Monday, February 8, 2010

வக்கீல் படிப்பும், வேலையும்

இப்பதிவு யூத் விகடனின் குட் ப்லாக்ஸ் பகுதியில் இடம் பெற்றது!


*******************************************
வலை உலகில் எழுதுவோர் பெரும்பாலும் ஏதோ ஒரு துறையில் + நிறுவனத்தில் பணி புரிபவர்களே. இப்படி பல துறைகளில் இருப்போர் தத்தம் துறை பற்றி, என்ன படிக்க வேண்டும், அதற்கு வேலை வாய்ப்பு எப்படி என எழுதினால், நிச்சயம் பலருக்கு உபயோகமாக இருக்கும். நீண்ட நாளாகவே எனக்குள் இந்த எண்ணம். இந்த ப்ளாகை வாசிக்கும் வள்ளுவன் என்ற நண்பரும் சட்ட படிப்பு பற்றி எழுத சொல்லி பல கேள்விகளை பின்னூட்டத்தில் எழுதினார். இதோ அந்த பதிவு. இதை ஒரு தொடர் பதிவாக, இன்னும் சில நபர்களையும் அழைத்துள்ளேன் தொடர. அழைத்தவர்கள் அவசியம் தொடரவும்.

*********
இந்தியாவில் சட்ட படிப்பு இரு விதமாய் உள்ளது. ப்ளஸ் டூ முடித்து விட்டு நேரே BL படித்தால் ஐந்து வருட படிப்பு. BA, B.Sc, B.Com என ஏதேனும் ஒரு டிகிரி முடித்து விட்டு படித்தால் மூன்று வருடம். (ஆம் எந்த டிகிரி படித்தாலும், BL - மூன்று வருட படிப்பில் சேர்ந்து படிக்கலாம்). தமிழ் நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. சேலத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்திய அளவில் புனே மற்றும் பெங்களுருவில் சில சிறந்த சட்ட கல்லூரிகள் (National Law school) உள்ளன

தேர்வு முறை

அரசு சட்ட கல்லூரிகளில் இதற்கென நடக்கும் பிரத்யேகமான நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படியில் தான் அட்மிஷன் நடக்கிறது. ப்ளஸ் டூ மார்க் eligibility-க்கு மட்டும் தான் பயன் படுகிறது. இதுவும் மிக அதிகம் கிடையாது. 50 அல்லது 60 சதவீதம் இருந்தால் போதுமானது.

நுழைவு தேர்வு பொது அறிவு அதிகமாகவும், சட்ட அறிவு ஓரளவிற்கும் உள்ள கேள்விகளை உள்ளடக்கி உள்ளது. நுழைவு தேர்வுக்கு சில நல்ல coaching centreகள் இந்த கல்லூரிகள் உள்ள ஊர்களில் உள்ளன.

செலவு

அரசு சட்ட கல்லூரியில் படித்தால் செலவு மிக குறைவே. கல்லூரிக்கான செலவு (Term fees, exam fees, etc) வருடத்திற்கு 5000-க்குள் அடங்கி விடும். ஹாஸ்டலில் தங்கி படித்தால் அதற்கான செலவு அந்தந்த ஊர் பொறுத்து இருக்கும்.

பிற மாநில கல்லூரிகள்

முழு நேர மாணவனாக இல்லாமலே சட்டம் படிப்பதற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நிறைய கல்லூரிகள் உள்ளன. இங்கு தரபடுவது LLB என்ற பட்டம் . BL & LLB இரண்டும் சமமே. சட்ட படிப்பு தமிழகத்தில் BL என்றும், பிற மாநிலங்களில் LLB என்றும் அழைக்க படுகிறது.

ஆனால் இந்த கல்லூரிகள் தனியார் என்பதால் costly-ஆக இருக்கும்; தோராயமாக வருடத்துக்கு ருபாய் 30,000 ஆகலாம். தேர்வு எழுத நீங்கள் அந்த ஊருக்கு சென்றாக வேண்டும். (இது தொலை தூர கல்வி அல்ல என்று அறிக).

