*******************************************
எழுத்தாளர் சுஜாதா எழுத்தை என் அண்ணன்கள் மூலம் எட்டு வயதில் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க, வாசிக்க விருப்பமும் ஆச்சரியமும் கூடி கொண்டே தான் போனது. ஒவ்வொரு காலத்திலும் பால குமாரன், பிரபஞ்சன், தி.ஜா என favourite எழுத்தாளர்கள் மாறி கொண்டே இருந்தனர். ஆனால் சுஜாதா இறக்கும் வரை அவர் எழுதிய எதுவும் அலுக்கவே இல்லை.
சுஜாதா ஒரு முறை சொன்னார்: " நான் துணிகளை லாண்டரிக்கு போட்டு, அதன் விபரம் சீட்டில் எழுதி வைத்திருந்தால், அதை கூட எடுத்து சென்று பிரசுரம் செய்து விடுவார்கள்" என்று. உண்மை தான். இந்த மனுஷன் அந்த விவரத்தை கூட சுவாரஸ்யமாக தான் எழுதி வைத்திருப்பார் !!
வாழ் நாளில் நான் நேரில் பார்க்க விரும்பிய ஒரே பிரபலம் சுஜாதா தான்!! அவருடனான எனது சில அனுபவங்கள் குறித்து இந்த பதிவு அவரது நினைவு நாளை முன்னிட்டு...
நான் சட்ட கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது கல்கியில் மத்யமர் என்ற சிறுகதை வரிசை வந்து கொண்டிருந்தது. அதில் பல controversy ஆன கதைகள்.. இவை பற்றி பிரசுரமாகும் விமர்சனங்களுக்கு சுஜாதா கையெழுத்திட்ட மத்யமர் புத்தகம் அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தனர். சுஜாதா கையெழுத்திட்ட புத்தகம் வாங்கவே விமர்சனம் எழுதினேன். பிரசுரமும் ஆனது. புத்தகம் வந்த பின், சுஜாதாவிற்கு நன்றி சொல்லி இரு பக்க கடிதம் எழுதினேன்.
சுஜாதா பதில் எழுத மாட்டார் என்பது பொதுவாய் அனைவரும் அறிந்தது. ஆனால் நம்ப முடியாமல் சில நாளில் பதில் வந்தது.
அன்புள்ள மோகன் குமார்,
உங்கள் கடிதம்; வாசகர்களுக்கு பெரும்பாலும் நான் கடிதம் எழுதுவதில்லை; ஆனால் அதற்கான காரணங்களை ஒத்தி வைத்து விட்டு, உங்களுக்கு பதில் எழுத தூண்டியது உங்கள் கடிதத்தில் விரவியிருந்த ஸ்நேகம். நன்றாக படித்து முன்னுக்கு வந்து பெரிய லாயர் ஆனதும் மறுபடி எனக்கு எழுதுங்கள்
அன்புடன்
சுஜாதா
இந்த கடிதத்தை எத்தனை முறை வாசித்திருப்பேன்!! சில வரிகளில் பல விஷயம் உணர்த்தினார் வழக்கம் போல்..
முதல் வரியை கவனித்தீர்களா? " உங்கள் கடிதம்" அவ்வளவு தான் "கிடைத்தது" இல்லை!! வார்த்தை சிக்கனம்!!
அடுத்த வரியில் யாருக்கும் எழுதாத நான் உனக்கு எழுதுறேன் என என்னை மகிழ வைத்து விட்டார்!!
கடைசி வரி தான் மிக முக்கியம்.. "நன்றாக படித்து முன்னுக்கு வந்து பெரிய லாயர் ஆனதும் .." இப்போ படிப்பது தான் உன் வேலை என எவ்வளவு அழகாய் சொல்லிட்டார்! இது என ஆதர்சம் மூலம் வந்ததால், நான் சீரியாசாகவே எடுத்து கொண்டேன்!
ஆனால் சுஜாதா சொன்னது போல் நான் லாயர் ஆகலை.. படிக்கும் போதிலிருந்தே கம்பனிகளில் லீகல் அட்வைசர் ஆக செல்லும் எண்ணம் தான்.பின் கூடவே Company Secretary course-ம் படித்து விட்டு வேலைக்கு வந்தேன். துவக்கத்தில் இருந்த கம்பெனியிலேயே சுஜாதா ஒரு Director!!
