நம்புங்க.. இந்த வார தமிழ்மண நட்சத்திரம் நான் தான் ! இது வரை பெற்ற வாலண்டைன்ஸ் டே பரிசுகளில் இது(வும்) சிறந்த ஒன்று (...க்கும்..).நன்றி தமிழ் மணம் ! " வாரம் இரு பதிவு மட்டும்" என டிராவிட் போல ஆடும் நான், பெரும்பாலான நாள் "தினம் இரண்டு பதிவு" என ஷேவாக் போல் ஆட போகிறேன். " அவ்வளவு பதிவுகளா?" என ஒதுங்காமல் வழக்கம் போல் ஆதரியுங்கள் நண்பர்களே ! ஜஸ்ட் ஒரு வாரம் தான். ஜனரஞ்சகமான பதிவுகளை முடிந்த வரை சுவாரஸ்யமாக தருகிறேன். முதல் ஒண்ணரை வருடத்தில் திரட்டிகளில் இணைக்காமல், தொடர்வோரும் (Followers ) இல்லாமல் எழுதியவற்றில் (நிச்சயம் நீங்க வாசிக்காத) சில நல்ல பதிவுகள் ரீ-ரைட் செய்யப்பட்டு அவ்வபோது வரும். எனினும் நிச்சயம் தினம் ஒரு புது பதிவும் உண்டு. அனைத்தும் ரெடி ! ஸ்டார்ட் தி மியூசிக் !!
என் காதலே என் காதலே
ப்ளாக் படிக்கும் சிறுவயது நண்பன் அடிக்கடி கேட்பது: "ஏண்டா உன் காதல் பத்தியெல்லாம் எழுத மாட்டேங்குறே?" முதல் முறை என் காதல்களை இங்கு பகிர்கிறேன். இதனை கவிதை என்ற பேரில் வார்த்தைகளை மடித்து மடித்து கல்யாணத்துக்கு முன் எழுதினேன். இப்போ பார்த்தால் சிரிப்பாய் இருக்கு. டீப்பா யோசித்ததில் இதைவிட சுருக்கமாய் வேறு பார்மில் சொல்ல முடியாது என தோன்றியது. எனவே மடித்து எழுதாமல், வரி வரியாய் எழுதி உள்ளேன். கவிதையா அப்படின்னு கேள்வியெல்லாம் கேட்காம, மேட்டர் என்னன்னு மட்டும் பாருங்க!
எனது காதல்கள்
ஏழாவது படிக்கையில் வந்தது முதல் காதல் அல்ல.
முதல் காதலுக்கேவுரிய இனிய நினைவும் சோகமுமில்லை அக்காதலில்
முதல் ரேங்கிற்கு போட்டியிட்ட தோழியை நண்பர்கள் இணைத்து பேச
மகிழ்ச்சியாய் தான் இருந்தது மனசுக்குள்.
எனக்கு மீசை முளைக்கும் முன் மாற்றல் வந்தது அவள் தந்தைக்கு.
பதினைந்து வயதில் காதலென்றே உணராமல் காதலித்தேன்.
நான் நேசித்த பெண் என்னை நேசித்தது அந்த ஒரு முறை தான்
பள்ளிபருவம் முடியும்போது வந்த காதலே கவிதை எழுத வைத்தது
எத்தனை நாள் அந்த இரண்டெழுத்து மந்திரத்தை ஜெபித்திருப்பேன்
நான் பார்த்து வளர்ந்த எதிர்வீட்டுபெண் அலைக்கழித்தாள் கொஞ்சநாள்
மாமாவிடம் பெண்கேட்கும் யோசனை கை விடப்பட்டது வயசு வித்யாசத்தால்
கல்லூரியில் மலர்ந்த அறிவு பூர்வ நட்பு அடுத்த கட்டம் போக சொன்னது
இலக்கியமும் தூரத்தில் போகும் புகைவண்டியும் இருவருக்கும் பிடித்தது
பிறர் நம்பாவிடினும் என் மனமறியும்
அவள் நன்மைக்காகவே விலகினேன் அவளை விட்டு
வேலைக்கு சென்ற பின் தேடியது காதலியல்ல மனைவியை
சண்டையில் துவங்கி, உதவிகளில் கனிந்து தினப்புன்னகையில் வளர்ந்த
"என் காதலு"க்கு மரண அடி விழுந்தது அவள் காதலன் பெயர் அறிந்த போது
கூச்சங்களாலும் தயக்கங்களாலும் பெருமூச்சுகளாலும்
கடந்து போனது இளமையும் என் காதல்களும்.
