சச்சினுக்கு எம். பி பதவி
சச்சினுக்கு ராஜ்யசபா எம். பி பதவி தந்தது சற்று சர்ச்சையை கிளப்பி உள்ளது. சிவசேனா இது பற்றி " காங்கிரசிடம் ஜாக்கிரதையாக இருங்கள்" என எச்சரிக்கிறது ! இன்னொரு பக்கம் "கங்குலிக்கு எம். பி பதவி குடுங்க" என மேற்கு வங்க கம்யூனிஸ்ட் எம். பி.க்கள் குரல் எழுப்புகின்றனர். ( சச்சின்-கங்குலி ஒன் டே பார்ட்னர்ஷிப் போல இங்கும் சேர்ந்து ஆடவா?) மஞ்சரேக்கர், ஹர்ஷா போகலே உள்ளிட்டோர் சச்சினுக்கு இது ஏன் என்றே கேட்கின்றனர்.
சச்சின் அடைந்துள்ள வெற்றிக்கும் புகழுக்கும் எம். பி பதவி என்பது மிக சிறிது. நம் சிவாஜி கணேசனுக்கு சிறந்த துணை நடிகர் விருது மட்டுமே மத்திய அரசு ஒரு முறை தந்து கௌரவித்தது. அது போல் தான் சச்சினுக்கு எம். பி பதவியும் ! இத்தகைய எம். பி க்கள் யாரும் பாராளுமன்றம் பக்கம் வருவதும், பேசுவதும் இல்லையாம் ! அப்புறம் ஏன் தான் இந்த பதவியோ?
ஆனந்த விகடனில் இருந்து வந்த பணம்
விகடனில் பெண்கள் தினத்துக்கு நமது கட்டுரை வந்தது தெரியும் தானே ! அதற்காக முன்னூறு ரூபாய் பணம் மணி ஆர்டர் செய்திருந்தனர். எதிர் பார்க்கவே இல்லை. மிக மகிழ்ச்சியாய் இருந்தது. தமிழ் பத்திரிக்கைகளில் அனைத்து படைப்புகளுக்கும் அதிக அளவு பணம் தருவது விகடன் தான் !
தமிழக மாணவர்களுக்கு நடக்கும் நல்ல விஷயம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு பருவத்துக்கும் (காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு) தனி தனி புத்தகங்களாக தர உள்ளனர். ஒரே புத்தகத்தினுள் வரலாறு, புவியியல், அறிவியல் அனைத்தும் ரெண்டு அல்லது மூன்று பாடம் இருக்கும். எனவே மொத்த புத்தக எண்ணிக்கையே ஒரு பருவத்துக்கு ஓரிரண்டு மட்டுமே இருக்கும். அடுத்த பருவத்துக்கு வேறு புத்தகம். இது தினம் எடுத்து போகும் சுமையை மட்டும் குறைக்காது. ஒவ்வொரு முறையும் தேர்வுகளே அந்த புத்தகத்திலிருந்து தான் என நினைக்கிறேன். இதனால் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு ஒவ்வொரு முறையும் அதே பாடத்தை திரும்ப திரும்ப படிக்க வேண்டியதில்லை. மேலும் ஒவ்வொரு தேர்வுக்கு இரண்டு அல்லது மூண்டு பாடங்களே எல்லா பாடத்திலும் இருக்கும்.என் பெண் சிறுவயதில் படித்த பள்ளியில் இந்த முறை தான் இருந்தது. அப்போது அப்படி தான்.
மாணவர்களுக்கு புத்தக சுமை மட்டுமல்லாது தேர்வு துயரும் இதன் மூலம் குறையும். இந்த நல்ல விஷயத்துக்காக தமிழக அரசை பாராட்டுவோம் !
பங்காருவுக்கு ஜெயில்
இதை வாசிக்கும் நீங்கள், கல்லூரியில் படிக்கும் போது டிவியில் ஒரு காட்சி பார்த்திருப்பீர்கள். அப்போதையை பா. ஜா.க தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் கத்தை கத்தையாக பணம் லஞ்சம் வாங்குவதை டிவியில் வீடியோவாக போட்டார்கள். இதனால் அவர் உடனே ராஜினாமா செய்தார். 11ஆண்டுகள் கழித்து சி. பி. ஐ நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்பளித்துள்ளது. என்னா வேகம் ! நாடு உருப்பட்டடும் ! இதனை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்ய போறாராம் ! அது முடிய எத்தனை வருஷம் ஆகுமோ?
இப்படி தான் காங்கிரசில் ஒரு ஊழல் அரசியல் வாதி சுக்ராம் என்பவர்.. பல வருஷம் வழக்கு நடந்து முடியும் போது " அவர் குற்றவாளி தான். ஆனால் அவர் வயதை (எண்பதுக்கும் மேல்) கருத்தில் கொண்டு அவரை ஜெயிலில் அடைக்காமல் விடுகிறோம் " என்று கோர்ட் தீர்ப்பளித்தது.