Company Secretary-தான் Board Meeting-கள் நடத்த வேண்டும். இதற்கான நோட்டீஸ் அனுப்புவது, மீட்டிங்குகளில் எடுக்கப்படும் முடிவுகளை (Minutes) பதிவு செய்வது இவை Company Secretary வேலையில் அடங்கும். எனவே சுஜாதாவை Board Meeting-கில் அருகிலிருந்து பார்க்க போகிறேன் என ஆர்வமாக இருந்தேன். ஆனால் நான் வேலை பார்த்த கம்பனிகளில், இந்த ஒரு கம்பனியில் மட்டும் தான் Company Secretary-ஐ வெளியே வைத்து விட்டு Board meeting நடத்துவார்கள்!! நான் இல்லாத மீட்டிங்கில் என்ன நடந்தது என நான் வெளியே இருந்து Minutes எழுத வேண்டும்!!
இந்த காலங்களில் அவருடன் Board meeting குறித்து போனில் பேசியிருக்கிறேன். அவர் எங்கள் கம்பெனி வந்து, நேரே மீட்டிங் ரூம் செல்வதை பார்த்துள்ளேன். அவ்வளவு தான்.
இதே காலத்தில் நண்பன் லக்ஷ்மணன் இறந்த பின் அவனது கவிதைகளை தொகுத்து புத்தகமாக போடும் முயற்சியில் நண்பர்கள் இறங்கினோம். ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்தோம். நான் புத்தகதிற்கான முன்னுரை, அட்டை படம் போன்றவை பிரபல எழுத்தாளர்/ ஓவியர்களிடம் வாங்கும் வேலையில் இருந்தேன்.
முன்னுரைக்கு கல்யாண்ஜியை அணுகி இருந்தோம். அவரும் எழுதி தந்திருந்தார். இந்நிலையில் சுஜாதா இருக்கும் அதே flat-ல் இருந்த வெங்கடேஷ் என்ற எனது Colleague, அவரிடம் நாங்கள் நண்பன் இறந்த பிறகு அவனது கவிதைகளை தொகுத்து வெளியிடுவது பற்றி கூறியிருக்கிறார். சுஜாதா மிக ஆர்வமாகி "அந்த கவிதைகளை வாங்கி வாருங்கள்; படிக்கணும்" என கூறியிருக்கிறார். வெங்கடேஷ் மூலம் லக்ஷ்மணன் கவிதைகள் சுஜாதாவை அடைந்தன. சுஜாதா சும்மா படிக்க தான் கேட்கிறார் என நினைத்திருக்க, அவரோ அற்புதமாக இரு பக்கம் கவிதைகள் பற்றி எழுதி அனுப்பி விட்டார். ஒரு பக்கம் அதை படித்து மகிழ்ச்சி. மறு பக்கம் கல்யாண்ஜியிடம் வேறு வாங்கி உள்ளோமே என குழப்பம். கல்யாண்ஜி தந்ததை முன்னுரையாக போட்டு விட்டு சுஜாதா தந்ததை கடைசியில் வெளியிட்டோம்.
கல்யாண்ஜிக்கு அப்போது இதில் ரொம்ப வருத்தம். "சுஜாதாவிடம் முன்னுரை வாங்குவதானால் என்னிடம் ஏன் வாங்கணும்?" என கோபித்தார். "சுஜாதாவிடம் நாங்களாக போகலை; அவரே கேட்டு வாங்கி எழுதி தந்தார்" என்றால், அவர் நம்ப தயாராய் இல்லை. "உங்கள் எழுத்தை முன்பும் அவருடையதை பின்னரும் வெளியிட்டோம்; புத்தகம் துவக்கத்தில் நன்றியில் கூட உங்கள் பெயரை தான் முன்னர் போட்டோம்" என்ற போதும் அவருக்கு கோபம் குறையலை.
