Tuesday, February 2, 2010

வானவில் - ஜக்கு பாயும், மரண தண்டனையும்

ஒரு கேள்வி:

பதிவர்கள் எல்லாரும் தமிழ் படம் அல்லது கோவாவுக்கு விமர்சனம் எழுதுறாங்க.. ஏங்க.. கூடவே ஜக்கு பாய்ன்னு ஒரு தத்துவ படம் வந்ததே.. அதை ஏங்க கண்டுக்க கூட இல்ல? அட பாத்துட்டு நல்லா இல்லைன்னு கூட எழுதிட்டு போங்க; இப்படி முழுக்க ignore பண்ணா என்ன அர்த்தம்? எல்லா படத்துக்கும் விமர்சனம் எழுதும் கேபிள், ஜெட் லி போன்றவர்கள் கூட கண்டுக்கலை.. நடிகர் சங்க தலைவர் மனசு எப்படி கஷ்ட படும்? அவர் வேற சூப்பர் ஹிட்டுன்னு விடாம விளம்பரம் செய்றார்....ஏதோ பாத்து செய்ங்க

சென்னை ஸ்பெஷல்

சென்னையில் பல ஏ.சி பஸ்கள் ஓடுகிறதே ! அதில் பிரயாணம் செய்துள்ளீர்களா? அட்டகாசமாய் இருக்கும் !! இருபது அல்லது முப்பது ரூபாய்க்கு குளிரூட்டப்பட்ட வண்டியில் உட்கார்ந்து கொண்டு மிக அருமையாக பயணம் செய்யலாம் ( Standing பெரும்பாலும் இருப்பதில்லை). சில வண்டிகளில் இனிமையாக பாடல் வேறு.. அவசியம் ஒரு முறை சென்று பாருங்கள் !!

வாரம் ஒரு சட்ட சொல் - இந்த வாரம் Capital Punishment

தண்டனைகளுக்கெல்லாம் ராஜா Capital punishment. மரண தண்டனையை தான் Capital punishment என்கிறது சட்டம். இந்தியாவில் தற்போது Capital punishment மிக மிக அரிதான வழக்குகளில் தான் ( சுப்ரீம் கோர்ட் வார்த்தைகளில் சொல்வதானால் “In rarest of rare cases”) கொடுக்க படுகிறது என்பதறிக....

ஹெல்த் பக்கம்

இது அதிகம் வெயிட் போடும் நபர்களுக்கு. பலரும் நொறுக்கு தீனி குறைக்குமாறும், பழங்கள் போன்றவை அதிகம் சாப்பிடுமாறும் advise சொல்லியிருப்பாங்க. ஒரு சின்ன உதாரணம் இப்போ படிச்சது சொல்றேன். ஒரு வடை அல்லது சமோசாவில் சுமார் 120 - 150 கலோரி உள்ளது. அதுவே ஒரு ஆப்பிளில் சுமார் 50 கலோரி மட்டுமே உள்ளது. கலோரி அதிகம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது தங்களுக்கு தெரிந்தே இருக்கும்; அதிகமான கலோரி நம் உடம்பில் கொழுப்பாக, அதிக எடையாக ஆகிறது. நானே ஒரு நொறுக்கு தீனி ஆசாமி தான். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பழங்கள் பக்கம் திரும்பி உள்ளேன். எனவே இதனை சொல்ல எனக்கு தகுதி உண்டு. நொறுக்கு தீனியை குறைச்சு பழங்கள் பக்கம் வாங்க...

பார்த்த சினிமா:

குட்டி படம் பார்த்தேன். முதல் பகுதி சற்று வித்யாசமாகவும் சிரிக்கும் படியும் உள்ளது. காதலர்கள் தந்தைக்கு பயந்து ஓட ஆரம்பித்த பின் படம் நொண்ட ஆரம்பித்து விட்டது. பாடல்கள் மற்றும் சண்டை வேக தடை. தனுஷின் நடிப்பில் சற்று maturity தெரிகிறது. நீங்கள் படம் இது வரை பார்க்க விட்டால் அவசரமில்லை.. இன்னும் சில வாரங்களில் நல்ல பிரின்ட் வந்ததும் CD -யாகவோ, அல்லது விரைவில் இந்திய தொலை காட்சியில் முதல் முறையாகவோ பார்க்கலாம்.