சட்டத்தில் "Delayed justice is denied justice" என்பார்கள் ; " தாமதமாக தரப்படும் நீதி, அநீதிக்கு சமம் " என்று !
நீதிமன்றத்தில் தீர்ப்புகள் விரைவாய் வராத வரையில், அரசியலில் ஊழல் பெருச்சாளிகள் பெருகி கொண்டு தான் இருப்பார்கள் :((
ஈ. பி பில் அப்டேட்
இம்மாதம் ஈ. பி பில் புது tariff-ல் கட்டவேண்டும். கணக்கெடுக்க வந்தவர்கள் யூனிட்டுகளை மட்டும் எழுதி விட்டு போய் விட்டனர். எங்களுக்கு சரியாக 510 யூனிட்டுகள் ! ஐநூறை தாண்டினாலே மிக அதிக பில் வரும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
"ஐநூறுன்னு போட்டுட்டு போக கூடாது? பத்து யூனிட் அடுத்த முறை சேர்த்து போட்டா தான் என்னவாம்?" என்று புலம்பி கொண்டிருக்கிறார் ஹவுஸ் பாஸ் !
ஆனந்த் கார்னர்
பதிவர் பக்கம்
வீடுதிரும்பலுக்கு ரெகுலராய் வருவோருக்கு பதிவர் ரகுவை தெரியும் என்றே நினைக்கிறேன். காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர். சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணி புரிகிறார். இணையம் மூலம் அறிமுகமாகி பேசி இருந்த நாங்கள் இப்போதெல்லாம் அவரவர் புத்தகங்கள் மாற்றி கொள்ளவும், புது உணவகமாக பார்த்து சாப்பிடவும் ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை சந்திக்கிறோம்.
மிக அரிதாக எழுதினாலும் பஸ் டே கொண்டாட்டம், சத்யம் சினிமாஸ் பற்றி இவர் எழுதிய பதிவுகள் ரசிக்க வைப்பவை.
நிற்க. நான் பதிவெழுத ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் என்னை பற்றி ஒருவர் தனி பதிவு எழுதினர் என்றால் அது ரகு தான். வேறொன்றும் இல்லை. நாங்கள் முதல் முறை சந்தித்தது பற்றி இந்த பதிவில் எழுதியிருக்கிறார். வாசித்து பாருங்கள்.
*********
டிஸ்கி: வீடுதிரும்பலை தொடர்வோர் எண்ணிக்கை நானூறையும், பதிவுகள் எண்ணிக்கை 350-ஐயும் தாண்டி உள்ளது. எந்த வேகத்தில் செல்கிறோம் என தெரியும் என்பதற்காக இங்கு பகிர்ந்து வைக்கிறேன். உங்கள் அனைவர் அன்பிற்கும் நெகிழ்வான நன்றி !

Life is a great travel trip. But it does not come with a map. We have to search our own ways to reach the destinations.
பதிவர் பக்கம்
வீடுதிரும்பலுக்கு ரெகுலராய் வருவோருக்கு பதிவர் ரகுவை தெரியும் என்றே நினைக்கிறேன். காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர். சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணி புரிகிறார். இணையம் மூலம் அறிமுகமாகி பேசி இருந்த நாங்கள் இப்போதெல்லாம் அவரவர் புத்தகங்கள் மாற்றி கொள்ளவும், புது உணவகமாக பார்த்து சாப்பிடவும் ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை சந்திக்கிறோம்.
மிக அரிதாக எழுதினாலும் பஸ் டே கொண்டாட்டம், சத்யம் சினிமாஸ் பற்றி இவர் எழுதிய பதிவுகள் ரசிக்க வைப்பவை.
நிற்க. நான் பதிவெழுத ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் என்னை பற்றி ஒருவர் தனி பதிவு எழுதினர் என்றால் அது ரகு தான். வேறொன்றும் இல்லை. நாங்கள் முதல் முறை சந்தித்தது பற்றி இந்த பதிவில் எழுதியிருக்கிறார். வாசித்து பாருங்கள்.
*********
டிஸ்கி: வீடுதிரும்பலை தொடர்வோர் எண்ணிக்கை நானூறையும், பதிவுகள் எண்ணிக்கை 350-ஐயும் தாண்டி உள்ளது. எந்த வேகத்தில் செல்கிறோம் என தெரியும் என்பதற்காக இங்கு பகிர்ந்து வைக்கிறேன். உங்கள் அனைவர் அன்பிற்கும் நெகிழ்வான நன்றி !
