Tuesday, February 14, 2012

சுஜாதாவின் "சிவந்த கைகள்": அலுவலக பாலிடிக்ஸ் குறித்த நாவல்

ஒரு நிறுவனம்.அதன் அரசியல், பதவி உயர்வுக்கான போட்டி இவற்றை பின்புலமாக கொண்ட நாவல். செம விறுவிறுப்பான எழுத்து. படிக்க ஆரம்பித்த பின் இருந்த வேலைகளை ஒத்தி போட்டு விட்டு முடித்து விட்டு தான் மறு வேலை பார்த்தேன்

கதை

விக்ரம் என்கிற இளைஞன் இந்தியாவின் பெரும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறான். சேரும் முதல் நாளே " என்றாவது ஒரு நாள் எம். டி சீட்டை பிடிக்க வேண்டும்" என்கிற அளவு வேகம் உள்ளவன். எம். பி. ஏ படிப்பிருந்தால் தான் அந்த வேலை கிடைக்கும் என்பதால் பொய் சர்டிபிகேட் தயாரித்து தந்தான் என்பது அவன் மனதை உறுத்தியவாறே இருக்கிறது.

அவனது பாஸான அசோக் - எம். டி. க்கு மிக பிரியமானவன். அசோக் அடுத்த டைரக்டர் ஆக போகிறவன் என்கிறார்கள். விக்ரம், அசோக் இருவரும் எம். டி. மகளுடன் நெருக்கமாக பழகுகிறார்கள். அசோக்கை டைரக்டர் ஆக அறிவிக்கும் முன் ஹார்ட் அட்டக் வந்து உடல்நிலை பாதிக்கப்பட, டைரக்டர் ஆகும் வாய்ப்பு விக்ரமுக்கு வருகிறது. " ஆறு மாதம் observe-செய்து விட்டு அதன் பின் டைரக்டர் ஆக்குகிறேன்" என்கிறார் எம்.டி!


அந்த ஆறு மாதத்தில் பேய் மாதிரி உழைத்து நல்ல பேர் வாங்குகிறான். ஆனால் அவன் எதற்கு பயந்தானோ அது நடந்து விடுகிறது. அலுவலகத்தில் உள்ள ஒரு வயதானவர் விக்ரம் டிகிரி பொய் என்பதை கண்டு பிடிக்கிறார். அவன் எவ்வளவோ பேசி பார்த்தும் அவர் எம்.டி இடம் சொல்வேன் என மறுபடி மறுபடி சொல்ல, ஒரு sudden provocation-ல் அவரை கொன்று விடுகிறான் விக்ரம். அதற்கு பிராயச்சித்தமாக அவர் மகளுக்கு அதே நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறான்.

என்னடா கதை சம்பிராதயமாக முடிகிறதே, அதுவும் தப்பு செய்தவன் எந்த தண்டனையும் இன்றி தப்பிக்கிறானே என நினைக்கும் போது கடைசி பக்கத்தில் சின்ன டுவிஸ்ட் வைத்து வழக்கம் போல ஒரு கேள்வி குறியுடன் முடிக்கிறார் சுஜாதா.

இதன் முடிவு பலருக்கு அதிர்ச்சியைக் கொடுக்க கடிதம் மேல் கடிதமாக சுஜாதாவிற்கும், நாவலை வெளியிட்ட மணியனுக்கும் எழுதித் தீர்த்தனர். எனவே ரசிகர்களின் ரசனைகேற்ப்ப இதன் இரண்டாம் பாகமாக "கலைந்த பொய்கள்" என்னும் நாவலை மணியன் மாத இதழில் எழுதினார். இதில் கதாநாயகி தந்தையைக் கொன்ற கதாநாயகனை பழிவாங்குவதாக கதையை அமைத்திருந்தார் சுஜாதா ! (தகவலுக்கு நன்றி: வாசகன் ).

