பேஸ்புக் கிறுக்கல்கள்
24 மணி நேரமும் டிவியில் பார்க்க வெவ்வேறு சேனல்கள். கணினியில் விளையாட்டுகள் மற்றும் இன்டர்நெட். வாசிக்க எத்தனையோ புத்தகங்கள்.. இருந்தும் இந்த கால பிள்ளைகள் சொல்கின்றன " லீவுல போர் அடிக்குது".
நாம் பள்ளியில் படித்த போது மேலே சொன்ன எதுவுமே இல்லை. ஆனால் நாம் போர் அடிப்பதாக நினைத்ததோ, சொன்னதோ இல்லையே ? ஏன்?
##########
இன்று அட்சய திரியை மற்றும் சச்சின் பிறந்த நாள். அட்சய திரியை அன்று பெண்கள் தங்கம் வாங்குவர். சச்சின் அம்மாவுக்கோ தங்கமே மகனாய் அட்சய திரியை அன்று பிறந்துள்ளது !
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் ரஹீலா என்கிற பெண் செம காமெடியாக பேசினார். என்ன ஒன்று.. அவை பெரும்பாலும் வடிவேலு பேசும் காமெடி பன்ச் டயலாக் என்பது சற்று உறுத்தியது (மனுஷங்களை சினிமா எம்புட்டு பாதிக்குது!) பெண்கள் சுய எள்ளலுடன் பேசுவது மிக அரிதே ! (நமக்கு தெரிஞ்ச பொண்ணுங்க எல்லாரும் செம சென்சிடிவ்!!) இவர் காமெடியை மிக ரசித்து சிரித்தோம் ...நீங்களும் இந்த வீடியோ பார்த்து ரசியுங்கள்.
அய்யாசாமியின் வாட்டர் ஹீட்டர் அனுபவம்
ரசித்த கவிதை/ பதிவர் பக்கம்
கொஞ்சம் கண்ணீர் சில கவிதைகள்
உங்களை பிடிக்குமென்றான்
எனக்கும் என்றாள்
பார்க்க வேண்டுமென்றான்
பார்க்கலாம் என்றாள்
பருக வேண்டுமென்றான்
சற்றே தயங்கி சரியென்றாள்
விட்டு விலகினான்
பட்டு வதங்கினாள்
கொஞ்சம் கண்ணீர்
சில கவிதைகள்
மனம் தேற்றி கொண்டிருந்தவளிடம்
மற்றுமொருவன்
உங்களை மிகவும்
பிடிக்குமென்றான் - லாவண்யா சுந்தர்ராஜன்
நம் பதிவில் தயாரிப்பாளர் லிங்குசாமி போட்ட கமன்ட் + திண்ணை கமண்டுகள்
நாம் எழுதும் சில கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் திண்ணை, உயிரோசை, அதீதம், வல்லமை உள்ளிட்ட இணைய இதழ்களில் வெளியாவது உங்களுக்கு தெரிந்திருக்கும். நமது கட்டுரை வெளியானதை பார்த்ததும், அதன் லிங்கை குறித்து கொள்வதுடன் பல நேரங்களில் அங்கு வெளியானதை மறந்து விடுவேன். அத்தகைய இணைய இதழ்களில் கமன்ட் வருவது மிக குறைவு என்று தான் நினைத்திருந்தேன். எதேச்சையாக கண்ணதாசன் எழுதிய வனவாசம் குறித்து வெளியான கட்டுரையை திண்ணையில் பார்க்க, கமன்டுகள் என்பதை பார்த்து அசந்து போய் விட்டேன். அவ்ளோ காமன்டுகள் நம்ம பதிவுகள் எதற்கும் ப்ளாகில் கூட வந்ததில்லையே ! உள்ளே எட்டி பார்த்தால் குறிப்பிட்ட சிலர் கலைஞர் பற்றியும் கண்ணதாசன் பற்றியும் செமையா சண்டை போட்டிருக்கிறார்கள் (நல்ல வேளை ! நம்மை யாரும் திட்டலை !) நாம பாட்டுக்கு ஓரமா எதோ எழுதிட்டு போயிடுறோம் ! ஆனால் எழுதுவது என்னென்ன விளைவுகளை உண்டாக்குது என்பது சில நேரம் ஆச்சரியம் தருது !
