இந்த வாரம் முழுதும் சூப்பர் சிங்கர் ஜூனியரில் வாலண்டைன்ஸ் டே கொண்டாடினார்கள். இதில் காதலித்து மணமுடித்த சிலரை கூப்பிட்டு, குட்டி பசங்க முன் அவர்கள் பொன் மொழிகளை உதிர்த்தார்கள். சாருலதா மணி என்ற பாடகியும் அவர் கணவரும் அத்தனை குட்டி பசங்க முன் கட்டி பிடித்து முத்தம் குடுத்து.. ச்சே!! பசங்களுக்கு என்னென்ன கத்து குடுக்கிறது!! நான் காதலுக்கு எதிரி அல்ல.. ஆனால் எந்த வயதில் எதை செய்யணும் என்ற வரை முறை தெரியாமல் ஆடணுமா? ஆணோ பெண்ணோ 12 -13 வயதில் வயதுக்கு வந்து விடுவதால் உடனே பிள்ளை பெத்துக்க முடியுமா? அது போல் காதலும் வர வேண்டிய வயதில் வந்தால் போதும். ஏற்கனவே சின்ன பசங்களுக்கு மீடியாவில் உள்ள பல சேனல்கள் காமம் பற்றி சொல்லி தர, குழந்தைகள் நிகழ்ச்சியில் இப்படி செய்தது மனசுக்கு கஷ்டமாக இருந்தது!
பிடித்த விளம்பரம்
Airtel -க்கான விளம்பரம். Holidays -ல் செல்லும் குட்டி பையன் தன் அப்பாவின் டெலிபோன் எண்ணை நண்பர்கள் அனைவருக்கும் தரும் காட்சி.. அந்த குட்டி பையன் செம cute. நம்ம வீட்டுல உள்ள மாதிரி, விளம்பரத்தில் அப்பா ஏதும் பேசாமல் சும்மா பார்க்க மட்டும் செய்ய, அம்மாதான் பேசுவாங்க. நாக்கை ஓரமாக துருத்தி கொண்டு குட்டி பையன் குறும்பாய் ஒரு பார்வை பார்ப்பான். So nice ! பல முறை போடப்பட்டாலும் எங்கள் வீட்டில் அனைவரும் ஒரு புன்னகையோடு இந்த விளம்பரம் பார்ப்போம் !!
கொல்கத்தா - பஸ் விபத்தும், கிரிக்கட் வெற்றியும்
கொல்கத்தாவில் இந்தியா டெஸ்டில் வெற்றி பெற்ற அதே வியாழன் அன்று, மேற்கு வங்காளத்தில் ஒரு பஸ் விபத்தில் 30 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். முதல் செய்தி மகிழ்ச்சி என்றால் அடுத்த செய்தி துயரம். தமிழகத்திலேயே கூட ஆண்டுக்கு ஆண்டு சாலை விபத்துகள் பெருகி கொண்டே போவதாக தான் நேற்று படித்த செய்தி கூட செல்கிறது. பாத்து வண்டி ஓட்டுங்க நண்பர்களே..
வாரம் ஒரு சட்ட சொல் Accused Vs Convict
Accused என்றால் ஒரு Criminal வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.
Convict எனில் நீதி மன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனை பெறப்பட்டவர்.
பட்ட பகலில் ஒரு கொலை செய்தவர் ஆனாலும் கூட, நீதி மன்றத்தால் தீர்ப்பு வழங்க படும் வரையில் அவர் Accused தான். அவரை Convict என்று சொல்ல முடியாது.
