Saturday, December 10, 2011

வடிவேலு காமெடி:அசத்தல் சீன்கள்- டயலாக் & வீடியோ

வடிவேலு காமெடி சீன்களில் குறிப்பிட்ட சில பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்கலாம். அப்படி எப்போது பார்த்தாலும் சிரிக்கும் சில காட்சிகளை இங்கே வீடியோவுடன் பகிர்ந்துள்ளேன்.

**
நேசம் புதுசு

இந்த படம் பெயர் சொன்னால் யாருக்கும் தெரியாது. ஆனால் இதில் ஒரு டயலாக் சொன்னால் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிஞ்சிடும் " பொண்ணை கைய பிடிச்சு இழுத்தியா?"

வடிவேலு மிக அதிக மக்களுக்கு ரீச் ஆனது இந்த காமெடியில் தான் என நினைக்கிறேன்



தலை நகரம்

"ஒன்னு.. ரெண்டு.. மூணு"

"என்னமோ மூணு அடிக்கு மேலே அடிச்சா திருப்பி அடிக்கிற மாதிரி என்னுறே"

"ஏன்யா.. வர்றவன் போறவன் எல்லாம் ஆளுக்கு எதோ கொஞ்சம் அடிச்சா பரவாயில்ல.. .. இந்த உடம்பு எவ்வளவு அடி தாங்கும்னு நான் கணக்கு வச்சிக்க வேணாமா பெரிய பெரிய ரவ்டியால்லாம் என்னை அடிச்சிட்டு அவன் கை அடிஞ்சு போய் கெடக்குறான் ............என்ன கிளம்பிட்டீங்க? "

"ச்சே .. உன்னை யார்டா அடிப்பா?"

" இப்ப தான் புரிஞ்சுதா late pick up -டா நீ. "

****

"நான் ஜெயிலுக்கு போறேன்.. ஜெயிலுக்கு போறேன் .. ஜெயிலுக்கு போறேன்.. நானும் பெரிய ரவுடி"

****
"பாடி ஸ்டிராங்கு... ஆனா பேஸ்மெண்டு வீக்கு"


***********
மனதை திருடி விட்டாய்

" Sing in the rain.. I am swaing in the rain"


" துபைய்ல்லேந்து என் தம்பி மார்க் போன் பண்ணான்.. business-ல after all 20 crores loss-ஆம்….ஏய்.. Money comes today.. Goes tomorrow -யா"

********
போக்கிரி:

(டீ கடையில்) " முடிஞ்சுருசிள்ள.. எல்லோரும் போயிடுங்க.. ஒருத்தரும் நிக்க கூடாது.."

"Be careful………..

"…...ஏய்"

"நான் என்னை சொன்னேன்"


*******************
மருதமலை

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காமெடி இது. எனக்கு மிக பிடித்தது வடிவேலுக்கு ஹீரோ மாதிரி தரும் Introduction சீன். அப்புறம் ஒரு அடியாள் வடிவேலுவிடம் போலிஸ் ஸ்டேஷன் வந்து "என்னை நியாபகம் இல்லை? நான் உங்களை அடிச்சிருக்கேனே? " என பேசும் சீன். Hilarious !!



தொட்டால் பூ மலரும்

" ஏன்யா வண்டிய இப்படி உருட்டுரே?"

" Traffic-ல மெதுவா தான் தம்பி போவோணும்"

" Traffic-ஆ? Road-யே காலியா கிடக்குது.. "

"நான் நேத்து நடந்ததை சொன்னேன்".

"நல்லா நடந்துச்சு.. பாத்து ஓட்டு"

"ஒரே பனி மூட்டமால்ல இருக்குது"

" பனி மூட்டமா? பங்குனி வெயில் பல்லை இளிசிடு அடிக்குது.. நீ வேற"

"தம்பி.. நீங்க MGR மாதிரி தக தக-ன்னு இருக்கீங்க... "

"MGR மாதிரியா? MGR-ஐ முன்ன பின்ன பாத்துறுகியா நீ?"

" பொதுவா சொன்னேன் "

.." தம்பி ஆ வுண்ணா மாநாடு-ன்னு கூட்டம் கூட்டமாள்ள கிளம்பிடுராங்கே.."

" மாநாடா?"

"அதோ ஒரு கூட்டமே மஞ்சள் கொடியோட வருதே"..

"யோவ் அது Lorry-யா"

" Lorry-யா????"

"தம்பி.. லாரி போயிடுச்சா.. நாம போகலாமா"



***
அரசியலால் ஒதுங்கி இருக்கும் வைகை புயல் மீண்டும்
வீசி நம்மை மகிழ்விக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு !

14 comments:

  1. நல்ல காட்சிகள்...

    ஏனோ அரசியல் பிரச்சனையில் வீழ்ந்துவிட்டார்...

    அடுத்து ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்ப்போம்....

    ReplyDelete
  2. அருமையான நகைச்சுவைக் காட்சிகள்
    கண்ண்டு மிக மிக மகிழ்ந்தோம்
    உங்கள் ஆதங்கம்தான் எனக்கும்..
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Anonymous5:44:00 PM

    தொட்டால் பூ மலரும் படத்தில் வடிவேலு கலக்கி இருப்பார். காவலனுக்கு பிறகு பார்க்க அவரை முடியவில்லை. மம்பட்டியான் படம் மூலம் வைகைப்புயல் மீண்டும் வருவதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. அரசியலை விட்டு முழுக்க முழுக்க சினிமா மட்டுமே என்று இருந்தால் வைகைப் புயலை அடித்துக் கொள்ள ஆளில்லை.

    ReplyDelete
  5. கிரி மற்றும் வின்னர் படத்தின் காமெடிகளை விட்டுட்டிங்களே..... :)

    ReplyDelete
  6. // "நான் என்னை சொன்னேன்" //

    I think that's not appropriate gramatically.

    I feel that should actually be "நான் என்னையச் சொன்னேன்
    (means நான் என்கிட்டே சொல்லிக்கிட்டேன் )"

    Please correct me, If I am wrong.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. வடிவேலு காமெடி பார்க்காமல் நாங்கள் யாரும் தூங்குவதில்லை.

    நாகேசுக்கு அவர்களுக்கு பிறகு அவர் தான் காமெடி "கிங்".

    ReplyDelete
  9. அருமை!
    பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  10. வடிவேலு காமெடியில் அவர் பிறந்த மண்ணின் மணம் தெறிக்கும்!
    பதிவிற்கு ..பகிற்விற்கு .. நன்றி!

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  11. நன்றி வெங்கட்
    **
    மகிழ்ச்சியும் நன்றியும் ரமணி அவர்களே
    **
    சிவகுமார்: உண்மை. நன்றி
    **
    ரிஷபன் சார்: ஆம் நன்றி
    **
    பிரதாப்: அட வின்னரை எப்படி மிஸ் பண்ணேன்? நன்றி
    **

    ReplyDelete
  12. மாதவா: ஹிஹி. நன்றி
    **
    ஆதி மனிதன் : மகிழ்ச்சி நன்றி
    **
    நன்றி திண்டுக்கல் தனபாலன்
    **
    ராம மூர்த்தி சார் : நன்றி
    **

    ReplyDelete
  13. வட போச்சே#விட்டுடீங்களே

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...