Wednesday, February 23, 2011

ஆ....மீர்கான்..! அசத்திய நான்கு படங்கள்..

தற்கால நடிகர்களில் அமீர்கான் வெகுவாக கவர்கிறார். இவரது படங்களில் அன்பையும், நம்பிக்கையும் காட்டும் காட்சிகள் பல நேரம் கண்ணிலிருந்து சில துளி நீர் வர வைத்து விடுகிறது.

சமீபத்தில் பீப்ளி லைவ் படத்தின் சீடி வாங்கி வந்தேன். ஏன் இந்த படம் என ஹவுஸ் பாஸ் கேட்க "அமீர்கான் தயாரிச்சது" என்றேன். " வெறும் அமீர்கான் படம் மட்டுமே பாக்கலாம் போல.. எல்லாமே அருமையா இருக்குள்ள?" என்றார்.

டைம்ஸ் ஆப் இந்தியா சமீபத்தில் சென்ற பத்து ஆண்டின் சிறந்த பத்து படங்கள் தேர்ந்தெடுத்து வெளியிட்டது. அதில் நான்கு படங்கள் அமீர்கான் நடித்தது ! இது தவிர ஷாருக் நடித்தவை இரண்டு, வேறு எந்த நடிகர்க்கும் இரண்டு படம் கூட இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் அமீர்கானின் தாக்கத்தை இதிலிருந்தே உணரலாம்.

நான் ரசித்த நான்கு அமீர்கான் படங்களை இங்கு பகிர்கிறேன். இதில் கஜினி தவிர்த்து மற்றவை டைம்ஸ் ஆப் இந்தியா டாப் டென்னில் வந்தவையே. நான் பார்க்காத அமீர் கானின் நல்ல படங்கள் இருந்தால் நீங்கள் சொல்லுங்களேன். உங்களுக்கு நன்றி சொல்லியவாறே நிச்சயம் பார்ப்பேன்.

3 இடியட்ஸ் 


இந்த படத்தில் முதலில் நம்மை கவருவது இதன் கதை. பிறர் சொல்கிறார்களே என ஏதோ ஒரு கோர்ஸ் படிக்காமல் தனக்கு மிக ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து படிப்பதும், அதே துறையில் வாழ் நாளை கழிப்பதும் தான் வெற்றி பெற ஒரே வழி என்பதே  படம் சொன்ன சேதி. அமீர் 19 வயது இளைஞனாக நடித்தும், எந்த உறுத்தலுமின்றி ரசிக்க முடிகிறது. ஹீரோயினுடன் ஒரே ஒரு பாடல் காட்சி. இதை தவிர்த்து தேவையற்ற சண்டை, வன்முறை ஏதுமில்லை. 

அமீர் கானின் புதிரான பாத்திரமும், கடைசி அரை மணி நேரத்தில் அவர் பற்றிய முழு கதையும் விரிவதும் நம்மை ஈர்க்கிறது. அமீர், புரொபசர், மாதவன் என அற்புதமாய் கேரக்டர்கள் உருவாக்கிய கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். படம் நெடுகிலும் அமீர் சொல்லும் " ஆல் இஸ் வெல்" ...அருமை ! வெள்ளத்தின் நடுவே அமீர்கான் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். அதுவும் யாருக்கு... ஹீரோயினின் அக்காவிற்கு !!இந்த காட்சி முழுவதுமே வெரி இன்டரஸ்டிங். இந்த சீன் முடிந்து வெள்ளத்தின் நடுவே நின்று கொண்டு, புரொபசர் அமீருக்கு பேனா தருவார் பாருங்கள் கிளாஸ் !!

