Thursday, March 29, 2012

கேரள பயணக்கட்டுரை: பாகம்-4: 20ஆவது மாடியில் அற்புத சர்ச்டவர்

திருச்சூரில் நான் பார்த்த Zoo, மியூசியம் மற்றும் சர்ச் டவர் பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்

**
சென்னை வண்டலூர் / மைசூர் Zoo-க்களுக்கு சென்றிருந்தால்,  மற்ற Zoo சின்னதாய் தெரியும் தான். ஆனாலும் அவை செல்லாதோருக்கு இது பெரிய இடம் தான் ! சின்ன Zoo போல தெரிந்தாலும் பின் நடந்து நடந்து கால் வலி வந்து விட்டது !


நுழைந்த உடன் கிளிகள் உள்ளன. அவற்றை பார்த்ததும் எங்கள் கிளிகள் நினைவு வர சற்று Homesick ஆகி விட்டது. ஒருவழியாய் மீண்டு மற்ற இடங்கள் சென்றேன்


***********
ஆந்தை முழின்னு சொல்றாங்களே; முழியை நேரில் பாத்தா நிஜமா பயமா தான் இருக்கு :))



**********
ஆந்தைக்கு சாப்பிட இறந்த எலியை வைத்துள்ளனர்; கீழே பாருங்கள் தெரியும்




ஆர்ட் மியூசியம் Zoo-விற்கு நடுவில் உள்ளது. அதனை சுற்றி பல வண்ண மலர்கள், செடிகள் மனதை மயக்குகிறது இதில் பழங்கால கற்கள், மணல் போன்றவை சேகரிக்கப்பட்டுள்ளன.

மன்னர்கள் பயன் படுத்திய வாள், அம்பு முதலியவையும் உண்டு.

ஆர்ட் மியூசியம்

சிங்கம், யானை, புலி போன்ற மிருகங்கள் பாடம் செய்யப்பட்ட நிலையில் இங்கு உள்ளது.

யானை, சிங்கம் இவற்றின் எலும்பு கூடும் உண்டு

அங்கும் மின்சார பற்றாக்குறையோ என்னவோ எந்த மின்விசிறியும் ஆன் செய்ய வில்லை
பழங்கால பொருட்கள் 


இங்கு தமிழ் குரல் கேட்டது. சில கல்லூரி பெண்கள் !! அறிமுகம் செய்துகொண்டு எந்த ஊர் என கேட்டேன். கோபிசெட்டிபாளையம் குமுதா ஆசிரியர் கல்லூரியில் இருந்து வருவதாகவும், கல்லூரியிலிருந்து சேர்ந்து வந்துள்ளோம் என்றனர். வெளியூர் செல்லும் போது தமிழ் குரல் கேட்டால் நிறையவே மகிழ்ச்சி தான். (டேய் உண்மையை சொல்லு; எவ்வளவு நேரம் சேர்ந்து சுற்றி கடலை போட்டாய்? என பின்னூட்டம் போட்டால், பதில் கிடைக்காது. )


புலியையும் அதனை ரசிக்கும் குட்டி பாப்பாவையும் இந்த வீடியோவில் காணலாம் கூடவே (பாப்பாவின் அம்மா ப்ளீஸ் டைகர் என கிட்டே வர சொல்லி கூப்பிடுவதையும் கேட்கலாம்)





பெரிதான ஆலமரம் ; பலர் இங்கு படம் எடுத்தனர்


படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர் 





மாடு போல இருக்கும் வித்யாசமான இந்த மிருகம் பேர் மிதுனாம் !


விழுந்து கிடக்கும் இந்த மரதோற்றம் வித்யாசமாய் இருந்தது. நான் சரியான கோணத்தில் எடுக்கலை. கலை அம்சம் உள்ளோர் எடுத்தால் நன்கு எடுத்திருப்பர்

அங்குள்ள சில மான்களுக்கு வயலட் நிற மருந்து போட்டு கொண்டிருந்தனர். விசாரித்ததில் மான்களுக்கு ஜூரம் என்றும் அதற்கு தான் மருந்து போடுவதாக கூறினர்.

இந்த வீடியோவில் சிங்கம் மற்றும் தண்ணீர் அருகே  ஹாயாக  படுத்திருக்கும் சிறுத்தை புலி பார்க்கலாம்:




இந்த கிராமத்திலிருந்து இருநூறு பேர் முதலாம் உலக போரில் கலந்து கொண்டதாக இந்த நினைவு தூண் சொல்கிறது. அதில்  இறந்தவர்,  பிழைத்தவர் குறித்த எண்ணிக்கை இல்லை ! 

