ஒரு நிறுவனம் தனக்கென்று பிரத்யேகமாக வைத்திருக்கும் ஒரு பெயர் அல்லது சிம்பல் - Trade mark. இந்த சிம்பல் பார்த்தாலே ஒருவர் அந்த நிறுவனம் பெயர் சொல்லி விடுவர். உதாரணமாய் அசோக் லேலன்ட் - L என்ற எழுத்தை ஒரு குறிப்பிட்ட விதத்தில் எழுதி இருப்பார்கள். இதை பேருந்து மற்றும் பிற அசோக் லேலன்ட் வாகனங்களில் நீங்கள் கவனித்திருக்கலாம். இது ஒரு ட்ரேட் மார்க். இதனை யார் முதலில் இருந்து உபயோகிக்கிறார்களோ அவர்களுக்கே இதை தொடர்ந்து வைத்திருக்கும் உரிமை உண்டு. மேலும் இவர்கள் இதனை தங்கள் பெயரில் பதிவும் செய்து, பிறர் இதே போன்ற ட்ரேட் மார்க் உபயோகிக்காமல் தடுக்க முடியும். தற்போது Google -தன் பெயரில் சைனாவில் வர உள்ள நிறுவனத்துக்கு எதிராக குரல் கொடுப்பது இதன் அடிப்படையில் தான்..
சென்னை ஸ்பெஷல்: செருப்புக்கு ஒரு கடை: காதிம்ஸ்
சென்னையில் செருப்பு வாங்க ஒரு நல்ல கடை: காதிம்ஸ். தி. நகரிலும் மவுன்ட் ரோடிலும் உள்ளது. நிறைய மாடல்கள் கிடைக்கும்.. குறிப்பாய் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்.. (நாம் எங்கேங்க அடிக்கடி மாத்த போறோம்?) . விலை ரொம்ப reasonable-ஆகவே இருக்கும். ( Bata வை விட ரொம்பவே விலை குறைவு) . ஜப்பானியர்கள் போல் "கம்மி விலை; ஆறு மாதம் ஒரு வருடம்.. அத்தோடு தூக்கி போட்டுட்டு அடுத்ததை வாங்கு" பாலிசி பின் பற்றுகிறார்கள். இது வரை செல்லா விடில் ஒரு முறை முயற்சியுங்கள்..
கிரிக்கெட் பக்கம்
சென்ற பதிவில் எழுதியது போல் இந்தியா கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்காவிடம் தோற்று விட்டது. மிக மோசமான டீம் தேர்வு. இந்தியாவில் விளையாடும் போது squad-ல் எதற்கு 7 பவுலர் என தெரிய வில்லை! உள்ளூர் மேட்சில் ஆள் இல்லாவிட்டால், ஒப்புக்கு சப்பாணியாக பொடியனை இறக்குவது போல் சாஹா என்ற விக்கட் கீப்பர் "சிறப்பு batsman " ஆக விளையாடினார்!! நம்ம ஆட்களுக்கு genuine fastbowling என்றால் உதறல் தான். ஸ்டெய்ன் பந்து வீச்சில் சுருண்டுட்டாங்க...! விடுங்க. " இந்தியா தோத்தா என்ன.. சச்சின் செஞ்சுரி அடிச்சா போதும்" அப்படின்னு மனசை தேதிக்கிற கூட்டம் நாமெல்லாம்!!
இந்த வார நல்ல விஷயம்
உள் நாட்டு பாதுகாப்புக்கு போதிய உதவிகளை மத்திய அரசு செய்வதாகவும், சட்டம் ஒழுங்கு காக்க, நல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர்கள் மாநாட்டில் மோடி பேசியிருக்கிறார். எதிர், எதிர் அணிகளாக இருந்தாலும், பிஜேபியும் காங்கிரசும் சில விஷயங்களில் ஒத்து போவதும், ஒருவர் பிறந்த நாளுக்கு மற்ற தலைவர் வாழ்த்து சொல்வதும் தொடர்கிறது. இங்கே தமிழ் நாட்டை நினைத்தால்?? கருணாநிதி ஆகட்டும், ஜெ ஆகட்டும் ஒருவரை மற்றவர் விரோதி ஆகவே பாவிக்கின்றனர். எந்த விஷயத்துக்கும் என்றும் ஒருவரை இன்னொருவர் பாராட்டியதில்லை; ஒரே விழாக்களில் கலந்து கொள்வதும் இல்லை. அரசியல் நாகரீகம் (அப்படி ஒன்னு இருக்கா?) இவங்களுக்கு என்று தான் தெரியுமோ?
