Wednesday, September 7, 2011

ஐ யாம் சாம் விமர்சனம்



ஐ யாம் சாம் பட டிவிடி கேட்ட போது கடைக்காரர் " இன்னிக்கு மட்டும் பதினெஞ்சு போச்சு. மிச்சம் இருக்கான்னு தெரியலை" என சொல்லிவிட்டு "ஒண்ணு இருக்கு" என்று சொல்லி குடுத்தார். தெய்வ திருமகள் படம் வந்ததால் தமிழ் நாட்டு மக்களிடம் ஐ யாம் சாமுக்கு நிறைய மவுசு வந்து விட்டது !

தெய்வ திருமகளுக்கே கதை சொல்லாதவன். ஐ யாம் சாம் கதையை சொல்கிறேன். கேளுங்கள் 

சாம் ஒரு சாக்கலேட்  நிறுவனத்தில் வெயிட்டர் ஆக வேலை பார்க்கிறான். முதல் காட்சியில் கடையிலிருந்து அவசரமாக ஆஸ்பத்திரி செல்கிறான். அங்கு அவன் மனைவிக்கு பிரசவம் ஆகிறது. பெண் குழந்தை. லூசி என்று பெயரிடுகிறான். ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறும் போதே சாமையும் குழந்தையையும் விட்டு சொல்லாமல் பிரிந்து செல்கிறாள் மனைவி. குழந்தையை கஷ்டப்பட்டு வளர்க்கிறான். பக்கத்து வீட்டு பெண் குழந்தையை வளர்க்க உதவுகிறாள். சாம்க்கு அவனை போலவே சற்று மன நிலை சரியில்லாத நான்கு நண்பர்கள். 

குழந்தை வளர்கிறாள். தந்தையை விட அவள் புத்திசாலியாக இருக்கிறாள். தன் தந்தை நார்மல் இல்லை என்பதும் அவளுக்கு புரிகிறது. குழந்தை சாமிடம் வளர்ந்தால் அவள் மனநிலை பாதிக்கப்படும் என குழந்தை நல நிறுவனம், சாமிடிமிருந்து லூசியை பிரிக்கிறது. சாம் ஒரு பிரபல பெண் வழக்கறிஞரை நாடுகிறான். (தமிழ் போல கத்துக்குட்டி வக்கீல் அல்ல). முதலில் மறுக்கும் அவள், பின் ஒரு சந்தர்ப்பத்தில் " அவன் என் கிளையைன்ட்; அவனுக்கு இலவசமாக நான் வாதாடுகிறேன்" என தோழிகளிடம் பொய் சொல்ல, அதை காப்பாற்ற வேண்டி அவனுக்காக வாதாடுகிறாள். லூசி குழந்தை இல்லாத,  ஒரு வளர்ப்பு பெற்றோரிடம் வளர்கிறாள். (தமிழில் சொந்த தாத்தா & சித்தி). 

பெண் வழக்கறிஞர் வாழ்விலும் துயரங்கள். வேலை, வேலை என அவளால் தன் பையனை கவனிக்க முடியவில்லை. இதனால் அவள் பையன் தாயிடம் ஒட்டுதல் இன்றி இருக்கிறான். கணவனை பிரியும் இவள், சாமிடம் நெருக்கமாகிறாள்.

வழக்கில் பல கட்டங்கள் சாம்க்கு எதிராகவே உள்ளது. அவனுக்கு ஆதரவாக சாட்சி சொல்லும் ஒரே நபர் அவன் வீட்டுக்கருகில் இருக்கும், குழந்தை வளர்க்க உதவும் பெண் தான். சாம் குழந்தையை பார்க்க வாரத்துக்கு மூன்று முறை அனுமதி தரப்படுகிறது (தமிழில் கடைசி காட்சியில் தான் சந்திப்பார்கள்).

சாம் அடிக்கடி அவளை பார்க்க வசதியாக, அவள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே குடி வருகிறான்.தான் நிறைய சம்பாதித்தால் தான் பெண்ணை நன்கு வளர்க்க முடியும் என நிறைய வேலை பார்க்கிறான். சாமின் மகள் பல நாட்கள் இரவில் தூக்கம் வரவில்லை என சாம் இருக்கும் வீட்டுக்கு வந்து விடுகிறாள். படத்தின் இறுதி காட்சியில் வளர்ப்பு தாய் "இவள் உன்னிடம் இருப்பது தான் சரி என தூங்கும் பெண்ணை சாமிடம் வந்து தந்து விட்டு செல்கிறாள்.சாம் அவளிடம் "இவளுக்கு உன்னை போன்ற ஒரு அம்மா தேவை தான்" என்கிறான். கண்ணீருடன் விடை பெறுகிறாள் அவள். குழந்தை சாமின் தோள்களில் உறங்குகிறாள்.. 
***
இனி ஒற்றுமை வேற்றுமை உள்ளிட்ட மற்ற விஷயங்களுக்கு வருவோம்.

