Thursday, May 3, 2012

டிவியில் மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் எப்புடி ?– ஒரு பார்வை

   முன்பெல்லாம் டிவியில் தீபாவளிக்கு தான் சிறப்பு நிகழ்சிகள் இருக்கும். இப்போது எந்த விடுமுறை தினம் என்றாலும், மனிதர்களை கட்டிப்போடும் விதமாய் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டு. மே தின டிவி நிகழ்ச்சிகள் பற்றி ஒரு விமர்சனம் இதோ:



சன் டிவியில் சிரிப்பு கொண்டாட்டம் என ஒரு நிகழ்ச்சி. சின்னி ஜெயந்த் மற்றும் சொர்ணமால்யா இணைந்து வழங்கினர். பெரும்பாலும் மொக்கையாக இருந்தாலும், விஜயகாந்த் மாதிரி பேசியவர் சொன்ன காமெடி நல்லா இருந்தது ” என் துண்டை தோள் மேலே போட்டிருந்தேன்னா, பாக்கெட்டில் பத்து காசு இல்லை; அதை மறைக்க போட்டிருக்கேன்னு அர்த்தம். தலையை சுத்தி கட்டியிருந்தா குடை எடுத்துட்டுவர மறந்துட்டேன்னு அர்த்தம். இடுப்பில சுத்தி கட்டியிருந்தா வேட்டி லூசா இருக்கு கழண்டு விழுந்துடும்னு அர்த்தம்”

வடிவேலு, மக்களுடன் மண் பாண்டம் செய்யும் அனைத்து ஸ்டெப்களும் பார்ப்பதை சன் டிவியில் காண்பித்தது நன்றாய் இருந்தது. நடு நடுவே வடிவேலு ” என் காமெடி எது பிடிக்கும்? ” என அனைவரிடமும் கேட்டு ” தினம் சாயந்திரம் ஆனா என் காமெடி தான் பாப்பீங்க இல்லே?” என சுயமகிழ்ச்சி அடைந்து கொண்டது ஒரு புறம் இருந்தாலும், பானை செய்யும் விதத்தையும் அந்த தொழிலாளர்களையும் உழைப்பாளர் தினத்தில் காட்டியது அருமை.

விஜய் டிவியில் நண்பன் நூறாம் நாள் நிகழ்ச்சி பார்க்க சுவாரஸ்யம் ! விஜய்யின் படத்தை ஒருவர் இரு கைகளாலும் வரைய, நிகழ்ச்சியில் ஆடிய டீமும் செமையாக ஆடினர். சிவ கார்த்திகேயன் மற்றும் நீயா நானா கோபி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். சிவா செம அட்டகாசம் செய்து சிரிக்க வைத்தார். இவர் தொல்லை தாங்க முடியாமல் விஜய்” நீ தான் ஹீரோ ஆகிட்டேல்ல?அப்புறம் ஏன் இந்த வேலை எல்லாம் பாக்குறே?” என்று கேட்க ஏக சிரிப்பு! நடிகர் சத்யன் நண்பன் பட ஷூட்டிங்கின் போது தன தந்தை இறந்து விட, அதன் பின் சத்யராஜ் தான் தனக்கு எமோஷனல் சப்போர்ட் ஆகவும், தந்தை ஸ்தானத்திலும் இருப்பதாகவும் சொன்னது நெகிழ்வாய் இருந்தது.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் எடுக்கத் தவறிய காட்சிகள் சன் டிவியில் காட்டினர். மிக எதிர்பார்ப்புடன் பார்த்தாலும் அந்த காட்சிகள் அவ்வளவு சுவாரஸ்யம் ஆக இல்லை. உண்மையில் சிரிப்பு வராத காட்சி மேல் தான் கை வைத்து எடிட் செய்துள்ளனர். சந்தானத்தின் ஒரு டயலாக் மட்டும் தேறியது: ” என முன்னாடி உட்கார்ந்து குடிக்காதே நீ! பாட்டிலை முகர்ந்து பாத்துட்டு குடிக்கிறேன்னு சொல்றவன் என் முன்னாடி உட்கார்ந்து குடிச்சா, குடிச்சே மஞ்சா காமாலை வந்து செத்து போன என தாத்தா பெருமை என்னா ஆவறது?”