சச்சின், எம்.பி.... - எதாவது ஒரு விதத்தில் தன்னை நிலைப்படுத்த முயலும் அரசு. :(
ReplyDeleteபதிவர் ரகு.... உங்கள் பக்கத்தில் பார்த்திருக்கிறேன். படித்ததில்லை. படிக்கிறேன் இனி.
நல்ல பகிர்வு மோகன். வாழ்த்துகள் - தொடர்பவர்கள் எண்ணிக்கைக்கும், பதிவுகளின் எண்ணிக்கைக்கும்!
ஆனந்த விகடனில் கட்டுரை எழுதியதற்காக சன்மானம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசச்சின் ராஜ்ய சபை எம்.பி. பதவி குறித்து ஒரு பதிவிட நினைத்தேன்.நீங்கள் அதன் சுருக்கம் தந்துவிட்டதால் எழுதலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருகிறேன். ஏற்கனவே சச்சினுக்கு பாரத ரத்னா பெறுவதற்கு வாய்ப்பு இருந்த நிலையில் அது தொடர்பாக கடித வடிவில் ஒரு பதிவிட்டிருந்தேன்.
சத்யம் T.V.உங்கள் விவாதம் பார்த்தேன். அது தொடர்பாக பின்னர் மெயில் அனுப்புகிறேன்.
//ஆனந்த விகடனில் இருந்து வந்த பணம்//
ReplyDeleteவாழ்த்துகள் சார், எழுத்தாளர்களுக்கு சரியாக பணம் அனுப்புவதில் முதலிடம் விகடனுக்கு என்பதில் சந்தேகமில்லை!
அது சரி, பணம் வாங்கியாச்சு! ட்ரீட் எப்ப,எங்க?
ரகு பற்றியும் அவர் எழுதிய சில பதிவுகளையும் படித்தேன். பதிவுலக நட்பு தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteசச்சின் எம்.பி. - ஏற்றுக்கொள்ள முடியவில்லை!! (ரெண்டு சபாவுலயும் ஏற்கனவே இருக்கிறவங்களும்கூட உருப்படியா எதுவும் செய்றதில்லன்னாலும்கூட) இப்பிடி நாமினேஷன்ல யாராருக்கெல்லாமோ தூக்கி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ReplyDelete//சச்சின் அடைந்துள்ள வெற்றிக்கும் புகழுக்கும் எம். பி பதவி என்பது மிக சிறிது//
ஹை, இது நல்லாருக்கே.. அப்ப பிரதமர் அல்லது பிரஸிடென்ட் போஸ்ட் கொடுத்திருக்கணுமோ? (இப்ப அந்த போஸ்ட்ல இருக்கிறவங்களும் ஒண்ணும் செய்றதில்லை. அதனால சச்சினுக்கு கொடுத்தாலும் பெரிசா வித்தியாசம் எதுவும் வந்திடாது!!) :-)))))))
சச்சின் கொஞ்சம் ஆர்வம் எடுத்து, இந்தப் பதவியின்மூலமா ஏதாவது, அட்லீஸ்ட் நாட்டின் விளையாட்டுத் துறைக்காவது ஏதாவது செஞ்சா, கொஞ்சம் மனசு ஆறும்.
//விகடனில் பெண்கள் தினத்துக்கு நமது கட்டுரை வந்தது //
விகடன்ல ஒரு கட்டுரை வந்ததுமே, விகடன் மாதிரியே “நமது”ன்னு பேச ஆரம்பிச்சுட்டீங்களே!! :-))))
ஆமா, உங்களுக்கு விகடன் நிருபரைத் தெரியுமாமே? ரெகமண்டேஷன்லாம் செய்வீங்களா? ;-))))
தொடர்வோர் எண்ணிக்கைக்கு வாழ்த்துகள். பதிவுகள் எண்ணிக்கை இனியும் பெருக வாழ்த்துகள்.
ஈ.பி.கணக்கு எடுக்க வருபவர்களுக்கு சூடா டீயோ இல்லை கூலா ஜீஸ்ஸோ ஒரு டம்ளர் கொடுங்க பாஸ்......விவரம் இல்லாம இருக்கிங்களே........!
ReplyDeleteசச்சினை திட்டியே பிரபலமான எத்தனையோ பேர் உண்டு...மஞ்சரேக்கர், ஹர்ஷா இவர்கள் இருவரும் ஏன்னு புரியல...
ReplyDeleteஆனந்த விகடனில் இருந்து வந்த பணம்...//
வீடுதிரும்பலை தொடர்வோர் எண்ணிக்கை நானூறையும், பதிவுகள் எண்ணிக்கை 350-ஐயும் தாண்டி உள்ளது. எந்த வேகத்தில் செல்கிறோம் என தெரியும் என்பதற்காக இங்கு பகிர்ந்து வைக்கிறேன். //
ட்ரீட் தாங்க மோகன்...வாழ்த்துக்கள் உங்கள் எழுத்து எல்லா தமிழராலும் வாசிக்கப்பட..