ரசித்த SMS:

ஒரு ஏழை தன் உணவை சம்பாதிக்க ஓடுகிறான்.
ஒரு பணக்காரன் தான் சாப்பிட்ட உணவு செரிக்க ஓடுகிறான்.

அய்யா சாமி

அய்யா சாமி வாழை பழம் வாங்கிட்டு போனா அவரு வீட்டுக்கார அம்மாவும் வாங்கிட்டு வந்திருக்காங்க. அய்யா சாமி பூ வாங்கிட்டு போனா அவங்களும் வாங்கிட்டு வந்திருக்காங்க. இதுக்கு மேலே "ம்க்கும் நான் வாங்கிட்டு வரும் போது தான் நீங்களும் வாங்குவீங்க" என வீட்டம்மா கிட்டே வாங்கி வேற கட்டிக்குறார்!! இதே கேள்வியை அவங்க கிட்டே கேக்குற அளவு தைரியம்...பாவம் .. அவருக்கு கிடையாது !!

33 comments:

 1. வீடு திரும்பியாச்சா?

  ReplyDelete
 2. ஜக்கு பாயும், மரண தண்டனையும்"
  - வானவில்

  சிறப்பான விமர்சனம்..:))

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. எண்ணமும்,வண்ணமும் நிறைந்த வானவில்.

  :)

  ReplyDelete
 4. //இந்தியாவில் தற்போது Capital punishment மிக மிக அரிதான வழக்குகளில் தான் ( சுப்ரீம் கோர்ட் வார்த்தைகளில் சொல்வதானால் “In rarest of rare cases”) கொடுக்க படுகிறது என்பதறிக....//

  கொடுக்கப் படுவதில் எத்தனை நிறைவேற்றப்படுகிறது என்பதையும் சொல்லி இருக்கலாம் :))

  ReplyDelete
 5. //"வானவில் - ஜக்கு பாயும், மரண தண்டனையும்"//

  //பதிவர்கள் எல்லாரும் தமிழ் படம் அல்லது கோவாவுக்கு விமர்சனம் எழுதுறாங்க.. ஏங்க.. கூடவே ஜக்கு பாய்ன்னு ஒரு தத்துவ படம் வந்ததே.. அதை ஏங்க கண்டுக்க கூட இல்ல?//

  இரண்டையும் சேர்த்துப் படிக்கவும் :))

  ReplyDelete
 6. //நானே ஒரு நொறுக்கு தீனி ஆசாமி தான். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பழங்கள் பக்கம் திரும்பி உள்ளேன்.//

  பலாப்பழம் தானே? :)

  ReplyDelete
 7. //தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பழங்கள் பக்கம் திரும்பி உள்ளேன்.//

  நீங்க திரும்பும் போது, பழங்கள் வேறு பக்கம் திரும்பிடுச்சுன்னா என்ன பண்ணுவீங்க :))

  ReplyDelete
 8. நீங்க எல்லாம் குடுத்து வெச்சவங்க உங்க ஊர்ல ஏசி பஸ் ஓடுது.....

  ReplyDelete
 9. ஜக்கு பாயும், மரண தண்டனையும் - சுருக்கமான சூப்பர் விமர்சனம்

  சென்னை ஸ்பெஷல் - என்ஜாய் பண்ணுங்க

  ஹெல்த் பக்கம் - நல்ல அட்வைஸ்தான்

  பார்த்த சினிமா - அப்படியா, நல்லாருக்குன்னு சொன்னாங்களே

  ரசித்த SMS: இப்ப பணக்காரன் மட்டுமில்லை, மிடில் க்ளாஸ்காரனும் ஓடறான் இல்ல நடக்கிறன். தவறான உணவு பழக்கமே அனைத்திற்கும் காரணம்.

  அய்யாசாமி - அய்யோ பாவம் (ஆனாலும் இத பிளாக்-ல எழுதற அளவுக்காவது தைரியம் இருக்கே, எப்பிடி? ஹவுஸ் பாஸ் உங்க பிளாக் படிக்கமாட்டாங்களா?)

  ReplyDelete
 10. தலைப்பில் விமர்சனம் பண்ணிட்டு தனியா வேற எழுத சொல்றீங்க?

