நடிக்க யார் ரெடி என கேட்டு நம்மில் ஒருவரே ஹீரோயினாக மாற, கண் முன்னே அவர் நடிப்பதை மற்றொரு படத்துடன் இணைத்து காட்டி அசத்துகிறார்கள். இதை நேரில் பார்க்கும் போது வேறு சில சுவாரசியம் இருக்கும் என்பதால் முழுதும் சொல்லாமல் விடுகிறேன். படம் எடுக்கும் இடத்தில் ஒரே இடத்தில் ஐநூறு பேர் அமரும் அளவுக்கு மூன்று ஹால்கள் உள்ளன. முதலாவதில் தான் நடிக்க சொன்னது. அது முடிந்ததும் அடுத்த ஹால் திறக்க, அங்கே ஓடுகிறோம். அங்கு ரீ ரிக்கார்டிங் செய்வது எப்படி என முன்னர் நடித்த காட்சிக்கு நம்மில் இரு சிறுவர்களை வைத்தே ரீ ரிக்கார்டிங் செய்து காட்டுகிறார்கள். பின் அடுத்த ஹால் திறக்க, அங்கே அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து காட்டுகிறார்கள்.
என்ன ஒன்று இங்கு எல்லாவற்றையும் விளக்குபவர் பேசுவது முழுக்க ஹிந்தியில். ஹிந்தி புரியாட்டி பேய் முழி முழிக்க வேண்டியது தான்.
5. மற்றொரு இடத்தில் நிஜமான சண்டை காட்சியை நம் முன்னே நிகழ்ச்சி காட்டுகின்றனர். நம் தலைக்கு மேலேயே உள்ள ரோப்பை பிடித்தவாறு வந்து குதிக்கும் ஹீரோ வில்லன்களுடன் கை சண்டை & துப்பாக்கி சண்டை போடுகிறார்.
6. டைட்டானிக் கப்பல் போல உள்ள செட்டின் கீழே குட்டி பசங்க விளையாட வீடியோ கேம்ஸ் உள்ளது. இதற்கு சற்று தள்ளி Water gameம் உள்ளது. அவர்களே நீச்சலுக்கு வேறு தனி உடை தருகிறார்கள். பெரும்பாலும் ஆண்களும் குழந்தைகளும் உள்ளே போய் பந்துகளை போட்டு விளையாடுகிறார்கள்.
பொதுவாய் மாலை ஆறு மணிக்கெல்லாம் மூடி விடுவார்கள் போலும். நாங்கள் சென்ற டிசம்பர் இறுதியில் ஏழரை வரை திறந்திருந்தது.
சினிமா மேல் ஆசை இல்லாத மனிதர்கள் ரொம்ப குறைவு. அப்படி ஆசை உள்ள யாரும் நிச்சயம் சென்று வர வேண்டிய இடம் பிலிம் சிட்டி.

படங்களுடன் விரிவான பகிர்வு மிக அருமை. பெங்களூரிலும் இப்படியான Innovative Film City ஒன்று உள்ளது. இதுவரை போனதில்லை. போக வேண்டுமென்கிற ஆர்வத்தை இந்தப் பதிவு தந்து விட்டது:)!
ReplyDeleteஅடுத்த முறை இந்தியா வரும் போது, அங்கு சென்று பார்க்க ஆசையை தூண்டியாச்சு!
ReplyDeleteமிக அருமையான பதிவு நண்பா..இந்த முறை நிச்சயம் அந்து குடும்பத்தோடு போகிறோம்..நன்றி
ReplyDeleteவிரிவான விவரணைகளுடன் பதிவு நன்று..
ReplyDeleteஅட! அருமையா இருந்துருக்கும் போல! நாங்கதான் மிஸ் பண்ணிட்டோம்.
ReplyDeleteநேரம் வேற இல்லை. L A விலே யுனிவர்ஸல் ஸ்டூடியோ பார்த்ததால் இதை விட்டுட்டு கோல்கொண்டா கோட்டைக்குப் போயிட்டோம்.
இப்ப உங்க பதிவைப் பார்த்ததும் போயிருக்கலாமோன்னு ஒரு தோணல்.
நானும் உங்க கூடவே பயணித்த ஃபீல்ங்க்ஸ்...
ReplyDeleteநானும் உங்க கூடவே பயணித்த ஃபீல்ங்க்ஸ்...
ReplyDeleteபார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது.. நன்றி பகிர்வுக்கு..
ReplyDeleteகாணொளிகளுடன் கூடிய நல்ல பகிர்வு. எனக்கும் போய் பார்க்க ஆசை வந்தாச்சு.
ReplyDeleteNoted, thanks for sharing
ReplyDeleteNice :) Thanks for sharing friend!
ReplyDeleteராம லட்சுமி: பெங்களூரில் இது போல உள்ளதா? தகவலுக்கு நன்றி
ReplyDelete**
சித்ரா : நன்றி
அவசியம் பாருங்கள்
**
மணிஜி : மகிழ்ச்சி. உங்கள் பெண்ணுக்கும் உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும். பாருங்கள்
**
வித்யா :நன்றி
**
துளசி கோபால் மேடம்: ஆம் அடுத்த முறை சென்றால் மிஸ் பண்ணிடாதீங்க
நாஞ்சில் மனோ : நன்றி
ReplyDelete**
நன்றி மாதவன்
**
கோவை டு தில்லி மேடம் : நன்றி
**
வெங்கட் நாகராஜ் : நன்றி
**
நன்றி மிடில் கிளாஸ் மாதவி
Good one
ReplyDeleteramaa krishnakumar said: A VERY NICE WRITE-UP WITH GOOD PHOTOS. KEEP IT UP!
ReplyDeleteநன்றி இளங்கோ.
ReplyDelete**
நன்றி ரமா மகிழ்ச்சி
Really good in life time it's worth o likes entire plac3
ReplyDelete