Wednesday, February 22, 2012

வானவில் - 77: தஞ்சை ஸ்பெஷல்

கடந்த பத்து நாளில் பாதிக்கு மேல் தஞ்சையில் (குறிப்பாய் ஆஸ்பத்திரியில்) இருந்ததால், மனம் முழுக்க அதுவே நிறைந்துள்ளது. இந்த வார வானவில் தஞ்சை மற்றும் ஆஸ்பத்திரி ஸ்பெஷல் .

தஞ்சையில் என்ன பிசினஸ் சூப்பரா போகுது? 
ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு வியாபாரத்தை முக்கியமாக கொண்டிருக்க, நகரின் பொருளாதாரம் அந்த வியாபாரத்தின் அடிப்படையில் சுழலும். திருப்பூருக்கு துணிகள் போல, தஞ்சைக்கு என்ன தெரியுமா? மருத்துவ மனைகள் !! தஞ்சை நகரம் முழுவதுமே சிறியதும் பெரியதுமாய் ஏராளமான மருத்துவ மனைகள் ! ராஜா மிராசுதார் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை என்று இரு பெரும் அரசு மருத்துவ மனைகள் தஞ்சையில் இருக்கின்றன.தஞ்சை மற்றும் சுற்றி உள்ள ஏராளமான கிராமங்களில் மட்டுமல்லாது திருவாரூர், நாகை போன்ற மற்ற பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர். தஞ்சையில் அனைத்து துறைகளுக்கும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் உண்டு. ஒவ்வொரு தனியார் மருத்துவமனைக்கு அருகிலும் சில ஓட்டல்கள், பெட்டி கடைகள் இருக்கும். மருத்துவ மனைக்கு வரும் அட்டென்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் தான் இவற்றில் நிரம்பி வழிகிறது. தஞ்சையில் நிறைய கார் ஷோ ரூம்கள், ஏகப்பட்ட கார்கள் வலம் வருகிறது. தஞ்சையில் செல்லும் பெரும்பாலான கார்களில் டாக்டர் ஸ்டிக்கர் ஒட்ட பட்டிருப்பதை காண முடியும் !

அம்மா பேச்சு

அம்மாவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம். பத்து  நாளுக்கும்  மேலாக ஐ. சி. யூ வில் இருந்து விட்டு இன்று  வார்டுக்கு  மாற்றப்படுகிறார்.   

நினைவு வந்து, வந்து போகும் நிலையில் அம்மா பேசியதில் சில:
********
" நாளைக்கு ரிசல்ட்"

"யாருக்கு?"

" அஞ்சுவுக்கு" ( + 2 பரீட்சை எழுதும் பேத்தி - அவளுக்கு ரெண்டு வாரம் கழித்து தான் பரீட்சை ஆரம்பிக்கிறது !)

*****
"அந்த பல்பு தொங்கிட்டே இருக்கு. விழுந்துட போகுது "


*****
" நான் யார்? சொல்லு" என கேட்கிறேன்

"பாலாஜி"

" ம். மூணு ஆம்பள பிள்ளை பெத்துட்டு மாத்தி மாத்தி பேர் சொல்லுவியா?"

உதடுகள் லேசாய் அசைந்து சிரிக்கின்றன "சரியா சொல்லு " என அதட்டிய பின் , சரியாய் சொல்கிறார்.

****
நன்றாக நினைவு இருக்கும் ஒரு அதிசய நேரத்தில் அனைவரும் சுற்றி நிற்க, எங்கள் குடும்பத்துக்காய் மிக மிக உழைத்த, பல வருடங்களாய் தன்னுடன் பேசாத, அம்மாவுக்கு பிடிக்காது என அனைவரும் நினைக்கும் மருமகளை பார்த்து இப்படி சொன்னார் : " நம்ம குடும்பத்து குலவிளக்கே நீ தான்" அனைவரும் ஆச்சரியத்தில் சிரிக்க, அண்ணி கண்ணில் மட்டும் அழுகை !