  உலக குசும்பனா இருப்பீங்க போல..

  :-)

  ReplyDelete
 11. ஜக்குபாய் - :))

  ReplyDelete
 12. என்னது கேபிள் ஜக்குபாய் விமர்சனம் போடலியா??????????

  ReplyDelete
 13. பழங்களைப் பரிந்துரைத்திருப்பது நன்று.

  அய்யா சாமி யாருங்க:)?

  ReplyDelete
 14. தண்டோரா ...... said...வீடு திரும்பியாச்சா?

  தல நீங்க நம்ம வீடு பக்கம் இப்போ தான் திரும்பிருக்கீங்க; நன்றி
  -----------------------------
  ஷங்கர்: நன்றி
  -----------------------------
  அப்துல்லா : நன்றி. உங்க கூட பேசி நாளாச்சு; விரைவில் பேசுறேன்.
  -----------------------------
  சங்கர்: நீங்க ரொம்ப நல்லவர். இந்த மாதிரி ஒரே நேரத்தில் நாலு பின்னூட்டம் போடுற நல்லவங்கள தான் தேடிட்டிருந்தேன். ஆனா (என்னை நேரில் பார்த்ததால்) நீங்க சாப்பிடுறது பலா பழம் தானே ன்னுட்டீங்க ... ம்ம்
  -----------------------------
  சங்கவி. அட சென்னை நம்ம ஊர் தாங்க; இந்த பக்கம் வராமலா இருக்க போறீங்க; அப்போ போனா போச்சு

  ReplyDelete
 15. 'நொறுக்கு தீனியை' is called as junk food by one of the dietrician, I met once.

  //ஒரு பணக்காரன் தான் சாப்பிட்ட உணவு செரிக்க ஓடுகிறான். //

  They don't run or walk.. but go in two/three/four wheelers.

  ReplyDelete
 16. வரதராஜலு ஐயா: ஒவ்வொரு மேட்டரும் பற்றி கமெண்ட் எழுதிருக்கீங்க. ரொம்ப நன்றி. அய்யாசாமி வீட்டம்மா இந்த ப்ளாக் படிப்பதில்லை. (நான் ஹவுஸ் பாசுன்னு எங்கயும் சொல்லலை கவனிசீங்களா?)
  ---------
  ராஜாராம்: எல்லாம் எழுதிட்டு வெளியிடும் போது தான் இந்த கலவை தலைப்பு தோன்றியது. அது ஒத்து போய்டுச்சு.. ம்ம்ம்
  ---------
  வித்யா: நன்றி.
  ---------
  காவேரி கணேஷ்: ஆமாங்க கேபிள் நிஜமா எழுதலை; ஆமா உங்க profile-ல் உள்ளது யாரு? :)))
  ---------
  ராமலக்ஷ்மி: நன்றி; நீங்க ஏற்கனவே health conscious-ன்னு நினைக்கிறேன். அய்யா சாமி ஒரு காமெடி கேரக்டர். வாரா வாரம் நான் எழுதும் வானவில்லில் தவறாமல் இடம் பிடிக்கிறார். நான் அவனில்லை (சொன்னா யாரும் நம்ப மாட்டேன்குறாங்க)

  ReplyDelete
 17. வானவில்லின் வர்ணஜாலம் ஜோர்!

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 18. கூட்டஞ்சோறு சாபிட்டமாதிரி இருக்கு..நல்ல தொகுப்பு

  ReplyDelete
 19. பதிவு கலக்கலா இருக்கு!!

  ReplyDelete
 20. ஜக்குபாய் விமரிசனமே வேண்டாம்
  விமரிசனம் பண்ணுங்கய்யான்னு சொன்னதே பெரிய விமரிசனம்

  ReplyDelete
 21. ஜக்குபாய் பாக்கறதுக்கு தைரியம் பாக்கலாம்னு
  சொன்னங்க....
  தைரியம் படம் பார்க்க எனக்கு தைரியம்
  இல்லாததால் ரெண்டையுமே லூஸ்ல விட்டாச்சு!!