கதை மட்டுமின்றி பல இடங்கள் அப்படியே எடுத்து கையாண்டுள்ளனர்.
விக்ரமின் மன நிலை சரியில்லாத நான்கு நண்பர்கள்; பெண்ணுக்கு ஷூ வாங்கும் போது அவர்கள் பணம் தந்து உதவுவது; ஷூ வாங்கி விட்டு மீதி காசுக்கு பலூன் வாங்கி கொண்டு அனைவரும் செல்வது; பெண் தந்தையிடம் கேட்கும் சராமரி கேள்விகள், பெண்ணை பார்க்க ஓடி வரும் தந்தை ஓரிரு நிமிடம் மட்டுமே இருக்கும் போது நீதி மன்ற படிக்கட்டில் வழுக்கி விழுவது, விக்ரமை முதல் முறை சந்திக்கும் வக்கீல் வேறு கேஸ் பேசியவாறே வேகமாய் நடப்பது, அப்போது அவரிடம் விக்ரம் பேசி பேசி கொல்வது ..இப்படி நேரே சுட்ட காட்சிகளை சொல்லி கொண்டே போகலாம்.

மிக வருத்தமான விஷயம் விக்ரம் தலைமுடி, உடல் மொழி, நடை இவையெல்லாம் கூட அப்படியே எடுத்தது தான். சீன் பென் நடிப்பு விக்ரம் நடிப்பை விட பல மடங்கு உயர்ந்தது !! மிக மிக இயல்பான நடிப்பு இவருடையது. தமிழ் படத்தில் இடைவேளைக்கு பின் விக்ரம் மற்றும் குழந்தைக்கு வேலை குறைவாகவும் கோர்ட் சீன்கள் அதிகமாகவும் இருக்கும். சொல்ல போனால் இடை வேளைக்கு பின் ரெண்டு படத்து திரைக்கதையும் பெருமளவு வேறுபட்டது.

ஐ யாம் சாம், தெய்வ திருமகளை விட பிடிக்க முக்கிய காரணம் சொல்ல வருகிற விஷயத்தை விட்டு எங்கும் விலகாமல் நூல் பிடித்த மாதிரி செல்வது தான். தந்தை -மகள் அன்பும், புரிதலும் இதில் இன்னும் பல காட்சிகளிலும் நம் மனதை தைக்கிற படியும் காண்பித்துள்ளனர். மேலும் ஒரிஜினல், ஒரிஜினல் தானே !!

கதை மன நிலை சரியில்லாத நபர், ஒரு பெண் குழந்தையை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களை அக்குவேறு ஆணி வேறாக அலசுகிறது.   உதாரணமாக கோர்ட்டில் வழக்கறிஞர் "இவள் பெரிய மனுஷி ஆனதும் அந்த சிரமங்களை சாம் எப்படி புரிந்து கொள்வான்" என கேட்க, அதற்கு வரும் பதில் அருமை! ஹீரோயின் மிச்சேல் நடிப்பும் நிஜமாய் அட்டகாசம் ! என்ன ஒரு ஸ்டைல் மற்றும் கம்பீரம் !! சாமுடன் இவர் சேர்வது மட்டும் சினிமாட்டிக் ஆக உள்ளது.

படம் மிக ஜாலியாக நம்பிக்கை தருகிற விதத்தில் முடிகிறது. "ஒரு தந்தையாக இருக்க மிக முக்கிய தேவை அன்பு தான். மற்றவை எல்லாம் ரெண்டாம் பட்சம் தான்" என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது படம்.

ஐ யாம் சாம் : உங்கள் வீட்டுக்கருகில் உள்ள கடையில் டிவிடி காலியாகாமல் இருந்தால் அவசியம் வாங்கி பாருங்கள் !!

16 comments:

  1. //ஐ யாம் சாம், தெய்வ திருமகளை விட பிடிக்க முக்கிய காரணம் சொல்ல வருகிற விஷயத்தை விட்டு எங்கும் விலகாமல் நூல் பிடித்த மாதிரி செல்வது தான். தந்தை -மகள் அன்பும், புரிதலும் இதில் இன்னும் பல காட்சிகளிலும் நம் மனதை தைக்கிற படியும் காண்பித்துள்ளனர். மேலும் ஒரிஜினல், ஒரிஜினல் தானே !!//

    ஆம்.

    இரண்டு நாளைக்கு முன் தொலைக்காட்சியில் ஓளிபரப்பு செய்யப்பட்டது. ரசித்துப்பார்த்தேன்...ஷான் பென் ஒரு அற்புதமான நடிகர்.

    விக்ரம் நடித்ததை இன்னும் பார்க்கவில்லை.இனிமேதான் பார்க்கவேண்டும்..

    ReplyDelete
  2. பதிவின் ஆரம்பத்தில் போஸ்டரைப் பார்த்து விக்ரம் என்றே நினைத்து(ஏமாந்து)விட்டேன்!!

    //தெய்வ திருமகள் படம் வந்ததால் தமிழ் நாட்டு மக்களிடம் ஐ யாம் சாமுக்கு நிறைய மவுசு//

    ஐயம் ஸாம் டீம், டைரக்டர் விஜய்க்கு ரொம்பக் கடமைப்பட்டிருக்கு!!! நன்றிக்கடன் செலுத்த இன்னொரு படம் எடுப்பாங்களோ??

