Tuesday, May 29, 2012

சென்னை பெட்ரோல் தட்டுப்பாடு: நேரடி அனுபவம்

ஒவ்வொரு முறை பொது தேர்தலில் தோற்கும் போதும் கலைஞர் " சூடு, சொரணையற்ற தமிழர்கள்" என அறிக்கை விடுவார். அறுபது ஆண்டுகளுக்கு மேலாய் தமிழர்களை உன்னிப்பாய் கவனித்து அவர்களின் இந்த குணத்தை exploit செய்பவர் சொன்னால் தவறாகவா இருக்கும்? அப்படி திட்டப்பட்டதை மறந்து அடுத்த ஐந்து ஆண்டில் மீண்டும் தி.மு.க வுக்கே வாக்களித்து, கலைஞர் சொன்னது மெய் என்று நிரூபிக்கும் தமிழர் கூட்டம் ! அப்படி மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் சம்பவம் சென்னையில் நடந்தேறி வருகிறது. பெட்ரோல் தட்டுப்பாடு !

**
ஞாயிறு அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. சென்று திரும்பும் போது அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோல் இல்லை. ஒரு டிராபிக் போலீசிடம் விசாரித்தால், " அப்படியா சார்? எங்கேயும் பெட்ரோல் இல்லையா? எல்லாத்துக்கும் சென்ட்ரல் கவர்மெண்டு தான் சார் காரணம்" என்றார் மம்மியை கண்டு பம்மும் மந்திரி போல ! அருகிலுள்ள மற்றொரு போலிஸ் காரர் " ஆமாப்பா .. எங்கேயும் பெட்ரோல் இல்லை" என்றார். சரி இது தற்காலிகமானது மறு நாள் கிடைக்கும் என வீடு வந்து சேர்ந்தேன்.

திங்கள் கிழமை நிலைமை மோசமானது. அன்று ஒரு கல்யாணத்துக்கு பாடி வரை செல்ல வேண்டி இருந்தது. வீட்டிலிருந்து முப்பது கிலோ மீட்டர். பல பங்குகளில் பெட்ரோல் இல்லை. எங்கு கிடைக்கும் என தேடி, கியூவில் நின்று பெட்ரோல் போடுவதற்குள் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டேன்.

பாடி செல்லும் வரை ரோடில் கண்ட காட்சிகள் பரிதாபம் ! பத்துக்கு ஒன்பது பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தன. இருக்கும் ஒரு பங்கில் கூட்டம் சொல்லி மாளாது. அந்த இடத்தில ரோடை கிராஸ் செய்யவே முடியாத சூழல். ஒரு பக்கம் பாதி வழியில் வண்டி நின்று போனதால் காலி பாட்டிலுடன் பலர் பெட்ரோல் கேட்டு கியூவில் நிற்கிறார்கள். அதற்கு தனி கியூ.

சில இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்றுள்ளனர்.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

"பெட்ரோல் விலை பத்து பெர்சன்ட் ஏறிடுச்சுல்ல.. அதான் எப்படியோ பெட்ரோல் கிடைச்சா போதும்; விலை எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு நாம நினைக்கணும்னு இப்படி பண்றாங்க" இது ஒரு சாரார் கருத்து.

இன்னொரு குருப்: " பெட்ரோல் விலை மறுபடி குறைய போகுது. அதான் பெட்ரோல் பங்குகள் வாங்கி ஸ்டாக் வச்சிக்க மாட்டேங்குது. அதிக விலைக்கு வாங்கிட்டு அப்புறம் கம்மி விலைக்கு அதை நஷ்டத்தில் விக்கனும்னு பாக்குறாங்க"

ஆனால் ஆயில் கம்பனிகள் டிவி மற்றும் பேப்பர் மூலம் சொல்வது வேறாய் உள்ளது. அவர்கள் சொல்வதாவது:

சென்னையில் பெட்ரோல் டிமாண்ட் அதிகம் ஆகிடுச்சு ( அதெப்படி நீங்க விலை ஏத்துன மறுநாளில் இருந்து திடீர்னு டிமாண்ட் அதிகம் ஆகும்?) வர வேண்டிய டாங்குகள் வரலை. அதான் இப்படி ! நாளை டீசல் டாங்கு வந்துடும் மறுநாள் எல்லாருக்கும் டீசல் கிடைக்கும் (அப்போ பெட்ரோல் டாங்கு எப்ப வரும்?)