சில யூனிவர்சிட்டிகள் தொலை தூரத்தில் படிக்க BGL என்ற படிப்பு வைத்துள்ளனர். இது கோர்ட்டுக்கோ, வேலைக்கோ எந்த விதத்திலும் உதவாது. வேலைக்காக அல்லது வேலை உயர்வுக்காக படிக்கிறீர்கள் என்றால்,
இதனை படிப்பதை தயவு செய்து தவிர்க்கவும். BGL-க்கு பெரும்பாலும் நல்ல வேலை கிடைக்காது

வேலை வாய்ப்புகள்

1 . வழக்கறிஞர் ஆக Practise செய்வது:

BL முடித்தவர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் கோர்ட் சென்று Practise செய்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா? இருப்பினும் BL முடித்து அதிக அளவு சதவீதத்தினர் ( 40 to 50% ) வழக்கறிஞர் தொழில் செய்கிறார்கள் என்ற அளவில் இதனை முதலில் பார்ப்போம்.

பெரும்பாலும் முதலில் யாரேனும் ஒரு வழக்கறிஞரிடம் ஜூனியராக பணி புரிய வேண்டும். இது அந்தந்த ஊருக்கு ஏற்ப டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என மாறுகிறது. டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட்டில் பெரும்பாலான ஜூனியர் வழக்கறிஞர்கள் குறைவான சம்பளமே வாங்குகின்றனர். சில ஆண்டுகள் இப்படி கஷ்ட ஜீவனம் தான். பின் தனக்குள்ள தொடர்புகளை வைத்து சுமாராக ஐந்து ஆண்டுகளில் தனியாக Practise செய்யலாம்.

நாங்கள் படித்த காலத்திலேயே " சீக்கிரம் நிறைய கேஸ் வரணும்னா தந்தை வக்கீலா இருக்கணும் இல்லாட்டி மாமனார் வக்கீலா இருக்கணும்" என்பார்கள். இது ஓரளவுக்கு உண்மை தான். முதல் தலை முறை வக்கீல்கள் தனியே சம்பாதிக்க நிறைய ஆண்டுகள் தேவை படுகிறது.

2. பெரிய Law firm களில் இணைந்து பணியாற்றுவது:

இந்தியாவில் பல சிறப்பான Law firm-கள் உள்ளன. உதாரணத்துக்கு சில: AZB & Partners, Kochar & Co, Amarchand Mangal Das. சென்னையிலேயே Fox Mandal & Associates, King & Partridege போன்றவை..

இந்த Law firm-களில் ஜூனியராக அல்லது employee ஆக சேர்ந்தால் துவக்கதிலேயே ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கும். மேலும் போக போக, நாம் செய்யும் வேலைக்கு Percentage அடிப்படையில் பணம் தருகின்றனர். இதன் மூலம் சில வருடங்களிலேயே மாதம் லட்ச ருபாய் சம்பாதிக்கும் வக்கீல்கள் பலர் உள்ளனர்.

நல்ல Law firm-ல் நுழைய சரியான reference தேவை. அதாவது அங்கு உங்களை சேர்த்து விடும் விதமான நபரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!!

3. நிறுவனங்களில் வேலை :

இந்தியாவில் லட்சக்கணக்கான கம்பனிகள் உள்ளன. அவற்றில் பல ஆயிரக்கணக்கானவை பெரிய கம்பனிகள். இவற்றில் Law officer, Manager Legal, AGM, GM என பல்வேறு பதவிகளில் BL முடித்தவர்கள் வேலை செய்கின்றனர். துவக்க சம்பளமே ஓரளவு decent ஆக இருக்கும். போக போக நிச்சயம் சம்பளம் கூடும். ரிஸ்க் இல்லாமல் குறிப்பிட்ட வருமானம் விரும்புவோர் நிறுவனங்களில் பணி செய்யலாம்.

