Thursday, September 29, 2011

வானவில் : பிறைசூடன்:ரௌத்ரம்: குருநானக் கல்லூரி

பார்த்த படம் : ரௌத்ரம்

இந்த வருடம் ஜீவா காட்டில் மழை. ஒன்பது மாதங்களில் சிங்கம் புலி, கோ, ரௌத்ரம், வந்தான் வென்றான் என நான்கு படங்கள் ரிலீஸ் ஆகி விட்டன. ரௌத்ரம் படம் நல்லா இருக்கு என்று கூகிள் பஸ்ஸில் மணிஜி சொன்னார். அதை நம்ப்ப்பி பார்த்து நொந்து போயிட்டேன். (மணிஜி. அடுத்த தடவை நேரில் பார்க்கும் போது இருக்கு ஓய்...) கெட்டதை தட்டி கேட்கும் இளைஞன் என்கிற "சத்யா" காலத்து கதை.

பல தடங்கலுக்கு பின் தங்கை கல்யாண நிச்சய தார்த்தம் நடக்கும் நேரம், வெளியே சென்று மாப்பிள்ளை தந்தையை கூட்டி வர போகும் ஹீரோ, அவரை கூப்பிடாமல் வழியில் சண்டையில் இறங்கி கத்தி தூக்குவதெல்லாம் டூ மச். நகைச்சுவைக்கு ஆள் இல்லாமல் படம் "ராவாக" உள்ளது. இத்தகைய ரவுடி ஹீரோவை எப்படி பெண்கள் விரும்புவதாக காட்டுகிறார்களோ? பாடல்களும் தேற வில்லை. கடைசியில் ஸ்ரேயாவை கொன்று படத்தை முடிக்கிறார்கள். (இந்த முடிவு தற்போது மாற்ற பட்டு விட்டதாக அறிகிறேன்) கொடுமைடா சாமி ! தப்பி தவறி பார்த்துடாதீங்க !


ஆனந்த் எஸ். எம்.எஸ்.  கார்னர் 

3 Cardinal Rules of life:


1. Make peace with your past so that it wont disturb your present.
2. What other people think of you is none of your business.
3. Time heals almost everything. Just give time.

டிவி பக்கம் : பிறைசூடன் நினைவுகள்

ஜெயா டிவியில் தினம் இரவு பத்து முதல் பத்தரை வரை திரை உலகை சார்ந்த யாரேனும் ஒருவர் தங்கள் அனுபவங்களை பகிர்கிறார்கள். எப்போதாவது தான் பார்ப்பேன். ஆனால் பார்த்த பல முறை நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் !! எஸ். பி. முத்துராமன், எம். எஸ். வி. இப்படி பலர் பேசும் போதும் அந்த காலத்து ஈகோ, சண்டை என நிறைய கேள்விப்படாத விஷயம் அறிய முடியும்.



இந்த வாரம் கவிஞர் பிறை சூடன் இப்படி பல சம்பவங்கள் பகிர்ந்தார். உதாரணத்திற்கு ஒன்று: பொம்முக்குட்டி அம்மா படத்தின் ஒரு பாடலுக்கு இளைய ராஜா மெட்டு போட்டு, கேசட்டில் தந்து விட்டாராம். பிறை சூடனிடம் டேப் ரிக்கார்டர் இல்லை. அக்கம் பக்கம் வீடுகளில் கேட்க, யாரும் டேப் இல்லை என்றோ, ரிப்பேர் என்றோ கூறி விட்டனராம். பின் அவர் மனைவி யாரிடமோ கெஞ்சி கேட்க, " வீட்டினுள் வைத்து Tape போடுகிறோம். வெளியில் நின்று கேட்டு கொள்ளுங்கள்" என சொல்லி விட, அப்படி ஒரு முறை மட்டும் கேட்டு அந்த பாட்டை எழுதினாராம் பிறை சூடன். பின் டேப் ரிக்கார்டர் இல்லாமல் பிழைப்பு நடத்த முடியாது என இருக்கும் பணம் முழுதும் சேர்த்து ஒரு டேப் வாங்கி வந்திருக்கிறார்.