  ReplyDelete
 22. //ஒரு ஏழை தன் உணவை சம்பாதிக்க ஓடுகிறான்.
  ஒரு பணக்காரன் தான் சாப்பிட்ட உணவு செரிக்க ஓடுகிறான்.//

  ithuthaan superb Mohankumar

  ReplyDelete
 23. மேடி: நன்றி. பணக்காரர்கள் 2/4 wheerlersல் போவது உண்மை தான்; அப்படி போனாலும் உடல் இளைக்க ஜிம் சென்று "ஓடுகிறார்கள்" இதை தான் அந்த வரி குறிக்கிறது.
  ---------
  ராகவன் சார்: Welcome back. ரொம்ப நாள் கழித்து வந்தமைக்கு நன்றி. தங்கள் ஆசிகள் என்றும் தேவை.
  ---------
  ஜீவன் சிவம் சார்: நன்றி. இது போன்ற உண்மையான பாராட்டுகள் தான் சோர்வடையாமல் எழுத வைக்கின்றன.
  ---------
  திருமதி. மேனகா ரொம்ப நன்றி மகிழ்ச்சி.
  ---------

  ReplyDelete
 24. கோமா: வருகைக்கு நன்றி
  ---------
  சரவணா: தொடர்ந்த வாசிப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
  ---------
  ஜெட் லி: நன்றி தம்பி. உன்னோட ஸ்டைலில் சிரிப்பு வர்ற மாதிரி பின்னோட்டம் போட்டிருந்தே
  ---------
  தேனம்மை: நன்றி மேடம்.
  ---------
  சுரேஷ்: நீங்க பல ப்ளாக் வைத்திருப்பதால் எந்த பதிவில் எழுதி இருக்கீங்கன்னு பார்க்க முடியலை

  ReplyDelete
 25. Anonymous2:46:00 AM

  அய்யாசாமி - வீட்டுக்கு வீடு வாசப்படி. :)

  ReplyDelete
 26. கலந்து கட்டி அடிச்சி இருக்கீங்க ..

  ReplyDelete
 27. ஜக்கு பாய் - உங்கள் நக்கல் விமர்சனம் டாப்.

  ReplyDelete
 28. சின்னா அம்மணி: வருகைக்கு நன்றி. நீங்களும் உங்க வீட்டு ஐயா சாமியை இப்படி தான் காய் ச்சுவீன்களா? பாவங்க. விட்டுடுங்க.. :)))
  --------
  ரோமியோ: நன்றி தல
  --------
  சித்ரா: நன்றி மேடம். கொஞ்ச நாளா உங்க பதிவுகளும் காணும்; பின்னூட்டங்களிலும் (என்/ மற்றவர்கள் ப்ளாகில்) பார்க்க முடியலை. நல்லா இருக்கீங்க இல்லையா?

  ReplyDelete
 29. ந‌ல்லா வெச்சீங்க‌ த‌லைப்பு, என்னா வில்ல‌த்த‌ன‌ம்:))

  ஆட்டோ, கால் டாக்சிக்கு குடுக்க‌ற‌த‌விட‌ ஏசி ப‌ஸ் க‌ம்மிதான், I would like to recommend especially for senior citizens and pregnant ladies. A safe and comfortable journey indeed!

  நொறுக்கு தீனி விக்க‌ற‌வ‌ங்க‌ள்லாம் ந‌ம்ம‌ள‌ ந‌ம்பித்தானே வாழ‌றாங்க‌, அதுக்காக‌த்தான் சாப்பிட‌றேன், ம‌த்த‌ப‌டி என‌க்கு அதெல்லாம் புடிக்காது (கிரேட் எஸ்....)

  எல்லா டான்ஸ் ஷோக்க‌ளிலும் சொல்றாங்க‌ளே, அதுமாதிரி, அய்யாசாமியும் "பாரேன் ந‌ம‌க்குள்ள‌ கெமிஸ்ட்ரி எப்ப‌டி சூப்ப‌ரா ஒர்க் அவுட் ஆயிருக்கு"ன்னு சொல்லிருக்க‌ணும்:))

  //அய்யாசாமி வீட்டம்மா இந்த ப்ளாக் படிப்பதில்லை. (நான் ஹவுஸ் பாசுன்னு எங்கயும் சொல்லலை கவனிசீங்களா?)//

  நோட் திஸ் பாய்ண்ட் யுவ‌ர் ஹான‌ர்‌......:)

  ReplyDelete
 30. ரசிக்கும் படி detailed-ஆக எழுதிய பின்னூடத்திற்கு ரொம்ம்ம்ப நன்றி குறும்பன்.

