சிவாஜியில் நான் ரொம்ப ரசித்த ஒரு இடம். ஹனீபா படத்தில் ஒரு corrupt மந்திரி. ரஜினி அவரை ஒரு டாக்குமெண்டில் கையெழுத்து போட சொல்லி மிரட்டுவார். போடாததால் கத்தியால் வயிற்றில் குத்தி போட வைப்பார். பின் கூடவே வந்த டாக்டர் அதே ரூமில் வைத்து அவருக்கு வயிற்றில் தையல் போடுவார். வயிற்றில் தையல் போட்டு முடிந்ததும் ஹனீபா ஒரு கேள்வி கேப்பார் பாருங்க. " மூளைக்கு ஒன்னும் ஆகலியே!" அது டிபிகல் ஹனீபா ஸ்டைல்!!
ஹனீபா இறந்தது கல்லீரல் புற்று நோயால் என்பது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். வாரத்துக்கு பல முறை சரக்கு சாப்பிடும் நண்பர்களே.. வேணாம் குறைச்சுக்குங்க.
ஹனீபா ஆத்மா சாந்தி அடையட்டும். அவர் குடும்பத்துக்கு மன தைரியத்தை ஆண்டவர் அருளட்டும் !!
***********
சென்ற வார சிறந்த ஜோக்: Ball tamperinig -ல் ஈடு பட்ட அப்ரிடி, “பந்தை நான் வாசம் தான் பார்த்தேன்” என சொன்னது.
"யப்பா.. பல்லால தான் வாசம் பாப்பீயா ராசா? நல்லா இருப்பா"
சவுத் ஆப்ரிகா உடனான டெஸ்ட் போட்டிகளில் எனக்கு என்னவோ சவுத் ஆப்ரிகா தான் ஜெயிக்கும் என தோன்றுகிறது. இந்தியா பவுலிங் ஒன்னும் அவ்ளோ ஸ்ட்ராங்கா இல்லை. மேலும் டிராவிட் இல்லாதது பெரிய இழப்பு தான். பத்ரி போன்ற புது ஆட்களுக்கு வாய்ப்பு என்றாலும் டிராவிட், லக்ஸ்மன், யுவராஜ் இல்லாதது பிரச்சனையே .. . அதுவும் சவுத் ஆப்ரிகா போன்ற ஸ்ட்ராங் டீமிடம்.. பார்க்கலாம்
***********
ஆந்திராவில் சொத்து தகராறில் ஒரு சிறு பெண் கொடூரமாக கொல்லப்பட்டதும் அவர் தந்தை இதனால் Heart attack -ல் இறந்ததும் மனதை தைக்கிறது. இது தோண்டினால், ரெண்டாம் மனைவி, நூறு கோடி சொத்து என எங்கெங்கோ போகும்... ஆனாலும் அந்த சிறு குழந்தையை எவ்வளவு கொடூரமாக கொன்றுள்ளனர். எப்படி தான் மனசு வருமோ? ஆசைகளில் எல்லாம் கொடுமையானது மண்ணாசை & பெண்ணாசை. அந்த தந்தைக்கு இருந்த பெண்ணாசை (ரெண்டாம் மனைவி) & கொன்றவர்களுக்கு இருந்த மண்ணாசை ரெண்டுமே இந்த சம்பவங்களுக்கு காரணம்.
***********
கேபிள் புத்தகம் வெளியிட போறார்னு ஏற்கனவே தெரிஞ்சது தான். மனுஷன் தேர்ந்தெடுத்த நாளை பாருங்க. பிப்ரவரி 14 !! என்னதான் யூத்து, யூத்துன்னு சொன்னாலும், அதை நிரூபிக்கிற மாதிரி இந்த தேதி select செய்துள்ளார். மேல் விபரங்களுக்கு இங்கே படிக்கவும்.
விழா நடப்பது சென்னை என்றாலும் இந்த தேதியால் நமக்கு ஒரு சங்கடம் பாருங்க. ஏற்கனவே கம்ப்யூடரே கதின்னு இருப்பதால் வீட்டில் நிறைய சந்தேகம். இதில் பிப்ரவரி 14 ஞாயிற்று கிழமை வெளியே போகணும்னா எப்படி ஹவுஸ் பாஸ் பெர்மிஷன் தருவாங்க? ஏகப்பட்ட கேள்விகள்.. அதுக்கு நம்ம விளக்கங்கள்…. சமாளிக்கிறேன்.. எப்படியும் வந்துடுவேன்.
கூடவே பரிசல் காரனின் புத்தகமும் வெளியிடபடுகிறது. நண்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!
சென்னையில் இது ஒரு பதிவர் சந்திப்பாக அமைய போகிறது. அனைவரும் வந்துடுங்க!!
அதான. இந்த யூத்து மேட்டர் மறந்தே போச்சே:))
ReplyDeleteநண்பரே
ReplyDeleteஹனீபாவுக்கு குடிப்பழக்கம் இல்லை..! சிகரெட் மட்டும்தான் குடிப்பார்..!
ஆனாலும் கல்லீரலில் புற்றுநோய்..! ஆச்சரியமான கொடுமை..!
Afridi - விஷயம் ICC லெவலுக்கு போகுதுன்னு படிச்சேன்
ReplyDeleteமலையாள திரையுலகத்திற்கு சமீப காலங்களில் ஏற்பட்ட இழப்புகளில் ஹனீபாவும் ஒருவர். அவர் இறந்ததிற்கான காரணத்தை நீங்கள் சொல்லியிருக்கும் விதம் நச்!
Andhra issue - இந்த ஜென்மங்களுடைய பிரச்னையில் ஒரு குழந்தை.....ப்ச்...என்னத்த சொல்ல:(
//ஏகப்பட்ட கேள்விகள்.. அதுக்கு நம்ம விளக்கங்கள்…. சமாளிக்கிறேன்..//
அரசியல்ல இதெல்லாம்.......:))
பரிசல்காரன், கேபிள் சங்கருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி தலைவரே..
ReplyDeleteசெய்தி தொகுப்பில், பல விஷயங்களை கவர் பண்ணி இருக்கீங்க. . நன்றி.
ReplyDeleteவானம்பாடிகள் ஐயா: விழாவுக்கு நீங்களும் வருவீர்கள் என நினைக்கிறேன். சிந்திப்போம்.
ReplyDelete------
நன்றி உண்மை தமிழன்.
------
குறும்பன்: நன்றி. ஞாயிறு தான். இருந்தாலும் முடிந்தால் விழாவுக்கு வாருங்கள்.
------
நன்றி வித்யா
------
நன்றிக்கு நன்றி கேபிள்.
------
சித்ரா: நீங்கள் ரசித்தது குறித்து மகிழ்ச்சி.நன்றி