ஹெல்த் பக்கம்
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினம் ரெண்டு அல்லது மூன்று பூண்டு வில்லைகள் சாப்பிடுவது நல்லது. இது ரத்த அழுத்தம் குறைக்க பெரிதும் உதவும் என நிரூபித்துள்ளனர். இப்படி சாப்பிட சிறந்த நேரம் காலை சாப்பிட்டு முடித்த பின் தான். பூண்டு வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. இரவு சாப்பிடுவதும் நல்லதல்ல, எனவே தான் காலை உணவு சாப்பிட்ட பின் சாப்பிடுவது சிறந்தது.
பிடித்த SMS:
Being kind is more important than being right.
அய்யாசாமி
அய்யாசாமி வெளியூர் செல்ல தன் ஊர் பஸ் ஸ்டாண்டில் வந்து நிற்பார். அவர் எந்த ஊருக்கு போகணுமோ அதுக்கு எதிர் சைடில் தான் நிறைய பஸ் போகும். இவர் போற ஊருக்கு பஸ் வந்தா, ரொம்ப நேரம் கழிச்சு வரிசையா ரெண்டு மூணு வரும். அய்யா சாமி அடிச்சி பிடிச்சி ஏதாவது ஒன்னில் ஏறுவார்.. அவர் ஏறிய பஸ்ஸை மத்த பஸ்ஸுங்க சைடு வாங்கி தாண்டி போய்டும்னு சொல்லனுமா என்ன?
//நிறைய மாடல்கள் கிடைக்கும்.. குறிப்பாய் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்.. (நாம் எங்கேங்க அடிக்கடி மாத்த போறோம்?)//
ReplyDeleteசரி தான், நமக்கு நன்றாக கிழியாமல், அறுந்து போகாமல் இருக்கிறது, அவர்களுக்கு மட்டும் அடிக்கடி அறுந்து போவதேன்...?!
நமக்கு மட்டும் புதுப்புது டிசைன் வருவதில்லையே ஏன்?!
கடுமையா விமர்சனம் பண்ணலாம்னு வந்தேன். Being kind is more important than being right' னு பிடித்த sms போட்டு விட்டீர்கள். அதனால 'பதிவு சூப்பர்' னு சொல்லிக்கறேன் :)
ReplyDeleteஅனுஜன்யா
கிரிக்கெட் - தோல்விக்கு காரணம் டீமிற்குள் நடைபெறும் மோதல்தான் காரணம் எனும்போது நீங்கள் கூறுவது போல் "இந்தியா தோத்தா என்ன.. சச்சின் செஞ்சுரி அடிச்சா போதும்" என்று தோன்றவில்லை. அதுவும் அடுத்த வருடம் உலகக்கோப்பை போட்டிகள் வரும்போது. டீமிற்குள் ஒற்றுமை வரவேண்டும் என வேண்டுவோம்.
ReplyDeleteஅய்யாசாமி - சேம் பிளட், சென்ற புதன்கிழமை கூட அனுபவித்தேன்.
காதிம் கடைக்கு நான் ரெகுலர் கஸ்டமர் பாஸ் . மவுண்ட் ரோடுல இருக்குற கடைல தான் நான் வாங்குவேன்
ReplyDelete//இந்தியா தோத்தா என்ன.. சச்சின் செஞ்சுரி அடிச்சா போதும்" அப்படின்னு மனசை தேதிக்கிற கூட்டம் நாமெல்லாம்!! //
ReplyDeleteஅதே தான், ஜெயிக்கிறது தோக்கிறது பத்தி கவலையே இல்ல, கிரிக்கெட்னா அது சச்சின் தான்
வாரம் ஒரு சட்டச்சொல் மிக நல்ல பகிர்வு மோகன் சார்.
ReplyDeleteஉங்கள் அலைபேசி எண்ணை கொடுங்கள், ஊருக்கு வரும்போது அழைப்பதற்கு.