Zoo மற்றும் மியூசியத்தில் வேலைக்கு இருப்பது அநேகமாய் பெண்கள் ! அவர்கள்  அனேகமாய் பேப்பர் படித்து கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே அங்கு வரும் குழந்தைகளை, அவர்கள்  பிறரை  ரசிப்பதை  பார்த்த வண்ணம் உள்ளனர்.





என்ன மரம் என தெரியலை
 *********
Zoo-விலிருந்து சர்ச் டவர் செல்லும் வழியில்  உள்ளது இந்த அரசு பில்டிங்.  நமது ராஜாஜி  ஹால்  மாதிரி இடம் போலும் இது.  முன்னாள் முதல்வர் கருணாகரன் மறைந்த போது மக்கள் அஞ்சலி செய்ய இங்கு தான் வைத்திருந்தனராம்



இங்கு தற்போது ஒரு லைப்ரரி உள்ளது. போட்டோ எடுக்கும் போது சரியாக ஒரு நபர் நடுவே வந்து விட்டார்.




***********
திருச்சூரின் புகழ் பெற்ற சர்ச் டவர் இந்த சர்ச்சை சார்ந்தது தான். இந்த பில்டிங்கிற்கு பின்னே தான் சர்ச் டவர் உள்ளது. இந்த சர்ச் 1921-ல் கட்டி முடிக்கப்பட்டது  




சர்ச் உள்ளே உள்ள கேரள பாணி கட்டிடம்
*
ர்ச் டவர் கட்டப்பட்டது 2002-ல் துவங்கி 2006-ல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரீசன்ட்-ஆக கட்டப்பட்டது தான் !!
செல்லும் போது லிப்டில் சென்று விடலாம். இதற்கு டிக்கெட் முப்பது ரூபாய் வாங்குகின்றனர். (நடந்து சென்றால் இலவசம்). இருபத்தி மாடி என்பதால் மேலே ஏறும்போது லிப்டில் சென்று விட்டு இறங்கும் போது நடந்து வருவது நல்லது. ஏன் இறங்கும் போது நடக்க வேண்டும் என்கிறீர்களா?

மேலே சென்று அவ்வளவு உயரத்தில் திருச்சூர் அழகை ரசிக்கலாம். ஆனால் அதை விட இறங்கும் போது இருபது மாடிகளின் படிகளிலும் வரைந்த ஓவியங்களை, அதன் அழகை ரசிக்க தான் நீங்கள் நடந்து இறங்க வேண்டும்.

இயேசு குறித்து கதை (பிறந்தது முதல், சிலுவையில் அறையப்பட்டு உயிர்ப்பிப்பது வரை) . பிற மதத்தவரும் படங்கள் வரைந்த கலையை நிச்சயம் வியந்து ரசிப்பார். சுவற்றில் வரைந்தவை அழகு எனில், கண்ணாடியில் வரைந்தவை மிக அழகு.


சர்ச் டவர் உள்ளேயும் ஓவியங்களையும் படம் எடுக்க அனுமதி இல்லை. செல்போன்  கூட எடுத்து போக முடியாது. லாக்கரில் செல்போன் வச்சு பூட்டிட்டு தான் உள்ளே அனுமதிக்கிறார்கள்

சர்ச் டவர் அருகேயுள்ள சிலைக்கு முன்பு

இந்த இருபது மாடி கட்டிடத்தின் பில்லர்கள் கூட சிலுவை போன்ற வடிவில் செய்திருப்பது பார்த்து அசந்து போனேன். சர்ச் டவர்  மற்றும்  படங்களை பராமரிக்க கத்தோலிக்கன் சிரியன் பேன்க் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உதவுகின்றன.  




Zoo-விலிருந்து கிளம்பி ஆட்டோவில் தான் மேலே சொன்ன இடங்கள் ஒவ்வொன்றாக பார்த்தேன். உடன் வந்த ஆட்டோ டிரைவர் பெயர் ஜோமன். இவர் ஒரு கிறித்துவர்;  ஆயினும் சர்ச் டவர் மேல் இது வரை ஏறி பார்த்ததில்லையாம். அவரையும் உடன் அழைத்து சென்றேன். என்னை விட மேலே வந்து பார்த்த போதும் சரி, இறங்கும் போது ஓவியங்களை பார்த்தபோதும் அவர் மிக மகிழ்ந்தார் !

தன்னை எடுத்த போட்டோவை வாங்கி பார்த்து விட்டு குழந்தை போல சிரித்தார். அவர் முகவரி வாங்கி வரவில்லை. இல்லாவிடில் போட்டோ பிரிண்ட் போட்டு அனுப்பியிருக்கலாம் !!

