************************
நான் வேலை செய்த அலுவலகத்தில் ஒரு அட்டண்டர் இருந்தான். எப்பவும் ரொம்ப காமெடியாக பேசுவான். அவன் பேசினால் சிரிக்காமல் யாரும் இருக்க முடியாது. கல்யாணம் ஆகி அவனுக்கு குழந்தையும் உண்டு. "வக்கீல் சார்...வக்கீல் சார்..." என்றே கூப்பிடுவான். அவனது பெயர் ராபின் (மாற்றப்பட்டுள்ளது).
திடீரென அவனை பற்றி ஒரு தகவல்.. உடன் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் அவன் தவறாக நடக்க முயன்றதாகவும், அந்த பெண் அழுது கொண்டே ஓடி போய், பெர்சனல் டிபார்ட்மன்ட்டில் புகார் தந்ததாகவும் செய்தி...(அப்போது HR டிபார்ட்மன்ட்டை பெர்சனல் டிபார்ட்மன்ட் என்பர்).ராபினை வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்று நிறுவனம் முடிவெடுத்து, லீகல் டிபார்ட்மன்ட்டில் என்னிடம் இந்த வேலை வந்தது.
நிரந்தர ஊழியரை வேலையை விட்டு அனுப்புவது பற்றி விசாரிக்க, அது ரொம்ப சிரமமான நடைமுறை என்று புரிந்தது. முதலில் ஒரு ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்ப வேண்டும். பின் அவன் செய்த குற்றங்களை உள்ளடக்கி சார்ஜ் ஷீட் தயார் செய்ய வேண்டும். இதன் பின், ஒரு என்கொயரி நடத்தி, அதில் அவன் மீது உள்ள குற்ற சாட்டுகள் உண்மை என நிரூபணம் ஆனால் மட்டுமே அவனை வேலையை விட்டு நீக்க முடியும்.
இந்த நிலையில் ராபின் பற்றிய மற்றொரு அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது. ராபின் ஒரு எய்ட்ஸ் நோயாளி ! நாங்கள் வெளியே அனுப்புவது எய்ட்ஸ் என்பதால் என்று விஷயம் திசை மாறி விட கூடாது.உண்மையில் கம்பெனிக்கு அப்படி பட்ட எண்ணம் இல்லை. ஒரு பெண் ஊழியரிடம் தவறாக நடப்பது தவறான முன் உதாரணம் ஆகி விடக்கூடாது என்பதால் மட்டுமே ராபினை வேலையை விட்டு நீக்க முடிவு செய்தனர்.
ஷோ காஸ் நோட்டிஸ் & சார்ஜ் ஷீட் போன்ற விஷயங்கள் முடிந்து என்கொயரி வந்து விட்டது. சட்டம் படித்த நான் என்கொயரி ஆபிசரானால் அவனும், தனக்கு வக்கீல் உதவி கேட்பான் என்பதால், அலுவலகத்தில் உள்ள மற்றொரு சீனியர், என்கொயரி ஆபிசர் ஆக நியமிக்க பட்டார். ஆனால் இவர் பின்னால் என்னையும் சேர்த்து ஒரு டீமே இயங்கியது.
என்கொயரி நடந்தது. என்கொயரியில் ராபின் தானே வாதாடினான். தான் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க வில்லை என்று கூறினான். மேலும், கம்பெனி முன் வைத்த அனைத்து சாட்சிகளையும் அவனே குறுக்கு விசாரணை செய்தான். ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல் அனைத்து சாட்சிகளையும் கேள்விகளால் உடைத்தான்.
என்கொயரி நடக்கும் போதே ராபின் பல முறை என்னை நேரிலும், தொலை பேசியிலும் மிரட்டினான். என்கொயரி ஆபிசர் இருந்தாலும் அவரின் பின்னால் இயங்குவது நான் தான் என அவனுக்கு நன்றாக தெரியும்." வக்கில் சார்.. நான் சாக போறவன்... நீங்க வாழனும் . ஞாபகம் வச்சிக்குங்க." என்பான். அவனது மிரட்டல்களை நான் பொருட் படுத்த வில்லை. ஆனால் அவனை அலட்சிய படுத்தாமல், ஒதுக்காமல் பேசி வந்தேன்.