//அய்யாசாமி வெளியூர் செல்ல தன் ஊர் பஸ் ஸ்டாண்டில் வந்து நிற்பார். அவர் எந்த ஊருக்கு போகணுமோ அதுக்கு எதிர் சைடில் தான் நிறைய பஸ் போகும். இவர் போற ஊருக்கு பஸ் வந்தா, ரொம்ப நேரம் கழிச்சு வரிசையா ரெண்டு மூணு வரும். அய்யா சாமி அடிச்சி பிடிச்சி ஏதாவது ஒன்னில் ஏறுவார்.. அவர் ஏறிய பஸ்ஸை மத்த பஸ்ஸுங்க சைடு வாங்கி தாண்டி போய்டும்னு சொல்லனுமா என்ன?//
ReplyDeleteஎங்க ஊர்லயும் ஒரு அய்யாசாமி இருந்தார்.. சாதாரண ஆளு இல்லை, 'ஐடியா அய்யாசாமி'.
ஒருநாள் 32 நம்பர் பஸ்சுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தார்.. ரொம்ப நேரமா வெயிட் பண்ணி அளுத்துபோய், 64 ம் நம்பர் பஸ் வந்ததும் அதுல ஏறிப்், பாதி தூரத்துல இறங்கிகிட்டார்.. இது எப்படி இருக்கு ?
பி.கு. இப்பல்லாம் என்னோட வலைப்பூ பக்கம் வரதில்லையா?
beingk kind is important than being right ....
ReplyDeleteஅருமை மோஹன் ரத்த அழுத்தம் தகவலும் அருமை
சுவையான தகவல் தொகுப்பு.
ReplyDeleteபாலோயர் போட்டு நானும் நல்லவன் ஆயிட்டேன். ஆத்தாஆஆஆஅ நான் நல்லவன் ஆயிட்டேன். நல்ல தகவல்கள். நன்றி.
ReplyDeleteட்ரேட்மார்க் - பெயருக்கு பக்கத்துல TMனு கண்டிப்பா குறிப்பிடணுமா? எல்லா கம்பெனியும் இத ஃபாலோ பண்றாங்களா?
ReplyDelete//" இந்தியா தோத்தா என்ன.. சச்சின் செஞ்சுரி அடிச்சா போதும்" அப்படின்னு மனசை தேதிக்கிற கூட்டம் நாமெல்லாம்//
உண்மைதான், யார் செஞ்சுரி அடிச்சாலும் வர்ற சந்தோஷத்தை விட, சச்சின் செஞ்சுரி அடிக்கும்போது வர்ற சந்தோஷமே தனிதான்:)
ஆனா சச்சினை மட்டும் குறை சொல்லி பிரயோஜனமில்ல, மத்த 10 பேரும் ஆடணுமே:(
தமிழ்நாட்டுல அரசியல் நாகரிகமா? அப்படின்னா என்ன???
Nice SMS & Health tips
நன்றி அமைதி அப்பா; நான் இந்த விளையாட்டுக்கு வரலை :))
ReplyDeleteநன்றி அனுஜன்யா; என்ன கோபம்?
வரதராஜலு ஐயா same blood-ஆ? கருத்துக்கு நன்றி
சங்கர்: நீங்களும் நம்மள போல தானா?
நன்றி சரவணா; தந்து விட்டேன்
மேடி: நன்றி!! வருகிறேனே?
ReplyDeleteதேனம்மை மேடம் , சித்ரா, பித்தனின் வாக்கு நன்றிகள் பல..
ரகு: TM என்றால் இன்னும் trademark register செய்யலை என அர்த்தம்; R - போட்டால் register செய்து விட்டனர் என்று அர்த்தம். நன்றி
//எந்த விஷயத்துக்கும் என்றும் ஒருவரை இன்னொருவர் பாராட்டியதில்லை; ஒரே விழாக்களில் கலந்து கொள்வதும் இல்லை. //
ReplyDeleteகொடுமை இத்தோட நிக்கலை, மோகன்! ஒரு கட்சிக்காரர் இன்னொரு கட்சிக்காரருடைய வீட்டு விசேஷத்துக்குப் போனாக் கூட அது கொலைக் குத்தம். நாகரிகத்துக்கும் தமிழக அரசியலுக்கும் ரொம்பத் தூரம்.
நம்ம ஆளுங்களுக்கு முட்டிக்கு மேல பந்து வரக்கூடாது. வந்த கொஞ்சம் கஷ்டம் தான் :). சொன்ன மாதிரி 10டுல்கர் சதம் அடிச்சாச்சு. ரெக்கார்ட். அது போதும்.
ReplyDeleteஅய்யாசாமி சூப்பர்.
இந்த வார நல்ல விஷயம் ... அப்படின்னு ஆரம்பிச்சு கடைசியில கெட்ட விசயத்த சொல்லி முடிச்சிட்டீங்க.
ReplyDelete