இந்த லிங்கில் நீங்கள் அந்த பதிவுக்கு வந்த ஏராளமான கமண்டுகளை "பார்க்கலாம்" ; ஆம் பார்க்க தான் முடியும்; படிக்க அல்ல ! என்னால் கூட முழுதும் படிக்க முடியலை. அவ்ளோ இருக்கு !
நிற்க. வழக்கு எண் படம் குறித்தான நம் விமர்சனத்துக்கு தயாரிப்பாளர்/ இயக்குனர் லிங்கு சாமி பின்னூட்டத்தில் வந்து நன்றி கூறி இருக்கிறார் ! சற்று பின்னூட்டம் ஆக இருக்கிறதே பலருக்கும் சென்று இதே போட்டுள்ளாரா என பார்த்தால் அய்யனார் விஸ்வநாத், வீடுதிரும்பல் போன்ற ஒரு சில பதிவுகளில் மட்டுமே இப்படி பின்னூட்டம் இட்டிருப்பது தெரிந்தது. நமது பதிவு இந்த அளவு ரீச் இருப்பது ஆச்சரியமாய் உள்ளது !

இன்று பிறந்த நாள் காணும் சொக்க தங்கமே, எங்கள் சிங்கமே...நீவிர் வாழ்க ! உம்ம ஆட்டம் பார்த்து நாங்கள் மகிழ்க !
சச்சின் தீவிர ரசிகர் படை, சென்னை கிளை (எங்களுக்கு எல்லா ஊரிலும் கிளைகள் உண்டு)
##########
விகடனில் வழக்கு எண் படத்துக்கு 55 மார்க் ! 45 மார்க்குக்கு மேல் விகடன் தந்தாலே படம் மிக அருமை என அர்த்தம் ! கடந்த சில வருடங்களில் எந்த படமும் இவ்வளவு மதிப்பெண் வாங்கிய நினைவில்லை.
படம் அருமை தான் எனினும் கடந்த சில ஆண்டுகளில் வந்த அனைத்து படங்களையும் விட சிறந்தது என சொல்ல முடியலை. விகடன் மார்க்கை சில நேரம் புரிஞ்சுக்க முடியலை.
******************
ஒரு கோடி நிகழ்ச்சியில் கலக்கிய பெண்
சச்சின் தீவிர ரசிகர் படை, சென்னை கிளை (எங்களுக்கு எல்லா ஊரிலும் கிளைகள் உண்டு)
##########
விகடனில் வழக்கு எண் படத்துக்கு 55 மார்க் ! 45 மார்க்குக்கு மேல் விகடன் தந்தாலே படம் மிக அருமை என அர்த்தம் ! கடந்த சில வருடங்களில் எந்த படமும் இவ்வளவு மதிப்பெண் வாங்கிய நினைவில்லை.
படம் அருமை தான் எனினும் கடந்த சில ஆண்டுகளில் வந்த அனைத்து படங்களையும் விட சிறந்தது என சொல்ல முடியலை. விகடன் மார்க்கை சில நேரம் புரிஞ்சுக்க முடியலை.
******************
ஒரு கோடி நிகழ்ச்சியில் கலக்கிய பெண்
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் ரஹீலா என்கிற பெண் செம காமெடியாக பேசினார். என்ன ஒன்று.. அவை பெரும்பாலும் வடிவேலு பேசும் காமெடி பன்ச் டயலாக் என்பது சற்று உறுத்தியது (மனுஷங்களை சினிமா எம்புட்டு பாதிக்குது!) பெண்கள் சுய எள்ளலுடன் பேசுவது மிக அரிதே ! (நமக்கு தெரிஞ்ச பொண்ணுங்க எல்லாரும் செம சென்சிடிவ்!!) இவர் காமெடியை மிக ரசித்து சிரித்தோம் ...நீங்களும் இந்த வீடியோ பார்த்து ரசியுங்கள்.