இவ்வளவு நடந்தும் கூட மத்திய அரசு விலை ஏற்றுவது மட்டும் தான் என் வேலை; மற்றபடி பெட்ரோல் கிடைக்காமல் அல்லாடினால் எனக்கென்ன என்று ஜம்மென்று உட்கார்ந்துள்ளனர்.

அருகில் இருந்து வேடிக்கை பார்க்கும் மாநில அரசும் மக்கள் கஷ்டத்தை மத்திய அரசிடம் எடுத்து சொன்ன மாதிரி தெரிய வில்லை.

அரசியல் வாதிகள் என்பவர்கள் மக்களை சுரண்ட, கொள்ளை அடிக்க மட்டும் தான்; மக்கள் கஷ்டப்பட்டால் அதை நீக்க துளி நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்கிற என் எண்ணம் மீண்டும் ஒரு முறை உறுதி படுகிறது.

இதில் அரசியல் வாதிகள் செய்ய என்ன இருக்கு என கேட்கலாம்:

மக்களின் கஷ்டம் எதுவாயினும் அதனை தீர்க்க வேண்டிய பொறுப்பு Elected representatives-க்கு தான் உண்டு. ஆனால் இவ்விஷயத்தில் மட்டுமல்ல எவ்விஷயத்தில் இறங்கினாலும், தனக்கு எவ்வளவு கமிஷன் வரும் என்று மட்டும் தான் பார்ப்பார்கள் இந்த அரசியல் வியாதிகள் !

மூன்றாம் நாளாக இன்று ஆங்காங்கு சில பெட்ரோல் பங்குகள் மட்டும் திறந்துள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல், ஆனால் அமைதியாக கியூவில் இருக்கிறது.

ரோடில் வண்டிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாய் உள்ளது. அலுவலகத்தில் பார்க்கிங் ஏரியா பாதி காலியாய் உள்ளது !

இத்தகைய நிலை வரும்படி ஏன் விடவேண்டும்? மற்ற மாநிலத்தில் இப்படி இல்லாத போது சென்னை மீது மட்டும் ஏன் இந்த அலட்சியம்?

இனி ஒரு சில நாட்களில் பெட்ரோல் கிடைத்தால் கூட மக்கள் பயத்தில் தங்கள் டேன்க்குகளை முழுதாய் நிரப்பி வைத்து கொள்வார்கள்.

சென்னை மக்கள் சரியான விஷயத்துக்கு சரியான அளவில் கோபப்பட தெரியாதவர்கள். இந்நேரம் இன்னொரு ஊரில் இது நடந்தால் பெட்ரோல் பேங்க் மீது கல்லெறி சம்பவம் உள்ளிட்ட பல கொதிப்பான விஷயம் நடந்திருக்கும். ஆனால் இங்கோ மக்கள் அமைதியாக கியூவில் நிற்கிறார்கள். ஆனால் இந்த சம்பவங்களின் எதிரொலி நிச்சயம் தேர்தலில் தெரியும் !

உபயோகமான தகவல்: அனைத்து ஷெல் (Shell) பங்குகளில் பெட்ரோல் தொடர்ந்து கிடைக்கிறது. மற்ற கடைகளை விட லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகம் என்றாலும், தரம் மற்றும் அளவு சரியாய் இருக்கும். விலை அதிகம் என்பதால் ஷெல் பக்கம் போகாத நான் இப்போது ஷெல்லை தான் நாடி வருகிறேன் !

*******
சமீபத்திய பதிவுகள்:


ஆனந்த விகடனும் வீடுதிரும்பலும்

குளு-மணாலி பயணம் -படங்கள் டிரைலர்

29 comments:

  1. ///விலை எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு நாம நினைக்கணும்னு இப்படி பண்றாங்க" இது ஒரு சாரார் கருத்து. ///

    நிதர்சனமான உண்மை

    ReplyDelete
  2. //நேரடி அனுபவம்//

    விட்டா, இனி கேமரா, மைக்கோடு போய் ‘லைவ் டெலிகாஸ்ட்’டே பண்ணிடுவீங்கபோல!! :-))))

    போனமுறை பெட்ரோல் விலையேற்றத்தின்போதும் இதேமாதிரி தட்டுப்பாடு ஆனதாக நினைவு. அப்படின்னா, //எப்படியோ பெட்ரோல் கிடைச்சா போதும்// என்று மக்களை நினைக்க வைப்பதுதான் நோக்கம்போலத் தெரிகிறது!! :-(((

    கோவா அரசு, மாநில வாட் வரியை முழுமையாக ரத்து செய்ததில், லிட்டருக்கு ரூ.12 குறைந்துள்ளதாம். இங்கே “மக்கள் கண்ணீர் ஆட்சியக் கவுக்கும்”னு மத்திய அரசைப் பாத்து சாபம் விட்ட நம்ம அம்மா, கண்ணீரைத் துடைப்பாங்களா? அதான் டாஸ்மாக்ல கொள்ளை லாபம் வருதுல்ல...

