கேள்வி: கோபி ராமமூர்த்தி, பெங்களூர்
ஒரு சொத்து வாங்கும் போது அது சம்பந்தமாக வழக்குகள ஏதேனும் நிலுவையில் உள்ளனவா என்று தெரிந்து கொள்ள முடியுமா?
இல்லை திரு. இளங்கோவன். வில்லங்க சான்றிதழில் கடன் விபரங்கள் மட்டும் தான் வரும். வழக்கு விபரங்கள் வராது.
நீதி மன்றத்தின் இடைக் காலதடையையும் மீறி விற்க முயலுவார்களா எனில்.. நீதி மன்றத்தை மதிப்பவர்கள் அப்படி விற்க மாட்டார்கள். எதற்கும் துணிந்தோர் இடை கால தடை இருந்தும் கூட விற்க முயல கூடும். இது போன்ற காரணிகளை கருத்தில் கொண்டே எந்த ஒரு கிரைய பத்திரமும் (Sale deed) எழுதும் போது, அந்த சொத்தில் எந்த வழக்கும் (Dispute ) இல்லை என்றும், அந்த சொத்தை விற்க அவருக்கு எல்லா உரிமையும் உண்டு என்றும் ஒரு வேளை சொத்தில் வழக்கோ வில்லங்கமோ இருந்தால் அவற்றுக்கு விற்பவர் பொறுப்பு எடுத்து சரி செய்து தருவார் என்றும் ஷரத்துகள் போடுவது அவசியமாகிறது.
ஒரு சொத்து வாங்கும் போது அது சம்பந்தமாக வழக்குகள ஏதேனும் நிலுவையில் உள்ளனவா என்று தெரிந்து கொள்ள முடியுமா?
பதில் :
நல்ல கேள்வி. Encumbrance Certificate மூலம் சொத்து மீது ஏதும் கடன் உள்ளதா என அறிய முடியுமே ஒழிய, அந்த சொத்து சம்பந்தமாய் வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா என்பதை அது காட்டாது.
சொத்தை விற்கும் யாரும், அதன் மீது வழக்கு நிலுவையில் இருந்தால் அதைப் பற்றி மூச்சு விட மாட்டார்கள்…. அது தெரிந்தால் யாரும் சொத்தை வாங்க முன் வர மாட்டார்கள் என்பதால்!
இந்நிலையில் சொத்து மீது வழக்கு ஏதும் உண்டா என்பதை அறிய ஒரே வழி ரகசியமாக (Discreet) அக்கம் பக்கம் விசாரித்து பார்ப்பது தான்! அநேகமாய் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சொத்து மீது வழக்கு இருந்தால் தெரிய வாய்ப்புண்டு. அவர் மூலம் இதை தெரிந்து கொண்டு, பின் சொன்னவர் பெயரை சொல்லாமல் சொத்து உரிமையாளரிடம் ” இப்படி ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாமே?” என கேட்காலாம். விஷயம் உங்களுக்கு தெரிந்து விட்டது என்ற பின், அவர் முழு விஷயமும் பகிர வாய்ப்புண்டு!
உண்மையில் கடன்கள் எப்படி Encumbrance Certificate-ல் தெரிகிறதோ, அதே போல் வழக்குகளும் தெரிந்தால் நன்றாயிருக்கும் தான்! அரசு ஏதேனும் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுத்தால் நன்றாயிருக்கும் !
ஆங்கிலத்தில் ” Caveat Emptor ” என்பார்கள். இதற்கு அர்த்தம் “Let the buyer be aware ” – எந்த பொருளையும் வாங்குபவர் தான் ஜாக்கிரதை உணர்வோடு இருக்க வேண்டும். விற்பவர் சிறு சிறு குறைகள் இருந்தாலும் அவற்றை மறைத்து விற்கக் கூடும்தான் ! நாம் தான் தீர விசாரித்து அறிய வேண்டும் !

*******************
கேள்வி : இளங்கோவன்
சொத்தின் மீது உரிமை கோரி ஒருவர் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம், தற்போதைய உரிமையாளர் அந்த சொத்தை விற்பதற்கு, இடைக்காலத்தடை விதித்தால், அது வில்லங்க சான்றிதழில் வர வாய்ப்பு உள்ளதா? அதையும் மீறி, அந்த சொத்து விற்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா?