கஜினி

மசாலா படம் தான். தமிழில் ஏற்கனவே பார்த்தும் விட்டோம். எப்பவும் ரீமேக் படங்களை ஒரிஜினலுடன் ஒப்பிட்டு எவையெல்லாம் சரியில்லை என பட்டியலிடுவது நமக்கு வழக்கம். ஆனால் இந்த படம் பார்த்து விட்டு அப்படி ஒன்றே ஒன்று சொல்லுங்களேன் பார்க்கலாம்! சூர்யா செய்ததை விட மிக அற்புதமாக தன் அனுபவத்தின் மூலம் நடித்திருந்தார் அமீர். சூர்யா பணக்கார பிசினஸ் மேனாக ரொம்ப ஸ்டைலாக நடித்திருந்தாலும் கஜினியாக எப்போதும் திரு திருவென முழிப்பார். ஆனால் அமீர் கஜினியாகவும் உடல், முக பாவங்களில் அசத்தியிருந்தார். இதற்காக எயிட் பேக் உடல் வேறு! தமிழை விட வித்யாசமான ஆனால் ரசிக்கும் படி கிளைமாக்ஸ். அசின் தமிழிலும் ஹிந்தியிலும் கலக்கிய படம். காமெடியன் இல்லாமல் ஹீரோயினே நகைச்சுவை ஏரியாவுக்கு இன் சார்ஜ் ஆக்கிய இயக்குனருக்கு வணக்கம்! பாப் கார்ன் மசாலா படம். Fully Entertaining !! 

லகான் 
அமீரை நான் கவனிக்க ஆரம்பித்தது இந்த படத்துக்கு பின் தான். கிரிக்கெட் பிடிக்காத என் பெண் போன்றவளுக்கும் கூட இந்த படம் பிடித்தது !! சுதந்திர போராட்ட காலத்து கதையின் பின்னணியில் கிரிக்கெட் கலந்து எடுத்த கதை. பிரிட்டிஷாரிடம் வரி கட்ட முடியாது என போராடுகின்றனர் ஒரு கிராம மக்கள். பிரிட்டிஷார் ஒரு கட்டத்தில் "எங்களுடன் கிரிக்கெட் மேட்ச் ஆடி ஜெயித்தால் வரி கட்ட தேவையில்லை; தோற்றால் ரெண்டு மடங்கு வரி கட்ட வேண்டும்" என பந்தயம் கட்டுகிறார்கள். கிரிக்கட் என்றால் என்னவென்று தெரியாத கிராம மக்களை வைத்து அமீர் எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை.

இரண்டு நாட்கள் நடக்கும் அந்த கிரிக்கெட் மேட்ச் உணர்வு குவியல். கை சரியில்லாத ஒருவனை எல்லோரும் கிண்டல் செய்ய, அவனையே ஸ்பின் பவுலாரக்கி விக்கெட் அள்ளும் காட்சிகள் அட்டகாசம். அமீர் டீமில் ஆடும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யம். கடைசி பந்தில் நாலு ரன் தேவைப்பட அமீர் அடிக்கும் ஷாட்டை எதிர் அணி கேப்டன் கேட்ச் பிடித்து விடுகிறார். ஆனாலும் அமீர் அணி ஜெயிக்கிறது. எப்படி என்று கேட்டால், இதுவரை நீங்கள் படம் பார்க்க வில்லை  என்று அர்த்தம். அவசியம்  பாருங்கள் . கிரிக்கெட்டும் தேச உணர்வும் கலந்து கட்டி அடித்து ஜெயித்தார்கள். ஓடுமா ஓடாதா என சரியாக சொல்ல முடியாத, இப்படி ஒரு ரிஸ்க்கான படத்தை தயாரித்தது அமீரே தான்.

தாரே சமீன் பார்

சிறு வயது முதல் இன்று வரை நான் பார்த்த படங்களிலேயே ஒரு மிக சிறந்த படம் இது. டிஸ்லெக்சியா என்கிற நோயால் பாதிக்கப்பட்டு எதையும் புரிந்து கொள்ள சிரம படும் ஒரு சிறுவனின் கதை. படத்தின் ஹீரோ இந்த சிறுவனே ! அமீர் என்ட்ரி இடைவேளையின் போது தான்.

