Monday, February 14, 2011

காதல் ஸ்பெஷல்:பெண்கள் டயலாக்ஸ்& காதல் பாடல் வரிகள்

ரசித்த சில காதல் வரிகள்


கண்ணாடி முன்னே பேசிபார்த்தால் வார்த்தைகளெல்லாம் முண்டியடிக்கும்
முன்னாடி வந்து பேசும்போதோ வார்த்தைகளெல்லாம் நொண்டியடிக்கும்....
எந்த பேனா வாங்கும் போதும் என்னவள் பெயர் தான் எழுதி பார்க்கும்
இதற்கு பெயர் தான் காதலா
****
நீ நின்ற இடமென்றால் விலை ஏறிப்போகாதோ
நீ செல்லும் இடமெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
****
கண்கள் எழுதும்,இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே.... இதில் ஓசை இல்லையே
இதை ஏனோ தினம் படித்திட முடிகிறதே
****
காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
****
உன் கையில் சேர ஏக்கமில்லை உன் தோளில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு சோகமில்லை என்று பொய் சொல்ல தெரியாதடி
உன் அழகாலே..உன் அழகாலே.. என் வெயில் காலம் அது மழை காலம்
****
நீங்கள் ரசித்த காதல் வரிகளை பின்னூட்டத்தில் சொல்லலாம்.
****
காதல் ஸ்பெஷல் : பெண்கள் டயலாக்ஸ்


கல்லூரியில் ஒன்றாய் படித்த இரு நண்பர்களுக்கு (தனித்தனியே) கல்யாணமாகி ஐந்து வருஷமாயிடுச்சு. இருவருக்கும் நடந்தது காதல் திருமணம் தான்.


   (படம் நன்றி: Image bazar) 

காதலியாக இருந்த போதும், பின் மனைவியாக மாறிய பின்னும், பெண்கள் பேச்சு எப்படி மாறுகிறது என பகிர்கிறார் ஒருவர்.

மற்றவரோ பேச்சு மட்டுமல்லாது பெண்கள் வாழ்க்கை முறையும் காதல் & கல்யாணத்தில் எப்படி மாறுது என டீப்பா நோட் பண்ணி சொல்கிறார். மேலே படிங்க.

VERSION - I முதல் நண்பர் சொன்னது

காதலிக்கும் போது:

"ஏன் சீக்கிரமா போனை வச்சிடீங்க? இன்னும் கொஞ்சம் பேசக் கூடாதா?"

"உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?"

"உங்க பெஸ்ட் ப்ரெண்ட் யாரு?" ("அவனை ஒழிக்கணும் முதல்லே ..")

"ரெண்டு நாள் என்னை பாக்கலை.. அதுக்குள்ளே இளைச்சி போய்டீங்க.."

 திருமணம் முடிந்த உடன் : 

"என்னோட சமையல் உங்களுக்கு பிடிச்சிருக்கா?"

"இந்த டிரஸ் எனக்கு எப்படி இருக்கு?"

"நம்ம வீட்டுக்கு அடுத்தது என்ன வாங்கலாம்?"

 இரண்டு வருடம் கழித்து: 

"உங்க குடும்பத்தில் எல்லாருமே ஒரு மாதிரி தான் இருக்கீங்க .."

"கிரிக்கெட்டையே கட்டிடுட்டு அழுங்க .."

"எங்க குடும்பத்தை கிண்டல் பண்ணலேன்னா உங்களுக்கு தூக்கம் வராது!"

ஐந்து வருடம் கழித்து: 

"எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிடோம்னு இருக்கு"

"வீட்டு நினைப்பு கொஞ்சமாவது இருக்கா?"

"என் மேல உங்களுக்கு கொஞ்சமாவது பிரியம் இருக்கா? ".

"உங்களுக்கு ஒன்னுமே தெரியாது "
-----------------**********************------------------------
VERSION - II    இரண்டாம்  நண்பர் சொன்னது

காதலிக்கும் போது:

டயலாக்:

கிப்ட் எல்லாம் ஒன்னும் வேணாம். காசு செலவு பண்ணாதீங்க

எங்க அப்பா/அம்மா-னா ரொம்ப பிடிக்கும்.

அப்பா கோவிச்சிபாறு வெளியே போக வேணாம்.