***********
அடுத்த பதிவில்: மனதை மயக்கிய அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி 

35 comments:

  1. அடுத்த 36 மணி நேரத்துக்கு இணையம் பக்கம் வர முடியாது.( வெளியூர் போகிறேன்). வெள்ளி கிழமை நீங்க பயண கட்டுரை காணும் என தேடுவீர்களே என வியாழன் இரவே பதிவு போட்டுள்ளேன்.

    பாத்து செய்யுங்க:))

    ReplyDelete
  2. படங்களும் பகிர்வும் அருமை.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. //இருநூறு பேர் இரண்டாம் உலக போரில் கலந்து கொண்டதாக // அது முதலாம் உலகப் போர்.

    ReplyDelete
  4. பெரிய மனசு சார் உங்களுக்கு ,செலவில்லாமலே நீஎனக போன இடங்கள எல்லாம் எங்களுக்கும் சுத்தி காட்டிட்டிங்களே

    ReplyDelete
  5. லைப்ரரில இருகவர் மிரண்டு நிக்குறாரா?இல்ல மிரட்டுறாரா?

    ReplyDelete
  6. அதரப்பள்ளி சமீபத்தில் போய் வந்தேன்.உங்கள் பார்வையில் காண ஆவல்.

    ReplyDelete
  7. புகைப்படங்கள் அனைத்தும் அழகு!

    ReplyDelete
  8. புகைப்படங்களும் வரணனையும் அருமை.

    ReplyDelete
  9. நல்ல படங்கள் மற்றும் காணொளி....

    நல்ல பயணக் கட்டுரையும்...

    வீடியோ எனக்கென்னமோ விலங்கை விட மனிதர்கள் பின்னே சென்று எடுத்த மாதிரி தெரியுது! :)))))

    ReplyDelete
  10. மோகன்குமார் சாரே சேச்சிகளை ஞான் நன்னா ரசிச்சு....! ஆனா சாரே கேமரா எந்தா இந்த ஆட்டம் ஆடி......பச்சே சேச்சிகளை கண்டு நிங்கள் பயந்திட்டோ!

    ReplyDelete
  11. எங்க ஊர் பொண்ணுககிட்ட கடலை போட்டிருக்கிங்க...மாடசாமி அருவாளை தீட்டி வைய்யி!

    ReplyDelete
  12. புகைப்படங்களும், காணொளிகளும் அருமை....

    தகவல்களும் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.

    வீடியோ பற்றி என் கணவர் சொன்னது மாதிரி தான் நானும் நினைத்தேன்.....
    மிஸஸ் அய்யாசாமி கேரள வீடியோக்களையும், போட்டோக்களையும் இன்னும் பார்க்கலையா.....:)))

    ReplyDelete
  13. பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுடசுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்.....!!!

    ReplyDelete
  14. காணொளியும் படங்களும் தகவல்களும் அருமை.

    ReplyDelete
  15. Anonymous1:37:00 AM

    புகைப்படம் எடுப்போரை படமெடுத்தல் சற்று ரிஸ்க்கான விஷயம்தான். முயற்சிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. புகைப்படங்களும், காணொளிகளும் அருமை ! நன்றி !

    ReplyDelete
  17. இராஜராஜேஸ்வரி said...

    படங்களும் பகிர்வும் அருமை.. பாராட்டுக்கள்..

    ***

    நன்றி இராஜராஜேஸ்வரி

    *********

    ReplyDelete
  18. அமர பாரதி said...

    //இருநூறு பேர் இரண்டாம் உலக போரில் கலந்து கொண்டதாக // அது முதலாம் உலகப் போர்.


    ***
    சார் ஹிஸ்டரியில் கொஞ்சம் வீக். நீங்கள் சொன்னதும் தான் கவனிதேன். மாற்றி விட்டேன் நன்றி

    ReplyDelete
  19. கோகுல் said...

    //லைப்ரரில இருகவர் மிரண்டு நிக்குறாரா?இல்ல மிரட்டுறாரா?//

    சாதாரணமா நடந்து வருபவர் திடீரென காமிரா பார்த்தது ஆச்சரியம் ஆகியுள்ளார். அவ்ளோ தான்

    //அதரப்பள்ளி சமீபத்தில் போய் வந்தேன்.உங்கள் பார்வையில் காண ஆவல்.//

    நன்றி நண்பா. மகிழ்ச்சி எழுதுகிறேன்

    ReplyDelete
  20. மனோ சாமிநாதன் said...