    ReplyDelete
  3. 'இவ்வளவு நடந்தும் கூட மத்திய அரசு விலை ஏற்றுவது மட்டும் தான் என் வேலை; மற்றபடி பெட்ரோல் கிடைக்காமல் அல்லாடினால் எனக்கென்ன என்று ஜம்மென்று உட்கார்ந்துள்ளனர்.

    அருகில் இருந்து வேடிக்கை பார்க்கும் மாநில அரசும் மக்கள் கஷ்டத்தை மத்திய அரசிடம் எடுத்து சொன்ன மாதிரி தெரிய வில்லை.

    அரசியல் வாதிகள் என்பவர்கள் மக்களை சுரண்ட, கொள்ளை அடிக்க மட்டும் தான்; மக்கள் கஷ்டப்பட்டால் அதை நீக்க துளி நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்கிற என் எண்ணம் மீண்டும் ஒரு முறை உறுதி படுகிறது.'

    சரியான கருத்துக்கள்.இந்த கொள்கை மாத்திர்ம் எல்லா மாநிலத்தவருக்கும் , பொருத்த்ம்.

    ReplyDelete
  4. மக்கள் ஒன்றும் புரியாமல் தவிக்கிறார்கள். விடிவு சீக்கிரம் பிறக்கட்டும்.

    //நாளை டீசல் டாங்கு வந்துடும் மறுநாள் எல்லாருக்கும் டீசல் கிடைக்கும் (அப்போ பெட்ரோல் டாங்கு எப்ப வரும்?) //

    இந்தக் கேள்வி எனக்குள்ளும் வந்தது.

    ReplyDelete
  5. மோகன்,

    //சென்னையில் பெட்ரோல் டிமாண்ட் அதிகம் ஆகிடுச்சு ( அதெப்படி நீங்க விலை ஏத்துன மறுநாளில் இருந்து திடீர்னு டிமாண்ட் அதிகம் ஆகும்?) வர வேண்டிய டாங்குகள் வரலை. அதான் இப்படி ! நாளை டீசல் டாங்கு வந்துடும் மறுநாள் எல்லாருக்கும் டீசல் கிடைக்கும் (அப்போ பெட்ரோல் டாங்கு எப்ப வரும்?) //

    செயற்கையாக உருவாக்கப்பட்ட தட்டுப்பாடு தான் இது

    விலை ஏற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்று சொன்னால் அது வரை தினம் ஒரு லிட்டர் போட்டவர்கள் கூட முந்தைய தினம் மாலையே போய் அனைவரும் டேங்க் புல் செய்வார்கள், இதனால் டிமாண்ட் அதிகம் ஆகிவிடும்.

    டீசல்/பெட்ரோல் எல்லாம் முன்னரே பணம் கட்டித்தான் லோட் எடுக்க முடியும். விலை ஏறப்போவதாக அறிவிக்க உள்ள இரண்டுகளுக்கு முன்னர் யாருக்கும் லோட் அனுப்பாது எண்ணை நிறுவனங்கள். இதுவும் ஒரு காரணம்.

    மேலும் இப்போது விலையைக்குறைக்க உத்தேசித்து உள்ளதாக ஒரு தகவலும் வந்துள்ளது சுமார் ரூ 1.80 குறைப்பார்களாம். எனவே விலை குறைப்பு அறிக்கை வரும் வரை பெட்ரோல் பங்க்காரர்களும் லோட் எடுக்க விரும்பமாட்டார்கள்.

    அடுத்து டீசல் விலை வேறு ஏறப்போகுதாம், இதுக்கு ஒரு எளிய தீர்வை எனதுப்பதிவில் சொல்லியுள்ளேன்.

    BIO-DIESEL

    சமையல் எண்ணையில் இருந்து பயோ டீசல் வீட்டிலேயே தயாரிக்கும் வழி சொல்லியுள்ளேன், முடிந்தால் செய்து பார்க்கலாம்,பின் விளைவுகளுக்கு அடியேன் பொறுப்பல்ல.

    ----------

    ஆமாம் டாஸ்மாக்குல நாங்க குடுக்கிற காசு வச்சு இவங்களுக்கு பெட்ரோல் வாங்கி தந்தால் ஜாலியா ஊர் சுத்துவாங்களாம்.அதுக்கு எங்க சரக்கு காசு தான் வேண்டுமா இந்தம்மாவுக்கு. என்ன நியாயம் இது?