எடை (Weight) : 50 கிலோ
போன் : Reliance bol-india-bol
Movies i like : Romance
Friends : college friends
ஹோட்டல்: Pizzahut
இங்கிலீஷ்: பீட்டர்

திருமணம் முடிந்த உடன் :


டயலாக்:

இன்னிக்கி ஷாப்பிங் போலாமா

எங்க அப்பா/அம்மா-னா ரொம்ப பிடிக்கும். அதோட உங்க பேமிலியும் பிடிக்கும்

பைக்கில போகலாம்.

எடை : 55 கிலோ
போன் : Reliance prepaid
Movies i like : Action movies
Friends: பக்கத்துல புதுசா கல்யாணம் ஆகி வந்து இருக்காங்க .
ஹோட்டல் : சரவண  பவன்
இரண்டு வருடம் கழித்து: 

டயலாக்:

இது வரைக்கும் எனக்கு என்ன வாங்கி கொடுத்து இருக்கீங்க

எங்க அப்பா/அம்மா-னா ரொம்ப பிடிக்கும். நீங்க பரவா இல்ல. ஒங்க பேமிலி சரி இல்ல.

நடந்து போலாம்.

எடை: 60 கிலோ
போன்: Reliance land line
இங்கிலீஷ்: தnglish
Friends : அடுத்த தெருவுக்கு புதுசா வந்திருக்கும் பங்கஜம் மாமி
ஹோட்டல் : கை ஏந்தி பவன்

ஐந்து வருடம் கழித்து: 

டயலாக்:

கேட்டாலும் ஒன்னும் கிடைக்காது

எங்க அப்பா/அம்மா-னா ரொம்ப பிடிக்கும். நீங்க எல்லாம் சுத்த மோசம்

ஏன் போன் எடுக்கலை?
(ஹஸ்பன்ட் பதில் : மீட்டிங்கில் இருந்தேன் (Or) போன் சைலன்ட் மோடில் இருந்தது கவனிக்கலை)                     

Friends: ரோடுக்கு அந்த பக்கம் மூணாவது தெருல புதுசா குடி வந்து இருக்காங்க. (இந்த தெருவில் யாரும் சரி இல்லை)  

எடை: பார்ப்பது இல்லை
Movies I like: எந்த படமுமே நல்லா இல்ல
ஹோட்டல் : "வீட்டுக்கே பார்சல் வாங்கிட்டு வந்துடுங்க"

-----------------**********************------------------------
டிஸ்கி: இவற்றை சொன்ன அந்த ரெண்டு "தைரியசாலிகள்"  தங்கள் பெயரை சொல்ல கூடாதுன்னு சத்தியம் வாங்கிருக்காங்க.

************
நாளைய  பதிவு:     பாலகுமாரனுடன் சந்திப்பு  

11 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  2. //தங்கள் பெயரை சொல்ல கூடாதுன்னு//

    அந்தப் பயமாவது இருக்கிறதே:)!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. :-)
    good experienced being compared..

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்... கலக்குங்க...

    ReplyDelete
  6. அந்த ரெண்டு பேரும் உங்களோட ஆல்டர்ஸ் தானே??

    ReplyDelete
  7. நன்றி மணிஜி
    **
    ராமலக்ஷ்மி said...

    //தங்கள் பெயரை சொல்ல கூடாதுன்னு//

    அந்தப் பயமாவது இருக்கிறதே:)!

    இருக்காதா பின்னே?
    **
    நன்றி கலாநேசன்

    ReplyDelete
  8. நன்றி மாதவா. நீயாவது என்னை நம்புறீயே
    **
    நன்றி சங்கவி
    **
    //வித்யா said...
    அந்த ரெண்டு பேரும் உங்களோட ஆல்டர்ஸ் தானே??//

    இல்லைன்னு உண்மையை சொன்னா நம்பவா போறீங்க? :))

    ReplyDelete
  9. சூப்பர் தல ரெண்டு வெர்ஷனுமே நல்லாயிருக்கு, யாரந்த அனுபவசாலி? :-)

    ReplyDelete
  10. ரொம்ப யதார்த்தம். சொன்னவரும் சொன்னவரும் வாழ்க:)

    ReplyDelete
  11. நன்றி முரளி; உங்களிடம் தனியே யாருன்னு சொல்கிறேன் சபையில் வேண்டாம்
    **
    நன்றி வல்லிசிம்மன் சார். குறைவான கமென்ட் வந்த பதிவு இது. குழந்தையில் சரியில்லா குழந்தை கூட அம்மாவிற்கு பிடிக்கிற மாதிரி இந்த பதிவை சிலர் ரசிக்கும் போது மகிழ்கிறேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...