ஆதி மனிதரின் அன்பு

ஆதிமனிதன் என்கிற பதிவரின் ப்ளாக் நீங்கள் வாசித்திருக்கலாம். அமெரிக்காவில் Software துறையில் பணியாற்றும் இவர் அமெரிக்கா குறித்து நிறைய பதிவுகள் எழுதுவார். மெயில் மூலம் பழக்கமான இவர் அம்மா உடல்நிலை குறித்து எழுதிய பதிவு வாசித்து விட்டு முதல் முறை தொலைபேசினார். பின் தஞ்சையில் இருக்கும் தன் அம்மாவை உடனே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்ற இவர் தாயார் எங்கள் ஊரான நீடாமங்கலத்திலும் பணியாற்றி உள்ளார்.. சீனு சார் பற்றி நிறைய விசாரித்து விட்டு தனக்கு 1960-களில் திருமணம் நடந்த போது கல்யாண பத்திரிக்கையே அடிக்க வில்லை என்றும், சீனு சார் " அதெப்படி பத்திரிக்கை அடிக்காமல் இருப்பீர்கள்? " என உரிமையாக தானே மன்னார்குடி சென்று பத்திரிக்கை அடித்து வந்து தந்தாகவும் இப்படி அவர் எல்லாருக்கும் உதவுவார் என்றும் நினைவு கூர்ந்தார்.

தன் கணவர் 1998-ல் கோமா நிலைக்கு போய், பிழைக்க சிரமம் என்று சொல்லிய போதும் , பிழைத்து வந்து அதன் பின் நல்ல உடல் நிலையுடன் 13 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்” என்றார். “எப்போது உயிர் போகும் என்பது எந்த டாக்டராலும் சொல்ல முடியாது" என்று இவர் சொன்னது மிக உண்மை !

சந்தித்த எழுத்தாளர்

மருத்துவமனையில் இருக்கும் போது சந்தித்த மற்றொரு சுவாரஸ்யமான மனிதர் இரா. இளங்கோ. என் அண்ணனின் நண்பரான இவர் ஒரு எழுத்தாளர். அறுபதுக்கும் மேற்பட்ட இவர் சிறுகதைகள் விகடன், இந்தியா டுடே உள்ளிட்ட இதழ்களில் வெளியாகி உள்ளது.

நர்ஸ் ஏதாவது வேண்டும் என்று கூப்பிடுவார்கள் என்பதால் ICU வெளியே தான் அமர்ந்திருக்க வேண்டும். அப்படி அமர்ந்து கொண்டு நானும் இளங்கோவும் இரண்டு மணி நேரம் தமிழ் இலக்கிய சூழல் குறித்து பேசி கொண்டிருந்தோம். (சுற்றி இருந்த மற்ற நோயாளிகளின் அட்டென்டர்கள் நாங்கள் பேசிய விஷயங்களை வைத்து எங்களை " கழண்ட கேசு" என நினைத்திருக்கலாம்)

ப்ளாக் பற்றி இவரிடம் கூறி " நீங்களும் ப்ளாக் ஆரம்பிக்கலாமே ! உங்கள் படைப்புகள் குறித்து உடனுக்குடன் feedback வந்துவிடும்" என்றேன். " யாருக்கு வேண்டும் Feedback ? நான் எழுதுவது என் திருப்திக்கு; அதுவே கொஞ்ச நாள் கழிச்சு வாசிச்சா கிடைக்க மாட்டேங்குது " என்றார். "புத்தகம் மத்தவங்க கிட்டே போகணும் என நினைப்பது செலவு பண்ண காசு திரும்ப வரணும் என்பதால் தான். ரெண்டு புக் போட்டிருக்கேன். முதல் புக்குக்கு லைப்ரரி ஆர்டர் கிடைச்சிடுச்சு. கடந்த அஞ்சு வருஷமா, Government லைப்ரரி ஆர்டர் யாருக்கும் கொடுக்கலை . இதனால் அடுத்த புக் விற்க முடியலை " என்றார்.