    ReplyDelete
  3. ayio ayio ! appa vikarmu padam unmaiyanathu illaiya.athaane paarthen vikaram eaan pamikittu irukkareanu.

    apparam unga vimarsanam nallave iruthusu bass. nandri!

    ReplyDelete
  4. உங்கள் தமிழ் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

    ReplyDelete
  5. நெட்ல டவுண்லோட் செய்து தெய்வ திருமகள் வருவதற்கு முன்பே பார்த்து விட்டோம். அதனால் தெய்வ திருமகள் டீம் டிவியில் கொடுக்கும் இண்டர்வியூக்களை கண்டாலே பத்திக் கொண்டு வரும்.

    ReplyDelete
  6. விமர்சனம் நன்றாக இருக்கிறது. டிவிடி கிடைக்கும்போது பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  7. i would add certain issues with your permission.
    1.IAS(i am sam)has a clear cut definition of the hero s mental condition.. he has autism and mild mentalretardation.TM(theivaththirumagal)has a very poor definition of the character.moreover they hv made fun of retarded people in a few places and even lawyers,in my opinion.
    2.For tamizh directors every tamizh(?)girl is a crack pot, like their heroines.They dare not to show a successful women professional.. if any,she would be an arrogant,villain or a comedian (like anushka).While the fact is she is one among the talented artists, here, who can play mitchelle s role.
    3.plagiarism is at its peak in tamil cinema.our creators(??) are not aware of intellectual proprietorship. they definitely need lessons on this from lawyers like you.or they should be taught a lesson by people.
    4.This movie is an example how real issues are faked even in serious cinemas like TM. whereas this not in malayalam/hindi/crossover indian cinemas.
    5.Santhanam s comedy is the only original work that was commendable in the movie.
    6.there were other few original works like the non-sensical song btw anushka and vikram. atleast in the english version there was 'love' btw them.here it was only pity and a thunderstorm.that s enough for a tamizh heroine to fall for a ???????
    7.its high time vikram stops his interviews..claiming the originality of the movie and his acting skills.
    8.These kind of movies need not be remade.they can release the original movie with subtitles. atleast we can watch a non-mutilated good movie. They need not worry abt kuppan/suppan.they would not have watched TM anyway.
    sorry for the extra space.I was brimming with anger when i saw TM and IAS together.

    ReplyDelete
  8. Anonymous10:30:00 PM

    சினிமா காரம் காபின்னு ஒரு நிகழ்ச்சி போடறாங்க... சினிமானா காப்பிதான் போல.. காரம் தான் கொஞ்சம் வேறுபடுமோ?!

    ReplyDelete
  9. நேஷ‌ன‌ல் அவார்ட்னுலாம் பேசும்போதுதான் இன்னும் எரிச்ச‌ல் வ‌ருது :(

    ReplyDelete
  10. பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  11. //இப்படி நேரே சுட்ட காட்சிகளை சொல்லி கொண்டே போகலாம். //

    இதுவாவது பரவாயில்லை. ஒவ்வொரு முறையும் தமிழில் பிரபலமான ஒரு பாடலின் ராகத்தை இங்கு உள்ள ஏதாவது ஒரு தீம் மியூசிக்கிலோ, அல்லது ராப், ராக் பாடல்களிலோ கேக்க நேரும் போது...ச்சே இதைதான் நாம் இவ்வளவு நாள் ரசித்தோமா என்ற ஒரு உணர்வு ஏற்படும்.

    ReplyDelete
  12. பார்க்கத் தூண்டும் விமர்சனம்.

    ReplyDelete
  13. நன்றி ராம்வி; ஷான் பென் அற்புத நடிகர் தான்
    **
    //பதிவின் ஆரம்பத்தில் போஸ்டரைப் பார்த்து விக்ரம் என்றே நினைத்து(ஏமாந்து)விட்டேன்!! //
    சரியா சொன்னீங்க ஹுசைனம்மா
    **
    மழை தூறல்: நன்றி
    **
    அமுதா கிருஷ்ணா: ம்..சொந்தமா படம் எடுக்க முடியாதா என்ன? சில பேர் காப்பி அடிப்பதை நியாயம் செய்து வேறு பேசுகிறார்கள். :(((

    ReplyDelete
  14. நன்றி நாஞ்சில் மனோ
    **
    மனோ மேடம். அவசியம் பாருங்கள்
    **
    டாக்டர் வடிவுக்கரசி. அற்புதமான அலசல். தனி பதிவே போடுமளவு எழுதி விட்டீர்கள்
    **
    ஷீ நிசி : :)))
    **

    ReplyDelete
  15. ரகு: அமுதா மேடமுக்கு கூட இதே கோபம் தான்
    **
    நன்றி ஸ்ரீராம்; பாருங்கள்
    **
    ஆதி மனிதன். சரியா சொன்னீர்கள். காபி அடிப்பதற்கு வெட்கமே படாமல் இருக்கிறார்கள்
    **
    நன்றி ராமலட்சுமி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...