மேலும் தற்போது Legal Process Outsourcing என்கிற தொழிலும் அதிகரித்து வருகிறது. இது பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லீகல் வேலைகள் இங்கு Outsource செய்யபடுகின்றன ( IT Outsourcing போலவே). இதனாலும் BL-க்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.

இவை தவிர BL முடித்தோர் Civil services (குறிப்பாய் IAS, IPS, etc ) என பல இடங்களில் உள்ளனர்.

ஒரு நல்ல வக்கீலுக்கு (கோர்ட்/ அலுவலக வேலை எதுவாக இருந்தாலும்) முக்கிய தேவை எழுத்தாற்றல் (Drafting skills) மற்றும் பேச்சாற்றல்.. இப்படி எழுத்து மற்றும் பேச்சில் ஈடு பாடு இருந்தால் நிச்சயம் நீங்களோ உங்களுக்கு தெரிந்தவருக்கோ இந்த படிப்பை சிபாரிசு செய்யலாம்.

இதனை ஒரு தொடர் பதிவாக ஆக்குகிறேன்.. சில விதிகள்:

1. உங்கள் படிப்பு பற்றியும் , அதற்கு எந்த கல்லூரிகள் சிறந்தவை ( சென்னை மற்றும் இந்தியாவில்) என்றும் அவசியம் குறிப்பிடவும்.

2.இந்த படிப்பிற்கு இருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து விவரமாக எழுதவும்.

3. படிப்பு மற்றும் துறையில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் தொட்டு செல்லலாம்.

4. நீங்கள் 3 - 5 பேரை தொடர அழையுங்கள். தொடர்பவர்கள் வெவ்வேறு துறை சார்ந்தவர்களாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

இந்த பதிவை எழுத சொல்லி கேட்ட வள்ளுவனுக்கு நன்றி. நீங்கள் கேட்ட கேள்விகளில் சிலவற்றுக்கு இங்கு பதில் சொல்ல வில்லை. விரும்பினால் என் EMail முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் வள்ளுவன்!! (EMail முகவரி profile-ல் உள்ளது)

நான் தொடர அழைப்போர்:

1. அதி பிரதாபன்

2. ஜெயமார்த்தாண்டன்

3. வெங்கட் நாகராஜ்

30 comments:

  1. வக்கில் தொழில் என்றால் ஒண்ணே ஒண்ணு தான் இருக்கு அது கோர்ட்ல பொய் வாதாடுவது என்பது தான் எனக்கு தெரிந்த அறிவு. இந்த பதிவை படித்த பிறகு நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன்.
    \\ BGL-க்கு பெரும்பாலும் நல்ல வேலை கிடைக்காது /
    பேரே வித்தியாசமா இருக்கு பாஸ் .

    \\" சீக்கிரம் நிறைய கேஸ் வரணும்னா தந்தை வக்கீலா இருக்கணும் இல்லாட்டி மாமனார் வக்கீலா இருக்கணும்" //

    உங்களுக்கு எப்படி பாஸ் !!!

    ReplyDelete
  2. திருத்தி கொள்ளவும் பாஸ்.
    பொய் அல்ல போய்

    ReplyDelete
  3. நல்ல வழிகாட்டல். என் அப்பாவே ஒரு வக்கீல்தான். ஆனாலும் அவரின் பிள்ளைகள் நாங்கள் ஆறு பேரும் வெவ்வேறு துறைகளில் பணிபுரிய வேண்டியதாய்ப் போயிற்று. அருமையான பதிவு மோகன். வாழ்த்துகள்.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  4. மிகவும் உபயோகமான பதிவு.