    ReplyDelete
  6. \\கலைஞர் " சூடு, சொரணையற்ற தமிழர்கள்" என அறிக்கை விடுவார்.\\ அதெல்லாம் இருக்கிறவன் எனக்கெப்படி ஓட்டு போட்டிருக்க முடியும் என்று நினைத்திருப்பார்.

    ReplyDelete
  7. அடுத்து டீசல் விலை வேறு ஏறப்போகுதாம், இதுக்கு ஒரு எளிய தீர்வை எனதுப்பதிவில் சொல்லியுள்ளேன்.

    BIO-DIESEL

    சமையல் எண்ணையில் இருந்து பயோ டீசல் வீட்டிலேயே தயாரிக்கும் வழி சொல்லியுள்ளேன், முடிந்தால் செய்து பார்க்கலாம்,பின் விளைவுகளுக்கு அடியேன் பொறுப்பல்ல.

    ----------
    யார் பொறுப்பு ?

    ReplyDelete
  8. கூட்டுக் கொள்ளையடிப்பதில் எல்லோரும் சேர்ந்து கொள்கிறார்கள். இதில் பாகுபாடு காட்டுவதில்லை.
    நன்றி.

    ReplyDelete
  9. வாகனங்களுக்கு அடிமையாகி விட்ட நாம் எவ்வளவு விலை ஏற்றம் தட்டுப்பாடு வந்தாலும் சில நாட்களில் அவற்றை மறந்துவிடுவோம். அரசாங்கமும் பொறுப்பற்ற முறையில் இதைக் கையாள்கிறது.
    டீசலை விட பெட்ரோல் அதிக அளவில் வீணடிக்கப் படுகிறது என்றே கருதிகிறேன்.மக்களும் முடிந்த வரை பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

    ReplyDelete
  10. வரலாற்று சுவடுகள் : நன்றி நண்பரே

    ReplyDelete
  11. ஹுஸைனம்மா said...

    //நேரடி அனுபவம்//

    விட்டா, இனி கேமரா, மைக்கோடு போய் ‘லைவ் டெலிகாஸ்ட்’டே பண்ணிடுவீங்கபோல!! :-))))

    **
    நீங்க வேற? நேரடி ரிப்போர்ட் என டெரரா தலைப்பு வைக்க வேணாமா என அய்யாசாமி திட்டுறார் !
    ***
    தமிழக அரசு வரியை சற்று குறைத்தால் நல்லது. ஆனால் செய்ய மாட்டார்கள். இலவசங்களுக்கு பணம் வேணும்

    ReplyDelete
  12. வெற்றிமகள் மேடம்: நன்றி

    ReplyDelete
  13. அமைதி அப்பா: இன்று நிலைமை சீராகிறது என்று தெரிகிறது நன்றி

    ReplyDelete
  14. விரிவான கருத்துக்கு நன்றி வவ்வால். தங்கள் பதிவு வாசித்தேன்

    ReplyDelete
  15. தாஸ்: நன்றி

    ReplyDelete
  16. கோவிந்தராஜ் சார்: வருகைக்கு நன்றி

    ReplyDelete
  17. ரத்னவேல் ஐயா: நன்றி

    ReplyDelete
  18. உண்மை தான் முரளி நன்றி

    ReplyDelete
  19. This article has become No: 1 for the day in Tamil Manam:

    வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகைகள்
    சூடான இடுகைகள்
    இன்றுஇந்த வாரம்
    சென்னை பெட்ரோல் தட்டுப்பாடு: நேரடி அனுபவம்

    மோகன் குமார்

    ReplyDelete
  20. விலையேத்தத்தை மறக்க வைக்க இப்படியான திசை திருப்பல்கள் நடத்தப்படுதோன்னு தோணுது.

    ReplyDelete
  21. நடை, சைக்கிள், குதிரை வண்டிகள் அப்புறம் கிராமப் புறங்களில் மாட்டுவண்டி போன்றவற்றை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். வறட்டு கவுரவுத்துக்காக அவனவனும் கார் வாங்கித் தள்ளுவதை நிறுத்த வேண்டும், அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் முடிந்த வரை அலுவலக வாகனங்களையே பயன்படுத்த வேண்டும், மீறி கார் வேண்டுமென்றால் நான்கு பேராவது செல்ல வேண்டும். சூரிய சக்தியைக் கொண்டு மின் விளக்குகள் வீடுகளுக்கு அமைக்க வேண்டும். இன்னும் எந்தெந்த வழிகளில் பெட்ரோலைச் சேமிக்க முடியுமா அதையெல்லாம் செயல் படுத்த வேண்டும். பெட்ரோலை நம்பினால் எதிர்க்காலம் பனால்தான். நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை முறையே நம்மைக் காக்கும்.