சிறுவனின் பள்ளிக்கு ஆசிரியராக வரும் அமீர்தான் அவனது நோயை புரிந்து கொள்ளுகிறார். அவனுக்கு ஓவியத்தில் ஆர்வம் இருப்பது தெரிந்து அதில் அவனை செலுத்துகிறார். மற்ற பாடங்களையும் வித்யாசமான முறையில் கற்று தருகிறார். சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையும் முன்னேற்றமும் பெறுகிறான். படத்தின் இறுதியில் ஒரு ஓவிய போட்டி நடக்கிறது. இதில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளுகிறார்கள். படத்தில் இந்த ஓவிய போட்டி நடக்கும் போது பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்க, காட்சிகளை பார்த்து சிரித்தவாறே இருப்போம். பாடல் முடியும் போது அமீர் வரைந்த படத்தை காட்டுவார்கள். அப்போது நம்முள் துவங்கும் ஆனந்த அழுகை படம் " End " போடும் வரை தொடரும். பல முறை பார்த்தும் ஒவ்வொரு முறையும் எனக்கு இதே அனுபவம் தான். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் ஆசிரியர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் படம் இது. இதன் இயக்கமும் அமீர்கான் எனும் போது அவரின் மீது மதிப்பு கூடி போகிறது 

படத்தின் கடைசி ஷாட்டில் கோடை விடுமுறைக்கு, ஊருக்கு செல்லும் சிறுவன் அமீர்கானிடம் விடை பெற்று விட்டு, தன் தந்தையின் காரில் ஏற போகிறான். அப்போது தள்ளி நிற்கும் அமீரை பார்த்து விட்டு, அன்பின்  மிகுதியில் ஓடி வந்து மீண்டும் அமீரின் கைகளில் தஞ்சம் புக, அமீர் அவனை தூக்கி சிறு குழந்தை போல் சுற்றுவார்.  இத்தகைய படம் தந்ததற்காக அமீர்கானையே அப்படி தூக்கி சுற்றலாம்
                                           வெல்டன் அமீர்கான் ! கீப் இட் அப் !!

19 comments:

  1. //அப்போது நம்முள் துவங்கும் ஆனந்த அழுகை படம் " End " போடும் வரை தொடரும். பல முறை பார்த்தும் ஒவ்வொரு முறையும் எனக்கு இதே அனுபவம் தான்//
    Yes.. me too.

    ReplyDelete
  2. //கிரிக்கெட் பிடிக்காத என் பெண் போன்றவளுக்கும் கூட இந்த படம் பிடித்தது //

    ஒ அப்படியா? அப்ப உங்க பொன்னும் நானும் ஒரே ஜாதி. கிரிக்கெட் பிடிக்காது ஆனால் லகான் பிடித்திருந்தது.

    ReplyDelete
  3. அமீர்கான் நிறைய இந்திப்படங்களில் வித்தியாசமாக நடித்திருக்கிறார்.

    ReplyDelete
  4. அமீர்கான் படங்கள் நிறைய சொல்லாம்...

    ReplyDelete
  5. ஹிந்தி நல்லா தெரிஞ்சா, ஹிந்திப் படங்களை இன்னமும் நல்லா ரசிக்கலாம்..

    3 இடியடஸ்-செம கான்செப்ட்.
    ஆமிர் கான் சிறப்பாக செய்வார் என்பது எனது கருத்தும் கூட..
    (அது எப்படி ஷாருக் நடிக்க ஆரம்பிச்சு பேமஸ் (!) ஆனாரோ, எங்கயோ தப்பு நடந்திடிச்சு..)

    //ஆதி மனிதன் said..." ஒ அப்படியா? அப்ப உங்க பொன்னும் நானும் ஒரே ஜாதி. கிரிக்கெட் பிடிக்காது ஆனால் லகான் பிடித்திருந்தது. " //

    ஏனெப்பா இப்படி ஜாதி வெரி பிடிச்சு அலையுறீங்க.. (சும்மா தான்..)

    ReplyDelete
  6. அமீர்கான் நிறைய சமீப காலங்களில் நல்ல படங்களில் நடித்து இருக்கிறார். பழைய படங்கள் அவ்வளவு நன்றாக இருக்காது.