சாகித்ய அகாடமி விருதுகள் முழுக்க முழுக்க தெரிந்தவர்கள் அடிப்படையில் தான் வழங்கபடுகிறது என்றும் யார் யார் அதன் குழுவில் வந்த போது யார் யாருக்கு விருது கிடைத்தது என்றும் விளக்கினார். "சாகித்ய அகாடமி விருது வாங்குவது எப்படி? " என அதன் அரசியல் பற்றி சேலத்தை சார்ந்த ஒருவர் புக்கே போட்டுருக்கார்" என்றார் ! Interesting !!

கிருஷ்ண பவன் - ஸ்பெஷல்காபி

தஞ்சையில் வினோதகன் மற்றும் அனு என்கிற இரு மருத்துவமனைகளுக்கு நடுவே உள்ளது " கிருஷ்ண பவன்" ஹோட்டல். மிக தரமான உணவு இங்கு கிடைக்கிறது. மதியம் ஐம்பது ரூபாய்க்கு அன் லிமிடட் சாப்பாடு ! பெரும்பாலான சர்வர்கள் பெண்களாக இருப்பது ஆச்சரியம் ! வெயிட்டான சாதம் பாத்திரம் சுமந்தவாறு பெண்கள் வேகமாக ஓடி ஓடி பரிமாறுகிறார்கள். இந்த ஹோட்டலில் பொங்கல் உள்ளிட்ட பல டிபன் ஐட்டங்கள் நன்றாக இருக்கும் என்றாலும், தவற விட கூடாதது காபி தான் ! தஞ்சாவூர் காபிக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. சென்னையின் எந்த ஹோட்டலிலும் அல்லது வீட்டிலும் இது மாதிரி காபி கிடைக்காது ! தஞ்சை செல்லும்போது இங்கு சென்று, அந்த காபி ஒரு முறை குடித்து பாருங்கள் !

வயதானவர்களும் குழந்தைகளும் 

ஒரு நிலைக்கு மேல் வயதானவர்கள், சிறு குழந்தைகள் போல் ஆகி விடுவதை மிக நன்றாய் உணர முடிந்தது. பிறக்கும் போது செய்தவை அனைத்தும் வாழ்வின் இறுதியிலும் செய்கிறோம்.

அம்மா சாப்பிடுவது அரை இட்லி அல்லது ஒரு இட்லி. அதையும் பாலில் ஊற வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தர வேண்டும். குழந்தை போல சாப்பிடும் போதே தூக்கமோ, மயக்கமோ அழுத்தும். " சாப்பாடு வேண்டாம்" என சொன்னாலும், குழந்தைக்கு கதை சொல்லி ஊட்டும் அம்மா மாதிரி, இப்போது அம்மாவிற்கு பேச்சு கொடுத்து சாப்பாடு தர வேண்டியுள்ளது.

குழந்தைக்கு செய்வது போல் உடுத்தி விட வேண்டியுள்ளது. பாத் ரூம் போனால் சொல்ல தெரிவதில்லை. எப்போதும் தூக்கம். தேவையற்ற பயம். இப்படி வாழ ஆரம்பித்த போது இருந்த அதே வாழ்க்கை, இறுதியிலும் வந்து விடுகிறது.

அட்டென்டர்கள் என்றொரு இனம்

நோயாளிகள் உடன் இருக்கும் அட்டென்டர்கள் ஒரு தனி சாதி. இவர்களின் பொது குணங்கள் :

* நாற்காலியில் அமர்ந்தவாறு தினத்தந்தி, தினகரன் இவற்றை வரி விடாமல் வாசிக்கிறார்கள். (அநேகமாய் ஓசி)

* எழுந்து போகும் போதும் தன் இருக்கை பறி போக கூடாது என பேப்பர் அல்லது பை வைத்து விட்டு போகிறார்கள்

* சத்தமாக மொபைலில் பேசுகிறார்கள்.

* கூட்டமாய் வரும் பெண்கள் தரையில் தான் அமர்ந்து கொள்கிறார்கள் (வாழ்க சமத்துவம்!) தரையில் அமர முடியாத வயதான பெண்கள் மட்டுமே சேரில் அமர்கிறார்கள்.

* பெரும்பாலும் நோயாளி பற்றியும் டாக்டர் சொன்னது பற்றியும் பிறரிடம் பேசி கொண்டிருக்கிறார்கள்.