    ReplyDelete
  22. \\
    "பெட்ரோல் விலை பத்து பெர்சன்ட் ஏறிடுச்சுல்ல.. அதான் எப்படியோ பெட்ரோல் கிடைச்சா போதும்; விலை எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு நாம நினைக்கணும்னு இப்படி பண்றாங்க" இது ஒரு சாரார் கருத்து.\\ தட்டுப் பாடு எல்லா மாநிலங்களிலுமா இல்லை சென்னையில் மட்டும் தானா? பெங்களூரில் தட்டுப் பாடு இல்லையே!! எல்லா இடங்களிலும் என்றால் தான் இது உண்மையாகும்? மேலும், உள்ளுக்குள், ஜெயலலிதாவுக்கு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அவ்வளவும் மத்திய அரசு செய்து வருகிறது. இதை தூண்டி விடுவதே தமிழகத்தில் இருந்து சென்றிருக்கும் காகிராஸ் மற்றும் தி.மு.க எம்பிக்கள் தான். அதாவது இது கேவலமான ஆட்சி என்று மக்கள் பேசி வெறுப்படைய வேண்டும், அதன் பலனை அடுத்த தேர்தலில் அறுவடை செய்து கொள்ளலாம். எவ்வளவு கேல்வமான ஜந்துக்களாக இருக்கானுங்க பாருங்க. மக்களுக்கு நன்மை என்று எவனும் சிந்திப்பதில்லை, எனக்கு அதில் என்ன வரும் என்றுதான் பார்க்கிறார்கள். இவனுங்களை செ........பால அடிக்கணும்.

    ReplyDelete
  23. 5000 ரூபா இருந்தா excel பைக் வாங்கிடுறாங்க, பத்தாயிரம் ரூபா இருந்தா அப்பாச்சி ௦வாங்கிடுறாங்க, யாருக்குமே சைக்கிள் உபயோகபடுத்தலாம் என்ற எண்ணம் வருவதே இல்லை. கழிவறை தவிர மற்ற எல்லா இடத்திற்கும் பைக்ல பொய் டிராபிக் உண்டாக்குகிறார்கள், இப்படி இருந்தால் பெட்ரோல் விலை இவங்களுக்கு வாட்டர் பாக்கெட் விலையிலா கிடைக்கும்? ௦

    ReplyDelete
  24. அமைதிச்சாரல் said...

    விலையேத்தத்தை மறக்க வைக்க இப்படியான திசை திருப்பல்கள் நடத்தப்படுதோன்னு தோணுது.

    ***

    பலருக்கும் இதே எண்ணம் தான் நன்றி அமைதி சாரல்

    ReplyDelete
  25. தாஸ்: உங்களை போல எனக்கும் அரசியல் வியாதிகளை கண்டால் சுத்தமா பிடிக்காது. ஆனா உங்களுக்கு அம்மாவை கொஞ்சம் பிடிக்கும் போல் தெரியுது :))

    ReplyDelete
  26. செல்வம்: தங்கள் கருத்துக்கு நன்றி; பெட்ரோல் சென்னையில் மட்டும் ஏன் கிடைக்காமல் போனது என்ற வருத்தத்தில் தான் இக்கட்டுரை எழுதி உள்ளேன்.

    தனிப்பட்ட முறையில் பல நேரங்களில் ரயில், பஸ்ஸில் சென்று எரிபொருள் சேமிப்பவன் தான் அடியேனும்

    ReplyDelete
  27. \\ஆனா உங்களுக்கு அம்மாவை கொஞ்சம் பிடிக்கும் போல் தெரியுது :))\\ மஞ்சள் துண்டு மேல இருக்கும் அளவுக்கு அவங்க மேல வெறுப்பு இல்லை, அவ்வளவுதான்!!

    ReplyDelete
  28. \\உங்களை போல எனக்கும் அரசியல் வியாதிகளை கண்டால் சுத்தமா பிடிக்காது.\\ மஞ்சள் துண்டு மாதிரி மக்கள் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் பாடையில் போகும் வயதில் கூட அழித்து பெண்டாட்டி பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பவனைக் கண்டால்தான் பிடிக்காது. காமராஜர் மாதிரி ஒரு அரசியல் வாதி இருந்தால் நிச்சயம் எனக்குப் பிடிக்கும்!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...