    ReplyDelete
  7. அமீர்கான் ஒரு அருமையான நடிகர்....

    ReplyDelete
  8. நான் கஜினி முழுதாய் பார்க்கவில்லை. எனக்கென்னவோ ஆமிர் ஸ்லிம்மாக இருந்தாதான் நன்றாக இருப்பது போலிருக்கிறது. மலைமாடு தோற்றம் சல்மானுக்குத்தான் சரிவரும்:)))

    தில் சாஹ்தா ஹை படம் கூட கேசுவலாய் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  9. கஜினி தமிழில் பார்த்து விட்டதால் ஹிந்தியில் பார்க்கவில்லை. தாரே சமீன் பார் நல்ல படமென சொல்லப் பட்டதால் சமீபத்தில் டிவிடி வாங்கி வைத்துள்ளேன். இனிதான் பார்க்க வேண்டும். மற்ற இரண்டும் ரசித்தவையே:)!

    ReplyDelete
  10. தாரே சமீன் பர், மற்றும் த்ரீ இடியட்ஸ் அருமையான படங்கள். அது சரி, ரங் தே பசந்தி பார்த்திருக்கிறீர்களோ..இல்லையென்றால் பார்க்கவும்.அது கூட அருமையான படம்.

    ReplyDelete
  11. //வெள்ளத்தின் நடுவே அமீர்கான் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். அதுவும் யாருக்கு... ஹீரோயினின் அக்காவிற்கு //

    என‌க்கென்ன‌வோ இந்த‌ காட்சி சினிமாத்த‌ன‌மாக‌வே தோன்றிய‌து..செல்ஃபோன் வெளிச்ச‌த்தில் கேப்ட‌ன் ஆப‌ரேஷ‌ன் செய்த‌து போல‌..

    //சூர்யா செய்ததை விட மிக அற்புதமாக தன் அனுபவத்தின் மூலம் நடித்திருந்தார் அமீர். சூர்யா பணக்கார பிசினஸ் மேனாக ரொம்ப ஸ்டைலாக நடித்திருந்தாலும் கஜினியாக எப்போதும் திரு திருவென முழிப்பார். //

    என‌க்கென்ன‌வோ சூர்யா பெட்ட‌ர் என்றுதான் தோன்றுகிற‌து. ப‌ல‌ காட்சிக‌ளில் ஆமிர் ஒரு ஸ்மைலுட‌ன் 'இல்லை' என்ப‌து போல் லேசாக‌ த‌லையாட்டும் ரியாக்ஷ‌ன்‌தான் கொடுத்திருந்தார்.

    //ல‌கான்//

    புத்திசாலித்த‌ன‌மான‌ திரைக்க‌தைக்கு இந்த‌ ப‌ட‌ம் ஒரு பாட‌ம். அணியின‌ரை தேர்வு செய்யும் வித‌மும், அவ‌ர்க‌ளின் குணாதிச‌ய‌ம் விள‌க்க‌ப்ப‌டும் காட்சிக‌ள், மேட்ச் ஃபிக்ஸிங் போன்ற‌தொரு ச‌ம்ப‌வ‌ம்...சிம்ப்ளி சூப்ப‌ர்ப்..ஆஸ்க‌ருக்கு அனுப்பிய‌து நியாய‌ம்தான்

    க‌ம‌லை நாய‌க‌னுக்கு முன் நாய‌க‌னுக்கு பின் என்று பிரிப்ப‌தைப் போல், ஆமிருக்கு ல‌கானுக்கு முன் ல‌கானுக்கு பின்.