(பிற்சேர்க்கை)
இருபத்தைந்து வயதில் மீண்டும் அந்த வஸ்து என்னை கடித்தது
அடுத்த இரண்டாவது மாதம் திருமணம்
சுபம்.
ரசித்த சில காதல் மொழிகள்
காதல் கொண்ட நாய் கூட கவிதை பாடி ஊளையிடும்- பிளட்சர்
ஆணின் குறைகள் அனைத்தையும் தாங்க முடிந்தாலொழிய ஒரு போதும் அவன் மேல் காதல் கொள்ளாதே - தாமஸ் கேம்பியன்
தன் முதல் காதலில் மட்டுமே பெண் காதலனை காதலிக்கிறாள். மற்றெல்லா காதல்களிலும் அவள் காதலை தான் காதலிக்கிறாள் - பைரன்
கயவர்கள் கூட காதலிக்கும் போது இயல்புக்கு மாறாக இனிய பண்பு கொள்கின்றனர். - ஷேக்ஸ்பியர்
ஒருவன் மீது காதல் தோன்றி விட்டால் அவன் குளிக்காமலிருக்கும் போதே வெண்மையாய் தோன்றுவான். -ரஷ்ய பழமொழி
ஒரே பெண்ணையோ ஒரே பஸ்ஸையோ தொடர்ந்து ஓட வேண்டாம். பின்னால் வேறு கிடைக்கும் - இத்தாலிய பழமொழி
வெளி நாட்டுக்காரங்க சொன்னது இருக்கட்டும்; வாட் அபௌட் தமிழ்நாடு?
"காம்பிலேந்து பூ உதிர்ந்தா மறுபடி காம்புக்கு போகாது. அது மாதிரி மனசுல ஒரு தடவை காதல் வந்தா மறுபடி வராதுன்னு வசனம் பேசிய கொள்கை வேந்தன் வீராசாமிகூட நிஜத்தில் யாரையோ லவ் பண்ணிட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டார். " ஒரே காதல் ஊரில் இல்லையடா" அப்படிங்கறது தான் சரியான வரி. நம்ம கவுண்டர் பாஷையில சொல்லுணும்னா "லவ்சுக்கு வயசு வித்யாசம் கிடையாது. எந்த வயசில வேணா லவ்ஸ் வரலாம்" இதை சரியா காட்டிய படம் (சேரன் அழுகை தவிர்த்து) ஆட்டோ கிராப் தான்.
காதல் கவிதைகள் இரண்டு
காதல் கொண்ட நாய் கூட கவிதை பாடி ஊளையிடும்- பிளட்சர்
ஆணின் குறைகள் அனைத்தையும் தாங்க முடிந்தாலொழிய ஒரு போதும் அவன் மேல் காதல் கொள்ளாதே - தாமஸ் கேம்பியன்
தன் முதல் காதலில் மட்டுமே பெண் காதலனை காதலிக்கிறாள். மற்றெல்லா காதல்களிலும் அவள் காதலை தான் காதலிக்கிறாள் - பைரன்
கயவர்கள் கூட காதலிக்கும் போது இயல்புக்கு மாறாக இனிய பண்பு கொள்கின்றனர். - ஷேக்ஸ்பியர்
ஒருவன் மீது காதல் தோன்றி விட்டால் அவன் குளிக்காமலிருக்கும் போதே வெண்மையாய் தோன்றுவான். -ரஷ்ய பழமொழி
ஒரே பெண்ணையோ ஒரே பஸ்ஸையோ தொடர்ந்து ஓட வேண்டாம். பின்னால் வேறு கிடைக்கும் - இத்தாலிய பழமொழி
வெளி நாட்டுக்காரங்க சொன்னது இருக்கட்டும்; வாட் அபௌட் தமிழ்நாடு?