//MP சச்சின் - பதிவர் ரகு//
ReplyDeleteபதிவு தலைப்பில் பெயர் போடும் அளவிற்கெல்லாம் நான் வொர்த் இல்லை மோகன் :)
என்றாலும் சச்சின் பெயருக்கு பக்கத்தில் வந்தது மகிழ்ச்சி........மாதவன் சார், எங்கிருந்தாலும் மேடைக்கு வராமல் இருக்கவும் :))
//சச்சினுக்கு எம். பி பதவி//
பாரத ரத்னாவுக்கான என்ட்ரன்ஸ் டிக்கட் என்று நினைக்கிறேன். பார்ப்போம்...
//ஆனந்த விகடனில் இருந்து வந்த பணம் //
எழுத்தின் மூலம் கிடைத்த முதல் பணம்...எப்போதும் மறக்காது..வாழ்த்துக்கள் மோகன்!
//மாணவர்களுக்கு புத்தக சுமை மட்டுமல்லாது தேர்வு துயரும் இதன் மூலம் குறையும். இந்த நல்ல விஷயத்துக்காக தமிழக அரசை பாராட்டுவோம்//
சுமை குறைகிறதுதான்...ஆனால் தேர்வு முறை மாறவில்லையே. முன்பை விட கொஞ்சமாய் மனப்பாடம் செய்யப்போகிறார்கள். அவ்வளவே :(
வெங்கட்: நன்றி உங்கள் கமண்டுக்கு ரகுவை தொடர்வதற்கும்
ReplyDeleteமுரளிதரன்: சச்சின் எம். பி பதவி குறித்த உங்கள் கருத்தை எழுதுங்கள் அது நிச்சயம் தனித்து தான் இருக்கும்
ReplyDeleteஅமைதி அப்பா : உங்களுக்கு இல்லாத டிரீட்டா? எப்ப வச்சிக்கலாம்? சொல்லுங்க
ReplyDeleteஎதுக்கும் டிரீட்டுக்கு வரும் போது உங்க பர்சை எடுத்துட்டு வந்துடுங்க. நான் செலவு செய்வேன் பிரச்சனை இல்லை. அப்படி செஞ்சா நில அதிர்வுல்லாம் வந்துடுது பரவால்லியா? :))
நன்றி சிவா..
ReplyDeleteஹுசைனம்மா: நூறு செஞ்சுரி என்கிற மிக பெரும் சாதனைக்காகவே பாரத ரத்னா தரலாம் தவறில்லை என்பதே அவரின் ரசிகர்களின் எண்ணம்
ReplyDelete//உங்களுக்கு விகடன் நிருபரைத் தெரியுமாமே? ரெகமண்டேஷன்லாம் செய்வீங்களா? ;-))
உங்களுடைய ஹியூமரஸ் எழுத்துக்கு என்ன மேடம் ரெகமண்டேஷன் வேணும்? நீங்க அனுப்பினாலே போட்டுடுவாங்க. (நிஜத்தில் ரொம்ப தோஸ்துங்க அங்கு இருந்தாங்க. இப்போ இல்லை)
சுரேஷ்: இருவரும் வேலை பார்ப்பதால் ஈ. பி ரீடிங் எடுக்க வரும் போது நாங்க இருக்க மாட்டோம் நண்பா
ReplyDeleteரெவெரி said...
ReplyDelete//சச்சினை திட்டியே பிரபலமான எத்தனையோ பேர் உண்டு...மஞ்சரேக்கர், ஹர்ஷா இவர்கள் இருவரும் ஏன்னு புரியல...//
உண்மை தான் . ஆனா இவ்விஷயத்தில் மட்டும் சச்சின் மேல் அக்கறையுடன் தான் இவர்கள் பேசினார்கள் என நினைக்கிறேன்
//ட்ரீட் தாங்க மோகன்..//
சென்னை வரும் போது சொல்லுங்க குடுத்துடலாம்
ரகு said...
ReplyDelete//MP சச்சின் - பதிவர் ரகு//
பதிவு தலைப்பில் பெயர் போடும் அளவிற்கெல்லாம் நான் வொர்த் இல்லை மோகன் :)
*******
சச்சினுடன் சேர்த்து உங்க பேர் வந்தால் மகிழ்வீர்கள் என்று தான் வைத்தேன் ரகு !
*******
//ஆனந்த விகடனில் இருந்து வந்த பணம் //
எழுத்தின் மூலம் கிடைத்த முதல் பணம்..
**********
கல்லூரி காலம் முதல் எழுத்தின் மூலம் அவ்வப்போது பணம் வரவே செய்கிறது. இது ரொம்ப வருஷத்துக்கு பிறகு கிடைத்தது