கலைஞர் டிவியில் எடிசன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி தரத்திலும் சரி எடுத்த விதத்திலும் சரி ரொம்ப சுமார். அதே கலைஞரில் எல்லா சீரியல் குடும்பத்திற்கும் மியூசிகல் சேர் நிகழ்ச்சி வைத்தனர். மற்றவர்களை ஏமாற்றி, தனக்கு முன் ஓடுபவரை விட சற்று தூரம் விட்டு (அப்போது தானே ஏதாவது ஒரு நாற்காலியில் உட்கார முடியும்?) ஓடுபவர் கடைசி ரவுண்ட் வரை வந்து சில நேரம் வெற்றியும் பெற்றனர்.

எடிட்டர் மோகனின் எழுபதாவது பிறந்த நாளை அவர் மகன்கள் ராஜா மற்றும் ஜெயம் ரவி திரை உலக பிரபலங்களை அழைத்து கொண்டாடியதை காட்டினர். இயக்குனர் ராஜா தன் தந்தை பிறந்த நாள் அழைப்பிதழை ஒரு பிலிம் துண்டில் அச்சிட்டு அனைவருக்கும் அனுப்பி, வியக்க வைத்து விட்டாராம்!

ஜெயா டிவியில் ” மின்சார சிக்கனம் அதிகம் செய்வது ஆண்களா? பெண்களா?” என்கிற தலைப்பில் ஒரு பட்டி மன்றம்! மின் சிக்கனம் பற்றிய இந்த பட்டி மன்றத்தை ஏற்பாடு செய்தது யார் தெரியுமா? தமிழ் நாடு மின்சார வாழிய ஊழியர்கள் ! தமிழ் நாட்டில் மின்சாரத்தை சரியான முறையில் அம்மா விநியோகிப்பதாகவும், மின் வாரியத்தின் பங்கு பாராட்டும் விதத்தில் இருப்பதாகவும் எல்லாரும் பேசினார். நோ கமண்ட்ஸ்!!

விஜய்யில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளி வர இருக்கும் ” வழக்கு எண் 18 /9 ” படம் குறித்து மிஷ்கின், வெற்றி மாறன், சமுத்திர கனி, பிரபு சாலமன், சசி உள்ளிட்ட பல இயக்குனர்கள் வந்து வாழ்த்து மழை பொழிந்தனர். அனைவரும் படம் பிரிவியூ ஷோ பார்த்து விட்டு ஆஹா ஓஹோ என புகழ்ந்தனர். நாமும் பாராட்டும் படி உள்ளதா என்பது இன்னும் சில நாளில் ( மே 4 அன்று) தெரிந்துவிடும்.

காமிராமேன் ரவிவர்மன் ஜெயாவில் தன் அனுபவம் பகிர்ந்தது நன்றாய் இருந்தது. ஷங்கர், கமல், கெளதம் மேனன் போன்ற பிரபல இயக்குனர்/ நடிகர்களுடன் பணியாற்றிய வித்தியாசமான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – உழைப்பாளர் தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஒரு பெண் எந்த லைப் லைனும் எடுக்காமல் மூணு லட்சத்து இருபதாயிரம் ஜெயித்தார். பின் ஒரு கேள்விக்கு தவறாக பதில் தந்து அவுட் ஆகி விட்டார். லைப்லைனாவது பயன் படுத்தியிருக்கலாம்! இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளராக ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சென்னை போக்குவரத்துக் கழக டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் வந்திருந்தனர்.

சன் டிவி மதியம் ராஜ பாட்டை என்கிற மகா தோல்வி படம் போட்டது. அன்று மாலை முதலில் “போக்கிரி ” என அறிவித்திருந்தது சன் டிவி. பின்னர் விஜய்யில் நண்பன் வருவதால், அதற்கு சமமான புது படம் போட்டால் தான் எடுபடுமென சன்னில் காவலன் என மாற்றி விட்டார்கள்! (இந்த படம் வெளி வந்த போது தியேட்டர் கிடைக்காமல் செய்தவர்கள் இன்று தங்கள் சேனலில் அந்தப் படத்தை போடுகிறார்கள்! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா !!)

ஒரே நேரத்தில் நண்பன், காவலன், விண்ணைத் தாண்டி வருவாயா மூன்றும் ஒளிபரப்பாக, முக்கியமாக நண்பனும் அதன் விளம்பர இடைவேளையில் பிற படங்களும் பார்க்கிற மாதிரி ஆயிற்று. நண்பனும் சரி, அதன் ஒரிஜினலான த்ரீ இடியட்சும் சரி எப்போது பார்த்தாலும் சில இடங்களிலாவது கண்ணீர் வராமல் போகாது. பத்து நிமிடத்துக்கொரு முறை ஐந்து நிமிட விளம்பரங்கள் வந்த போதும் கூட நண்பன் நெகிழ்த்தவே செய்தான்!