அன்று அந்த பாடலுக்கு பணம் வாங்க செல்ல, டைரக்டர் பாசில் "நீ டேப் இல்லாமல் கஷ்டபடுறே போலிருக்கே, அதான் உனக்கு டேப் வாங்கினேன்" என டேப் கொடுத்திருக்கிறார். சரி சம்பளத்திற்கு பதில் டேப் குடுத்து விட்டார்கள் என வருத்ததோடு வீடு வந்திருக்கிறார். தான் டேப் வாங்கிய கடையில் சென்று அதை எடுத்து கொண்டு பணம் தர சொல்லி கேட்க அவர்கள் மறுத்து விட்டனர். பின் பாசில் அந்த பாடலுக்கான பணமும் தனியாக தந்து விட்டாராம் !

நம்மை மகிழ்விக்கும் பாடலாசிரியர்கள் வாழ்க்கை எத்தனை கொடுமையாக உள்ளது !

விவாதம் கிளப்பிய பதிவு 

சூப்பர் சிங்கர் பைனல் குறித்த பதிவு நிறைய எதிர் கருத்துகளை எதிர் கொண்டது. வாதம், விவாதம், ஆதரவு, என பல்வேறு உணர்வுகளை சந்தித்தது. அந்த பதிவின் பின்னூடங்களை நீங்கள் படிக்கா விடில், ஒரு முறை இங்கு சென்று படித்து பாருங்கள்.நாமளும் எப்ப தான் ரவுடி ஆகறது? இது மாதிரி சில சண்டைகள் இருந்தா தான் வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும்.

வலை சரத்தில் நமது ப்ளாகை இன்று வித்தியாமான முறையில் அறிமுகம் செய்துள்ளார் மிடில் கிளாஸ் மாதவி. நன்றிங்கோ ! 

சென்னை: ஹால் டிக்கட் வாங்க பெற்றோரை அழைக்கும் கல்லூரி

சென்னை குருநானக் கல்லூரியில் ஹால் டிக்கட்டை மாணவர்களிடம் நேரடியே தருவதில்லை. பெற்றோரை கல்லூரிக்கு வர சொல்லி அவர்கள் முன்பு தான் தருகிறார்கள். ஏன் என விசாரித்த போது, நிறைய மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஸ்கூட் அடித்து விட்டு, ஏன் எழுதலை என்றால், கல்லூரியில் ஹால் டிக்கட் தரலை என வீட்டில் சொல்லி வந்திருக்கிறார்கள். இதனால் தான் இப்படி ஒரு ஏற்பாடு ! அதுக்கும் நம்ம பசங்க பெற்றோர் இல்லாமல், அண்ணன், கசின் என வேறு ஏற்பாடுகளும் பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க !!

சம்பவம் - அந்த ஒரு ரன்

மனைவி, குழந்தையுடன் எங்கோ வெளியே கிளம்பி செல்லும் போது எங்கள் ஏரியாவில் ஒரு கிரிக்கெட் டோர்ணமன்ட் நடப்பது தெரிந்து சற்று நின்று பார்க்க ஆரம்பித்தோம். கடைசி ஓவர், ஜெயிக்க தேவை ஆறு ரன்கள் என தெரிந்ததும் சற்று சுவாரஸ்யம்! ஒவ்வொரு பந்திலும் ஒவ்வொரு ரன்னாக அடித்து கொண்டிருந்தார்கள். கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன் எடுக்கணும். ஐந்தாவது பந்தை தூரமாக அடித்து விட்டு ஓடினர். எளிதில் இரண்டு எடுத்து ஜெயித்திருக்கலாம். ஒரு நபர் இரண்டாவது ரன் ஓடாமல் நின்று விட, அடுத்த நபர் மட்டும் இரண்டாம் ரன் ஓடி ரன் அவுட் ஆகிட்டார். கடைசி பந்து ... சோதனையாக புது பேட்ஸ்மேன் எதிர்கொண்டார். ஒரு ரன் எடுத்தால் வெற்றி. ஆனால் கேட்ச் குடுத்து அவுட் ஆக, மேட்ச் டை (Tie) ஆகி விட்டது. கூடியிருந்த அனைவரும் எப்படி ஆடி ஜெயிதிருக்கணும் என்றே பேசி கொண்டிருக்க, நாங்களும் "
ஐந்தாவதுபந்தில் ரெண்டு பேரும் "Two runs ஓடிருக்கணும்" என பேசியவாறு கிளம்பினோம்.