***

அலுவலக அரசியல் வைத்து இத்தனை சுவாரஸ்ய கதை நிச்சயம் நான் வாசித்ததில்லை. விக்ரம் அந்த கொலை செய்யும் வரை நாம் எம்.பி ஏ என்கிற பொய்க்காக மாட்ட கூடாது என்று தான் நினைக்கிறோம். ஆனால் அந்த கொலை செய்த பின் நம் கோபம் அவன் மேல் திரும்பி விடுகிறது.

கதையின் துவக்க அத்தியாயங்களை சுஜாதா ஏனோ சிறு வாக்கியங்களிலேயே எழுதி உள்ளார். சில வாக்கியங்களில் இரண்டே வார்த்தைகள். சில நேரம் ஒரே வார்த்தை. ஆனால் இது மிக சுவாரஸ்யமாக உள்ளது.

பொய் சொல்வதற்கு சில விதிகள் என்று சொல்லி விட்டு இப்படி சொல்கிறார் சுஜாதா:

1. சின்ன விஷயங்களுக்கு பொய் சொல்லாதே.
2. குறிக்கோள் மிக முக்கியமானதாக இருந்தால் தான் பொய் சொல்ல வேண்டும்.
3. எவரும் எதிர் பாராத நேரத்தில் பொய் சொல்லு.
4. யோக்கியமாக பொய் சொல். அண்ட புளுகு புளுகாதே. நம்பும் படியாக இருத்தல் வேண்டும் உன் பொய்.

அதிசயமாய் கதையில் சில ஓட்டைகள். குறிப்பாய் விக்ரமுக்கு கார் ஓட்ட தெரியாது என்று சொல்லி விட்டு அடுத்த அத்தியாயத்தில் அவன் தனியே கார் ஓட்டி (அதுவும் ஐந்து மணி நேரம் தள்ளி உள்ள ஊருக்கு) சென்றான் என்று சொல்வது நெருடல்.

இந்த நாவல் ஒரு மாத நாவலாக மணியன் புத்தகத்தில் வந்தது என்பது ஆச்சரியம் தரும் செய்தி. இத்தனை குவாலிட்டி ஆன நாவல் மாத நாவலாக வந்துள்ளதா!! வழக்கமாய் மாத நாவல் எழுதுவோர் இந்த நாவலில் பாதி குவாலிட்டிக்கு எழுதினாலே போதும் !

விறுவிறுப்பு, நகைச்சுவை, மெசேஜ் என எல்லாம் கலந்த இந்த சுஜாதா
ஸ்டெயில் கதையை அவசியம் வாசியுங்கள் !

நாவல் பெயர்: சிவந்த கைகள்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 60

நன்றி: பதிவர் ரகு

திண்ணை பிப்ரவரி 5, 2012 தேதியிட்ட இதழில் வெளியானது

23 comments:

  1. சுவாரசியமான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  2. சுஜாதாவின் கதை பற்றிய விமர்சனம் நல்லா இருக்குய்யா மாப்ளே...பொய் சொல்ல வேண்டிய தருணங்கள் மனதில் நின்றது நன்றி!

    ReplyDelete
  3. அழகான புத்தக விமர்ச்சனம்...

    ReplyDelete
  4. உங்கள் எழுத்தில் புத்தக விமர்சனமும், திரை விமர்சனம் இரண்டுமே அருமையாக உள்ளன.

    ReplyDelete
  5. விமர்சனம் படிக்க வேண்டும் என்ற ஆவலைத்தருகின்றது. நன்றி.

    ReplyDelete
  6. இதன் முடிபு பலருக்கு அதிர்ச்சியைக் கொடுக்க கடிதம் மேல் கடிதமாக சுஜாதாவிற்க்கும் மணியனுக்கும் எழுதித் தீர்த்தனர். எனவே ரசிகர்களின் ரசனைகேற்ப்ப இதன் இரண்டாம் பாகமா "கலைந்த பொய்கள்" என்னும் நாவலை மணியன் மாத இதலில் எழுதினார்,
    இதில் கதாநாயகி தந்தையைக் கொன்ற கதாநாயகனை பழிவாங்குவதாக கதையை அமைத்திருந்தார்.

