Tuesday, December 27, 2011

2011ல் பதிவுலகம்:நல்ல விஷயங்களும், சர்ச்சைகளும்

பதிவுலகம் என்பது சமூகத்தின் ஒரு அங்கம் தானே? சமூகத்தில் நடக்கிற மாதிரியான நல்லது, கெட்டது, சண்டைகள், போட்டி பொறாமைகள் அனைத்தும் இங்கும் உண்டு. இந்த வருடத்தில் எனக்கு நினைவில் இருக்கும் இத்தகைய சில விஷயங்களை இங்கு பகிர்கிறேன். பதிவர்களுக்கான இந்த வருட டயரி குறிப்பாக இருக்க வேண்டும் என்பது எண்ணம்.

நல்ல விஷயங்கள்:

1. ஜாக்கி சேகர் பதிவின் மூலம் மைதிலி என்கிற ஏழை கல்லூரி மாணவிக்கு கல்வி கட்டண உதவி கிடைத்தது. வெளி நாடு வாழ் பதிவர்கள் ஸ்ரீராம் மற்றும் ராமசாமி அடுத்து வரும் ஆண்டுகளிலும்  இவருக்கு உதவுவதாக கூறி உள்ளனர். .

2. தமிழ் மீனவர் மீது தாக்குதல், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனை, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நாடகம் , அண்ணா நூற்றாண்டு நூலக இட மாற்றம் போன்ற விஷயங்களில் பதிவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல் பரிசு பெறும் ஜெயலட்சுமி
3. புழுதிவாக்கம் பள்ளி பற்றி ப்ளாகில் நான் எழுதியதை வாசித்த Cotton grower என்கிற நண்பர் ஜெயலட்சுமி என்கிற ஏழை மாணவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்புவதாக கூறி, இன்று வரை அனுப்பி வருகிறார். அதே புழுதிவாக்கம் பள்ளிக்கு +2 மாணவர்கள் கணினி ஆசிரியர் இன்றி சிரமப்படுகிறார்கள் என்று எழுதியதும், சக பதிவர் விதூஷ் மூலம் அவர் தம்பி +2 மாணவர்களுக்கு கணினி பாடம் எடுத்து தந்தார்.

4. கே. ஆர். பி செந்தில், கேபிள் சங்கர், உலகநாதன், யுவ கிருஷ்ணா உள்ளிட்ட பல பதிவர்களின் புத்தகங்கள் இவ்வருடம் வெளியாகி பரவலாக விற்பனை ஆகின. ஓ. ஆர். பி ராஜா மற்றும் கே. ஆர். பி செந்தில் இணைந்து ழ பதிப்பகம் துவக்கினர். உலகநாதன் அவர்கள் உ பதிப்பகம் துவக்கியுள்ளார். 

5. பதிவர்கள் கார்த்திகை பாண்டியன் மற்றும் நேசமித்திரன் இணைந்து வலசை என்கிற இலக்கிய இதழ் கொண்டு வந்தனர். பதிவர் நிலா ரசிகனும் நரேனும் இணைந்து ஒரு சிற்றிதழ் கொண்டு வந்துள்ளனர்.

 இவ்வருடம் நடந்த சில பதிவர் சந்திப்புகள்/விழாக்கள் :

1. ஆதி- பரிசல் -யுடான்ஸ் இணைந்து நடத்திய சிறுகதை போட்டிக்கான பரிசளிப்பு விழா டிசம்பர் 18 அன்று சென்னையில் நடந்தது. சென்ற முறை ஒரு பரிசு வென்ற RVS இம்முறையும் பரிசு வென்றார். (நீங்க தான் RVS அடுத்த முறை ஜட்ஜு!)

2. ஈரோடு சங்கமம் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக இனிதே நடந்தது. இணைய உலகில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய 15 நண்பர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

3. நண்பர் டுபுக்கு சென்னை வந்த போது பதிவர் அப்துல்லா ரம்ஜான் காரணமாக பிரியாணி விருந்து தந்தார். அப்போது அவர் அலுவலகத்தில் கூடி அனைவரும் பேசி மகிழ்ந்தோம்.