என்கொயரி ஒரு வழியாய் முடிந்தது.அந்த நேரத்தில் வந்த ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பு, செக்ஸ் தொல்லை தருவதாக ஒரு பெண் ஊழியர் புகார் கூறினால், அதற்கு வேறு எந்த சாட்சியும் தேவை இல்லை என்றும், அதற்கு மிக அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியது. இதன் அடிப்படையில் ராபின் நீக்க பட்டான்.
இத்தனை விஷயங்களையும், அந்த கொடுமையான காலத்தையும் உறுதியுடன் எதிர் கொண்ட அந்த பெண்ணை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
வேலை நீக்கத்தை எதிர்த்து ராபின் conciliation officer - என்ற அரசு ஊழியரிடம் அப்பீல் செய்தான். இந்த ஆபிசர் ஒரு பெண். பிரச்சனை முழுதையும் புரிந்து கொண்டு, அவர் சொன்னார்: " அவனுக்கு இழப்பீடு என எதாவது பணம் கொடுத்து கேசை இப்பவே முடிச்சிடுங்க.. இல்லா விட்டால் அவன் லேபர் கோர்ட் போவான்; விஷயம் இழுத்து கொண்டே போகும்; இங்கு பணம் வாங்கி கொண்டு அவன் ஒத்து கொண்டால், அதுக்கு மேல் அவன் அப்பீல் போக முடியாது" .
எனக்கு இதில் உடன் பாடு இல்லை. ஆனால் கம்பெனி கேசை இழுத்தடிக்காமல், உடனே முடிக்க எண்ணினர். நாம் பணம் தந்தால் நாம் செய்தது தவறு என்று ஒப்பு கொண்ட மாதிரி ஆகிடும் என வாதிட்டேன். ஆனால் நிறுவனம் ஒரு சிறு தொகை (பத்து வருடம் முன் 25,000 என நினைக்கிறேன்) தந்து பிரச்சனையை அந்த ஆபிசர் முன் முடித்தனர். அதன் பிறகு நான் அவனை பார்க்க வில்லை. அவன் எவ்வளவு நாள் உயிரோடு இருந்தானோ .. அறியேன்..
இந்த என்கொயரி மூலம் நான் அறிந்தவை:
1. ஒரு நிரந்தர ஊழியரை வேலையை விட்டு அனுப்புவது சாதாரணமான விஷயம் அல்ல. இதனால்தான் பல கம்பெனிகள் யாரையாவது வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்றால் அவர்களை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள்.
2. மேனஜர் ஆக (Supervisory cadre) உள்ள ஊழியரை வேலையை விட்டு அனுப்புவது எளிது. என்கொயரி போன்றவை தேவை இல்லை. அதே போல் பிசினஸ் சரி இல்லை என்பதால் செய்யப்படும் ரெட்ரேன்ச்மென்ட் (Retrenchment) போன்றவற்றிற்கும் என்கொயரி தேவை இல்லை.
3. லேபர் கோர்ட்டுகள் பெரும்பாலும் ஊழியர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்குகின்றன.
4. ஒரு ஊழியர் செய்யும் தவறுக்கு நிகரான தண்டனையே ஒரு கம்பெனி வழங்க வேண்டும். உதாரணமாக , ஒரு பிக் பாக்கெட் குற்றத்துக்கு எப்படி கோர்ட் மரண தண்டனை வழங்க முடியாதோ, அது போல். ஒரு சாதாரண குற்றத்திற்கு ஒரு ஊழியரை கம்பெனி வெளியே அனுப்ப முடியாது. சொல்ல போனால், வேலையை விட்டு அனுப்புவது என்பது ஒரு ஊழியருக்கு தரப்படும் மிக அதிக பட்ச தண்டனை ( மரண தண்டனைக்கு சமம்) என்றே கோர்ட்டுகள் கருதுகின்றன.
***********
நிற்க. ராபின் என்னுடன் பேசிய கடைசி வரிகள் இதோ: :
" வக்கீல் சார்.. ரொம்ப தேங்க்ஸ் சார்... இந்த கம்பெனிகாரங்க எனக்கு பணம் தர ஒத்துக்கிட்டு இருக்க மாட்டனுங்க.. நீங்க தான் அவன் பாவம்னு எனக்காக பேசி வாங்கி கொடுத்திருபீங்க.. எனக்கு தெரியும்! ரொம்ப தேங்க்ஸ் சார் !"