"காம்பிலேந்து பூ உதிர்ந்தா மறுபடி காம்புக்கு போகாது. அது மாதிரி மனசுல ஒரு தடவை காதல் வந்தா மறுபடி வராதுன்னு வசனம் பேசிய கொள்கை வேந்தன் வீராசாமிகூட நிஜத்தில் யாரையோ லவ் பண்ணிட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டார். " ஒரே காதல் ஊரில் இல்லையடா" அப்படிங்கறது தான் சரியான வரி. நம்ம கவுண்டர் பாஷையில சொல்லுணும்னா "லவ்சுக்கு வயசு வித்யாசம் கிடையாது. எந்த வயசில வேணா லவ்ஸ் வரலாம்" இதை சரியா காட்டிய படம் (சேரன் அழுகை தவிர்த்து) ஆட்டோ கிராப் தான்.
காதல் பற்றி தலைவர் சுஜாதா சிறுகதை
ஒரு கல்லூரியில் அழகு தேவதை ஒருத்தி சேர்கிறாள். அனைவரும் அவளை பார்த்து ஜொள்ளு விடுகின்றனர். சிலர் அவள் தன்னை காதலிப்பதாக சொல்லி திரிகின்றனர். " ஐ லவ் யூ" சொன்னவனை செருப்பால் அடித்தாள், கடிதம் தந்தவனை திட்டி விட்டு கடிதத்தை கிழித்து எறிந்தாள் என நாளும் பல செய்திகள். கடைசியில் அவள் பல விதத்திலும் சுமாரான ஒருத்தனை மணக்கிறாள். அவளிடம் ஒருவன் கேட்கிறான் " நீ ஏன் அவனை கல்யாணம் பண்ணிகிட்டே?" சுஜாதா பாணியில் கடைசி வரி: " அவன் ஒருத்தன் தான் என்கிட்டே வந்து ஐ லவ் யூ சொன்னான்".
காதல் கவிதைகள் இரண்டு
இரக்கப்படுகிறேன் புகையாய் தான்
உன் தலையில் சூடாமலும் நீ வந்தாய்
உன் காலடியில் மிதிபடும் என்னுள்
பாக்கியமின்றியும் சிலையாய் தங்கி போனாய் !
பூத்து உதிர்ந்திடும்
மலர்களையெண்ணி..
இன்றைய மாலை பதிவு: காதல் ஸ்பெஷல் : பெண்கள் டயலாக்ஸ்
நாளைய பதிவு: பாலகுமாரனுடன் சந்திப்பு
வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள் மோகன் சார்...
ReplyDeleteகாதலர் தின வாழ்த்துக்களும் தமிழ் மண நட்சத்திர வாழ்த்துக்களும் அண்ணா!
ReplyDeleteஅந்த காதல் கவிதையில பிற்சேர்க்கை டாப்பு! :)
/”ஒரே காதல் ஊரில் இல்லையடா" //
:)
//இருபத்தைந்து வயதில் மீண்டும் அந்த வஸ்து என்னை கடித்தது
ReplyDeleteஅடுத்த இரண்டாவது மாதம் திருமணம்
சுபம்.//
காதல் கல்யாணமா? கல்யாணத்துக்கு பின் காதலா?
வாழ்த்துகள் தலைவரே!
ReplyDeleteஅடிச்சி ஆடுங்க, என் வேலடைன்ஸ் டே ஸ்பெசல் சாங்ஸ்?
சாரி எனி வேலடைன்ஸ் டே ஸ்பெசல் சாங்ஸ்?
ReplyDeleteவாழ்த்துகள் மோகன்குமார்.
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள் மோகன்குமார்.
ReplyDeleteசுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறீர்கள்:)! இறுதி வரை தொடரட்டும்.
அருமை அருமை...
ReplyDeleteகாதலர் தின வாழ்த்துக்கள்.....
நட்சத்திர வாழ்த்துக்கள் மோகன்குமார்.