4. யூத் பதிவர் சந்திப்பு பதிவர்களின் ஆஸ்தான பதிவர் சந்திப்பு இடமாகி விட்ட டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது.

5. டெரர் கும்மி நண்பர்கள் இணைந்து இந்த ஆண்டுக்கான இணைய விருதுகள்/ போட்டி அறிவித்துள்ளனர். வருகிற ஆண்டுகளிலும் அவர்கள் இதனை தொடர வாழ்த்துவோம் !

இன்னும் நிறைய பதிவர் சந்திப்பு நடந்தது. நான் பலவற்றுக்கு செல்லாததால் நினைவில்லை.
****
சர்ச்சைகளுக்கும் பதிவுலகுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு அலை அடித்து ஓயும். அவற்றில் சில ....

1. இன்டி ப்ளாகர்ஸ் என்கிற அமைப்பு ப்ளாகர்களுக்கான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது. இதில் எழுந்த சர்ச்சை அதை ஒட்டி இரு வேறு வித கருத்துக்கள் (கருத்து ஒன்று : இங்கே கருத்து இரண்டு: இங்கே ) ..கொஞ்ச நாள் பதிவுலகம் அமளி துமளிபட்டது. வழக்கம் போல் எந்த முடிவுக்கும் வராமல் பிரச்சனை ஓய்ந்தது.

2. பதிவர் லதானந்த் தான் ஒரு விபத்தில் இறந்ததாக ஒரு செய்தி எழுப்பி விட, பல நண்பர்கள் பதறி அடித்து கொண்டு சென்றால், அது பொய் செய்தி என தெரிந்து அவர் மீது மிக கோபமாகினர். இது குறித்து பல கோபமான பதிவுகள் வந்தன.

3. மங்காத்தா வந்த போது விஜய் ரசிகர்கள் கிண்டலடித்து பதிவுகள் எழுத, வேலாயுதம் வந்த போது அஜீத் ரசிகர்கள் அதே போல் செய்தனர். ("இது எங்களுக்குள்ள ஜகஜம்") .

4. பதிவர் ஒருவரின் ஆபரேஷனுக்காக பணம் வசூலித்ததில் எழுந்த சர்ச்சை இன்னும் நிறைய பூதம் கிளப்ப, நர்சிம் இணையத்தில் எழுதுவதை  நிறுத்தி விட்டார்.

5. எழுத்தாளர் சாருவின் Chat  லீலைகள் அம்பலம் ஆனது. சாரு அதனை மறுத்தாலும் உலகம் அதனை நம்பியதென்பது அவர் வருட இறுதியில் நடத்திய புத்தக விழாவிற்கு முக்கிய புள்ளிகள் வழக்கம் போல் வராததில் தெரிந்தது.

6. தமிழ் மணத்துடன் வந்த ஒரு மன கசப்பில் நிறைய பதிவர்கள் தமிழ் மணத்தின் மீது கோபமானார்கள்.  பின் சிறு தாமதத்துக்கு பின் தமிழ் மணம் விளக்கமும் வருத்தமும் கூற, பல பதிவர்கள் தமிழ் மணத்தில் மீண்டும் இணைந்தாலும் இன்னும் நிறைய நல்ல பதிவர்கள் தமிழ் மணத்தில் மீண்டும் இணையாமல் இருப்பது சற்று வருத்தமாக தான் உள்ளது. 


**
சர்ச்சைகள் பற்றி நினைவு படுத்த வேண்டுமா என கேட்கலாம். இந்த சர்ச்சைகள் பதிவுலகில் என்னென்ன செய்ய கூடாது என்பதை அனைவருக்கும் நினைவு படுத்த வேண்டும் என்பதால் தான் பகிர்கிறேன். பதிவுலகத்தில் சற்று சறுக்கினாலும் இதற்காகவே காத்திருந்தது போல் நூற்றுகணக்கில் கற்களும் சொல்லடியும் விழும். இத்தகைய அடிகளுக்கு பின் பதிவுலகம் வெறுத்து எழுதுவதை நிறுத்துபவர் பலர் ! சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய இடம் இது !!