பதில் :
சொத்தின் மீது உரிமை கோரி ஒருவர் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம், தற்போதைய உரிமையாளர் அந்த சொத்தை விற்பதற்கு, இடைக்காலத்தடை விதித்தால், அது வில்லங்க சான்றிதழில் வர வாய்ப்பு உள்ளதா? அதையும் மீறி, அந்த சொத்து விற்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா?
பதில் :
இல்லை திரு. இளங்கோவன். வில்லங்க சான்றிதழில் கடன் விபரங்கள் மட்டும் தான் வரும். வழக்கு விபரங்கள் வராது.
நீதி மன்றத்தின் இடைக் காலதடையையும் மீறி விற்க முயலுவார்களா எனில்.. நீதி மன்றத்தை மதிப்பவர்கள் அப்படி விற்க மாட்டார்கள். எதற்கும் துணிந்தோர் இடை கால தடை இருந்தும் கூட விற்க முயல கூடும். இது போன்ற காரணிகளை கருத்தில் கொண்டே எந்த ஒரு கிரைய பத்திரமும் (Sale deed) எழுதும் போது, அந்த சொத்தில் எந்த வழக்கும் (Dispute ) இல்லை என்றும், அந்த சொத்தை விற்க அவருக்கு எல்லா உரிமையும் உண்டு என்றும் ஒரு வேளை சொத்தில் வழக்கோ வில்லங்கமோ இருந்தால் அவற்றுக்கு விற்பவர் பொறுப்பு எடுத்து சரி செய்து தருவார் என்றும் ஷரத்துகள் போடுவது அவசியமாகிறது.
சொத்து வாங்கும் முன் :
1) வில்லங்கம் ஏதும் இல்லையென வில்லங்க பத்திரம் பார்ப்பதும்,
2) வழக்கு இல்லை என்பதற்கு அருகில் உள்ளோரிடம் விசாரிப்பதும்,
3) சரியான முறையில் கிரைய பத்திரம் எழுதுவதும்
மிக மிக அவசியம் !
***********
வல்லமை மே 11 இதழில் வெளியானது

********
நண்பர்களே சட்டம் குறித்த உங்கள் கேள்விகளை பின்னூட்டத்திலோ, snehamohankumar@yahoo.co.in என்கிற மெயிலுக்கோ எழுதுங்கள்.
எனக்கு தெரியாத தகவல் வில்லங்கத்தில் வழக்கு விபரம் வாராது என்பது நல்ல தகவல்! மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ் Profile படம் மாத்திடீங்க பல நல்லா இருக்கு
ReplyDeleteமுதல் கேள்வி பலருக்கும் எழுகின்ற ஒன்று. எச்சரிக்கையுடன் இருக்க உதவும் தங்கள் பதில்.
ReplyDeleteவழக்கு தொடர்கிறதே மோகன்...
ReplyDeleteஇது போன்ற விஷயங்களில் படித்தவர்களே ஏமாந்து விடுகிறார்கள். பயனுள்ள தகவல்.
ReplyDeleteஒரு சொத்தை வாங்க முனைந்திருப்பவர்கள் உரிய வழக்கறிஞரைக் கொண்டு நாளிதழில் அறிவிப்பு செய்து யாருக்கேனும் ஆட்சேபனை உண்டா என்று கேட்பது ஒரு வழி. ஒரு சொத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிற அதன் உரிமையாளர் விற்க முயன்றால் வழக்கு தொடர்ந்திருக்கும் எதிர்த்தரப்பு வாதி ‘வழக்கு இருக்கிறது. வாங்காதே. அது என்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது’ என்று வழக்கறிஞர் மூலம் நாளிதழில் அலறுவார். ஒரு சொத்தை வாங்கியதும் அதை உடனே நம் அனுபோகத்திற்கு ஆட்படுத்திவிட வேண்டும். பிறகு எல்லா வழ்க்குகளும் அரை நூற்றாண்டுகள் நடக்கும். அது ஒரு ஓரமாக நடந்துவிட்டுப் போகட்டும் !