புத்தகத்தை நேரில் தந்து நன்றி சொல்ல சுஜாதா இல்லம் சென்றேன். சுஜாதாவை நேரில் சந்தித்து பேசியது ஒரே முறை அது தான். புத்தகம் வாங்கி கொண்டு, " இந்த வார குங்குமத்தில் லக்ஷ்மணன் கவிதைகள் பத்தி எழுதிருக்கேன்; படிங்க" என்றார். " சரி" என்றேன். சட்ட கல்லூரியில் படிக்கும் போது அவரிடிமிருந்து வந்த கடிதம், அவர் மீதான எனது பிரேமை எதுவும் சொல்ல தோன்ற வில்லை. இதற்கு முன் பால குமாரனை பார்த்து மனம் நொந்த பிறகு பிடித்த எழுத்தாளரை நேரில் பார்த்து பேச கூடாது என்ற எண்ணம் அதிகமாகி இருந்தது (இது பற்றி பின் தனியே எழுதுகிறேன்). என்றாலும் எதுவும் எதிர் பார்க்காமல் அவர் தந்த முன்னுரைக்கு நேரில் நன்றி சொல்வதே மரியாதை என்பதால் சென்றிருந்தேன்
எங்களுக்குள் பேசி கொள்ள ஏதுமில்லாதது போல் இருந்தது அந்த சில நிமிடங்கள்...உடன் கிளம்பி வந்து விட்டேன்.
சுஜாதா இறந்த போது இரு நாட்கள் திரும்ப திரும்ப மனதில் பல நினைவுகள். அவர் இல்லம் மாறி விட்டதா என தெரிய வில்லை. ஏனோ அவர் இறந்த பின் சென்று பார்க்க வில்லை.
**********
எத்தனையோ பேருக்கு ஒரு ரோல் மாடலாக இருந்தவர்.. எனக்கு தெரிந்து இவருக்கு இருந்த அளவு ரசிகர்கள், வேறு எந்த தமிழ் எழுத்தாளருக்கும் இருக்காது என நினைக்கிறேன்.
பதிவுலகம் பற்றி சுஜாதாவிற்கு ஏனோ அதிக விருப்பம் இல்லை. இதனாலேயே கூட அவர் இருக்கும் வரை நான் ப்ளாக் பக்கம் வரவேயில்லையோ என்னவோ!!
தொடக்கத்தில் இவர் வசனம் எழுதிய சினிமா படங்கள் தோல்வி அடைந்த போது நான் வருந்தியிருக்கிறேன். ஆனால் பின் தமிழின் "The Best" இயக்குனர்களான மணி ரத்னம் & ஷங்கர் தங்கள் அனைத்து படங்களுக்கும் இவரையே அணுகினர்.இவர்களுடன் சேர்ந்து திரை உலகையும் கலக்கினார் வாத்தியார்!
பல பெரிய விஷயங்களை மிக எளிதாக எழுதி செல்வார். ஜெய காந்தன், புதுமை பித்தன் போல அவர் மிக தீவிரமான எழுத்து எழுதியதில்லை. ஏனோ light reading தான் இவரது கோட்டையாக இருந்தது!ஆனால் ஒரு சமூகத்தையே தன் கை பிடித்து அழைத்து சென்றார். பல நல்ல கவிஞர்களை, எழுத்தாளர்களை அறிமுகபடுத்தினார்!
தமிழின் மீது எத்தனையோ பேருக்கு ஆர்வம் வர காரணமாக இருந்தது சுஜாதாவின் எழுத்துக்கள்!
சுஜாதா.. வாழ்க நீ எம்மான்!!
சுஜாதா என்ன எழுதினாலும் படிக்கும் எண்ணற்ற வாசகர்களில் ஒருவனான நான், இப்போது சுஜாதா பற்றிய செய்தி எதுவானாலும் கூட படிக்க ஆரம்பித்து விட்டேன்...
ReplyDeleteஅவர் ஒரு ஜீனியஸ் என்று சொன்னால், அந்த வார்த்தை கூட கொஞ்சம் குறைவாக தான் இருக்கும்...
அவர் அதற்கும் மேல்...
அவரின் அனைத்து எழுத்துக்களையும் என் ஆயுள் முடிவதற்குள் படித்து முடித்து விட வேண்டும் என்று வைத்திருக்கிறேன்...
தோழமைகள் அவர்களிடம் இருக்கும் சுஜாதா கலெக்ஷன்ஸ் பற்றியும், எனக்கு கொடுக்க முடியுமா என்றும் தெரிவிக்கவும்...
பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஉங்கள் பதிவை இங்கே பகிர்ந்துள்ளேன்..