    புகைப்படங்கள் அனைத்தும் அழகு!

    **
    மகிழ்ச்சியும் நன்றியும் மேடம்

    ReplyDelete
  21. ஸாதிகா said...


    புகைப்படங்களும் வரணனையும் அருமை.

    நன்றி ஸாதிகா மகிழ்ச்சி

    ReplyDelete
  22. வெங்கட் நாகராஜ் said...


    வீடியோ எனக்கென்னமோ விலங்கை விட மனிதர்கள் பின்னே சென்று எடுத்த மாதிரி தெரியுது! :)))))

    **
    வெங்கட் : ஏஏஏஏன் :))) குடும்பத்தில் குழப்பம் வர வச்சிடாதீங்க நண்பா :))

    ReplyDelete
  23. வீடு சுரேஸ்குமார் said...

    //கேமரா எந்தா இந்த ஆட்டம் ஆடி......பச்சே சேச்சிகளை கண்டு நிங்கள் பயந்திட்டோ!//

    **
    ஆமாம் நண்பா. நீங்க சொன்னதும் தான் கவனித்தேன். மிக அதிகம் ஆடிய வீடியோக்கள் அகற்றி விட்டேன். இனி சற்று பார்த்து எடுக்கிறேன்

    //எங்க ஊர் பொண்ணுககிட்ட கடலை போட்டிருக்கிங்க...மாடசாமி அருவாளை தீட்டி வைய்யி!//

    கோபி உங்க ஊரா? நல்ல பொண்ணுங்களா இருந்தாங்க நண்பா நான் அவங்க பேசியதை வைத்து சொல்றேன். வேற அர்த்தம் வேணாம் :))

    ReplyDelete
  24. கோவை2தில்லி said...


    வீடியோ பற்றி என் கணவர் சொன்னது மாதிரி தான் நானும் நினைத்தேன்.....
    மிஸஸ் அய்யாசாமி கேரள வீடியோக்களையும், போட்டோக்களையும் இன்னும் பார்க்கலையா.....:)))


    ***

    இந்த வீடியோக்கள் Zoo-வில் எடுக்கப்பட்டவை. கூண்டின் வெளியில் இருந்து வீடியோ எடுக்கும் போது அங்கே நிற்பவர்களும் அதில் தெரிய தானே செய்வார்கள் :))

    மேடம் அங்கு வந்திருந்தா அய்யாசாமி அடக்கி வாசிச்சிருப்பார். தனியா இல்லே போனார்? மேடம் படங்கள் மட்டும் பார்த்துட்டாங்க. வீடியோ பார்க்கலை :))

    ReplyDelete
  25. MANO நாஞ்சில் மனோ said...

    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுடசுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்.....!!!

    **
    நன்றி மனோ. உங்களின் மகிழ்ச்சி தான் முக்கியம் :))

    ****

    ReplyDelete
  26. ஸ்ரீராம். said...

    Interesting.

    ****
    நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete
  27. ரிஷபன் said...

    காணொளியும் படங்களும் தகவல்களும் அருமை.

    ***
    மகிழ்ச்சி ரிஷபன் சார்

    ReplyDelete
  28. சிவகுமார் ! said...

    புகைப்படம் எடுப்போரை படமெடுத்தல் சற்று ரிஸ்க்கான விஷயம்தான். முயற்சிக்கு வாழ்த்துகள்.

    ***
    "புகைப்படம் எடுப்போரை படமெடுத்தல் " வகை படங்கள் அனைத்தும் Zoom செய்து எடுக்கப்பட்டவை. அருகில் இருந்து எடுத்தால் பிரச்சனை தான்.

    ReplyDelete
  29. திண்டுக்கல் தனபாலன் said...

    புகைப்படங்களும், காணொளிகளும் அருமை ! நன்றி !

    ***
    நன்றி தனபாலன்

    ReplyDelete
  30. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள், விவரிப்பு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. புகைப்படங்கள், காணொளிகள் அருமை.

    ReplyDelete
  32. அருமையான படங்கள்.. நல்ல பகிர்வு...

    ReplyDelete
  33. கடந்த மாதம் நானும் இந்த Zoo விற்கு வந்திருந்தேன்,,, மிகவும் அருமையா எழுதிருக்கீங்க!!! இத படிச்சதும் திரும்பவும் அங்க போயிட்டு வந்த மாதிரி இருக்கு

    ReplyDelete
  34. அருமையான பதிவு.
    எல்லோருடனும் நன்கு பழகும் பண்பு மகிழ்ச்சியளிக்கிறது.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...