அய்யாசாமியின் வாட்டர் ஹீட்டர் அனுபவம்
அய்யாசாமி முன்பு பார்ட் டைம் ஆக, காலை ஆறு மணிக்கு வகுப்புகள் எடுத்து வந்தார். அப்போது அவர் வீட்டில் கெய்சர் இல்லை. நீண்ட எலக்ட்ரிக் குச்சி போல இருக்கும். ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து அந்த குச்சியை வாளிக்குள் அமிழ்த்தி விட்டு சுவிட்சை ஆன் செய்தால் சிறிது நேரத்தில் தண்ணீர் சூடாகிடும்.
அய்யாசாமி இரவே வாளியில் தண்ணீர் பிடித்து ரூமில் கொண்டு வந்து வைத்து விடுவார். அந்த எலக்ட்ரிக் மெஷினும் சொருகி வைத்து விடுவார். காலை அந்த குச்சியை உள்ளே வைத்து விட்டு சுவிச் மட்டும் ஆன் செய்வார்.
குறிப்பிட்ட நாள் இதே போல செய்துவிட்டு அய்யாசாமி மற்ற வேலை பார்க்க ஏதோ பொசுங்கும் வாசனை. என்னவென்று பார்த்தால் அய்யாசாமி தூக்க கலக்கத்தில், எலக்ட்ரிக் மெஷினை தண்ணீர் உள்ளே வைக்காமல் டேபிள் மேலேயே வைத்து விட்டு சுவிட்ச் ஆன் செய்து விட்டு போய் விட்டார். இதனால் அருகில் இருந்த லேண்ட் லைன் போன் ஹீட்டில் உருகி, எரிய ஆரம்பித்திருந்தது. தண்ணீர் ஊற்றலாமா என தெரியலை. பெரிய துணியை போட்டு நெருப்பை அணைத்து சுவிட்ச் ஆப் செய்தார். வீட்டம்மா எழுந்ததும் செம டோஸ் !
அவ்வளவு களேபரத்திலும் அய்யாசாமி கடமை வீரராக அன்றும் போய் வகுப்பு எடுத்தார் என்பது குறிப்பிட தக்கது !
ரசித்த கவிதை/ பதிவர் பக்கம்
கொஞ்சம் கண்ணீர் சில கவிதைகள்
உங்களை பிடிக்குமென்றான்
எனக்கும் என்றாள்
பார்க்க வேண்டுமென்றான்
பார்க்கலாம் என்றாள்
பருக வேண்டுமென்றான்
சற்றே தயங்கி சரியென்றாள்
விட்டு விலகினான்
பட்டு வதங்கினாள்
கொஞ்சம் கண்ணீர்
சில கவிதைகள்
மனம் தேற்றி கொண்டிருந்தவளிடம்
மற்றுமொருவன்
உங்களை மிகவும்
பிடிக்குமென்றான் - லாவண்யா சுந்தர்ராஜன்
நம் பதிவில் தயாரிப்பாளர் லிங்குசாமி போட்ட கமன்ட் + திண்ணை கமண்டுகள்
நாம் எழுதும் சில கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் திண்ணை, உயிரோசை, அதீதம், வல்லமை உள்ளிட்ட இணைய இதழ்களில் வெளியாவது உங்களுக்கு தெரிந்திருக்கும். நமது கட்டுரை வெளியானதை பார்த்ததும், அதன் லிங்கை குறித்து கொள்வதுடன் பல நேரங்களில் அங்கு வெளியானதை மறந்து விடுவேன். அத்தகைய இணைய இதழ்களில் கமன்ட் வருவது மிக குறைவு என்று தான் நினைத்திருந்தேன். எதேச்சையாக கண்ணதாசன் எழுதிய வனவாசம் குறித்து வெளியான கட்டுரையை திண்ணையில் பார்க்க, கமன்டுகள் என்பதை பார்த்து அசந்து போய் விட்டேன். அவ்ளோ காமன்டுகள் நம்ம பதிவுகள் எதற்கும் ப்ளாகில் கூட வந்ததில்லையே ! உள்ளே எட்டி பார்த்தால் குறிப்பிட்ட சிலர் கலைஞர் பற்றியும் கண்ணதாசன் பற்றியும் செமையா சண்டை போட்டிருக்கிறார்கள் (நல்ல வேளை ! நம்மை யாரும் திட்டலை !) நாம பாட்டுக்கு ஓரமா எதோ எழுதிட்டு போயிடுறோம் ! ஆனால் எழுதுவது என்னென்ன விளைவுகளை உண்டாக்குது என்பது சில நேரம் ஆச்சரியம் தருது !