ஜெயா டிவியில் நடன இயக்குனர் ரகுவின் ஐம்பதாவது வருட திரை உலக வாழ்வுக்கு பாராட்டு விழா காட்டி விட்டு இரவு ஏழு மணி முதல் வழக்கமான சீரியல்களுக்கு போய் விட்டார்கள். ராஜ் டிவியும் கூட மாலை வழக்கமான சீரியல்கள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டது. சீரியல்கள் வந்ததும் பெண்கள் கைக்கு ரிமோட் போக ஆண்கள் வழமை போல் கணினிக்கு வந்து சேர்ந்தனர்.

இவ்வாறாக கழிந்தது  ஒரு சாதாரண தமிழனின்  மே தினம்!
************

வல்லமை மே 2 இதழில் வெளியானது !


30 comments:

  1. உழைப்பாளர் தினத்தில் ரொம்ப உழைச்சிருக்கீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க.

    ReplyDelete
  2. ஹி ஹி என்னத்த உழைக்குறது ! டிவி பார்க்கும் போதே பக்கத்தில் ஒரு துண்டு சீட்டு மற்றும் பேனா. அவ்வப்போது ஒரு வரி குறிப்பு எழுதிட்டு, நாப்பது நிமிஷத்தில் டைப் அடிச்சாச்சு; இதான் தொழில் ரகசியம்

    நன்றி ஹாலிவுட் ரசிகன்

    ReplyDelete
  3. வெரிகுட்! டிவி நாடகத்திக்கும் விமர்சனம் போடுங்க....திருமதி செல்வம்..அத்திப்பூக்கள்.....ஹஹ

    ReplyDelete
  4. நமக்கு மே தினம் கம்பெனில போச்சு.....

    ReplyDelete
  5. டிவியில் மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் எப்புடி ?– ஒரு பார்வை"

    அருமையாய் உழைப்பாளர் தினம் கொண்டாடியதற்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. //வீடு சுரேஸ்குமார் said...
    வெரிகுட்! டிவி நாடகத்திக்கும் விமர்சனம் போடுங்க....திருமதி செல்வம்..அத்திப்பூக்கள்.....ஹஹ//

    அருமையான யோசனை.

    ReplyDelete
  7. சொர்ணமால்யா....?! மிஸ் பண்ணிட்டேனோ?!
    நண்பன் பொறுமையாக முக்கால் பாகம் பார்த்தேன். அப்புறம் தூங்கி விட்டேன்.
    புத்தகம் படிப்பதில் பெரும் நேரம் செலவழித்தேன்.

    ReplyDelete
  8. வீடு சுரேஸ்குமார் said...

    வெரிகுட்! டிவி நாடகத்திக்கும் விமர்சனம் போடுங்க....திருமதி செல்வம்..அத்திப்பூக்கள்.....ஹஹ

    **

    நான் சீரியலே பாக்குறதில்லை சுரேஷ். வீட்டுக்கு தினம் போகும் போது சில ஹிந்தி டப்பிங் சீரியல் பாப்பாங்க. ஒரே அழுகை சத்தம் தான். இதுக்காகவே லேட்டா போகலாம்னு தோணும்

    ReplyDelete
  9. பிரகாஷ்: மே தினம் ஆபிஸ் வைக்கிறாங்களா? கண்டிப்பா லீவு விட வேண்டிய நாட்களில் அதுவும் ஒண்ணாச்சே?

    ReplyDelete
  10. இராஜராஜேஸ்வரி : நன்றிங்கோ. பின்னே? இந்த மாதிரி நிகழ்ச்சி எடுக்கவும் எவ்ளோ பேர் உழைச்சிருக்காங்க? :))

    ReplyDelete
  11. சிவா : ஏஏஏன் :))

    ReplyDelete
  12. ஸ்ரீராம்: உங்களிடம் நண்பன் பற்றி கேட்க நினைத்ததை சரியா சொல்லிட்டீங்க. இனி அடிக்கடி விஜயில் இந்த படம் போடுவாங்க. இன்னொரு முறை பிற்பகுதி பாருங்க.