  ReplyDelete
 31. ஜக்குபாய் - ஒரு கண்ணீர் காவியம்
  ( ஜக்கு பாய்ன்னு ஒரு தத்துவ படம் வந்ததே.. அதை ஏங்க கண்டுக்க கூட இல்ல? அட பாத்துட்டு நல்லா இல்லைன்னு கூட எழுதிட்டு போங்க; )  சரத்குமாரை நினைச்சா கண்ணீர் தாரை தாரையா ஊத்துது...பின்னே என்னங்க..இந்தப் படத்தையாடா நெட்ல ரிலீஸ் பண்ணீங்க? புதை குழிக்குள்ள விழறதுக்கு அப்படி என்ன அவசரம்?

  சரி போகட்டும் விடு..நம்ம கதைக்கு வருவோம். படம் முடிஞ்ச உடனே விவாதக்குழுன்னு ஒரு நாலு பேரோட பேர் போட்டானுக... விவாதம் பண்ணானுகளா இல்லை ப்ரொட்யுசர் காசுல உக்காந்து எகத்தாளம் பண்ணானுகளான்னு தெரியலை.

  ஹீரோ ஹீரோவோட பொண்டாட்டி, கவுண்டமணி இன்ட்ரொடக்ஷன் எல்லாம் முடியறதுக்குள்ளேயே நமக்குக் கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருது...அப்புறமா இந்த ஷ்ரியா.. தமிழ் சினிமால வர்ற அக்மார்க லூஸூ..அம்மாவோட பொணத்தை வீட்ல போட்டு பப் ல வந்து போதையைப் போட்டு ஆடுது..அடடா..என்ன மேதைங்கடா நீங்க.அப்புறமா கொஞ்சம் சண்டை கொஞ்சம் சென்டிமெண்ட் ஒரு பாட்டு அப்புறமா திரும்ப ஒரு சண்டைனு இந்த நூற்றாண்டிலேயே ரொம்ப வித்தியாசமான படம் இது தான்.

  வில்லன் காமெடி பெருங்காமெடி. கடத்தல் கார வில்லன் எப்படியிருப்பான்னு எம்.ஜி.ஆர் படம் போட்டுப் பாத்திருப்பாய்ங்க போல..சை! உங்களையெல்லாம் ஏண்டா சுனாமி தூக்கலை! எடிட்டிங் பண்ணவருக்கு டைரக்டர் மேல என்ன கோவம்னு தெரியலை, சும்மா தமாஷ் பண்ணிருக்கார்.

  மியூசிக் எல்லாம் ரொம்ப கஷ்டம் பாஸ்! செகண்ட் ஹாஃப்ல ரொம்ப போர் அடிச்சதுனால தலைகளை எண்ணிக்கிட்டு இருந்தேன். மொத்தமா தியேட்டர் ல 36 பேர் இருந்தோம். நடுவுல எந்திரிச்சுப் போனவங்களையும் சேத்து தான் 36 பேரு. கே.எஸ்.ரவிகுமார் கமல் படங்கள்ல வேலை பார்த்துட்டு இயக்கம்னு பேரை மட்டும் போட்டுக்கலாம். கஷ்டபட்டு டைரக்ஷன்லாம் செஞ்சு நம்மளையும் சோதனை பண்ணி....

  சரத்குமார் தான் ரொம்ப பாவம்..கட்சி போணியாகாம நடிக்க வந்தா சனீஸ்வர பகவான் கே.எஸ்.ஆர் ரூபத்துல சீட் பெல்ட் போட்டு பக்கத்தில் உக்காந்துருக்கார் போல.. கவுண்டமணி ரொம்பக் கஷ்டப்பட்டு அப்பப்போ சிரிக்க வைக்கிறார். ஆனா சரத்தோட மாமனார் சாகும்போதும் அவர் வொய்ஃபா வர்றவங்களும் 'நடிக்கும்போது' நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்

  நாங்கதான் நீங்க மரத்தடில உக்காந்து தீர்ப்பு சொல்றா மாதிரி படம் எடுத்தா நூறு நாள் ஓட்டுறோம்ல..அப்புறம் ஏன்யா ஏன்?

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...