    அப்துல்லா.MBA.,LLB., :)

    ReplyDelete
  5. நல்லதொரு தொடர் பதிவு.
    அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும். வாழ்த்துக்கள் ஜி.:))

    ReplyDelete
  6. ச‌ட்ட‌ம் ப‌யில‌ விரும்புவோருக்கு, ஒரு ஹெல்ப் கைட் போல‌ அமைந்திருக்கிற‌து இந்த‌ ப‌திவு

    ஜுன் மாத‌த்தில் இதையே மீள் ப‌திவிடுங்க‌ள், +2 மாண‌வ‌ர்க‌ளுக்கு உப‌யோக‌மாக‌ இருக்கும்

    என‌க்கு மிக‌வும் பிடித்த‌, ச‌ட்ட‌ம் ப‌யின்ற‌ இருவ‌ர், க‌ணேஷ்-வ‌ச‌ந்த்..:)))

    ReplyDelete
  7. ஹைதராபாத்தில் இருக்கும் நல்சார் தான் லா படிக்க நல்ல காலேஜ் என்று என் உறவினர்கள் குழந்தைகள் அங்கே படிக்கிறாங்க மோகன்

    ReplyDelete
  8. நல்ல பதிவு சார்.

    திறந்தநிலைக்கல்வியில் பட்டம் வாங்கியவர்கள் சட்டம் பயினறது செல்லாது என்று பார் கவுன்சில் அறிவித்ததே... அது என்னாயிற்று சார்...

    என் உறவினர் ஒருவர் இந்தமுறையில் படிக்க விரும்பினார்.இப்போது என்ன செய்வது என்று விழிக்கிறார்.

    மாலை நேர சட்டக்கல்வி தமிழ்நாட்டில் படிக்க இயலுமா...

    உதவுங்கள் சார்.

    ReplyDelete
  9. யூத்புல் விகடன் 'குட் ப்ளாக்' வாழ்த்துக்கள்.:))

    ReplyDelete
  10. ரொம்ப நல்ல பதிவு மோகன் சார்.

    ReplyDelete
  11. very nice and usful in young lawyers.thanks to tamilish

    ReplyDelete
  12. வக்கீல் வேலைக்கு நல்லா வக்காலத்து, இந்த பதிவு. பதிவில் தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  13. நல்ல பதிவு.

    ReplyDelete
  14. நல்ல முயற்சி. இன்னும் ஓரிரு மாதங்கள் கழித்து எழுதினால் +2 முடிக்கும் மாணவர்களுக்கு/அவர்களின் பெற்றோர்களுக்கு உடனடி உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  15. நன்றி சங்கவி
    ---------
    நன்றி ரோமியோ .. நீங்க சரியா தான் சொல்லயுக்கீங்க; மாத்தணுமா என்ன? :))
    ---------
    ராகவன் சார்: நன்றி. உங்க தந்தை வக்கீல் எனபது அறிந்து மகிழ்ச்சி
    ---------
    அட அப்துல்லா .. நீங்க LLB-ஆ? இப்ப தான் தெரிஞ்சுது!!

    ReplyDelete
  16. நன்றி ஷங்கர். யூத் விகடன் மேட்டரும் தாங்கள் சொல்லியே தெரிந்தது. நன்றிகள் பல

    நன்றி ரகு. நீங்க சொன்னது நல்ல யோசனை. ஜூன் மாதத்தில் மீண்டும் வெளியிடுகிறேன்.

    தேனம்மை மேடம்: நன்றி நேரமின்மை காரணமாக சில கல்லூரிகள் மட்டும் தான் குறிப்பிட முடிந்தது.

    கண்ணகி: மாலை நேர சட்ட கல்வி தற்போது தமிழகத்தில் இல்லை. நீங்கள் கேட்ட இன்னொரு கேள்விக்கு விடை எனக்கு தெரிய வில்லை. மன்னிக்க

    ReplyDelete
  17. ராதாக்ருஷ்ணன் ஐயா, வித்யா, சரவணா குமார், சித்ரா, வரதன், ஆதி மனிதன் அனைவருக்கும் நன்றிகள் பல

    ReplyDelete
  18. விவரமான பதிவு மோகன். வாழ்த்துக்கள்.