* புகை பிடிப்போர், நொறுக்கு தீனி சாப்பிடுவோர் அடிக்கடி காணமல் போய் பக்கத்துக்கு கடையை நாடுகிறார்கள்.

* பிளாஸ்க்,துணிகள், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட தங்கள் உடமையை பத்திரமாய் பாதுகாக்கிறார்கள். கடைக்கு போய் விட்டு வந்தால், அவை பத்திரமாய் உள்ளதா என செக் செய்து கொள்கிறார்கள்.

* நோயாளி உடல்நிலை மோசமானால் சத்தமின்றி அழுகிறார்கள். சிலர் அழுவோரை சமாதான படுத்துகிறார்கள்.

மிக பரிதாபமான இனம் இந்த அட்டெண்டர் இனம் ! அங்கிருக்கும் போது இவர்களின் பல குணங்கள் எனக்கும் இருக்கும் !

தொடர்புடைய பதிவு: தஞ்சையின்  மறக்க முடியாத இடங்கள்

51 comments:

 1. //அம்மாவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம். பத்து நாளுக்கும் மேலாக ஐ. சி. யூ வில் இருந்து விட்டு இன்று வார்டுக்கு மாற்றப்படுகிறார். //

  அம்மாவின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அண்ணா...

  அட்டேண்ணரைப்பற்றி சொன்னது 100 சதவீதம் சரியே.. 3 மாதங்களுக்கு முன்பு நானும் ஒரு 6 நாட்கள் அட்டெண்டராக இருந்த அனுபவம்...

  தஞ்சை பற்றி பல தகவல்கள்...

  ReplyDelete
 2. தஞ்சாவூர் தலை ஆட்டி பொம்மை எல்லாம் இப்ப இருக்கண்ணா...

  ReplyDelete
 3. நன்றி சங்கவி. தஞ்சாவூர் தலை ஆட்டி பொம்மை இன்னும் இருக்கு. தஞ்சை பெரிய கோவில் வெளியே உள்ள கடைகளில் கிடைக்கும்.

  கல்யாணமாகி சில வருடம் ஆன பின், ஆண்கள் எல்லாம் அந்த பொம்மை மாதிரி தானே இருக்கிறோம் ?

  ReplyDelete
 4. அம்மாவின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதும் பற்றி மிகவும் சந்தோஷம்.
  மருத்துவமனைகள் பற்றிய சுவாரசியமான தகவல்களுடன் வானவில் சிறப்பாக இருக்கு.

  ReplyDelete
 5. தங்களின் அம்மாவுக்கு உடல்நிலை பூரண குணம் அடைய பிரார்த்தனைகள்...
  தஞ்சை பற்றிய செய்திகள் பழைய ஞாபகத்தை கிளறுகிறது...

  ReplyDelete
 6. காஞ்சி புரம்..அடுத்து தஞ்சாவூரா...? அம்மா உடல் நலத்தில் முழுதாய் தேறி விட பிரார்த்திக்கின்றேன்.

  ReplyDelete
 7. அம்மா குறித்த பகிர்வு நெகிழ்வு. விரைவில் நலமாகி வீடு வரப் பிரார்த்திக்கிறேன்.

  எழுத்தாளர்களின் சந்திப்பு சுவாரஸ்யம்.

  ReplyDelete
 8. அம்மாவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம். பத்து நாளுக்கும் மேலாக ஐ. சி. யூ வில் இருந்து விட்டு இன்று வார்டுக்கு மாற்றப்படுகிறார்.

  அப்பாடா..

  ReplyDelete
 9. தங்கள் அன்னையின் உடல் நல முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி..
  மனுஷன் போடுறது மனக் கணக்கு... பணக் கணக்கு..
  ஆண்டவன் போடுறது நியாயக் கணக்கு....
  கடமையைச் செய்வோம்... ஆண்டவன் விட்ட வழி..