**
எனது குறுகிய வாசிப்பின் காரணமாக நிறைய சந்திப்புகளையும், நல்ல விஷயங்களையும் நான் தவற விட்டிருக்க கூடும். அவற்றை நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

37 comments:

  1. பதிவுலகத்தில் சற்று சறுக்கினாலும் இதற்காகவே காத்திருந்தது போல் நூற்றுகணக்கில் கற்களும் சொல்லடியும் விழும். இத்தகைய அடிகளுக்கு பின் பதிவுலகம் வெறுத்து எழுதுவதை நிறுத்துபவர் பலர் ! சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய இடம் இது !!

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நல்ல தொகுப்பு!

    ***எழுத்தாளர் சாருவின் Chat லீலைகள் அம்பலம் ஆனது. ***

    இந்தாளு ஒரு முட்டாள்னா இவரோட வந்து தன் படம் அனுப்பி சாட் செய்ற அபலைகளை என்ன சொல்வது??

    இணையதளத்தைப் பொறுத்தவரையில் "பெரியவர்கள்" "அனுபவசாலிகள்" கூட அதில் இருக்கும் டேஞ்சர் கள் தெரியாமல் அறியாமையில்தான் வாழ்கிறார்கள்!


    I always say and believe, one need to be VERY CAREFUL when interacting with "strangers" in on-line! Because lot of animals out there! Trust no one! Expect anything from anybody!!

    ReplyDelete
  3. மங்காத்தா வந்த போது விஜய் ரசிகர்கள் கிண்டலடித்து பதிவுகள் எழுத, வேலாயுதம் வந்த போது அஜீத் ரசிகர்கள் அதே போல் செய்தனர். ("இது எங்களுக்குள்ள ஜகஜம்") .//

    ஹா ஹா ஹா ஹா பங்காளிங்க சண்டை சகஜம்தானே, பாசக்கார பயலுக...!!!

    ReplyDelete
  4. அருமையா 2011 பற்றி தொகுத்துருக்கீங்க நன்றி வாழ்த்துக்கள்..!!!

    ReplyDelete
  5. // தூக்கு தண்டனை //

    பொது மக்களின் நன்மைக்காக சட்டப்படி நீதிமன்றங்கள் (லோகல், ஸ்பெஷல், ஹை மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகள்) வழங்கிய தீர்ப்பை எதிர்ப்பது 'ஆரோக்கியமான - நியாயமான ஜனநாயகத்திற்கு' கேடு விளைவிக்கக் கூடும்.

    ------ மேல சொல்ல வேணாம்.. என்னையவிட உங்களுக்கு தெரியாத சட்டமா ?

    Please remember "Truth is Bitter"

    ReplyDelete
  6. // நல்ல விஷயங்கள்: //

    1 & 3 are really appreciable. Congratualations to you as you were also participated directly in such events. Hope you continue this. I will also try my best in participating in similar thoughts. Thanks :-)

    2 is the greatest threat to our National Integrety.

    I prefer United India first, than it becomes 'Super Power'(!)

    ReplyDelete
  7. //1. ஆதி- பரிசல் -யுடான்ஸ் இணைந்து நடத்திய சிறுகதை போட்டிக்கான பரிசளிப்பு விழா டிசம்பர் 18 அன்று சென்னையில் நடந்தது. //

    Certainly great job by ஆதி- பரிசல் -யுடான்ஸ்


    // சென்ற முறை ஒரு பரிசு வென்ற RVS இம்முறையும் பரிசு வென்றார். (நீங்க தான் RVS அடுத்த முறை ஜட்ஜு!)//

    Wait and see.

    And at last.. No mention about terror kummi's award 2011 ?

    ReplyDelete
  8. அருமையான தொகுப்பு.