    என்னை தொடர அழைத்தமைக்கு நன்றி.

    விரைவில் என் பதிவை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  19. பயனுள்ள பதிவு.
    நன்றி!

    ReplyDelete
  20. உருப்படியானதொரு பதிவு மோகன்.

    ReplyDelete
  21. நல்ல பதிவு, உங்கள் அனுமதியில்லாமல் ulavu.com-ல் சேர்த்துவிட்டேன். மன்னிக்கவும்.

    //ஒரு நல்ல வக்கீலுக்கு (கோர்ட்/ அலுவலக வேலை எதுவாக இருந்தாலும்) முக்கிய தேவை எழுத்தாற்றல் (Drafting skills) மற்றும் பேச்சாற்றல்..//

    மக்கள் வேறு எதையெல்லாமோ வக்கீல் படிப்புக்கு தகுதியாக நினத்துக் கொண்டுள்ளார்கள்..! இனியாவது திருந்துவார்களா..?

    எனது மகனும் வக்கிலுக்கு படிக்கிறான் என்று என்னால், இனி பெருமையாகச் சொல்ல முடியும்.

    தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு கிடையாது.

    B.A.,B.L.(Hons), SOEL - SCHOOL OF EXCELLENCE IN LAW, CHENNAI-28. குறித்து சேர்க்க மறந்தது ஏனோ?
    .

    ReplyDelete
  22. மே மாதத்தில் மீண்டும் ஒருமுறை பதிவு செய்திடவும்...!

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. இருமுறை பதிவாகிவிட்டது அதனால் ஒன்றை நீக்கிவிட்டேன்..மன்னிப்பு முதலிலேக் கேட்டுவிட்டதால்.. இப்போது SORRY கேட்கிறேன்....!

    ReplyDelete
  25. நல்ல பதிவு .. நன்றி.
    தொடரப்போகிறவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  26. நன்றி சார். காலதாமதமாக படிப்பதால் காலம் கடந்த நன்றி. என்னுடைய கேள்விகளுக்கு தகுந்த முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள், என்னுடைய நோக்கம் வக்கீல் படிப்பு குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்பதே, எனவே தங்களைப்போன்ற சிறந்த பதிவர்கள் எழுதினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீங்கள் ஒரு வழக்கறிஞர் என்பது கூடுதல் தகுதியாக நான் நினைத்தேன். அது மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது, யூத் விகடனில் குட் ப்ளாக்-ல் இடம் பிடித்துள்ளது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. இந்த பதிவிற்கு வந்த பின்னூட்டத்தைப் பார்க்கும் போது
    நான் நினைத்தது சரிதான் என்றே தோன்றுகிறது.

    //B.A.,B.L.(Hons), SOEL - SCHOOL OF EXCELLENCE IN LAW, CHENNAI-28. குறித்து சேர்க்க மறந்தது ஏனோ?//

    அமைதி அப்பாவின் கேள்விக்கு பதிலோடு இதன் தொடர் பதிவை எதிர் பார்க்கிறேன். நிச்சயம் உங்கள் பதிவு புதிய வழக்கறிஞர் சமுதாயத்தை உருவாக்கும் என்றால் அது மிகையாகாது...!

    ReplyDelete
  27. nice and useful post, if time permits please write about LLB & BGL also.

    ReplyDelete
  28. naan B.Com 42% petru irrukiren enkku LLB admission general category kidaikkuma endru theriya paduthutaum.

    ReplyDelete
  29. வக்கீல் தொழில் விபச்சாரத்தைப் போன்றது - 1909 இல் தாத்தா மகாத்மா காந்தி
    வக்கீல் = ஆண் தாசிகள் - 1931 இல் பகுத்தறிவு தந்தை பெரியார்
    வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! - 2010 இல் யான் வாரணட் பாலா

    ReplyDelete
  30. முத்துப்பாண்டி இந்த நிலையில்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...