  ReplyDelete
 10. அன்னையார் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி, விரைவில் குணமாகி "குலவிளக்குடன்" கூடி குலாவி குசாலாக இருக்க வாழ்த்துகின்றேன்

  ReplyDelete
 11. Anonymous7:54:00 PM

  அண்ணா அம்மா உடல் நலம் பெற வேண்டுகிறேன். நான் அடுத்த வாரம் தான் ஊருக்கு செல்கிறேன். இல்லையென்றால் கண்டிப்பாக வந்து பார்த்திருப்பேன். எனக்கும் தஞ்சை மருத்துவமனைகளில் நிறைய அனுபவம் இருக்கிறது. என் அப்பாவுக்கு 1993ம் ஆண்டு வாக்கில் கழுத்துப்பகுதியில் நரம்பு பாதிக்கப்பட்டு அன்றைய TMC (Thanjavur Medical Centre) இன்றைய வினோதன் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருந்தார். நமது ஊர் பக்கம் எந்த விபத்து என்றாலும் பார்க்க முடியாது என்றால் தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு அழைத்து செல்ல வேண்டியிருக்கும். தற்போது திருவாரூரிலும் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு விட்டதால் தஞ்சைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கூட்டம் செல்வது பெருமளவில் குறைந்து விட்டது.

  ReplyDelete
 12. அம்மாவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் என்றறிந்து மகிழ்ச்சி....

  ராஜா மிராஸ்தார் மருத்துவமனை - சில வருடங்களுக்கு முன் ஒருவாரம் தஞ்சையில் அலுவல் காரணமாய் தங்கி இருந்தேன் - இந்த மருத்துவமனையில் தான் செவிலியர்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பு இருந்தது... அதனை மேற்பார்வை செய்ய வந்திருந்தேன் - நினைவு வந்தது அந்நாட்கள்....

  ReplyDelete
 13. உங்கள் தாயாரின் உடல் நலம் முன்னேறி இருக்கும் என்று நம்புகிறேன்.

  தஞ்சை பற்றி செய்திகள், சுவாரசியமாக உள்ளன. அட்டெண்டர்கள், எல்லா ஊரிலும் ஒரே ஒற்றுமை தான். !

  ReplyDelete
 14. அம்மாவை பார்த்துக்கொள்ள இவ்வளவு பேர் சுற்றி இருப்பதே அவருக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.

  // மருமகளை பார்த்து இப்படி சொன்னார் : " நம்ம குடும்பத்து குலவிளக்கே நீ தான்" அனைவரும் ஆச்சரியத்தில் சிரிக்க, அண்ணி கண்ணில் மட்டும் அழுகை !//

  நெகிழ்வு மோகன்! இரண்டு பேருக்கும் அன்று அப்படியொரு மன நிம்மதி கிடைத்திருக்கும்.

  ReplyDelete
 15. அம்மாவை பார்த்துக்கொள்ள இவ்வளவு பேர் சுற்றி இருப்பதே அவருக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.

  // மருமகளை பார்த்து இப்படி சொன்னார் : " நம்ம குடும்பத்து குலவிளக்கே நீ தான்" அனைவரும் ஆச்சரியத்தில் சிரிக்க, அண்ணி கண்ணில் மட்டும் அழுகை !//

  நெகிழ்வு மோகன்! இரண்டு பேருக்கும் அன்று அப்படியொரு மன நிம்மதி கிடைத்திருக்கும்.

  ReplyDelete
 16. அம்மா நலமுடன் வீடு திரும்ப ஆண்டவனிடன் வேண்டிகொள்கிறேன் தலைவரே :)

  ReplyDelete
 17. தஞ்சையைப் பற்றி அருமையான விஷயங்களைத் தெரிந்துகொண்டோம் சார். அம்மாவின் உடல் நலன் பழையபடி ரெகவரி ஆக இறைவனை வேண்டுகிறேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 18. தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வேலை செய்யவில்லையா. ஏன்?

  ReplyDelete
 19. அம்மாவின் உடல் நலம் விரைவில் பூரண குணமடையும். கவைலைப்படாதீர்கள். வயதாக வயதாக நிறைய பேருக்கு சிறு குழந்தையின் குணங்கள் திரும்ப வரும். குழந்தையாக இருந்து பெரிய ஆளாக வளர்ந்திருக்கும் மகன் தான் அந்தக் குழந்தைத்தன்மையை புரிந்து அந்தத் தாயைக் காக்க வேன்டும். அதை நீங்கள் செய்கிறீர்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு!!