*********
இன்றைய காலை பதிவு: பாலகுமாரனுடன் சந்திப்பு
நாளைய பதிவு:
ஹைதை ராமோஜி பிலிம் சிட்டி ஏராளமான படம் & வீடியோக்களுடன்
குட் ஒன். அரசு ஊழியத்தில் இது இன்னும் கடினம். ஊழல் காரணமாக என்கொயரியில் இருந்த ஒரு நபருக்கு அடுத்த வருடம் சிறந்த ஊழியர் என்று ஒரு சிறு தொகையை (ரூ 200) அவார்டாக கொடுத்ததை வைத்தே தான் பணியிலிருந்து அரசு ஊழியராக இருக்கத் தகுதியானவரல்ல என்ற அடிப்படையில் வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வேலையில் சேர்ந்து செய்யாத வேலைக்கு சம்பளமும், ப்ரோமோஷனும் கூட பெற்றுவிட்டார்.:)
ReplyDeleteவேலைய விட்டு தூக்குவதில் இவ்வளவு பிரச்சனை இருக்கா?
ReplyDeleteவக்கீல்ன்னாலே விதவிதமான அனுபவம் கிடைக்கும் போல!
ReplyDeleteராபின் பேசிய கடைசி வரிகள்..
ReplyDelete.. :))
எயிட்சை உடம்பில் வைத்துக்கொண்டு சில்மிஷம் செய்த ராபின் தண்டிக்கப்பட வேண்டியவர்தான் ..
ReplyDeleteநல்ல பகிர்வுங்க..
ReplyDeleteஆமா, நீங்கதான் ராபினுக்கு பணம் வாங்கி குடுத்தீங்களா?
Quite interesting!!!
ReplyDeleteநீங்கள் இது போல.... வித்தியாசமான cases குறித்து எழுதி, பயனுள்ள விவரங்கள் தரலாமே.
அனுபவப்பகிர்வு நன்கிருக்கிறது. நிறைய பேருக்கு இது பயனுள்ளதாகக்கூட இருக்கும். எனக்கு மிகவும் சுவார்ஸ்யமாக இருந்தது.
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteவித்தியாசமான அனுபவம். அரசு அலுவலகம் எனில் ஒரு பணியாளரை பணி நீக்கம் செய்வது இன்னும் கடினம்! அதையே பலர் மிஸ்யூஸ் செய்வதும் உண்டு!! பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅலுவலகத்தில், கவனமாக இருத்தல் அவசியம். நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருத்தல் அவசியம்.
ReplyDeleteஇந்த மாதிரி சட்டங்களை தவறாக பயன் படுத்துவதை எப்படி தடுக்கலாம் ?
அரசு அலுவலகங்களில் இவை எல்லாம் சகஜம். இடுகையில் குறிப்பிட்டது அனைத்தும் நடக்கும். நிர்வாகத்திற் கென்று சிறப்புரிமை எதுவும் கிடையாது.
ReplyDeleteபெண்ணிடம் சில்மிஷம் செய்தவனை உக்கார வச்சு என்கொய்ரி வச்சு, பரிசுத்தொகையும் கொடுத்து அனுப்பிருங்க...கிரேட்...
ReplyDeleteஎன்ன சார் இது...டமால்னு காதுக்கு கீழே ஒண்ணுவச்சு வுட்டுக்கு அனுப்பிருக்கனும்...
சிலவிசயங்களுக்கு rules பார்க்கவே கூடாது. அதுல ஒண்ணுத்தான் இந்த பெண்களிடம் சில்மிஷம்.
பெண்ணிடம் சில்மிஷம் செய்தவனை உக்கார வச்சு என்கொய்ரி வச்சு, பரிசுத்தொகையும் கொடுத்து அனுப்பிருங்க...கிரேட்...
ReplyDeleteஎன்ன சார் இது...டமால்னு காதுக்கு கீழே ஒண்ணுவச்சு வுட்டுக்கு அனுப்பிருக்கனும்...
சிலவிசயங்களுக்கு rules பார்க்கவே கூடாது. அதுல ஒண்ணுத்தான் இந்த பெண்களிடம் சில்மிஷம்.
நிறையத் தகவல்கள் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்!