நன்றி நண்பர்களே
நமது ப்ளாகின் Followers எண்ணிக்கை நூறை தாண்டியிருக்கிறது. இது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. ஒரு வருடத்துக்கு முன்பே இந்த வலை பதிவு துவங்கினாலும், அடுத்த பத்து மாதங்களில் பத்து பதிவுகள் தான் எழுதினேன். நவம்பர் 2009-ல் தமிழ் மணம் மற்றும் தமிளிஷில் இணைத்த பின் தான் நிறைய பேர் படிக்கவும் பின்னூட்டம் இடவும் துவங்கினர். கிட்டதட்ட நூறு நாள்களில் நூறு பேர் Followers ஆகியிருக்கிறார்கள் என்றால் அது ஆச்சரியமாக தான் உள்ளது. என்னை பொறுத்த வரை ஒரு விஷயம் பிடித்தால் கட்டாயம் உடனே சொல்வேன். (பிடிக்கா விட்டால் அதே சூட்டில் சொல்வேனா என்றால் பல நேரம் இல்லை). ஒவ்வொரு மனிதனும் பாராட்டு மற்றும் recognition -க்கு ஏங்கவே செய்கிறான்.. இந்த ப்ளாகை தொடரும் அந்த 105 நண்பர்களுக்கும் பின்னோட்டம் இடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல !!
சென்னை ஸ்பெஷல்
தி, நகர் வெங்கட் நாராயணா ரோடில் " திருப்பதி திருமலா தேவஸ்தானம்" சென்றுள்ளீர்களா? திருப்பதி போக முடியாதவர்கள் இங்கு சென்று வரலாம்!! பெருமாள் பெரிய அளவில் அழகாக காட்சி தருவார். ஒரு அருமையான கோவில். சனி கிழமைகளில் கூட்டம் எக்கசக்கம்!! இங்கிருந்து திருப்பதி தரிசனத்துக்கு கூட செய்யும் வசதி இருந்தது. தற்போது உள்ளதா தெரிய வில்லை. போலவே முன்பு ஒரிஜினல் திருப்பதி லட்டு இங்கேயே கிடைத்தது. அதுவும் தற்போது உள்ளதா என தெரியலை. யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் எழுதுங்கள்..
அய்யா சாமி
அய்யா சாமி வீட்டில் பெரும்பாலும் அவர் தான் பால் காய்ச்சுவார். பாலை அடுப்பில் வச்சிட்டு பக்கத்திலேயேவாங்க அவ்ளோ நேரம் நிக்க முடியும்? அவரும் முடிஞ்ச வரை அங்கேயே தான் இருப்பார். இருந்தாலும் அவர் கொஞ்சம் நகரும் போது தான் பால் பொங்கி ஊத்தும்.. வாரத்தில் ஒரு சில நாளாவது இப்படி பால் காய்ச்சிறார் நம்மாளு.. அப்புறம்??? அவர் காய்ச்சப்படுவார்....
என்ன சார் இது. முத்தம்னா காதல்தானா? கத்துக் கொடுக்கணும்சார். முத்தம்னா என்னன்னு. அது எத்தனை வகை. எது அன்பு முத்தம். எது மரியாதை முத்தம். எது காதல் முத்தம்னு கத்துக் கொடுக்கணும்சார். இல்லாம டி.வி.ல யாரோ நடிகனும் நடிகையும் முத்தம் கொடுத்து கோண்டிண்டு ஓடுறத பார்க்கிரப்போ இது என்னமோன்னு புரிதல் இல்லாம பண்ணத் தோன்றும். :). ஹக் பண்றது ஹெல்தின்னு ஏன் தெரியல நமக்கு?
ReplyDelete105 பேருக்கும் மற்றும் வருகிற எல்லோருக்கும் ஒழுங்கா பால்காய்ச்சிக் கொடுங்கள்:)! வாழ்த்துக்கள்!
ReplyDelete//திருப்பதி தரிசனத்துக்கு கூட செய்யும் வசதி இருந்தது. தற்போது உள்ளதா தெரிய வில்லை. போலவே முன்பு ஒரிஜினல் திருப்பதி லட்டு இங்கேயே கிடைத்தது. அதுவும் தற்போது உள்ளதா என தெரியலை//
ReplyDeleteதரிசனத்துக்கு ஏற்பாடு செய்யும் வசதி இப்போதும் உள்ளது. ஆனால் லட்டு கிடைப்பதில்லை.
நிறைய விஷயங்களுடன் நல்லதொரு பதிவை படித்த திருப்தி.
ரேகா ராகவன்.
This comment has been removed by the author.
