பசங்க- எனது Alltime favourite படங்களில் ஒன்று. சிறுவர்களை பின்புலமாக கொண்ட படம் என்றாலே சற்று பிடிக்க தான் செய்யும். எனவே மெரீனா மீது சற்று எதிர்பார்ப்பு இருந்தது உண்மை.
ஐந்து நாள் கழித்து விமர்சனம் எழுதுவதால் ப்ளாக் படிக்கும் அனைவருக்கும் இந்நேரம் கதை ( !!??) தெரிந்திருக்கும். சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில், "பீச்சில் வியாபாரம் செய்து பிழைக்கும் சிறுவர்கள் குறித்த கதை". இறுதியில் அவர்கள் படிக்க போவதாக காண்பித்து முடிக்கிறார்கள். (நிஜத்தில் இப்படி நடந்தால் நல்லா இருக்கும்!!)
சரி மற்ற விஷயங்களுக்கு வருவோம்
படம் வரும் முன் எதிர்பார்த்தது போல் சிவகார்த்திகேயன் ஹீரோ அல்ல. பக்கடா தான் ஹீரோ. சிவா அவ்வப்போது வந்து போகும் சிறு கேரகடர் செய்துள்ளார். விஜய் டிவியில் இவர் செய்யும் அமர்க்களம், அதில் இவரை ரசிக்கும் மக்கள் கூட்டம் மிக மிக பெரிது !
மெரினாவில் சிவா ஒகே என்றாலும் நடிப்பில் என்னமோ ஒன்று குறைகிறது. காமிரா conscious-ஆ என தெரியலை. சூர்யா, விஜய் மாதிரி இன்று கலக்கும் பெரும் நடிகர்களே முதல் சில படங்களில் சுமாராக தான் நடித்தனர். தனது தவறுகளில் இருந்து கற்று கொள்ளும் ஆர்வம் இருந்தால் சிவா நிச்சயம் மேலே வருவார்.
சிவா நண்பனா வருபவர் ஏகப்பட்ட காதல் பழமொழிகளை எடுத்து விடுறார். " காதல் பற்றிய அறிஞர்கள் பொன்மொழிகள்" ன்னு ஒரு புக் கிடைக்குது. இந்த பழமொழிகள் எல்லாம் இந்த புக்கில் ஏற்கனவே படிச்சுட்டேன் . அதே புக்கை தான் பாண்டிராஜ் வாங்கி சிவா நண்பரை விட்டு பேச வைத்துள்ளார். நிஜத்தில இந்த மாதிரி யார் எப்ப பார்த்தாலும் பொன்மொழிகளா பேசுறாங்க !! முடியல !
வணக்கம் சென்னை பாடல் நிஜமாகவே ரொம்ப நல்ல கான்செப்ட். சென்னை பற்றிய பாடல் என்பது எப்படி இதுவரை மற்ற இயக்குனர்களுக்கு தோன்றாமல் போயிற்று? சென்னை லட்சக்கணக்கான மக்கள் வாழும் ஊர் என்பதால் அத்தகைய பாடலுடன் நிறைய பேர் எளிதில் relate செய்து ரசிப்பார்கள்.
இப்பாட்டின் promo-பார்த்த போது " தெரிந்த பிரபலங்கள் வைத்து எடுத்துள்ளனரே.. ! சென்னையை மட்டுமே முழுக்க focus -செய்து எடுத்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்தேன். படத்தின் டைட்டிலில் இப்பாடல் வருகிறது. நாம் promo-வில் பார்த்தது போல் இல்லாமல் முழுக்க சென்னையை சுற்றியே பாடல் சுழல்கிறது !
புது இசை அமைப்பாளர் கிருஷ்ஜி ! சின்ன பையன் போல தான் இருக்கார். வர வர மிக இளைய இசை அமைப்பாளர்கள் தமிழ் திரை உலகுக்கு வர ஆரம்பித்து விட்டனர். இரு பாடல்கள் ஓகே ரகம் !
ஒரு சில பதிவர்கள் சொன்னது போல் பீச்சில் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் தான் எவ்வளவு ! இவற்றை தவிர்த்து விட்டு பீச் வாழ்க்கை மிக ஜாலி ஆனது என்கிற மாதிரி படம் எடுத்தது உறுத்துகிறது.
அதிஷா எழுதியது போல் இதை பார்த்து விட்டு சென்னைக்கு ஓடி போனால் ஜாலியாக பிழைக்கலாம் என்கிற எண்ணம் பாட சுமை உந்தி தள்ளும் பள்ளி சிறுவர்களுக்கு தோன்ற, இந்த படம் ஒரு காரணமாக இருந்து விட கூடாது !
சில பெண்கள் சுமாராக தான் இருப்பார்கள். ஆனால் கொஞ்சமே கொஞ்சம் மேக் அப் போட்டால் செம அழகாய் தெரிவார்கள். ஓவியா அந்த ரகம் தான் ! அழகை பார்த்தோமோ, ரசித்தோமா என்று போயிடனும். அதுக்கு மேல் நடிப்பெல்லாம் எதிர்ப்பார்க்க கூடாது. இந்த கொள்கையுடன் பார்த்தால் ஓவியாவை ரசிக்கலாம்.