  கிருஷ்ண பவனில் ஒரு முறை டிபன் அது ஆரம்பித்த சமயம் சாப்பிட்டோம். பிடிக்கவில்லை. நீங்கள் சொல்வதால் அடுத்த முறை தஞ்சை வ‌‌ரும்போது அவசியம் காப்பி குடித்துப் பார்க்க வேன்டும்.‌

  ReplyDelete
 20. கூட்டு பிரார்த்தனை எப்போதுமே வீண் போகாது...அம்மா விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்

  ReplyDelete
 21. தங்கள் தாயின் உடல்நிலை இன்னும் முன்னேற வேண்டிப் பிரார்த்திக்கொள்ளுகிறேன்.

  அட்டெண்டர்கள் பற்றித் தாங்கள் விவரித்தது என்னை 7 வருடங்கள் பிந்தள்ளி எங்கள் தாயை நினைவுறுத்தியது. அவரும் மீண்டுவந்து இருந்தார். இத்தனை அருமையான புத்திரர்கள் இருக்கும் தாய் கொடுத்துவைத்தவர்.

  தஞ்சைக் காப்பியும்,சாப்பாடும் உண்மையிலியே ரசிக்க வேண்டியவைதான். உபசாரமும் கூட.

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. ராம்வி: தொடர் ஆதரவுக்கு நன்றி .

  ReplyDelete
 24. குடந்தை அன்புமணி said...

  தங்களின் அம்மாவுக்கு உடல்நிலை பூரண குணம் அடைய பிரார்த்தனைகள்...
  தஞ்சை பற்றிய செய்திகள் பழைய ஞாபகத்தை கிளறுகிறது...

  **

  நன்றி அன்புமணி. நீங்களும் தஞ்சை மாவட்டத்து காரர் ஆயிற்றே !

  ReplyDelete
 25. கோவை நேரம் said...

  காஞ்சி புரம்..அடுத்து தஞ்சாவூரா...?
  **

  மேடம். இந்த ட்ரிப் அம்மாவுக்காக போனதுங்கோ

  ReplyDelete
 26. ராமலக்ஷ்மி said...

  எழுத்தாளர்களின் சந்திப்பு சுவாரஸ்யம்.

  **
  எழுத்தாளர்களா? இளங்கோ எழுத்தாளர் சரி ! அய்யாசாமியை எல்லாம் எழுத்தாளர் லிஸ்டில் சேர்க்காதீங்க மேடம் !

  ReplyDelete
 27. ரிஷபன்: நன்றி சார்

  ReplyDelete
 28. Madhavan Srinivasagopalan said...

  தங்கள் அன்னையின் உடல் நல முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி..

  **

  நன்றி மாதவா

  ReplyDelete
 29. ஒரு வாசகன் said...


  அன்னையார் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி, விரைவில் குணமாகி "குலவிளக்குடன்" கூடி குலாவி குசாலாக இருக்க வாழ்த்துகின்றேன்
  **
  ஹா ஹா கரக்டா சொன்னீங்க. இனி அந்த அண்ணி தான் பாத்துக்க போறாங்க. அவங்களே சொல்லிட்டாங்க. அம்மா - அப்பாவால் தனியா நீடாவில் இருக்க முடியாது

  ReplyDelete
 30. ஆரூர் மூனா செந்தில் said...

  நான் அடுத்த வாரம் தான் ஊருக்கு செல்கிறேன். இல்லையென்றால் கண்டிப்பாக வந்து பார்த்திருப்பேன்.
  **
  பரவாயில்லை செந்தில். அன்பிற்கு நன்றி. தங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கும் தான்

  ReplyDelete
 31. வெங்கட் நாகராஜ்: ராஜா மிராசுதார் மருத்துவ மனை நான் பிறந்த ஆஸ்பத்திரியாக்கும் !

  Thanks for sharing your experience !

  ReplyDelete
 32. Vetrimagal said...