Mrs. அய்யாசாமி அப்டேட்

சென்ற வானவில்லிலேயே எழுத வேண்டியது ...விடுபட்டு விட்டது. அய்யாசாமி ப்ளாக் படிப்பதாக எழுதிய பதிவில் நண்பர்கள் சிலர் " அப்பாடா இனி தலைவி பற்றி எழுதுவது குறையும்" என எழுதி இருந்தனர். இது பற்றி வீட்டில் பேச்சு வந்த போது 

"இனிமே என்னை பத்தி எழுத மாட்டீங்கன்னு சில பேர் சொல்லிருக்காங்க"

" உன்னை பத்தியா? அப்படி யாரும் சொல்லலையே?"

"தலைவி பத்தி எழுத மாட்டீங்கன்னு சொல்லிருக்காங்க??"

"அவங்க தலைவின்னு சொன்னது அனுஷ்காவை"

அனுஷ்கா பாட்டு டிவியில் வந்தாலே அய்யாசாமி வெங்காயம் உரிப்பதை நிறுத்தி விட்டோ, துணி மடிப்பதை விட்டு விட்டோ, வாயில் ஈ போவது தெரியாமல் பார்ப்பது Mrs. அய்யாசாமிக்கு தெரியும் தான். சிறிது நேரம் மௌனம்.

" அப்ப நான் தலைவி இல்லியா? "

" ???? "

" உங்களை தானே கேக்குறேன் . அப்ப நான் தலைவி இல்லியா?"
இதுக்கு அய்யாசாமி என்ன பதில் சொல்லி இருப்பார் என ஊகித்து சொல்லுங்கள் அவர் சொன்னதை பிறகு பின்னூட்டத்தில் சொல்கிறேன்...

13 comments:

  1. நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன்

    தங்களால் ,பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. ஜொலிக்கும் வானவில்லுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. //" உங்களை தானே கேக்குறேன் . அப்ப நான் தலைவி இல்லியா?"
    இதுக்கு அய்யாசாமி என்ன பதில் சொல்லி இருப்பார் என ஊகித்து சொல்லுங்கள் //

    We are 50-50, where comes Thalaivi or Thalaivan

    ReplyDelete
  4. நானா இருந்தா இப்படிதான் சொல்லியிருப்பேன்,
    "தலை"வியா, இந்த வீட்டுக்கு "மூளை"யே நீதானே!

    ReplyDelete
  5. ஆக, படத்தப் பாத்தா நமக்கும் ரௌத்ரம் வரும்!!

    மனம் சுற்றும் கொசுவத்திகள் எப்பவுமே மணக்கும்போல!!

    அந்தப் பதிவுல் நிறைய விவாதம் இருந்துச்சுன்னு அது மாதிரியே நிறைய எழுதிடாதீங்க!!

    நாந்தான் சொன்னேனே அப்பவே, மிசஸ். அய்யாசாமி ரொம்ப அப்பாவியாருக்காங்கன்னு!! (சட்னி செய்முறை) இனி சுதாரிச்சுடுவாங்க பாருங்க!! :-)))))))

    ReplyDelete
  6. நல்ல தகவல்கள்.... திருமதி அய்யாசாமி என்ன சொன்னாங்க மோகன்... :)

    ReplyDelete
  7. very nice. i cannot type.. laughing at ayyasaamy.

    ReplyDelete
  8. //" உங்களை தானே கேக்குறேன் . அப்ப நான் தலைவி இல்லியா?"இதுக்கு அய்யாசாமி என்ன பதில் சொல்லி இருப்பார் என ஊகித்து சொல்லுங்கள்//

    "நீ பெருந்தலைவி" என்று சமாளிக்கலாம்!
    ஜெயா டிவி 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சி நல்ல ப்ரோக்ராம். பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அதன் ஒளிபரப்பு நேரம் ஒத்து வருவதில்லை. தூக்கம் வந்து விடும்!! எம் எஸ் வி நிகழ்ச்சி நான் மிஸ் பண்ணிய ஒன்று.