இந்த லிங்கில் நீங்கள் அந்த பதிவுக்கு வந்த ஏராளமான கமண்டுகளை "பார்க்கலாம்" ; ஆம் பார்க்க தான் முடியும்; படிக்க அல்ல ! என்னால் கூட முழுதும் படிக்க முடியலை. அவ்ளோ இருக்கு !
நிற்க. வழக்கு எண் படம் குறித்தான நம் விமர்சனத்துக்கு தயாரிப்பாளர்/ இயக்குனர் லிங்கு சாமி பின்னூட்டத்தில் வந்து நன்றி கூறி இருக்கிறார் ! சற்று பின்னூட்டம் ஆக இருக்கிறதே பலருக்கும் சென்று இதே போட்டுள்ளாரா என பார்த்தால் அய்யனார் விஸ்வநாத், வீடுதிரும்பல் போன்ற ஒரு சில பதிவுகளில் மட்டுமே இப்படி பின்னூட்டம் இட்டிருப்பது தெரிந்தது. நமது பதிவு இந்த அளவு ரீச் இருப்பது ஆச்சரியமாய் உள்ளது !
நீங்களும் வெல்லலாம் - ஞாயிறு மதியம்தான் பார்க்கணும்.
ReplyDelete//விகடனில் வழக்கு எண் படத்துக்கு 55 மார்க் ! 45 மார்க்குக்கு மேல் விகடன் தந்தாலே படம் மிக அருமை என அர்த்தம் ! கடந்த சில வருடங்களில் எந்த படமும் இவ்வளவு மதிப்பெண் வாங்கிய நினைவில்லை.
படம் அருமை தான் எனினும் கடந்த சில ஆண்டுகளில் வந்த அனைத்து படங்களையும் விட சிறந்தது என சொல்ல முடியலை. விகடன் மார்க்கை சில நேரம் புரிஞ்சுக்க முடியலை. //
இப்போதெல்லாம் இதை சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. விமர்சனம் ஒகே..ஆனால் இவர்கள் யார் மார்க் போட? அல்லது எந்த அடிப்படையில் மார்க் போடுகிறார்கள்?
//அவ்வளவு களேபரத்திலும் அய்யாசாமி கடமை வீரராக அன்றும் போய் வகுப்பு எடுத்தார் என்பது குறிப்பிட தக்கது !//
ReplyDeleteபின்ன? போகாம இருந்திருந்தா, அந்த நேரத்துல டோஸ் தொடர்ந்திருக்குமே. அதுக்காகவே எஸ்கேப் ஆகியிருப்பார் :))
//இன்று அட்சய திரியை மற்றும் சச்சின் பிறந்த நாள். அட்சய திரியை அன்று பெண்கள் தங்கம் வாங்குவர். சச்சின் அம்மாவுக்கோ தங்கமே மகனாய் அட்சய திரியை அன்று பிறந்துள்ளது !
ReplyDeleteஇன்று பிறந்த நாள் காணும் சொக்க தங்கமே, எங்கள் சிங்கமே...நீவிர் வாழ்க ! உம்ம ஆட்டம் பார்த்து நாங்கள் மகிழ்க !//
These are too much.. today is 16th May.. plz. avoid re-posting these time-based events..
:-)
வறுமையின் நிறம் சிவப்பு படத்தில், எஸ்பிபி , தீர்தகரையினிலே என்ற பாரதியார் பாடலை இசையின்றி பாடி
ReplyDeleteஇருப்பார். ரஹீலா பங்கேற்ற நிகழ்ச்சி ரொம்ப வித்யாசமானது. எப்பவும் பொண்ணுங்க தான் சூர்யா கிட்ட வழிவாங்க, அவரை பற்றியே பேசுவாங்க. இங்க உல்டாவா, அந்த பொண்ணு, சூர்யா நடிகர் என்பதையே சட்டை செய்யவில்லை.தன்னை பற்றியே பேசி கொண்டு இருந்தது வியப்பு.