  தஞ்சை பற்றி செய்திகள், சுவாரசியமாக உள்ளன. அட்டெண்டர்கள், எல்லா ஊரிலும் ஒரே ஒற்றுமை தான். !

  **
  ஆம் மேடம். நன்றி !

  ReplyDelete
 33. ர‌கு said...

  //அம்மாவை பார்த்துக்கொள்ள இவ்வளவு பேர் சுற்றி இருப்பதே அவருக்கு பெரும் ஆறுதலாக இருக்கும். //

  ஆமாம் ரகு. நாங்கள் அனைவரும் போனது ஒரு விதத்தில்
  நல்லதாய் போனது

  //நெகிழ்வு மோகன்! இரண்டு பேருக்கும் அன்று அப்படியொரு மன நிம்மதி கிடைத்திருக்கும்//.

  ஆமாம். நானும் அப்படி தான் நினைதேன் ! இந்த "நட்பு" தொடரவேண்டும் என்பது தான் நம் எண்ணம். பார்க்கலாம்

  ReplyDelete
 34. அருண்மொழித்தேவன் said...

  அம்மா நலமுடன் வீடு திரும்ப ஆண்டவனிடன் வேண்டிகொள்கிறேன் தலைவரே :)

  **

  நெகிழ்வான நன்றி அருண்

  ReplyDelete
 35. துரைடேனியல் said...

  தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வேலை செய்யவில்லையா. ஏன்?

  **

  நன்றி சார். இந்த . com / . in மாறுதலில் இருந்து தமிழ் மணம் ஒட்டு பட்டை இணைக்க எனக்கு தெரியலை. யாராவது உதவினால் மகிழ்வேன்.

  ReplyDelete
 36. அம்மா விரைவில் பூரண நலம் பெற்று வீடுதிரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 37. //இந்த . com / . in மாறுதலில் இருந்து தமிழ் மணம் ஒட்டு பட்டை இணைக்க எனக்கு தெரியலை.//

  See this and change accordingly:


  www.blogger.com/comment.g?blogID=1772109856443841547&postID=115186545362191553

  ReplyDelete
 38. அம்மா தேறி வந்தது மகிழ்ச்சி & ஆச்சர்யம்.

  ReplyDelete
 39. நன்றி மோகன். என்னை பற்றியும், என் அம்மாவை பற்றியும் குறிப்பிட்டு எழுதியதற்கு.

  தங்களின் அம்மா நலம் பெற்று மீண்டும் முன்பு போல் நடமாட வேண்டிக் கொள்கிறோம்.

  ReplyDelete
 40. அம்மா நிலையில் முன்னேற்றம் கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். மீண்டும் பிறந்த குழந்தையைப் பெருமாள் பார்த்துக்கறான்.

  அனைத்துத் தகவல்களும் அருமை. எப்பவாவது யாருக்காவது பயனாகும்.

  காஃபியைக் குறிச்சுவச்சுக்கிட்டேன்.

  நம்ம பழைய பதிவர்கூட(டாக்குட்டர்) தஞ்சையில் மருத்துவமனை வச்சுருக்கார். குடும்ப சொத்து:-)

  ReplyDelete
 41. ஹுசைனம்மா: அம்மா பிழைத்தது எங்களுக்கும் ஆச்சரியம் + மகிழ்ச்சி தான் !

  தமிழ் மணம் இணைக்க நீங்கள் தந்த லிங்க் என்னோட பதிவுக்கான கமன்ட் பாக்சுக்கு அல்லவா இட்டு போகுது?
  சரியான லிங்க் தந்தால் உதவியாய் இருக்கும் !

  ReplyDelete
 42. மனோ மேடம். நன்றி நான் எப்போதாவது தான் செல்கிறேன். அம்மா - அப்பாவை பார்த்து கொண்டு புண்ணியம் பெரும்பகுதி என் பெரிய அண்ணன் சேர்த்து கொள்கிறார்

  //கிருஷ்ண பவனில் ஒரு முறை டிபன் அது ஆரம்பித்த சமயம் சாப்பிட்டோம். பிடிக்கவில்லை.//

  என்ன இப்படி சொல்லிட்டீங்க. இப்போ சாப்பிட்டு பாருங்க ! பலருக்கும் இந்த உணவு பிடிச்சிருக்கு

  ReplyDelete
 43. நந்தனா said...

