Saturday, February 19, 2011

உலக கோப்பை யாருக்கு: 8 அணிகளை அலசும் பிரபல பதிவர்கள்

கிரிக்கெட் உலக கோப்பை இன்று துவங்குகிறது. மாணவர்கள் படிக்கும் இந்த நேரத்தில் தேர்வு துவங்குவது சரியா என ஓர் வருத்தம் இருந்தாலும், தேர்வு நேரம் என்பதால் திருவிழாவை மிஸ் பண்ண முடியுமா? இந்த முறை யார் வெல்லுவார்கள், அணிகளின் பலம், பலவீனம் என்ன இதோ பதிவர்கள் அலசுகிறார்கள். குறுகிய நேரத்தில் உடன் பதில் எழுதி தந்த அனைத்து பதிவர்களுக்கும் நன்றி!

பதில் சொன்ன பதிவர்கள் யாரும் மூணு அணிகளை கண்டுக்கலை. அவங்க என்ன பாவம் பண்ணாங்க? முதலில் அவர்களையும் பற்றி கொஞ்சம்:


நியூசிலாந்து (கடைசியா எப்ப ஜெயிச்சோமுனு அவங்களுக்கே மறந்திருக்கும்  ;  பங்களாதேஸ் கிட்டயே சொந்த ஊரில் இப்ப தான் உதை வாங்கினாங்க )

பாகிஸ்தான் (யார் கேப்டன் என்பதே கடைசி நிமிஷம் வரை முடிவு செய்யலை. முக்கிய புள்ளிகள் மூணு பேர் மேட்ச் பிக்சிங்கில் வெளியேற்றம்)

வெஸ்ட் இண்டீஸ் (இவங்க கேப்டன் யாருன்னு தெரியுமா? டேரன் சாமி !! என்ன கொடுமை சாமி! இவர் பாட்ஸ்மேனா பவுலாரான்னு அடுத்து கேட்டு கஷ்ட படுத்த விரும்பலை. பவுலர். கெயில், போலார்ட், பிராவோ, சந்தர் பால் ன்னு நாலு நல்ல வீரர்கள் இருக்காங்க. அவ்ளோ தான்)

வெறும் கேள்வி பதில் என்றால் சற்று போர் அடிக்குமே என அங்கங்கு நம்ம பின்னூட்டம் அடைப்பு குறிகளுக்குள்..

பதிவர் கார்க்கி



உலக கோப்பையை எந்த அணி ஜெயிக்கும் என நினைக்கிறீர்கள்?
ஒரு அணியை மட்டும் சொல்ல முடியாது. இந்தியா, செளத் ஆஃப்ரிக்கா, இலங்கை. இந்த மூன்றில் ஒன்று வாங்கும் என்பது என் எண்ணம். காரணம் இந்தியாவும், இலங்கையும் ஹோம் கிரவுண்டில் ஆடும் பாக்கியம் பெற்றவர்கள். பாகிஸ்தானுக்கும் ஆசியாவில் ஆடுவது நல்ல விஷயம்தான். ஆனால் அவர்களிடம் கன்ஸிஸ்டென்சி இல்லை. செளத் ஆஃப்ரிக்காவுக்கு அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இதுவரை கருணை காட்டாத உலக கோப்பையம்மன் இந்த முறை அருள் புரிய வாய்ப்பு அதிகமென நினைக்கிறேன். (உலக கோப்பையம்மன் !! டிபிகல் கார்க்கி)

இந்தியா:
பலம்: தோனியின் தலைமை, சச்சினின் பூர்த்தியாக World cup கனவு, Momentum
பலவீனம்: பவுலிங், காயங்கள்
X factor : கம்பீர், சாகீர் கான்
இலங்கை:
பலம் : பவுலிங், , Fielding.
பலவீனம் : மிடில் ஆர்டர்
X factor : மலிங்கா, சங்கக்கரா
செளத் ஆஃப்ரிக்கா:

பலம் : மொத்த டீமும், மற்றும் momentum
பலவீனம் : ஆசிய அணிகளின் ஸ்பின் அட்டாக்கை எதிர்கொள்வது,
X factor : ஆம்லா, டுமினி

எந்த அணிகள் செமி பைனல் செல்ல கூடும்?

இந்தியா, செளத் ஆஃப்ரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான்

யார் மேன் ஆப் தி சீரீஸ்?
சாகீர்கான் - இந்தியா ஜெயித்தால் இவர்தான் அதிக விக்கெட் எடுத்திருப்பார்.
ஷேன் வாட்சன் - செமி ஃபைனல் வந்தாலே போதும். ஆல் ரவுண்டர் என்பதால் நிறைய வாய்ப்பு
****
பதிவர் அன்புடன் மணிகண்டன்


மனதளவில் இந்தியா என்றாலும் தென் ஆப்பிரிக்காவிற்கும் சம வாய்ப்பு உள்ளதாகவே கருதுகிறேன்.