ReplyDeleteவிளம்பரம் - என்னையும் கவர்ந்த விளம்பரம்
ReplyDelete100-க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை பெற்றதற்கும் விரைவில் டபுள் செஞ்சுரி பெறவும் வாழ்த்துக்கள்.
திருப்பதி - பாண்டிச்சேரியில் மாதத்தின் முதல் ஞாயிறுதான் லட்டு விற்பனை செய்வார்கள்.சென்னையிலும் அதே போல் இருக்கலாம். வரும் 07.03.2010 அன்று சென்று பாருங்கள். கிடைக்கலாம்.
//வாரத்தில் ஒரு சில நாளாவது இப்படி பால் காய்ச்சிறார் நம்மாளு.. //
:)
//அப்புறம்??? அவர் காய்ச்சப்படுவார்....//
:((
வானம்பாடிகள் ஐயா
ReplyDeleteரேகா ராகவன சார்
ராமலக்ஷ்மி
அறிவன்
வரதராஜலு ..
அனைவருக்கும் நன்றிகள் பல.
அறிவன்: ஒவ்வொருவருக்கும் கருத்து வேறுபடும். அதற்காக வானம்பாடிகள் ஐயா போன்ற பெரியவரை நாம் embarass செய்ய கூடாது. இருவரும் என்னை தவறாக என்ன வேண்டாம். முடிந்த வரை I want to stay out of controversy.
வானவில்லே.. வானவில்லே.. வந்ததென்ன இப்போது.. ;)
ReplyDeleteரொம்ப நல்லவங்க பட்டியல்ல நானும் இருக்கேன் இப்போ... (Me the 106th)
;)
வானவில் அருமை...
ReplyDeleteஅறிவன்#11802717200764379909 said...
ReplyDelete/நண்பர் வானம்பாடி,
உங்கள் மனைவி அல்லது -வயது வந்த-மகளை அவர்களது அல்லது உங்கள் ஆண் தோழர்கள் ஹெல்தி'யாக ஹக் பண்ணுவதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?
சாரி,மிக நேரடியான கேள்விக்கு !/
ஹக் என்றால் என்ன என்ற புரிதல் இருக்கிறதா உங்களுக்கு. இருக்குமென்றால் இந்தக் கேள்வி வராது. நீங்கள் புரிந்து வைத்திருக்கிற அல்லது நீங்கள் எந்தக் கோணத்தில் கேட்கிறீர்களோ அதில் நான் ஒத்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்களுக்கே தெரியும் . அது எந்த மாதிரியான ஹக் என்று. அதற்கான பிரதிபலிப்பும் இருக்கும். சுற்றி வளைக்கிறேன் என நினைக்க வேண்டாம்.
ஒரு வேளை கருத்துக்காக அது சரியா எனக் கேட்கிறீர்களேயானால் சரி என்பேன். எனக்கு இதில் தயக்கமில்லை.
இதைத்தான் குட்டச் பேட் டச் சொல்லிக் கொடுக்கிறது.:)
ReplyDeleteஅருமையான வானவில்.
ReplyDeleteகுருதிப்புனல் படத்தில் தலைவர் சொல்வதைப் போல குழந்தைகளுக்கு நல்ல வகையில் புரிய வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை. இல்லையென்றால் சமுதாயம் செய்துவிடும்.
100க்கு வாழ்த்துக்கள் மோகன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//என்னை பொறுத்த வரை ஒரு விஷயம் பிடித்தால் கட்டாயம் உடனே சொல்வேன். (பிடிக்கா விட்டால் அதே சூட்டில் சொல்வேனா என்றால் பல நேரம் இல்லை). //
ReplyDeleteஇது நீங்க என்கிட்ட முதன்முறை பேசும்போதே சொன்ன விஷயம்தான்..:))
இந்த வார சட்ட சொல் அருமை..:)
எல்லாவற்றிற்கும் வாழ்த்துகள்..:))
டிஸ்கி: இது உங்களுக்கான பின்னூட்டம் மட்டுமே.:)
//இந்த வாரம் முழுதும் சூப்பர் சிங்கர் ஜூனியரில் வாலண்டைன்ஸ் டே கொண்டாடினார்கள்.//
ReplyDeleteநான் காமெடி சானல் தவிர வேறு நிகழ்ச்சிகள் பார்பதற்கு எங்கள் வீட்டில் யாரையும் (பொதுவாக) அனுமதிப்பதில்லை. அன்று (Feb-14) அதற்கும் வந்தது வினை. எல்லா சானல்களிலும் "காதல் நகைச்சுவை" என்று ஒரே "கரும நகைச்சுவை" ஆக்கிவிட்டார்கள். மேலை நாடுகள் போல் எப்போது நம்மூரிலும் ரேட்டிங் சிஸ்டம் கொண்டுவர போகிறார்களோ.