\\24 மணி நேரமும் டிவியில் பார்க்க வெவ்வேறு சேனல்கள். கணினியில் விளையாட்டுகள் மற்றும் இன்டர்நெட்\\ குழந்திகள் இவற்றை எந்த அளவுக்கு தவிர்க்கிறார்களோ அந்தளவுக்கு நல்லது. குழந்தைகளுக்கு மேல் எனக்கு இவற்றை நினைத்தால் பயமாய் இருக்கிறது. நம் வாழ்க்கையை இதிலேயே தொலைத்துவிடப் போகிறோமோ என்ற பயம் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது. முக்கியமாக இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்று தினமும் கவலையோடு யோசிக்கிறேன், இன்னமும் முடியவில்லை.
ReplyDelete\\இந்த கால பிள்ளைகள் சொல்கின்றன " லீவுல போர் அடிக்குது". \\ நான் படிக்கும்போதும் கோடை விடுமுறை விடப்போவதர்க்கு முன்னர் குஷியாக இருக்கும், பத்து நாட்கள் போன பின்னர் எப்படா மீண்டும் பள்ளிகளைத் திறப்பார்கள் என்று ஏங்க ஆரம்பித்துவிடுவேன்.
ReplyDelete\\சச்சின் தீவிர ரசிகர் படை, சென்னை கிளை (எங்களுக்கு எல்லா ஊரிலும் கிளைகள் உண்டு).\\ வருமான வரி மிச்சம் செய்வதற்காக தன்னுடைய தொழிலே நடிப்பு என்று டிக்ளேர் செய்த தேச பக்தன் இவர். [அமிதாப் நான் ஒரு விவசாயின்னு சொன்ன மாதிரி.] இவனுங்கள நினைச்சா காமடியா இருந்தாலும், இவங்க தேசத்தை தலை நிமிரச் செய்யப் போறாங்க என்று நம்பி இவங்க பின்னால் போய் ஏமாறும் கூட்டத்தை நினைக்கும் போது மனம் புழுங்குகிறது.
ReplyDelete\\படம் அருமை தான் எனினும் கடந்த சில ஆண்டுகளில் வந்த அனைத்து படங்களையும் விட சிறந்தது என சொல்ல முடியலை. விகடன் மார்க்கை சில நேரம் புரிஞ்சுக்க முடியலை. \\ அப்போ படம் அவ்வளவு ஒர்த் இல்லையா?
ReplyDelete\\நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் ரஹீலா என்கிற பெண் செம காமெடியாக பேசினார். என்ன ஒன்று.. அவை பெரும்பாலும் வடிவேலு பேசும் காமெடி பன்ச் டயலாக் என்பது சற்று உறுத்தியது (மனுஷங்களை சினிமா எம்புட்டு பாதிக்குது!) பெண்கள் சுய எள்ளலுடன் பேசுவது மிக அரிதே ! (நமக்கு தெரிஞ்ச பொண்ணுங்க எல்லாரும் செம சென்சிடிவ்!!) இவர் காமெடியை மிக ரசித்து சிரித்தோம் \\ நானும் ரசித்துப் பார்த்தேன். வடிவேல் பன்ச் என்றாலும், அதை இந்தப் பெண் எவ்வாறு தன்னுடைய சூழ்நிலைக்கேற்றவாறு பயன்படுத்தினார் என்பது ஸ்பெஷல் தான். முக்கியமாக, "ஏய்.....எல்லோரும் பாத்துக்குங்க.....நானும் ரவுடிதான்.........நானும் ரவுடிதான்.........நானும் ரவுடிதான்.........என்று அவர் கும்பிட்டவாறே சொன்னது டாப்பு.
ReplyDeleteஇருந்தாலும் நம்ம தலைவரை கிறுக்கல்கள் தலைப்பின் கீழ் கொண்டுவந்ததை ஆட்சேபிக்கிறேன் மோகன்...