ReplyDeleteநன்றி :
ReplyDeleteசமுத்ரா
சங்கவி
வாசு
பாலாஜி சரவணா
ராமலட்சுமி
நாஞ்சில் மனோ
****
ஆதி மனிதன் நன்றி. தனி பதிவே வருது. இப்போ சொன்னால் சஸ்பென்ஸ் போயிடும் :)
***
முரளி: பாட்டு வரிகள் பிளான் செய்யலை. முடிந்தால் பார்க்கிறேன். அனைத்து பதிவுகளும் கடந்த பத்து நாளாக எழுதியாச்சு. வார நாட்களில் புதிதாய் எழுதுவது மிக சிரமம்.
This comment has been removed by the author.
ReplyDeleteநன்றி உலகநாதன்
ReplyDeleteபுது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரணவம் ரவிகுமார்
Congrats on being the Tamilmanam Star, Mohan..
ReplyDeleteநல்வாழ்த்துகள் சார்
ReplyDeleteவாழ்த்துகள்.. கலக்குங்க..
ReplyDeleteவாழ்த்துக்கள் மோ.கு.-ஜி
ReplyDeleteவாழ்த்துகள் மோகன் குமார்:)
ReplyDeletekilakku padhippagam chennai discount sale extended for one more week. till this sunday!
ReplyDeleteவாழ்த்துகள் மோகன்குமார்!
ReplyDeleteஎல்லாத்துக்கும் சேர்ந்து வாழ்த்துகின்றேன்.
ReplyDeleteகுழந்தைகள் படிப்புக்கு உதவுவது மனதுக்குப் பெரும் மகிழ்ச்சி.
நல்லா இருங்க.
நட்சத்திர வாழ்த்துக்கள் மோகன்
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள் மோகன்!
ReplyDeleteநன்றி:
ReplyDeleteநடராஜ்
கோவி. கண்ணன்
வித்யா
வரதராஜலு
வானம்பாடிகள் சார்
சிவகுமார் (தகவலுக்கு நன்றி)
வெங்கட் நாகராஜ்
துளசி மேடம் (நெகிழ்வாக உணர்கிறேன்)
கதிர்
ரவிச்சந்திரன்
மோகன், வாழ்த்துகள்!
ReplyDeleteஅங்கீகாரம், காதலில் கிடைச்சால் என்ன காதலர் தினத்தில் கிடைச்சால்தான் என்ன? :-)
கலக்குங்க மக்கா.
நட்சத்திர வாழ்த்துகள் நண்பரே.
ReplyDeleteவாழ்த்துக்கள் தல ...
ReplyDeleteவாழ்த்துகள் சார்.
ReplyDeleteவாழ்த்துகள் மோகன்குமார்.
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள் மோகன்குமார்!
ReplyDelete//கே.பி.ஜனா Said://
ReplyDeleteபடித்தேன், ரொம்ப சந்தோஷமாக இருந்தது நீங்கள் என் நண்பர் என்று நினைக்கையில்... கே.பி.ஜனா
//சீனா said.....//
ReplyDeleteஅன்பின் மோகன் குமார்
இனிய தமிழ் மண நட்சத்திர நல்வாழ்த்துகள்
ஒரு வாரத்திற்கு கலக்குக - ஆகா காதலர் தின்ம - உலகக் கோப்பை - செய்தியா இல்லை - இடுகைகள் தூள் கிளப்பட்டும்.
சீனா
//Hussainamma said://
ReplyDeleteGreat!! Congratulations!!
அண்ணா, முதல் ball - யிலேயே sixer - ஆ! அசத்துங்க... மற்றும், தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்...கலக்குங்க
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி:
ReplyDeleteராஜாராம் (ரசித்தேன்)
சரவணகுமார்
KRP செந்தில்
கோவை2தில்லி மேடம்
ராதாகிருஷ்ணன் சார்
அன்புடன் அருணா மேடம்
கே.பி. ஜனா சார்
சீனா சார்
ஹுசைனம்மா
கேபிள்
தேவா (அடுத்த பால் அவுட் ஆகாம இருந்தா சரி)
நந்தா ஆண்டாள்மகன்
மணிஜி
**
அனைவருக்கும் அன்பும் நன்றியும்
நேற்று விடுமுறை என்பதால் இன்றுதான் தமிழ்மண முகப்பில் பார்த்தேன்.
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள்... ;-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நன்றி சிவராமன்.
ReplyDelete