    //பாடல் முடியும் போது அமீர் வரைந்த படத்தை காட்டுவார்கள். அப்போது நம்முள் துவங்கும் ஆனந்த அழுகை படம் " End " போடும் வரை தொடரும்.//

    உண்மை..அந்த‌ சிறுவ‌னின் ந‌டிப்பும், இசையும் க‌ண் க‌ல‌ங்க‌ வைத்த‌து

    தில் சாத்தா ஹை ம‌ற்றும் ர‌ங் தே ப‌ஸ‌ந்தி பாருங்க‌ள்..குட் மூவிஸ்

    ப‌த்தாம் வ‌குப்பு படிக்கும்போதிலிருந்து இன்று வ‌ரை என‌க்கு ஷாரூக்தான் ஃப‌ர்ஸ்ட்..ஆமிர் நெக்ஸ்ட் (இந்தியாவே கொண்டாடினாலும்) :)

    ReplyDelete
  12. "Range de pasanthi" is one of the best ameerkhan movie. Pls watch that movie, and write about that film.

    ReplyDelete
  13. இந்த பதிவு எழுதியதில், பின்னூட்டங்கள் மூலம் நான் உணர்ந்தது: அமீர் சமீப காலமாக தான் நல்ல படங்களாக நடிக்கிறார் என்பது. போலவே ரங் தே பசந்தி போன்ற சில படங்களும் சொல்லி உள்ளீர்கள். நிச்சயம் அவற்றை பார்ப்பேன்

    ReplyDelete
  14. நன்றி இளங்கோ.. என்னை போலவே உணர்ந்துள்ளீர்கள் !
    **
    ஆதி மனிதன்: நன்றி
    **
    ஆம் அப்பாதுரை :நன்றி
    **
    சங்கவி: நன்றி
    **
    மாதவன்: ஆம். சப் டைட்டில் உடன் டி வி டி களில் தான் பார்கிறேன். பாடல் வரிகள் மொழி மாற்றத்துடன் பார்க்கும் போதே அசத்துது. மொழி புரிந்தால் அருமையாய் இருக்கும் என நினைப்பதுண்டு
    **
    வெங்கட்: ஓகே மேலே நீங்களும், நண்பர் ரகுவும் சொன்னதை தான் எழுதி உள்ளேன் நன்றி

    ReplyDelete
  15. நாஞ்சில் மனோ : நன்றி
    **
    நன்றி வித்யா: தில் சாத்தா ஹை?? பாக்கிறேன்.
    **
    ராம லட்சுமி: தாரே சமீன் பார் அவசியம் பாருங்கள். நிச்சயம் பிடிக்கும்
    **
    நன்றி ஸ்ரீ ராம்: ரங் தே பசந்தி அவசியம் பார்கிறேன் நன்றி
    **
    ரகு:அசத்திட்டீங்க. அதுவும் கமலுடன் (நாயகனுக்கு முன் & பின்) ஒப்பிட்டு சொன்னது எனக்கு தெளிவாய் புரிய வைத்தது
    **
    நன்றி காஜா. ரங் தே பசந்தி நிச்சயம் பார்கிறேன். பார்த்த படம் என்ற தலைப்பில் வானவில்லில் பகிர்கிறேன்

    ReplyDelete
  16. original super hero amirkhan

    ReplyDelete
  17. hindi version of gajini has a better climax than the tamil one.aamir s performance was versatile . yet surya s was fresh . aamir s recent movies are all good.and rang de basanti needs mention.He is a good producer,probably a cooperative actor.we have much more versatile actors and intelligent artists than him in tamil in this decade.Did u notice one thing sir? these hindi film makers use our stories and technicians in all their good works , then include a nauseating comedy abt us- tamils.3 idiots is no exception. I would prefer not to talk abt this movie for this reason.also read chetan bagat s novel, the five point someone(i m not sure of the title). seems the movie is based on this novel. chetan bagat is one who spreads wrong notions abt tamils. hmmm we have to tolerate all this. after all this is India s democracy.

    ReplyDelete
  18. எனக்குள்ள அதே ரசனை.அனைவருக்கும் அப்படித்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தேர்ந்தெடுத்ததால் தான் அமிர்கான் வென்றிருக்கிறாரோ.

    ReplyDelete
  19. தாரே சமீன் பார் one of the greatest movie i ever seen in my life especially the scene when they drop the kid at hostel they start the car the body of the boy will shake just like a car exposing his fear of going to be here lonlely thats was a great scene

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...