  கூட்டு பிரார்த்தனை எப்போதுமே வீண் போகாது...அம்மா விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்

  **
  சரியா சொன்னீங்க நந்தனா. பதிவர் நண்பர்கள் பலரின் பிரார்த்தனையும், நல் எண்ணமும் கூட உதவியதாக தான் நினைக்கிறேன்

  ReplyDelete
 44. வல்லிசிம்ஹன் said...

  //அட்டெண்டர்கள் பற்றித் தாங்கள் விவரித்தது என்னை 7 வருடங்கள் பிந்தள்ளி எங்கள் தாயை நினைவுறுத்தியது. அவரும் மீண்டுவந்து இருந்தார். இத்தனை அருமையான புத்திரர்கள் இருக்கும் தாய் கொடுத்துவைத்தவர்.//

  *******
  மகிழ்ச்சி வல்லியம்மா. மனோ மேடத்துக்கு சொன்னது போல பெரிய அண்ணனுக்கு தான் நிறைய புண்ணியம் சென்று சேர்கிறது. நாங்கள் அவ்வப்போது போய் பார்த்தும் தொடர்ந்து போனில் பேசியும் வருகிறோம்

  ReplyDelete
 45. சிவகுமார் ! said...

  அம்மா விரைவில் பூரண நலம் பெற்று வீடுதிரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

  ******
  நன்றி சிவகுமார்

  ReplyDelete
 46. ஆதி மனிதன் said...

  நன்றி மோகன். என்னை பற்றியும், என் அம்மாவை பற்றியும் குறிப்பிட்டு எழுதியதற்கு.
  ****

  நன்றி ஆதி மனிதன். உங்கள் அம்மா வேலை செய்த பள்ளி பற்றியே ஒரு தனி பதிவு எழுதலாம். முடிந்தால் நீங்கள் எழுதுங்கள். தஞ்சை செல்லும் போது அந்த பள்ளி சென்று பார்த்து, அந்த வித்தியாச பள்ளி பற்றி எழுத வேண்டும் என நினைக்கிறேன்

  ReplyDelete
 47. துளசி கோபால் said...

  //அம்மா நிலையில் முன்னேற்றம் கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். மீண்டும் பிறந்த குழந்தையைப் பெருமாள் பார்த்துக்கறான்.//

  நெகிழ்வான வரிகள் நன்றி மேடம்

  நம்ம பழைய பதிவர்கூட(டாக்குட்டர்) தஞ்சையில் மருத்துவமனை வச்சுருக்கார். குடும்ப சொத்து:-)

  யாரு மேடம் இது ? எனக்கு புரியலியே !

  ReplyDelete
 48. அம்மா உடல்நிலையில் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி.. கடவுள் பார்த்துப்பார்.

  ReplyDelete
 49. //உங்கள் அம்மா வேலை செய்த பள்ளி பற்றியே ஒரு தனி பதிவு எழுதலாம். //

  Already I have posted two posts on my Mom's school.

  நூறாவது பதிவு நாலு பேருக்கு உதவுட்டுமே - அரசு சேவை இல்லமும் அதன் பயன்களும் - http://aathimanithan.blogspot.com/2011/12/blog-post.html

  படித்தவுடன் இலவச பயிற்சி, அரசு வேலை - ஆம் தமிழகத்தில் தான் - http://aathimanithan.blogspot.com/2011/12/blog-post_13.html

  ReplyDelete
 50. நல்ல பதிவு.
  உங்களது நகைச்சுவை உங்களது மனது தளராமல் பார்த்துக் கொள்கிறது.
  உங்கள் அம்மா நலனுக்கு பிரார்த்திக்கிறோம்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 51. எனது பக்கத்து வீட்டு உறவினர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உள்ளார் அவருக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய அனைவரையும் அழைக்கின்றோம் அவர் விரைவில் நலம் பெற நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...