ஏனெனில் மிகச்சிறந்த பந்துவீச்சு, அருமையான துவக்கம் தரக்கூடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள், நல்ல களத்தடுப்பாளர்கள் என்று Well Balanced அணியாக தென்னாப்ரிக்காவை சொல்ல முடியும்..

தென் ஆப்பிரிக்காவின்:

பலம்: பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங்
பலவீனம்: அதிர்ஷ்டம் இல்லாமை

X factor : டேல் ஸ்டீன் .மிரள வைக்கும் தனது வேகப் பந்தினால், ஆட்டத்தின் போக்கை வெகுவிரைவில் நிர்ணயம் செய்யக் கூடியவர்.
எந்த அணிகள் செமி பைனல் செல்ல கூடும்?
இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா..

இன்றைய தேதியில் நல்ல ஃபார்மிலும், ஏறக்குறைய தான் சந்திக்கும் போட்டிகளை வெற்றிபெறும் அளவுக்கும் வலிமை வாய்ந்த அணிகள் இவைகள் தான்..

யார் மேன் ஆப் தி சீரீஸ் ?
சேவாக் காரணம் - சிறிது நேரம் களத்தில் நின்றால் பெரிய அளவில் ரன்களை குவிக்கிறார்

ஷேன் வாட்சன் : ஆஸ்திரேலியா) - சமீப காலமாக பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பிரகாசிக்கிறார்

பதிவர் முரளி குமார் பத்மநாபன்



உலக கோப்பையை எந்த அணி ஜெயிக்கும் என நினைக்கிறீர்கள்?

இந்தியாதான்

ஏன்?

ஏன்னா நான் இந்தியாவில்தான் இன்னும் இருக்கேன் :-)

பலம்: விராத் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் அன்பிரிக்டபில் யுவி இதுபோக சுழற்பந்துவீச்சுக்கு உறுதுணையான ஆசிய ஆடுகளங்கள்

பலவீனம் : வேகப்பந்துவீச்சு, மாற்று விக்கெட் கீப்பர் இல்லாதது மற்றும் பிரவீன், ருத்ரபிரதாப்சிங் போன்ற டெக்னிகல் பெளலர்கள் இல்லாதது

X factor : கண்டிப்பாக விராத் கோலியேதான். ட்ராவிட்டையும் கங்கூலியையும் மிக்ஸ் பண்ண செம்ம்ம் ப்லெண்ட் இவன், சரியா ட்யூன் பண்ணா இந்தியாவுக்கு ஒரு ஸ்பெசலிஸ்ட் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரெடி

எந்த அணிகள் செமி பைனல் செல்ல கூடும்?
தென் ஆப்ரிக்கா, இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா அல்லது வெஸ்ட் இண்டீஸ்

தென் ஆப்ரிக்கா எல்லா வகையிலும் டேலண்டான ஒரு டீம். இலங்கை மிக வலுவான பேட்டிங் ஆர்டரும் அதைவிட ஸ்பெசலான பெளலிங் டீமும்
இந்தியா, ஒரு அருமையான டீம் செட்டாகியிருக்கிறது திறமையை கணக்கிட்டாலும் நமக்குதான் வெற்றிஎப்பொதுமில்லாதபடி ஒரு லக்கிமேனை கேப்டனாக கொண்டிருப்பதால் அதிர்ஸ்டத்தைக் கணக்கிட்டாலும் நமக்குதான் வெற்றி

யே....யே....!!!!
மேன் ஆப் தி சீரீஸ் ?

டீவில்லியர்ஸ் தென் ஆப்ரிக்கா
தில்ஷன் இலங்கை
இந்தியாவில் ஷேவாக் அல்லது ரெய்னாவிற்கு வாய்ப்புள்ளது.
****
பதிவர் மயில் ராவணன்



வாங்க மாரா; சொல்லுங்க. எந்த அணி ஜெயிக்கும்?