//மேற்கத்திய உலகத்தில் தழுவலும் முத்தமும் மிக சாதாரணமானவை.//
ReplyDeleteஅங்கும் எல்லா "ஹக்கும்" ஒரே மாதிரியானவை அல்ல. மரியாதை நிமித்தம், பிரியாவிடை, நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கும் போது மற்றும் அன்பு காதல் என்று ஏகப்பட்ட வகைகள். இந்திய கலாசாரத்தில் அது எப்படி பட்டவையாக இருந்தாலும் "ஹக்கை" வேறு மாதிரியாகத்தான் எடுத்துக் கொள்வார்கள்.
அது மீன், கரி சாப்பிடுபவர்கள் மாடு, பன்றி கறியை "உவ்வே" சொல்வது போலவும் சைவமாக இருப்பவர்கள் அசைவம் சாப்பிடுபவர்களை பார்த்து "உவ்வே" சொல்வது போல்தான்.
ஆகா!
ReplyDeleteவாழ்த்துக்கள் மோகன்.
நானும் சேர்ந்துக்கிறேன்..கொஞ்சம் லேட்டுதான் :))
ReplyDeleteசாருலதா மணி என்ற பாடகியும் அவர் கணவரும் அத்தனை குட்டி பசங்க முன் கட்டி பிடித்து முத்தம் குடுத்து.. ச்சே!!//
ReplyDeleteகுழந்தைகள் நிகழ்ச்சியில் இப்படி செய்தது மனசுக்கு கஷ்டமாக இருந்தது!//
பாத்து வண்டி ஓட்டுங்க நண்பர்களே..//
இந்த மாதிரியான சமூக அக்கறைதான் உங்களை இந்த உயரத்திற்கு அழைத்துச் சென்றிருப்பதாக நான் கருதுகிறேன்.
தொடரட்டும் உங்கள் பணி/பாணி.
100-க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை பெற்றதற்கு வாழ்த்துக்கள். மேலும் "தொடர்" வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅந்த விளம்பரம் எனக்கும் பிடிக்கும்...வானம்பாடிகள் ஐயா சொன்னது போல் கற்று கொடுக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அந்தந்த வயது வரும் வேலையில்...
ReplyDeleteவாங்க மணிகண்டன்.. நீங்க வந்த நாளில் கூடவே 4 நண்பர்கள் சேர்ந்து 110 ஆகிடுச்சு. கவுண்ட மணி மாதிரி சொல்லனும்னா ஐ யாம் வெரி ஹாப்பி.
ReplyDeleteநன்றி பிரதாப். என்ன கொஞ்ச நாளா கமல் படம்???
வானம்பாடிகள் ஐயா & அறிவன் :: புலவர்களே.. பதிவர்களுக்குள் விவாதம் தேவை தான்; ஆனால் அது சச்சரவாய் மாறி விட கூடாது. (ஆமா பெரிய திருவிளையாடல் பாண்டிய மன்னன்னு நினைப்பு). இந்த பிரச்னையை இதோடு விட்டுடலாமே??
நன்றி ஷங்கர்; ரொம்ப ஜாக்கிரதையா " நான் சொன்னது உங்க பதிவு பத்தி" என்றதை ரசித்தேன் :))
ReplyDeleteநன்றி செந்தில் வேலன். நீங்கள் சொன்னதுடன் உடன் படுகிறேன்.