    ReplyDelete
  9. Pathivar Diary vaasikka vasikka suvaarashyam.

    ReplyDelete
  10. அன்பின் மோகன், முதல் பாயிண்டில் ஒரு திருத்தம்:

    ஜாக்கி சேகரின் இடுகை வாயிலாக மைதிலிக்கு கல்வி உதவி கிடைத்தது.
    ஜாக்கியின் இடுகையை கண்ட நண்பர்கள் (பேர் தெரியாது, ஜாக்கியிடம் கேட்டுச் சொல்கிறேன்) மைதிலியின் இவ்வாண்டு கல்விச் செலவுக்குப் பணம் அனுப்பினர், அதைக் கொண்டு சேர்க்கையில், மைதிலி ஜாக்கியிடம் வரும் ஆண்டுகளுக்கும் உதவி கிடைக்குமா என்று கேட்டிருக்கிறாள். இதை ஜாக்கியின் இடுகையில் கண்ட நானும் பதிவர் ராமசாமி கண்ணனும் மைதிலியின் வருங்கால கல்விச் செலவுக்கு உத்தரவாதம் அளித்துள்ளோம்.

    இதுவரை நாங்கள் அளித்துள்ளது உறுதி மொழி மட்டுமே, ஒரு பைசா கூட இதுவரை கொடுக்கவில்லை.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  11. ஸலாம் சகோ.மோகன் குமார் ,
    நன்றாக நியாபகம் வைத்து தொகுத்து உள்ளீர்கள். பயனுள்ளதொரு 'திரும்பல்'. நன்றி சகோ.

    ReplyDelete
  12. சரிங்க சார்! :-)

    ReplyDelete
  13. //4. கே. ஆர். பி செந்தில், கேபிள் சங்கர், உலகநாதன், யுவ கிருஷ்ணா உள்ளிட்ட பல பதிவர்களின் புத்தகங்கள் இவ்வருடம் வெளியாகி பரவலாக விற்பனை ஆகின. ஓ. ஆர். பி ராஜா மற்றும் கே. ஆர். பி செந்தில் இணைந்து ழ பதிப்பகம் துவக்கினர். உலகநாதன் அவர்கள் உ பதிப்பகம் துவக்கியுள்ளார்.//

    நன்றி மோகன்.

    ReplyDelete
  14. எந்த அலசலிலும் பிலஸ் ,மைனஸ் இரண்டையும் சொல்ல வேண்டும், உங்க அலசல் கனகச்சிதம்

    ReplyDelete
  15. இந்த வருஷம் ஒரு மாபெரும் இலக்கியவாதியை ஈரோட்டில் நீங்க சந்திச்சீங்களே. அதைப் பத்தி சொல்லவே இல்லையே:-))

    ReplyDelete
  16. எல்லா நல்ல விசயங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் ஒரு லிங்க் தந்திருந்தால் இன்னும் நன்றாக/சுவாரசியமாகவும் இருந்திருக்கும்.

    ReplyDelete
  17. ஒரு ஆதங்கம். நன்றாக எழுதிக் கொண்டிருந்தவர்களில் வேலைப்பளுவால் பதிவுலகம் விட்டு விலகியவர் சிலரெனில் ஃபேஸ்புக்,பஸ்(இப்போ ப்ளஸ்), டிவிட்டரே போதுமெனப் போய் விட்டவர்கள் பலர். வரும் ஆண்டில் இவர்கள் பதிவுலகம் திரும்பி வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  18. அலசல் மிகவும் சுவாரஸ்யம். முக்கியமாய் நல்ல பணிகள் செய்து வருபவர்களுக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  19. புழுதிவாக்கம் பள்ளியில்தான் நான் படித்தேன் சார்.

    அப்போது தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளி. இப்போது மேல்நிலைப் பள்ளி ஆகியிருக்கிறது.

    வளாகத்தில் இருக்கும் பல மரங்களை எங்கள் செட்டுதான் வைத்தது.