ReplyDeleteலீவுல போர் அடிக்குது//
நான் புரிந்து கொண்டவரை...அதன் அர்த்தம்...மடையா/அப்பா என்னுடன் நீ/நீங்கள் செலவழிக்கும் நேரம் மிகவும் குறைந்து விட்டது என்பதே...
Rasathi song in ThirudaThiruda.. only humming.....
ReplyDeleteஉண்மையில் வடிவேலு ஒரு ஆச்சர்யம்தான். ரஜினியின் பஞ்ச் டயலாக்கை விடவடிவேலு பேசுபவை ஆண் பெண் பேதமின்றி அனைவரயும்
ReplyDeleteகவர்ந்துள்ளது என்பது உண்மையே. பிறரைக் கிண்டல் செய்யும் நகைச்சுவைகளைவிட தன்னைத் தானே தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவை நீண்ட காலம் நிலைத்திருப்பவையாக அமைந்துள்ளது.
இன்றைய பல்சுவைப் பதிவுகள் அனைத்தும் நன்று.
லிங்குசாமியின் கமென்ட் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
நன்றி ரகு. விகடன் மார்குகள் என்ன என பார்ப்பது ஒரு சுவாரஸ்யம், சிறு வயது முதல் இது உள்ளது
ReplyDeleteமாதவா ஹிஹி
ReplyDeleteசுவாமி. சரியான பதில் தான் நான் நினைத்தது திருடா திருடா பட பாடலை தான். சூர்யா நிகழ்ச்சி பற்றி நீங்கள் சொன்னது சரியே
ReplyDeleteதாஸ்: வழமை போல வித்தியாச + விரிவான அலசலுக்கு நந்தி. வழக்கு எண் படம் கடந்த சில வுர்டங்களில் வந்த அணைத்து படங்களை விட அதிக மார்க் வாங்கி உள்ளது. அப்படி கடந்த சில வருடம் வந்த அணைத்து படம் விட சிறந்த படமா எனில் இல்லை என தோன்றுகிறது. மற்றபடி நல்ல படமே
ReplyDeleteரெவரி: வித்யாசமான கோணம், நீங்கள் சொல்வதும் உண்மையாய் இருக்கலாம்
ReplyDeleteகடமை வீரர் வீட்டில் கடமையாற்றுகையில் கோட்டை விட்டுட்டாரா:)?
ReplyDeleteவடிவேலன்:ராசாத்தி பாட்டு தான் நான் நினைத்ததும் நன்றி
ReplyDeleteமுரளி:நன்றி வடிவேலு தற்போது அதிகம் நடிக்காதது நமக்கு இழப்பே
ReplyDeleteராமலட்சுமி: ஆம் பல விஷயம் ஒரே நேரத்தில் செய்தால் இதான் பிரச்சனையை என்கிறார் அய்யாசாமி
ReplyDeleteதாஸ்: பயணத்தில் இருக்கிறேன். அவசரமாய் டைப் செய்து போட்டதில் நன்றி - நந்தி என டைப் ஆகி உள்ளது. மன்னிக்க
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதிருடா திருடா படத்தில் வரும் ராசாத்தி என் உசுரு என்னுதில்ல.. பாடல் இசை இல்லாமல் வெறும் ஹம்மிங் மட்டுமே கொண்ட பாடல்..
ReplyDeleteநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - இன்றுடன் (12 ஜூலை ௨௦௧௨) நிறைவு பெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் விளையாட்டுக்கள் ஏதுமில்லை. ஹாட் சீட்டில் விளையாடிய அனைவருடனும் சூர்யா மீண்டும் பேசினார். குறிப்பாக, ரஹீலா best entertainer என அறிவிக்கப்பட்டார். சூர்யா ரஹீலாவை மீண்டும் ஹாட் சீட்டிற்கு அழைத்து கௌரவப் படுத்தினார். ரஹீலாவின் நகைச்சுவை உணர்ச்சியை மீண்டும் பார்க்க முடிந்தது.
ReplyDeleteநாகராஜன்: நானும் நேற்று நிகழ்ச்சி பார்த்தேன். நம் பதிவை நினைவு வைத்து இங்கு வந்து நேற்றைய நிகழ்ச்சி பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சியாகவும், நெகிழ்வாகவும் உள்ளது
ReplyDelete