    சொர்ணமால்யா? வந்த புதிதில் நான் கூட ரசித்தேன். ஆனால் இப்போ? "மாமிக்கு மாமி" மாதிரி இருக்கிறார். (ஒரு முறை நேரில் பார்த்து மிரண்டு போனேன்) . இந்த நிகழ்ச்சியில் சின்னி ஜெயந்தே குண்டா இருந்தார். அவரை போல ரெண்டு மடங்குக்கும் மேல் இருந்தார். நல்லவேளை நீங்க பாக்கலை.

    ReplyDelete
  13. வணக்கம் மோகன்குமார்.உங்க பக்கம் வந்திருக்கேன்....!

    எல்லாத் தொலைக்காட்சி நிகழ்சிகளையும் சின்னதாகத் தொகுத்திருக்கிறீங்க அழகா.கோபிநாத்,சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிகள் எனக்கும் பிடிக்கும்.நேரடியாகப் நிகழ்சிகளைப் பார்க்கமுடியாது எனக்கு.ஆனாலும் இணையத்தில் பார்த்துக்கொள்வேன் !

    ReplyDelete
  14. Anonymous6:08:00 PM

    எல்லாருக்கும் சேர்த்து நீங்க மட்டுமே டி வி பார்த்துட்டீங்க போல...

    ஜெ ட்ட அடுத்த முறை பேசறப்ப முதல்ல விடுமுறைய கட் பண்ண சொல்லனும்...

    ReplyDelete
  15. நன்றாக இருக்கு...


    எனது பார்வை - பார்க்க தவறக்கூடாத நிகழ்ச்சிகள் மட்டும்தான் பார்ப்பேன்., படங்கள் பார்ப்பதில்லை, காரணம் நல்ல படங்களை தியேட்டரில் பார்த்துவிடுவதால்....இரண்டாவது முறை பார்த்து நேரத்தை வீணாக்காமல் வேறொரு படம் பார்க்கலாமே என்பதால்...

    ReplyDelete
  16. எந்தெந்த சிறப்பு நிகழ்ச்சிகளை பார்க்கலாம்னு ஒரு பதிவு, பார்த்ததுக்கப்புறம் நிகழ்ச்சிகளை பற்றிய விமர்சனம்னு ஒரு பதிவு....நீங்க அடிச்சு விளையாடுங்க :) #லீவு நாள்லயும் ஆஃபிசுக்கு போய் அவதிப்படுவோர் சங்கம்

    // ராஜ் டிவியும் கூட மாலை வழக்கமான சீரியல்கள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டது.//

    இன்னுமா இந்த சேனலை பார்க்கறீங்க? :))

    ReplyDelete
  17. என்னது இதை ஒரு வெப்சைட்டுல வெளியிட்டிருக்காங்களா... அப்ப அந்த சைட்டு எவ்வளவு மொக்கையான சைட்டா இருக்கும்...???

    ReplyDelete
  18. உங்களின் படைப்பை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன்.

    http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_04.html

    ReplyDelete
  19. நன்றி ஹேமா . நீங்கள் கவிஞர் என்பதை என்று தான் அறிந்தேன். தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  20. நன்றி ரெவரி

    //ஜெ ட்ட அடுத்த முறை பேசறப்ப முதல்ல விடுமுறைய கட் பண்ண சொல்லனும்...//

    ஹா ஹா

    ReplyDelete
  21. உங்கள் கருத்து சரியே சர்புதீன் நன்றி

    ReplyDelete
  22. ரகு said

    / ராஜ் டிவியும் கூட மாலை வழக்கமான சீரியல்கள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டது.//

    இன்னுமா இந்த சேனலை பார்க்கறீங்க? :))

    ரகு: அதில் ரெண்டு டப்பிங் சீரியல் வீட்டில் பார்ப்பாங்க ஒரே அழுகாச்சி

    ReplyDelete
  23. பிரபா: தொலை காட்சி நிகழ்ச்சி பத்தி எழுதினா குறைந்தது ஆயிரம் பேருக்கு மேல் அந்த பதிவை படிக்கிறாங்க. இதனால் தான் இதை வல்லமையும் வெளியிட்டுள்ளது.