எழுத்தாளர் சுஜாதாவின் நினைவலைகள்
இன்று தமிழில் எழுதும் அத்தனை பேரும் சுஜாதாவிலிருந்துதான் தொடங்கியிருப்பார்கள். நானும் அப்படியே. பிற்காலத்தில் என் வாசிப்பும் சுவை வேறு வகை எழுத்திற்கு மடை மாறினாலும்,அந்த வகை எழுத்துக்களை அறிமுகப்படுத்தியது சுஜாதாவின் எழுத்துக்கள் தான். இன்றும் கூட அவரின் பல சிறுகதைகள் என் விருப்ப பட்டியலில் இருக்கிறது. அவரது மர்ம நாவல்களில் என் விருப்பம் : நில்லுங்கள் ராஜாவே.
ReplyDelete//பிடித்த எழுத்தாளரை நேரில் பார்த்து பேச கூடாது//
ரொம்ப சரி
மிக நல்ல பகிர்வு மோகன்.நன்றி
ReplyDeleteநல்ல பகிர்வு
ReplyDeleteProbably his best contribution as narrated by one above is that he introduced without any inhibition many good writers to the mainstream readers. That was a change from the traditional Thamizhkoorunallulagam.
ReplyDeleteWhy he never attempted serious writing can only be answered by him.
At hindsight we can say he lived his conviction. Do what comes to you naturally.
Read many of the present day writers his impact cannot be missed. Though it is very difficult to copy him. Between easy reading and serious, easy sticks. Cant help it. Thank you Sujatha for giving many of us the middle class the wry smile.
நன்றி
ReplyDeleteசுஜாதா பற்றிய உங்கள் பகிர்வுக்கு
//. இதற்கு முன் பால குமாரனை பார்த்து மனம் நொந்த பிறகு பிடித்த எழுத்தாளரை நேரில் பார்த்து பேச கூடாது என்ற எண்ணம் அதிகமாகி இருந்தது (இது பற்றி பின் தனியே எழுதுகிறேன்). //
ReplyDeleteஎழுதுங்க படிச்சிடலாம்
நல்ல பகிர்வு.
ReplyDeleteநல்லா இருக்குது மிகவும் நல்லதொரு பகிர்வு
ReplyDeleteநல்லதொரு பதிவு.
ReplyDeleteநல்லா எழுதி இருக்கீங்க மோகன்...நன்றி
ReplyDeleteமிக,மிக சுவராசியமான பகிர்வு மோகன்!
ReplyDelete[[[தமிழின் மீது எத்தனையோ பேருக்கு ஆர்வம் காரணமாக இருந்தது சுஜாதாவின் எழுத்துக்கள்!]]]
ReplyDeleteசத்தியமான உண்மை..!
கோபி: நன்றி
ReplyDelete**********
கோபி: சுஜாதா ஜீனியசுக்கும் மேல் தான். வருகைக்கு நன்றி
**********
Techsankar: மிக்க நன்றி இப்பதிவை இணைத்தமைக்கு
**********
மார்த்தாண்டன் :ஆம் நீங்கள் சொன்னது பலருக்கும் பொருந்தும்
**********
நரசிம் நன்றி. அதிசயமாய் உங்கள் கமெண்ட்!!
**********
TVRசார் : நன்றி
**********
Jerji: நன்றி; ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க
**********
நன்றி தர்ஷன்
வணக்கம் பேனா மூடி; நிச்சயம் எழுதுகிறேன்.
ReplyDelete****
நன்றி ராம லக்ஷ்மி
****
வாங்க ரமேஷ் நன்றி. ரொம்ப நாள் கழிச்சு நம்ம ப்ளாக் பக்கம்
****
சுரேஷ் கண்ணன்: நன்றி தங்கள் வருகையில் மிக மகிழ்கிறேன். நீங்களும் என் ப்ளாக் படிக்கிறீர்கள் என அறியும் போது மிக மகிழ்ச்சி
****
நன்றி கண்ணன்
****
ராஜாராம் "மிக மிக" என அழுத்தி சொன்னதில் பதிவு உங்களுக்கு பிடித்திருப்பது புரிகிறது. நன்றி
****
உண்மை தமிழன் அண்ணா: ரொம்ப நன்றி;
சுரேஷ்கண்ணன் பதிவிலிருந்து இங்கே வந்தேன்.நல்ல பகிர்வு.ஆளுமை என்ற சொல் சுஜாதாவில் தான் முழுமை பெற்றிருக்க கூடும்.
ReplyDeleteWow.. Superb!
ReplyDeleteஅவர் லைட் ரீடிங் எழுதினார் என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அவர் எழுதாத விஷயம் என்ன எல்லோருக்கும்புரிகிற மாதிரி எழுதுவதுதான் சீரியஸ் ரைட்டிங் என்றால் அது மிக ப் பெரிய தவறு.
