Wednesday, February 3, 2010

சிறு கவிதைகள்


மாறுதல்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமாய்
மனிதர்கள்.

********

சூரியன்

கூவத்திலும்
மிதப்பான்
சூரியன்

********


எத்துணை துயர் இருப்பினும்
சிரி....
நண்பன் முகம் கண்டதும் !

---
எழுதியது "கல்லூரி காலத்து மோகன் குமார்"

31 comments:

  1. ///எங்குமுண்டு கவிதை
    கவிஞனின் வேலை
    மொழி பெயர்ப்பதே ///

    க்ளாஸ்

    ReplyDelete
  2. மத்த மூனும் கூட நல்லா இருக்கு பாஸ்

    ReplyDelete
  3. //எங்குமுண்டு கவிதை
    கவிஞனின் வேலை
    மொழி பெயர்ப்பதே//

    இதுக்கு இன்னும் நிறைய அர்த்தம் சொல்லாம் தல, ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. இப்ப கூட ட்ரை பண்ணுங்க தலைவா.

    கேபிள் கவிதைகளை படிங்க, கவிதை தானா கொட்டும்.

    ReplyDelete
  5. கல்லூரி வாழ்க்கையே கவிதைதானே மோகன்!!

    ReplyDelete
  6. நல்லாருக்கு,

    கல்லூரி படிப்பெல்லாம் முடிஞ்சிடுச்சில்ல :))

    ReplyDelete
  7. கவிதைகள் நன்றாக இருக்கின்றன. கல்லூரி காலத்திலேயே கவியோ?

    வெங்கட் நாகராஜ்
    புது தில்லி.

    ReplyDelete
  8. //நான்கும் எழுதியது "கல்லூரி காலத்து மோகன் குமார்"//

    அந்த மோகன் குமாருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. க‌விஞ‌ர் கேபிள் எப்ப‌டிலாம் இன்ஸ்பிரேஷ‌னா இருக்க‌றாரு பாருங்க‌...

    எல்லாருக்கும் க‌ல்லூரி கால‌த்துல‌ ஒரு 'அவ‌ங்க‌' இருப்பாங்க‌ளே, 'அவ‌ங்க‌'ள‌ ப‌த்தி எதுவும் எழுத‌லையா, சும்மா தைரிய‌மா சொல்லுங்க‌, ஹவுஸ்பாஸ்தான் ப்ளாக் ப‌டிக்க‌ற‌தில்லைன்னு சொல்லியிருக்கீங்க‌ளே:))

    ReplyDelete
  10. அருமை...தொடரவும்

    ReplyDelete
  11. தல,

    நான் ஸ்கூல் கவித வெச்சிகிட்டே இந்த போடு போடறேன் :)

    விடாதீங்க அப்படியே கண்டிநியு பண்ணுங்க சட்ட ரீதியா இருக்கும் சில விஷயங்களும் முயர்ச்சி பண்ணினா கவிதையா கொண்டுவரலாம் ..

    வாழ்த்துக்கள்..:))

    ReplyDelete
  12. nalla mozhi peyarppu. kavingyan neengkal. vaalththukkal.

    ReplyDelete
  13. நன்றி நவாஸ். நல்லா பாராட்டுறீங்க. சந்தோஷமா இருக்கு.
    ------
    முரளி: நன்றி. தங்களுக்கும் அதே கவிதை பிடித்தது அறிந்து மகிழ்ச்சி
    ------
    நன்றி கணேஷ். கேபிலுக்கு எதிர் கவிதை பாட தான் ராசு இருக்காரே:))
    ------
    தண்டோரா: சரியா சொன்னீங்க. கல்லூரி வாழ்க்கையே ஒரு கவிதை தான்
    ------

    ReplyDelete
  14. சங்கர்: நன்றிங்கோ.
    ------
    வெங்கட்: கல்லூரி காலத்தில் தான் கவி; தங்கவேலு கல்யாண பரிசு படத்தில் சொல்ற மாதிரி "கல்யாணத்துக்கு அப்புறம் ஒரே சோகம்" .
    ------
    சரவணா: தங்கள் வாழ்த்தை அவர் கிட்டே சொல்லிட்டேன்; நன்றி சொல்ல சொன்னார்
    ------
    நன்றி TVR சார்

    ReplyDelete
  15. குறும்பன்: இருக்காங்க. ஹவுஸ் பாசுக்கு அவங்க பற்றிய எல்லா History & Geography சொல்லியாச்சு. எனவே பயப்பட ஏதுமில்லை. அதில் சிலர் இப்போ இந்த ப்ளாக் பக்கம் வர்றாங்க; பேர் சொல்லாட்டா கூட, சம்பவங்கள் மூலமாவே அவங்களை embarass செய்ய கூடாதுன்னு நினைக்கிறேன்.

    நன்றி சங்கர். அப்படிங்கறீங்க?? முயற்சி பண்றேன்

    நன்றி மதுரை சரவணன்; முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி; பின்னூட்டத்தில் தாங்கள் பாராட்டியிருக்கீர்கள் என்றே நினைக்கிறேன்:))

    ReplyDelete
  16. //எங்குமுண்டு கவிதை
    கவிஞனின் வேலை
    மொழி பெயர்ப்பதே//

    Arumai.. Pls continue..

    ReplyDelete
  17. ரெண்டும் மூனும் ரொம்ப பிடிச்சிருக்கு மோகன்.

    எல்லாமுமா?

    :-)

    கலக்குங்க.

    ReplyDelete
  18. நல்ல இருக்கு நண்பரே வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  19. 3 வது ரொம்ப புடிச்சுருக்கு.

    ReplyDelete
  20. நடத்துங்க..

    ReplyDelete
  21. Anonymous2:23:00 AM

    நல்லா இருக்கு. ஆனா புரிஞ்சா கவிதை கிடையாதாம். :)

    ReplyDelete
  22. எங்குமுண்டு கவிதை
    கவிஞனின் வேலை
    மொழி பெயர்ப்பதே

    ..........நன்றாக மொழி பெயர்த்துள்ளீர்கள். :-)

    ReplyDelete
  23. ///எங்குமுண்டு கவிதை
    கவிஞனின் வேலை
    மொழி பெயர்ப்பதே//
    //

    இது ரெம்ப புடிச்சது..

    ReplyDelete
  24. கவிதைகள் கலக்கல் வக்கீல்சார்..

    ReplyDelete
  25. ஆமாம் மோஹன் நம் வேலை மொழிபெயர்ப்பதே

    ReplyDelete
  26. சூரியனையே கூவத்துல அமுக்கப் பாக்கறீங்களே.. (ரொம்ப மிதந்தால் ஊறி.. மூழ்கிடுமோ ? )
    --- கவிதை அருமை.

    ReplyDelete
  27. Anonymous12:39:00 PM

    நான்கு கவிதைகளும் சும்மா நச்சுனு இருக்கு

    ReplyDelete
  28. //எங்குமுண்டு கவிதை
    கவிஞனின் வேலை
    மொழி பெயர்ப்பதே//

    கல்லூரிக்கால கவிதை அருமை மோகன்குமார். உண்மைதான் எங்கும் இருக்கிறது கவிதை.

    ReplyDelete
  29. கல்லூரிக் கவிதைகள் அருமை......
    குடும்பஸ்தன் கவிதை சொல்லுங்களேன் கேட்போம்

    ReplyDelete
  30. அன்பின் மோகன் குமார்

    அக்காலத்துக் கவிதைகள் - குறுங்கவிதைகள் அருமை - எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது - தொடர்க

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...