    ReplyDelete
  7. RAMVI said...

    சுவாரசியமான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    **
    நன்றி ராம்வி.

    ReplyDelete
  8. விக்கியுலகம் said...


    சுஜாதாவின் கதை பற்றிய விமர்சனம் நல்லா இருக்குய்யா மாப்ளே...பொய் சொல்ல வேண்டிய தருணங்கள் மனதில் நின்றது நன்றி!

    **

    நன்றி விக்கி. எல்லாரையும் மாப்ளே என விளிப்பீர்களா? ரசித்தேன்

    ReplyDelete
  9. கோவை2தில்லி said...

    உங்கள் எழுத்தில் புத்தக விமர்சனமும், திரை விமர்சனம் இரண்டுமே அருமையாக உள்ளன.

    ***

    நன்றி கோவை டு தில்லி மேடம்

    ReplyDelete
  10. மாதேவி said...

    விமர்சனம் படிக்க வேண்டும் என்ற ஆவலைத்தருகின்றது. நன்றி.

    ***
    நன்றி மாதேவி !

    ReplyDelete
  11. வாசகன்: நீங்கள் சொன்ன எக்ஸ்ட்ரா தகவல் சுவாரஸ்யம். அதை இப்போது பதிவிலேயே (உங்களுக்கு நன்றி என்கிற குறிப்புடன் சேர்த்துள்ளேன்!)

    ReplyDelete
  12. சங்கவி said...

    அழகான புத்தக விமர்சனம்...

    ***
    நன்றி சங்கவி

    ReplyDelete
  13. நல்ல விமர்சனம் மோகன்....

    பாராட்டுகள்....

    ReplyDelete
  14. நல்ல விமர்சனம் சார். நன்றி.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. ரொம்ப சுவாரஸ்யமான கதை. அதிலும் அந்த கடைசி ட்விஸ்ட்.....வாவ்! என்று சொல்லவைத்தது.

    ReplyDelete
  17. கதையில் ப்ரிட்ஜ் ஆட்டத்தைப் பற்றி பெரிதாய் சொல்லியிருப்பார். படு சுவாரஸ்யமாய் இருக்கும். தலைவர்

    ReplyDelete
  18. கதையில் ப்ரிட்ஜ் ஆட்டத்தைப் பற்றி பெரிதாய் சொல்லியிருப்பார். படு சுவாரஸ்யமாய் இருக்கும். தலைவர்

    ReplyDelete
  19. வெங்கட் நாகராஜ் said...
    நல்ல விமர்சனம் மோகன்.... பாராட்டுகள்....

    **
    நன்றி வெங்கட் !

    ReplyDelete
  20. அமைதி அப்பா said...
    நல்ல விமர்சனம் சார். நன்றி.

    **
    நன்றி அமைதி அப்பா

    ReplyDelete
  21. ர‌கு said...

    ரொம்ப சுவாரஸ்யமான கதை. அதிலும் அந்த கடைசி ட்விஸ்ட்.....வாவ்! என்று சொல்லவைத்தது.
    **

    ஆம் ரகு. நன்றி

    ReplyDelete
  22. சங்கர் நாராயண் @ Cable Sankar said...

    கதையில் ப்ரிட்ஜ் ஆட்டத்தைப் பற்றி பெரிதாய் சொல்லியிருப்பார். படு சுவாரஸ்யமாய் இருக்கும். தலைவர்
    **
    கேபிள்: கரக்டு. எனக்கு ப்ரிட்ஜ் விளையாட தெரியாது. அதனால் அது பத்தி ஏதும் எனது விமர்சனத்தில் எழுதலை !

    ReplyDelete
  23. நல்ல விமர்சனம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...