ReplyDeleteகேபிள் சஙக்ர்
சாரி எல்லோருக்கும் புரிகிற மாதிரி எழுதியதால் அவர் எழுதியது லைட் ரீடிங் என்றாகிவிட்டது. புரியாமல் கடும் தமிழில் எழுதி தமிழுக்கே டிக்ஸ்னரி வைத்து கேட்டு படிக்க வேண்டிய எழுத்துக்கள் எல்லாம் சீரியஸ் ரைட்டிங் என்று என்னால் ஒத்துக் கொள்ள் முடியாது. அவர் அறிமுகப்படுத்திதான் மனுஷ்யபுத்ரன், மீரா, குட்டி ரேவதி, போன்றோரின் கவிதைகளை படிக்க ஆரம்பித்தவன்.
ReplyDeleteஅருமையான பகிர்வு மோகன்ஜி..:) அவர் ஒரு சகாப்தம்..!
ReplyDeletegood post thanks.
ReplyDeleteare you referring to Pentamedia where he was a director.
:)
ReplyDeleteஅருமையா எழுதியிருக்கீங்க அண்ணே..!
ReplyDeleteநல்ல பகிர்வு...
ReplyDeleteஅவர் பல இளைய தலைமுறை கவிஞர்களையும், எழுத்தாளர்களை எழுத ஊக்குவித்தார்...
வாசகர்களிடம் அறிமுகமும் செய்தார்...
அருமையான பதிவு. சுஜாதா பற்றிய நினைவுகள் அருமை
ReplyDeleteமோகன் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். தொடரை தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
கிரிக்கெட் - தொடர்பதிவு ...
தமிழின் மீது எத்தனையோ பேருக்கு ஆர்வம் வர காரணமாக இருந்தது சுஜாதாவின் எழுத்துக்கள்!
ReplyDelete........ true. நினைவுகளை அருமையாக பகிர்ந்து இருக்கீங்க. நன்றி.
கொடுத்து வைத்தவர் நீங்கள். லக்ஷ்மன் கவிதைகள் படிக்க விருப்பம். சுஜாதா முன்னுரை, அல்லது அந்த குங்குமம் கவிதை அறிமுகம் பற்றி ஸ்கேன் செய்து போட்டிருக்கலாம் என்று தோன்றியது.
ReplyDeleteநன்றியுடன் ஒரு சுஜாதா ரசிகன்..
ReplyDeleteநன்றி கார்த்திகா வாசுதேவன்
ReplyDelete***********
வாங்க மணிகண்டன்.. மிக்க நன்றி
***********
கேபில்ஜி: சுஜாதாவின் சிறுகதை ஒன்று.. அதை படிக்கும் யாரும் தற்கொலை பற்றி பின் எண்ண மாட்டார்கள்.. அந்த அளவு powerful கதை. நான் எழுதியது சுஜாதா இத்தகைய நல்ல விதமான பாதிப்பு ( ) தரும் கதைகள் அதிகம் செய்ய வில்லை என்று தான். அவர் பல நல்ல கவிஞர்/ எழுத்தாளர்கள் அறிமுகபடுத்தினார் என நானும் கூட எழுதிருக்கேன். அவர் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் குரு தான்!
***********
நன்றி ஷங்கர்; சுஜாதா ஒரு சகாப்தம் தான்
***********
நன்றி ராமசாமி.
***********
ராம்ஜி; நன்றி அது பெண்டா மீடியா அல்ல.. வேறு கம்பெனி
நன்றி அசோக், ராஜு, யவன ராணி
ReplyDelete***********
நன்றி ஸ்டார்ஜன் ; கிரிக்கட் பதிவு எழுதிட்டேன். நீங்கள் பார்களை போலும்; அன்பிற்கும், அழைப்புக்கும் நன்றி
***********
வாங்க சித்ரா நன்றி
***********
ஸ்ரீ ராம்; ரொம்ப மகிழ்ச்சி; நன்றி; நீங்கள் சொன்னதை செய்ய முயல்கிறேன் ; நீங்கள் சென்னையா? லக்ஷ்மணன் புத்தகம் முகவரி தந்தால் அனுப்புகிறேன்..