எந்த அணி ஜெயிக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. மூன்று அணிகள் கிட்டத்தட்ட சம பலத்தில் இருக்கின்றன.
இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா

இந்தியா:
பலம்: பலமான பேட்டிங் ஆர்டர், திறமை சாலி ஸ்பின்னர்கள்
பலவீனம்: ஜாகிர் கானைத் தவிர ஃபாஸ்ட் பவுலிங் ஆப்சன் இல்லாதது

X-factor - சச்சின் டெண்டுல்கர்.
இலங்கை:

பலம்: சொந்த நாட்டில் 4 லீக் மேட்சுகள் ஆடுவது. நல்ல ஸ்பின்னர்கள்

பலவீனம்: தில்ஷானைத் தவிர அதிரடியாக ஆடக்கூடிய ஆட்டக்காரர்களும், ஆல்ரவுண்டர்கள் இல்லாததும்.

X-factor - ஏஞ்செலோ மேத்யூஸ்

தென்னாப்பிரிக்கா:

பலம்: ஸ்பின் பவுலிங் ஆடக்கூடிய ஆம்லா, டீ வில்லியர்ஸ் போன்றோர் அணியில் இருப்பது. குட் ஃபீல்டிங் யூனிட்

பலவீனம்: ப்ரஷர் மேட்ச்களில் சொதப்புவது - chokers

x-factor - ஆம்லா

மேன் ஆஃப் த சீரிஸ் - இந்திய அணி பவுலர் அஸ்வின் தான்.வேற ஆரு?!! (ரொம்ப தான் அஸ்வினை நம்புறீங்க. முதல்ல எல்லா மேட்சும் அவர் விளையாடுவாரான்னு பாக்கணும்)
***
பதிவர் சித்ரா (வாங்கம்மா நீங்க ஒரு லேடியாவது வந்தீங்களே)


இலங்கை ஜெயிக்க நிறைய வாய்ப்பு உள்ளது. ஆசிய கண்டத்து நாடுகளுக்கு பிட்சின் காரணமாய் இம்முறை சற்று advantage உள்ளது. இலங்கை அணி consistent ஆக நன்கு ஆடுகிறது

பலம்: அற்புதமான கலவையான பவுலிங் அட்டாக் & சங்ககாரா

பலவீனம்: லோயர் மிடில் ஆர்டர் பட்டிங்

X factor : மலிங்கா

எந்த அணிகள் செமி பைனல் செல்ல கூடும்?

இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா & தென் ஆப்ரிகா

இவை நான்கும் தான் டாப் 4 அணிகள். இங்கிலாந்து தற்போது நன்கு ஆடினாலும் இந்தியாவில் சொதப்பும் வழக்கம் உள்ளதால் சேர்க்கவில்லை

யார் மேன் ஆப் தி சீரீஸ் வாங்க கூடும்?

தில்ஷன் A wild guess !

பதிவர் சீனா

ஐயா கலக்க போவது யாரு?

இந்தியா !

அவங்க பலம்? கடைசி வரை ஸ்ட்ராங் பேட்டிங் லைன் அப் (கடைசி வரையா? நல்லா பாத்தீங்களா? நிசமாவா சார் சொல்றீங்க?)

அப்போ வீக்நஸ்சு?: டாப் வீரர்களான சச்சின் ஜாகிர், சேவாக் இவர்களுக்கு உள்ள இஞ்ஜூரி

X Factor : டோனி & சச்சின்

Man of series?: சந்தேகமா என்ன? டோனி தான்.
***
பதிவர் மாதவன்


எந்த அணி ஜெயிக்கும்?

வீர்களின் பலம் பலவீனத்தை கொண்டு, சரியாக கணிக்கும் திறமை தோனிக்கு இருப்பதை, பல போட்டிகளில் (ஐ.பி.எல்) உட்பட கண்கூடாகப் கார்த்திருக்கிறோம்.மேலும் அவர் கூல் ஆசாமி.அதிர்ஷ்டமுள்ள ஆள் கூட...
பெரும்பாலும் சொந்த மண்.. அல்லது சப்-காண்டினென்ட் சூழல்.. இந்தியா விற்கு நல்ல வாய்ப்பு..

பலவீனம் : மோசமான பீல்டிங் ..சொல்ல போனா மிஸ் பீல்டிங், கேட்ச் கோட்டை விடுவது & ஒழுங்கா ஓடி ரன் எடுக்காதது

எந்த அணி செமி பைனல் போகும் ? ஏன்?

சவுத் ஆப்ரிக்கா : ஸ்மித் கேப்டன்சி அருமை பொதுவாக consistent ஆக ஆடுறாங்க சப் காண்டினென்ட் பிட்சுகள் தான் அவர்களுக்கு பலவீனம். அதோட முக்கிய மேட்ச்களில் அவர்களுக்கு உள்ள பேட் லக்
SriLanka : சப் காண்டினென்ட் பிட்சு இவர்களுக்கு பெரிய பலம். நல்ல பேட்டிங், பவுலிங் உள்ள அணி. எந்த வீக்னசும் தெரியலை.
இங்கிலாந்து : ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஜெயித்த சூட்டில் இருக்காங்க.