    ReplyDelete
  9. \\ஒரு முறை இங்கு சென்று படித்து பாருங்கள்.நாமளும் எப்ப தான் ரவுடி ஆகறது? \\

    மோகன்குமார், அந்தப் பதிவைப் படிச்சேன். பெரிசா ஒண்ணும் சண்டை போட்டுக்கிட்டா மாதிரி தெரியலையே:-)))

    ReplyDelete
  10. //கடைசியில் ஸ்ரேயாவை கொன்று படத்தை முடிக்கிறார்கள். (இந்த முடிவு தற்போது மாற்ற பட்டு விட்டதாக அறிகிறேன்)//

    அப்ப‌டியே மாத்திட்டாலும்...:))

    டிவியில் ஒரு சில‌ காட்சிக‌ள் ம‌ட்டும் பார்த்தேன். ச‌த்ய‌ன் காமெடி வ‌யிறு குலுங்க‌ சிரிக்க‌வைக்காவிட்டாலும் ஒரு ஸ்மைலை வ‌ர‌வ‌ழைக்கும் அ‌ள‌வுக்கு ந‌ன்றாக‌த்தான் இருக்கிற‌து

    //What other people think of you is none of your business.//

    I like this

    //இதுக்கு அய்யாசாமி என்ன பதில் சொல்லி இருப்பார்//

    ஹுக்கும்..என்ன‌தான் ச‌ட்ட‌ம் ப‌டிச்சிருந்தாலும் எதிர்த்து வாதாடியா இருப்பார்? எப்ப‌டியும் ச‌ர‌ண்ட‌ர்தான் ஆகியிருப்பார். ஆனா இனிமே பாருங்க‌, அனுவை (ஹிஹி) ப‌த்தி எழுதும்போது Mrs.அய்யாசாமி ப‌டிப்பாங்க‌ளேங்க‌ற‌ ஒரு ப‌ய‌ம் க‌ண்டிப்பா Mr.அய்யாசாமிக்கு வ‌ரும். :))

    ReplyDelete
  11. அய்யாசாமி சொன்னது: அனுஷ்கா சாதா தலைவி. நீ ஸ்பெஷல் தலைவி. இன்னும் சொல்லுணும்னா தலைவிகளுக்கெல்லாம் தலைவி! (காலில் விழாத குறை தான்)

    ReplyDelete
  12. நன்றி MR.
    ***
    இராஜராஜேஸ்வரி :நன்றிங்க
    **
    பெ.சோ. வி : நன்றிப்பா. மேலே அய்யாசாமி என்ன சொன்னார் என்பதை சொல்லிட்டேன்
    **
    Benivolent : நன்றி

    ReplyDelete
  13. ஹுஸைனம்மா said...

    //நாந்தான் சொன்னேனே அப்பவே, மிசஸ். அய்யாசாமி ரொம்ப அப்பாவியாருக்காங்கன்னு!! (சட்னி செய்முறை) இனி சுதாரிச்சுடுவாங்க பாருங்க!! :-)))))))

    ப்ளாக் உலகம் பத்தி இன்னும் தெரியாததால் ப்ளாக் விஷயத்தில் கொஞ்சம் அப்பாவியா இருக்காங்க. மத்த விஷயத்தில்???
    **
    ஆர்வத்துக்கு நன்றி வெங்கட். மேலே சொல்லிட்டேன்
    **
    வடிவக்கரசி மேடம்: ஒரு ஆண் கஷ்டபடுறதில் உங்களுக்கு அவ்ளோ சந்தோஷமா? :)))
    **
    ஸ்ரீ ராம்: ஏறக்குறைய சரியா சொல்லீட்டீங்க. ரைட்டு !!
    **
    நன்றி கோபி. இந்த அளவு விவாதம் நடப்பதே நமக்கு பெருசு.
    **
    ரகு said
    //அனுவை (ஹிஹி) ப‌த்தி எழுதும்போது Mrs.அய்யாசாமி ப‌டிப்பாங்க‌ளேங்க‌ற‌ ஒரு ப‌ய‌ம் க‌ண்டிப்பா Mr.அய்யாசாமிக்கு வ‌ரும்//

    இப்படி ஒரு சந்தோஷமா? அனுஷ்காவை உங்களுக்கு விட்டு குடுக்குற மாதிரி இல்லை :)))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...