வாங்க உலகநாதன் சார்; ரொம்ப மகிழ்ச்சி
நன்றி ஆதி மனிதன். யப்பா..என்னென்னே சேனல் பார்ப்பது என ரொம்ப மட்டுபடுத்தும் அளவு வீட்டில் நீங்க பல சாலியா? சொல்லவே இல்ல?
வாங்க கார்க்கி; தங்கள் கம்மேண்டுக்கும் ப்ளாகை தொடர்வதற்கும் ரொம்ப சந்தோசம்..
ReplyDeleteநன்றி ராஜா ராம்
அமைதி அப்பா: போங்க சார் நீங்க ரொம்ப புகழ்றீங்க; கூச்சமா இருக்கு
நன்றி சித்ரா & புலி கேசி
மோகன் வாழ்த்துக்கள். 100 ஐ தாண்டி தொடர்வர் பெற்றதற்கு வாழ்த்துக்கள். உங்கள் எழுத்தில் இருக்கும் வசீகரம்தான் பதிவர்களை இழுக்கிறது, அங்கீகாரம் என்பது எல்லோருக்கும் ஒரு ஏக்கம்தான்!!!... நாங்களும் மெல்ல நடை போட்டு வந்துக்கிட்டு இருக்கோம்:-) வானவில் தொடரவும் வாழ்த்துக்கள்...
ReplyDelete//ஆமா பெரிய திருவிளையாடல் பாண்டிய மன்னன்னு நினைப்பு//
ReplyDeleteஉமக்கு ரீமா சென் ரெம்ப பிடிக்கும் என்பதை நாசூக்காக சொல்லிட்டீங்க. :))
வாழ்த்துக்கள், இன்னம் கொஞ்சம் சில சட்ட நுணுக்கங்களை (கார்ப்ரேட் லா) அவ்வப்போது தொழில் நுட்பம் சார்ந்த பதிவா வெளியிட்டா நாங்களும் பயன்பெறுவோம். :)
நான் சென்னையில் இவ்ளோ நாள் இருந்தும் தி, நகர் வெங்கட் நாராயணா ரோடில் " திருப்பதி திருமலா தேவஸ்தானம்"
ReplyDeleteகோவிலுக்கு போனதில்லை.....காரணம் கூட்டமும்
அப்புறம் பார்க்கிங் பிரச்சனை தான்.....
நூறு பாலோயர்ஸுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete//இதில் புரிதல் சித்தாந்தம் எல்லாம் ஒன்றும் இல்லை;மேற்கத்திய உலகத்தில் தழுவலும் முத்தமும் மிக சாதாரணமானவை.//
அறிவன், மேற்கத்திய நாடுகளிலும் ஹக் ஒரேமாதிரியானவை அல்ல. பிறந்த நாள் வாழ்த்து சொல்லி கொடுக்கும் தழுவலுக்கும், அலுவலகத்தில் வேலை ராஜினாமா பண்ணிப்போகும் போது கொடுக்கும் தழுவலுக்கும், துக்க வீட்டில் கொடுக்கும் தழுவலுக்கும், காதலன் காதலிக்கு கொடுக்கும் தழுவலுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது.
வானம்பாடிகள் ஐயா சொன்ன மாதிரி சரியான புரிதல் இருந்தால் உங்களுக்கு தவறாகத்தோன்றாது.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteமோகன் குமார்,உங்கள் பதிவில் நீங்கள் எதையும் மறுதலிக்க உரிமை உங்களுக்கு உண்டு,எனினும்,இந்தப் பொருள் பற்றி நான் ஒரு பதிவு போட்டிருக்கிறேன்..நீங்கள் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.
ReplyDeleteநன்றி காவிரி கரையோன். நீங்கள் சொன்னது நிறைய மகிழ்ச்சி தருகிறது.
ReplyDelete******
அம்பி: ம்ம்.. குசும்பு :))
******
நன்றி ஜெட் லி; ஒரு முறை போய் பாருங்கள்.
******
சின்ன அம்மணி;Commentக்கு நன்றி
******
அறிவன்: நன்றி