பீச்சில் எப்போதும் பழைய பாட்டு பாடுகிற ஆளாய் ஒருவர் வருகிறார். இவர் பாடும் போது யாராவது ஒரு சிங்கரை வைத்து அந்த பாட்டை பாட வைத்திருக்கலாம். ஆனால் TMS குரலில் அப்படியே அந்த பாட்டையே ஒலிக்க வைக்கிறார்கள். இது TMS பாட்டுக்கு இவர் வாய் அசைக்கிற உணர்வையே தருகிறது.
சிவா- ஓவியா காதல் நிச்சயம் பல சென்னை காதல்களை பிரதிபலிப்பதாக உள்ளது !
" பீச்சை வாடகைக்கு விட்டுருக்கேன்" எனும் மனநிலை சரியில்லாத நபர் அவ்வப்போது நன்கு சிரிக்க வைக்கிறார்.
சென்ற சில வாரங்களாக நல்ல படங்கள் ரிலிஸ் ஆகாத நிலையில் லோ பட்ஜெட்டில் எடுத்த இந்த படம் இரண்டு வாரம் ஓடினாலே அனைவருக்கும் நஷ்டமில்லாமல் காசு பாத்துடுவாங்கன்னு நினைக்கிறேன் !
சென்னை, குறிப்பாய் மெரீனா கடற்கரை குறித்த நல்ல ப்ளாட் + சிறுவர் கல்வி என்கிற நல்ல கருத்து இருந்தும், மனதை தொடும் கதை இல்லாததால் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காமல் போகிறது.
இருப்பினும், சற்றே வித்யாசமான படம் என்கிற அளவில் ஒருமுறை பார்க்கலாம் !
டிஸ்கி: காஞ்சிபுரம் பயண கட்டுரை ஓரிரு நாட்களில் வெளியாகும் ! பொறுத்தருள்க !
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
அருமையான விமர்ச்சனம்...
ReplyDeleteகலக்குங்க...
சிறப்பான விமர்சனம்..ஆவலை தூண்டும் எழுத்துக்கள்..மிக்க நன்றி.
ReplyDeleteசைக்கோ திரை விமர்சனம்
வணக்கம் தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்... மறக்காமல் எழுத முயற்சிக்கவும்...
ReplyDeleteநன்றி....
"இன்னைக்கி டபுள் கோட்டிங்கா" என சிவகார்த்திகேயன் ஓவியாவை நக்கல் அடிப்பது ரசிக்க வைத்தது. ஆவரேஜ் படம்.
ReplyDeleteவணக்கம் பாஸ் நல்ல விமர்சனம்
ReplyDeleteநானும் படம் பார்த்தேன் பார்க்ககூடிய அருமையான படம்
நல்ல விமர்சனம்....சென்னைப் பாடல் நன்றாக உள்ளது...
ReplyDeleteநடுநிலை விமர்சனம்....
ReplyDeleteசென்னையில் இருப்பதால் உடனுக்குடன் படங்களைப் பார்த்து விடமுடிகிறது உங்களால்... :)
இங்கே பார்க்க முடிவதில்லை.... சென்னை பற்றிய பாடல் தொலைக்காட்சியில் பார்த்தேன். நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளது....
Rathnavel Natarajan said...
ReplyDeleteநல்ல பதிவு.
வாழ்த்துகள்.
***
நன்றி ஐயா !
சங்கவி said...
ReplyDeleteஅருமையான விமர்ச்சனம்...
கலக்குங்க...
********
நன்றி சங்கவி. நீங்கள் சொன்ன தொடர் பதிவு ஓரிரு வாரத்தில் எழுதுகிறேன்
Kumaran said...
ReplyDeleteசிறப்பான விமர்சனம்..ஆவலை தூண்டும் எழுத்துக்கள்..மிக்க நன்றி.
*******
நன்றி குமரன்
K.s.s.Rajh said...
ReplyDeleteவணக்கம் பாஸ் நல்ல விமர்சனம்
நானும் படம் பார்த்தேன் பார்க்ககூடிய அருமையான படம்
**
நீங்களும் படம் பார்த்து விட்டீர்களா? நன்றி ராஜா.
கோவை2தில்லி said...
ReplyDeleteநல்ல விமர்சனம்....சென்னைப் பாடல் நன்றாக உள்ளது..
**
ஆம் நன்றி மேடம்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநடுநிலை விமர்சனம்....
சென்னையில் இருப்பதால் உடனுக்குடன் படங்களைப் பார்த்து விடமுடிகிறது உங்களால்... :)
**
ஆம் வெங்கட். நன்றி
கடைசி வரியோட ஒத்துப்போகிறேன். வித்யாசமான முயற்சிக்காவது பாராட்டனும்...
ReplyDeleteஎளிமையான விமர்சனம். படம் 'போர'டிப்பதாய் சிலர் சொன்னார்கள். எதை எதிர்பார்த்து அவர்கள் சென்றார்களோ...!
ReplyDelete