ReplyDeleteநல்ல தகவல்..நன்ற ந
Deleteஉபயோகமான தகவல்கள்.
ReplyDeleteஎன் விகடன் அரிமுகத்துக்கு வாழ்த்துகள்
ReplyDeleteவெற்றிகள் தொடரட்டும்
நன்றி ராமலட்சுமி
ReplyDeleteரெவரி சார்: நீங்கள் கேட்பது புரியலை :((
ReplyDeleteநன்றி முரளி
ReplyDeleteமகுடேஸ்வரன் சார்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி. நீங்கள் சொல்வதும் ஒரு நல்ல அணுகுமுறை தான்
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்
ReplyDeleteநன்றி சென்னை பித்தன் சார். பெரியவரான தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறது
ReplyDeleteவணக்கம்...!
ReplyDeleteஒரு ஆண், மூன்று பெண்கள் பிறந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தில், சில சொத்துகள் (விவசாய நிலங்கள்) அவர்களுடைய தாயாரின் பூர்விக சொத்தாகவும், சில அவர்களது தகப்பனாரின் மூலம் வாங்கப்பட்டதாக உள்ளது...! இம் மூவரின் பெற்றோர்கள் இருவரும் இறந்து விட்ட நிலையில், இவற்றில் எல்லா விவசாய நிலங்களையும் ஆண் வாரிசு மட்டுமே அனுபவித்து வருகிறார்.
1) இந்து மதச் சட்டத்தில் இருப்பது போல், முஸ்லிம் பெண்களுக்கு தன்னுடைய பெற்றோரின் சொத்தில், ஆணுக்குள்ள உரிமை போல், பெண்ணுக்கும் சம உரிமை இருக்கிறதா....?
2) இந்து மதச் சட்டத்தில் இருப்பது போல்,குறிப்பிட்ட ஆண்டுக்கு (1989) பின்னர் திருமணம் ஆன பெண்களுக்கு மட்டுமே, தன்னுடைய பெற்றோரின் சொத்தில் உரிமை இருக்கிறதா...?
3) பெண்ணுக்கும் சமஉரிமை உள்ளதெனில், எந்த விதமான நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் ?
Kindly provide the solution for the above queries. Thanks in Advance.
Thanks
Jameel
This comment has been removed by the author.
ReplyDeleteஎனது தாத்தா 1965 ல் கடனுக்காக வீடு மற்றும் நிலத்தை அடமானமாக வைத்து(பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகியுள்ளது) பணம் பெற்றுள்ளார் .பின்னர் அந்த கடன் தொகையை செலுத்த வேறு ஒருவரிடம் நிலத்தை மட்டும் 1967 பாதி கிரைய தொகையை பெற்று மித தொகையை அடமானகடனை செலுத்த சொல்லி விற்றுள்ளார்(கடன் பற்றிய விபரம் பதிவாகி உள்ளது). பின்னர் 1969 அவர் காலமாகி விட்டார்.1970 ல் அடமான கடன் பெற்றவறுக்கு கிரையம் பெற்றவர் கடன் தொகையை செலுத்த வில்லை என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடன் தொகையை எனது அப்பாவிடம் பெற்று விட்டார்(பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகியுள்ளது).அதன் பிறகு 1977 ல் கிரையம் பெற்றவர் நிலத்தை வேறு நபருக்கு விற்றுள்ளார் அதில் கடன் தொகை பற்றிய விபரம் பதிவில் தெரிவிக்க பட வில்லை.தற்பொழுது இவர் பெயரில் 1977 முதல் பட்டா சிட்டா உள்ளது.
ReplyDelete1: நிலத்தை திரும்ப பெற முடியுமா?
2: பல வருடங்கள் கழிந்து விட்டன தற்பொழுது வழக்கு தொடற மிடியுமா? 12 வருங்களுக்கு மேல் ஆனால் உரிமை கோர முடியாது என்கிறார்களே உண்மையா?
3: நிலம் கிடைக்க தற்போது உள்ள உரிமையாளரிடமா அல்லது தாத்தா கிரையம் கொடுத்தவரிடமா?