இந்த நான்கு அணிகளும் செமி பைனல் வர கூடும் (ம்ம் எதோ கொஞ்சம் மாத்தி இங்கிலாந்தை சேத்து சொன்னீங்க. டேன்க்சு)
****

பதிவர் பரிசல்காரன்



இந்தியா, ஸ்ரீலங்கா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவிற்கு கொஞ்சம் அதிகமாக.
பலம்: தற்போதைய ஃபார்ம்தான் பலம். முன் வரிசை சொதப்பினாலும், சச்சின் ஆட்டமிழந்தாலும் என எந்தச் சூழலிலும் வெற்றியைக் குறி வைக்கும் அணியாக தற்போதைய அணி திகழ்கிறது.
பலவீனம்: அணியின் மீதான எதிர்பார்ப்பு.

X factor :யூசுஃப் பதான் மற்றும் சுரேஷ் ரெய்னா. பந்து வீச்சில் அஷ்வின் பிரகாசிப்பார்!

யார் மேன் ஆப் தி சீரீஸ் வாங்க கூடும்?

யூசுஃப் பதான். பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் கலக்குவார் என எதிர்பார்க்கிறேன். 1999ல் கலக்கிய லான்ஸ் க்ளூஸ்னர் போல இந்த உலகக் கோப்பையில் யூசுஃப் திகழ அதிக வாய்ப்புள்ளது.
--------------
ஒவ்வொரு அணிகளின் வெற்றி வாய்ப்பு எதைச் சார்ந்துள்ளது?

இந்தியா: சேவக்கின் துவக்கம், யூசுஃப்பின் ஆல் ரவுண்டர் திறமை.

இலங்கை: சங்ககாராவின் ஃபார்ம், மலிங்கா, அஜந்தா மெண்டீஸின் பவுலிங்.

ஆஸி: ஷேன் வாட்சனின் ஓபனிங், பாண்டிங்கின் + ப்ரட் லீஃபார்ம்

தென்னாப்பிரிகா: ஹசிம் ஆம்லாவின் துவக்கம், காலிஸின் ஆல்ரவுண்டர் திறமை.

மற்றும் பாகிஸ்தானின் - அஃப்ரிடி, யூனுஸ்கான், இலங்கையின் பீட்டர்சன், ஸ்டிராஸ், வெ.இண்டீஸின் க்கெய்ல் + பொலார்ட், நியூஸியின் ஸ்டைரிஸ், ஓரம் ஆகியோரும் அதிரடி சரவெடியை வெடிக்கத் தயாராகத்தான் உள்ளார்கள்.

லெட்ஸ் வெல்கம் த கேம்!

டிஸ்கி: இன்று மாலை பதிவு இல்லை!!

15 comments:

  1. என்னது? இன்று மாலை பதிவு இல்லையா?? # என் கிரிக்கெட் ஆர்வம்:))!

    ReplyDelete
  2. ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.... கிரிக்கெட் முடிவுக்கு இப்போ, ரொம்பவே ஆவலுடன் காத்து இருக்கேன்...

    ReplyDelete
  3. என்னையும் ஒரு (பிரபல !) பதிவராக மதித்து (!!), எனது கருத்தின சொல்லிய அண்ணன்(னின்)-நண்பர் மோகன் அவர்களுக்கு நன்றி.

    அது சரி.. நீங்கள் உங்கள் கருத்தை சொல்லவில்லையே ? அது தனி பதிவாக வருமோ ?

    செமி ஃபைனல் வாய்ப்பு பற்றிய, மற்ற நண்பர்களின் பெரும்பான்மையான கருத்துக்களை ஒத்து எனது கருத்தும் இருப்பதைக் கண்டு, நான் எதுவும் சொதப்பலாக சொல்ல வில்லை என்பதனை அறிந்து இன்பமடைகிறேன்.

    மென் ஃஆப் த சீரீஸ். .நான் ஷேவாக் சொன்னதா நெனைக்கிறேன்..
    (அதனை சென்சார் செய்ததை மென்மையாக கண்டிக்கிறேன்)

    // டிஸ்கி: இன்று மாலை பதிவு இல்லை!! //

    சேம் பிளட்.. -- ஹி.. ஹி.. அதான் மேட்ச் பாக்கணுமே....