    ReplyDelete
  24. நன்றி கணேஷ் அவசியம் வாசிக்கிறேன். நினைவு வைத்து சொன்னமைக்கும் இங்கு பகிர்ந்தமைக்கும் நன்றி

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. தமிழ் மணம் திரைமணத்தில் No:3 ஆக இப்பதிவு


    சூடான சினிமா இடுகைகள்
    அஞ்சலி கலகல பிகரா? கிளுகிளு பிகரா?
    தமிழ்வாசி பிரகாஷ்

    வழக்கு எண் 18/9.-ஆன்மாவை தொடும் படம் -நடிகர் பார்த்திபன் + ...
    indrayavanam.blogspot.com

    டிவியில் மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் எப்புடி ?– ஒரு ...
    மோகன் குமார்

    ReplyDelete
  27. பிரபா: வீடு திரும்பலில் ஒரு பதிவு எழுதியது மூலமாக இரண்டு ஏழை பெண்களுக்கு கல்வி உதவி தொகை கிடைத்தது. அரசு பள்ளிகளுக்கான உதவி, கண் தெரியா மாணவர்களுக்கான பள்ளியில் நடத்தும் போட்டிகள் என நிச்சயம் பல நல்ல விஷயங்கள் இங்கு பகிரப்படுகிறது. அப்போதெல்லாம் எட்டி பார்க்காத நீங்கள் உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் எழுதப்படும் போது உடனே ஆஜராகி ஒரு stinking கமன்ட் போட்டு போகிறீர்கள் ! இது இங்கு மட்டுமல்ல எல்லா பதிவர்கள் பதிவிலும் பார்க்கிறேன். நல்ல விஷயங்களை பார்ப்பதே இல்லை என்பதையும், கெட்ட விஷயங்களை மட்டுமே பார்ப்பேன்; விமர்சிப்பேன் என்கிற attitude சரியா என யோசியுங்கள்

    இந்த பதிவு நல்ல பதிவு; இதை ஏன் விமர்சிக்கிறீர்கள் என்று நான் சொல்லவில்லை. இது மொக்கை பதிவாகவே இருக்கட்டும். எனது வருத்தம் அதுவல்ல. எனக்கு தெரிந்த ஒரு நண்பர் பல இடங்களிலும் இப்படி நடந்து கொள்கிறாரே என்பது தான் வருத்தம் !

    மற்றவர்களை மட்டம் தட்ட மட்டுமே பின்னூட்டத்தில் நீங்கள் எட்டி பார்க்கிறீர்களே இது சரியா ? இல்லை நான் இப்படி தான் இருப்பேன் என்றால் அது உங்கள் விருப்பம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் இதே attitude-ஐ பின்பற்றினால் சொல்வதற்கு ஏதும் இல்லை.

    ReplyDelete
  28. உஸ்ஸ்ஸப்பா...

    அந்த பின்னூட்டத்தை போடும்போதே நீங்க இப்படி தான் ஏதாவது எடக்கு பண்ணுவீங்கன்னு மனசுக்குள்ள ஒரு மணி அடிச்சது... தப்பு பண்ணிட்டேன்... மன்னிச்சிடுங்க... இனி பகிர்வுக்கு நன்றி போட்டாப்போச்சு :)

    அண்ணே... நான் உங்களுடைய, மற்ற நண்பர்களுடைய பதிவுகள் அனைத்தையும் தினமும் வாசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்... பின்னூட்டம் போடுவது எப்போதாவது Relaxed ஆக இருக்கும்போது மட்டுமே செய்வது... சும்மாக்காட்டி நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றின்னு போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை... நண்பர்கள் தானே என்று கொஞ்சம் நக்கலடிப்பேன்... அதற்கு பெயர் மட்டம் தட்டுவது அல்ல... எனக்கு தெரிந்தவரையில் யாரும் என்னுடைய பின்னூட்டங்களை இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொண்டதில்லை... உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு நினைக்கிறேன்...

    நாங்களும் மெயில்ல அனுப்புனதையே காப்பி பேஸ்ட் பண்ணுவோம் :)

    ReplyDelete
  29. பிரபா: விரிவான விளக்கத்துக்கு நன்றி.

    மெயிலிலும் அனுப்பியதுக்கு காரணம் நீங்கள் பின்னூட்டத்தை மறுபடி வந்து பார்ப்பீர்களோ இல்லையோ என்கிற
    எண்ணத்தில் தான்

    ReplyDelete
  30. நிகழ்ச்சி பாத்து கமண்டவும் ஹஹா!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...