ReplyDeleteகாசிக்கு போனாலும் கருமம் தொலையாது என்பது மாதிரி பட்ட பிறகும் காமப் பித்து பிடித்து அலையும் இந்த மாதிரி ஆட்களை என்ன சொல்வது...இதுக்கு 25,௦௦௦ பணம் வேற... அந்த தீஞ்ச மண்டையன் கொடுத்து வெச்சவன் தான்...
ReplyDeleteபகிர்வு நன்று.
ReplyDeleteவானம்பாடிகள் சார்: உங்களுக்கு இப்படி ஓர் அனுபவமா? சுவாரஸ்யம்!
ReplyDelete**
சங்கவி: ஆம் வேலையை விட்டு அனுப்புவதில் நிறைய பிரச்சனை இருக்கு
**
//ராஜு ♠ said...
வக்கீல்ன்னாலே விதவிதமான அனுபவம் கிடைக்கும் போல//
ஆமாங்கண்ணா நன்றி
**
ஷங்கர்: எஸ்!! நன்றி
**
KRP செந்தில் : நன்றி நண்பா
இளங்கோ said...
ReplyDeleteநீங்கதான் ராபினுக்கு பணம் வாங்கி குடுத்தீங்களா?//
Conciliation officer முன் கம்பெனி representative நான். எனவே என் மூலம் அவனுக்கு பணம் சென்றது. அவன் நான் தான் பேசி பணம் வாங்கி தந்தாக நினைத்தான் !!
**
சித்ரா: நன்றி. முயற்சிக்கிறேன்
**
மனோ மேடம். மகிழ்ச்சி நன்றி
**
நன்றி அமைதி அப்பா
**
ஆம் வெங்கட். சிலர் இதை மிஸ்யூஸ் செய்கின்றனர். நன்றி
**
Madhavan Srinivasagopalan said...
இந்த மாதிரி சட்டங்களை தவறாக பயன் படுத்துவதை எப்படி தடுக்கலாம் ?//
யோசிக்க வேண்டிய விஷயம் தான். இந்த வாரம் என்னால் நிச்சயம் யோசிக்க முடியாது!!:))
**
சீனா சார்: நீங்கள் சொல்வது முழு உண்மை நன்றி
நான்ஜில் பிரதாப்
ReplyDelete//என்ன சார் இது...டமால்னு காதுக்கு கீழே ஒண்ணுவச்சு வுட்டுக்கு அனுப்பிருக்கனும்...//
அப்படி அனுப்பியிருந்தால் அவன் கோர்ட் சென்று " என்னை என்கொயரி நடத்தாமல் நீக்கினார்கள் என நிருபித்து மறுபடி அதே அலுவலகம் வந்து வேலை பார்க்க உத்தரவு வாங்கிடுவான். It will be a loss of face for the Management.
மற்ற படி என்னுடைய நிலை அவனுக்கு பணம் தர கூடாது என்பது தான். ஆனால் நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு நாம் கட்டு பட்டு தானே ஆகணும்
**
நன்றி ராமசாமி
**
டக்கால்ட்டி: கலக்குறீங்க
**
நன்றி ராம லட்சுமி
சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்தோர், மற்றவர்களும் முன்னேறி மேலே வர, தங்கள் கரம் நீட்ட வேண்டியது ஒரு வித கடமை என்றே நினைக்கிறேன். இதில் கிடைக்கும் மன நிம்மதிக்கு இணையாக வேறொன்றும் அறியேன் பராபரமே !
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள்.
நட்சத்திர வாழ்த்துக்கள், சகோ!
ReplyDeleteரொம்ப கவனமா கையாளவேண்டிய விஷயம்தான், கடைசி வரிகள் :))
சுவாரஸ்யமாக இருந்தது!
ReplyDeleteஇந்த மாதிரி அனுபவப் பகிர்வுகள் எப்பவுமே சுவாரஸ்யம்தான்.
ReplyDeleteநன்றி ஜோதிஜி
ReplyDelete**
நன்றி தஞ்சாவூரான்; நீங்களும் ஒரு நிறுவன ஓனர் என்கிறதால் சுவாரஸ்யமாய் பதிவை வாசித்திருப்பீர்கள்.
**
நன்றி அருணா மேடம்
**
மிக்க நன்றி ஸ்ரீ ராம்