    ReplyDelete
  20. மிக்க நன்றி மோகன்குமார்.

    ReplyDelete
  21. பதிவும்,பின்னூட்டங்களும் 2011ன் முக்கியமான ஒன்றை நினைவுபடுத்தவில்லை.

    தமிழகத்தின் ஆட்சி மாற்றம்.

    ReplyDelete
  22. நன்றி ராஜேஸ்வரி
    **
    நன்றி வருண்
    **
    நன்றி மனோ
    **
    மாதவா: டெர்ரர் கும்மி பற்றி தற்போது சேர்த்து விட்டேன் நன்றி
    **

    ReplyDelete
  23. நன்றி ரத்னவேல் ஐயா
    **
    நன்றி துரை டேனியல்
    **
    ஸ்ரீராம்: நன்றி. திருத்தி விட்டேன்
    **
    நன்றி முகமது ஆசிக்

    ReplyDelete
  24. RVS : ம் ரைட்டு
    **
    நன்றி உலகநாதன்
    **
    நன்றி செந்தில் குமார்
    **
    நன்றி இலக்கிய சூறாவளி குடந்தை கோபி :))

    ReplyDelete
  25. ஆதி மனிதன்: பல சர்ச்சை சம்பவங்களின் லிங்க் தற்போது அகற்ற பட்டு விட்டது. முயற்சித்து அவை தற்போது இல்லாததால் விட்டு விட்டேன்
    **
    ராம லட்சுமி: நன்றி நீங்கள் சொல்வது உண்மையே
    **
    நன்றி மனோ மேடம்
    **

    ReplyDelete
  26. நன்றி யுவக்ரிஷ்ணா. வருடா வருடம் நீங்கள் படித்த புழுதிவாக்கம் பள்ளியில் அந்த வருட சிறந்த மாணவர்களுக்கு பரிசு கொடுப்போம். நீங்களும் அடுத்த வருட விழாவின் போது வந்து மாணவர்களை வாழ்த்தினால் நன்றாக இருக்கும். அப்போது தொடர்பு கொள்கிறேன்
    **
    நன்றி ஜாக்கி
    **
    நன்றி ராஜ நடராசன் சார். இந்த பதிவு பதிவுலகம் பற்றி மட்டுமே பேசியது. தமிழகம்/ இந்திய அரசியல் குறித்த தனி பதிவு ஆண்டு இறுதிக்குள் நம் ப்ளாகில் வெளியாகும் நன்றி

    ReplyDelete
  27. //5. டெரர் கும்மி நண்பர்கள் இணைந்து இந்த ஆண்டுக்கான இணைய விருதுகள்/ போட்டி அறிவித்துள்ளனர். வருகிற ஆண்டுகளிலும் அவர்கள் இதனை தொடர வாழ்த்துவோம் !//

    Thanks Sir...

    ReplyDelete
  28. எல்லா விஷயங்களையும் பேலன்ஸ்டா கவர் பண்ணிருக்கீங்க....

    ReplyDelete
  29. அண்ணே!

    என்னடாது..நம்ப பழைய பதிவில் ஹெவி ட்ராஃபிக்கா இருக்குன்னு மூலத்தைத் தேடினா..

    இங்க வந்து நிக்கிறேன்..!!

    தலைப்புலேயே சொல்லியிருந்தேன்..

    குறையொன்றுமில்லை!!

    ReplyDelete
  30. சேட்டைக்காரன் பதிவுலகில் இருந்து நீங்கியதும், தன வலைப்பூவை நீக்கியதும் எனக்கு வருத்தம்..

    ReplyDelete
  31. வம்சி சிறுகதைப் போட்டியை நல்ல விஷயங்கள் பட்டியில் சேர்த்துவிடுங்கள். நன்றி.

    ReplyDelete
  32. anna naan net la blog pakren. cell batery low ayitu. charge poda oru shop la kuduthurukaen.

    ReplyDelete
  33. romba naala blog pakam varala. busy [?]top 10 la vandathuku valthukal

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...