    ReplyDelete
  4. ஜெய் ஹோ ஜெய் ஹோ.......
    கப்பு வாங்காம வந்தானுங்கன்னா தோலை உரிச்சிபுடுவேன் உரிச்சி....

    ReplyDelete
  5. தல சாரி, உங்களுக்கு உதவி செய்யமுடியாமல் போய்விட்டது, மன்னிக்கவும்.

    மேன் ஆப் தி சீரியஸ் என்னோட சாய்ஸுக்கு யாருமே வரலையா?அவ்வ்வ்

    என்ன முரளி, கேவலமா ப்ரிடிக்ட் பண்ணியிருப்ப போலயே?

    சரி பார்க்கலாம்,

    தி கேம் பிகின்ஸ்.

    ReplyDelete
  6. அப்படியே பதிவர்களின் ரேங்கிங் பற்றியும் எழுதுங்க..

    ReplyDelete
  7. Anonymous3:04:00 PM

    நல்லா சொல்லி இருக்காங்க எல்லோரும்...

    அப்புறம் கடந்த மூன்று முறையும், இப்படி உலக கோப்பை தொடங்குவதற்க்கு முன்பு யாருக்கு கோப்பை என்ற கேள்வி வந்த போது... நான் மூன்று முறையும் "ஆஸ்திரேலியா" என்று என்னுடைய நண்பர்கள் & உறவினர்களிடம் சொன்னேன்... அப்போ சிரிச்சாங்க எல்லோரும்... ஹி ஹி..

    இம்முறையும் ஆஸ்திரேலியா அணிக்கே எனது ஆதரவு... பார்க்கலாம் என்னுடைய ஆருடம் முன்பு போல பலிக்குறதா என்று?

    அடி பட்டாலும் சிங்கம் சிங்கம் தான்

    என்றும் உங்கள் அருண் பிரசங்கி

    ReplyDelete
  8. //டிஸ்கி: இன்று மாலை பதிவு இல்லை!!//

    இது ஒண்ணுதான் நம்ம ஏரியா இந்த மொத்தப் பதிவுலயும்!!

    இப்ப பின்னூட்டம்: ஹப்பாடா, ரொம்ப நன்றி.

    ReplyDelete
  9. My prediction :-

    http://vallinamguna.blogspot.com/2011/02/worldcup-predictions.html

    ReplyDelete
  10. நன்றி ராம லட்சுமி; ஏன் மாலை பதிவு இல்லை என்பதை இன்றைய பதிவில் ( நெகிழ்வான நட்சத்திர வார அனுபவங்கள் ) சொல்லி உள்ளேன்.
    **
    மிக்க நன்றி சித்ரா.
    **
    மாதவா: நன்றி
    **
    மனோ: நன்றி
    **
    முரளி: பரவாயில்லை. சமாளிச்சுட்டேன்

    ReplyDelete
  11. நன்றி ஆகாய மனிதன்
    **
    நன்றி அருண் பிரசங்கி .ஆஸ்த்ரேலியாவை பற்றி சொல்ல முடியாது. திடீரென நல்லா ஆடி கோப்பையை கூட ஜெயிக்கலாம்
    **
    ஹுசைனம்மா: ரைட்டு (ஆனா பதிவு போடலைன்னுரொம்ப நன்றி.சொன்னீங்க பாருங்க.. நற நற )
    **
    நன்றி குணா; வாசிக்கிறேன்

    ReplyDelete
  12. அன்பின்மோகன் குமார்

    அலசல்கள் அருமை - அனைவருமே நன்கு ஆய்ந்து அலசி முடிவினைக் கூறி இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். நல்வாழ்த்துகள் மோகன் குமார் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. திருப்பூர் ஆட்கள் ரெய்னாவை எக்ஸ் ஃபேக்டர், மேன் ஆஃப் தி சீரியஸ் என்றெல்லாம் உண்மையா சொன்னாங்களா?

    அவர் 2 மேட்ச் ஆடுவதே கஷ்டம் என நான் நினைக்கிறேன்

    ReplyDelete
  14. அட போங்கப்பா .. I TOLD ALREADY ..அத இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லிடலாம்னு.. ஒவ்வரு மேட்ச் முடிவுகளையும் ஒரு அணுமாணமா போடுறேன்..

    பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு ..

    இந்தாங்க இதுல இருக்கு எல்லா மேட்ச் முடிவுகளும்

    http://vallinamguna.blogspot.com/2011/02/world-cup-prediction-2.html

    ReplyDelete
  15. இப்பதான் இதெல்லாம் படிக்கேன்.கண்கள் பனித்தது.இதயம் நிறைந்தது.நன்றி சாரே.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...