***********
நன்றி புலி கேசி
உங்களுக்கு பதில் எழுத தூண்டியது உங்கள் கடிதத்தில் விரவியிருந்த ஸ்நேகம்//
ReplyDeleteஇது உங்கள் கல்லூரி பருவத்தில் ஆரம்பித்ததா அல்லது பள்ளிப் பருவத்திலா?!
*0*0*0*
நான் இல்லாத மீட்டிங்கில் என்ன நடந்தது என நான் வெளியே இருந்து Minutes எழுத வேண்டும்!!//
தனது அனுபவங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்வதில் ஒரு துணிச்சல் வேண்டும்,
அது உங்களிடம் இருக்கிறது.
*0*0*0*
பல பெரிய விஷயங்களை மிக எளிதாக எழுதி செல்வார்.//
உங்கள் பாணியும் அதுவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
கடின விசயங்களையும் எளிமையாய் கொடுத்தவர் அவர்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
அருமையான பகிர்வு .. அருகிலேயே இருந்துள்ளீர்கள் .. மிக சிறப்பு .. சுஜாதா நம் ரசனைகளோடு என்றும் தொடரும் சகாப்தம் ..
ReplyDeleteமிக அழகான உணர்ச்சிகள். உங்க கூடவே இருந்து அவரைப் பார்த்தது போலிருந்தது. அவரை ஒரு முறையாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்ற என் கனவு கனவாகவே ஆகிப் போனது.
ReplyDeleteசுஜாதா இன்னும் தமிழ் மனங்களில் வாழ்கிறார் என்பதற்கு உங்கள் பதிவே ஒரு சான்று.
ReplyDelete//இதற்கு முன் பால குமாரனை பார்த்து மனம் நொந்த பிறகு பிடித்த எழுத்தாளரை நேரில் பார்த்து பேச கூடாது என்ற எண்ணம் அதிகமாகி இருந்தது (இது பற்றி பின் தனியே எழுதுகிறேன்).//
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
உண்மை மோகன் குமார் ...சுஜாதா: வாழ்க நீ எம்மான்
ReplyDeleteநல்லாதொரு பகிர்வு மோகன்குமார்
ReplyDelete//
//இதற்கு முன் பால குமாரனை பார்த்து மனம் நொந்த பிறகு பிடித்த எழுத்தாளரை நேரில் பார்த்து பேச கூடாது என்ற எண்ணம் அதிகமாகி இருந்தது (இது பற்றி பின் தனியே எழுதுகிறேன்).//
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.//
நானும்.
அமைதி அப்பா said: //பல பெரிய விஷயங்களை மிக எளிதாக எழுதி செல்வார்.//
ReplyDeleteஉங்கள் பாணியும் அதுவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.//
சார் நீங்க சொன்னது உண்மையோ இல்லையோ , கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு
*******
அக்பர்: நன்றி. ஆம் நீங்க சொன்னது சரி; தலைவரின் சிறப்பம்சம் அது தான்..
*******
நன்றி பத்மநாபன்; அவரை சந்தித்ததே பெரிய சந்தோஷமான விஷயம் தான்
விக்னேஸ்வரி: வஞ்சனை இல்லாமல் வாழ்த்தி உள்ளீர்கள். ரொம்ப மகிழ்ச்சி. நன்றி
ReplyDelete****
நன்றி ஆதி மனிதன்.. எழுதுகிறேன்
***********
தேனம்மை மேடம்: நன்றி
***********
வரதராஜலு ஐயா : நன்றி
1980 ல் maxmuller பவனில் சுஜாதாவுடன் ஒரு நேருக்கு நேர் உரையாடல் நடந்தது. யான் அங்கு சென்றேன். கூட்டம் அலை மோதியது. ஆளுக்கு ஒரு கேள்வி எழுதி கொடுத்தோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளில் இருந்து 10 கேள்விகளை அவரே தேர்ந்து எடுத்தார். என்ன ஆச்சர்யம்! முதல் கேள்வியே என்னுடையதுதான். "எழுத்தாளர் ஏகாம்பரம் பற்றி....?" இதுதான் என்னுடைய கேள்வி. கல்யாணபரிசு "தங்கவேலுவை" அருமையாக விமர்சித்தார். மறக்க முடியுமா அந்த நாளை?
ReplyDeleteசுஜாதா.. வாழ்க நீ எம்மான்!!
ReplyDeletevalthukkal mohan sir sujatha avargalidam kadidham endra pokkisam petradharku