Friday, February 3, 2012

காஞ்சி: பட்டு புடவை வாங்க சிறந்த கடை-அற்புத 3 கோயில்கள்

கைலாச நாதர் கோவில்

காஞ்சிபுரத்தின் பல கோயில்கள் அருகருகில் நடந்து போகும் தூரத்தில் இருக்கும். ஆனால் இந்த கைலாச நாதர் கோவில் மட்டும் ஊரிலிருந்து சற்று தூரத்தில் (பிள்ளையார் பாளையம் செல்லும் வழியில்) உள்ளது. நீங்கள் காரில் வந்திருந்தால் எளிதில் செல்லலாம். அல்லது ஆட்டோ எடுத்து கொண்டு இங்கு செல்ல வேண்டும் .

இங்குள்ள சுவாமியை சுற்றியுள்ள திருவண்ணாழி மிக குறுகியது. ஒருவர் பின் ஒருவராக தவழ்ந்து, ஊர்ந்து, படுத்து நிமிர்ந்து தான் வெளி வர வேண்டும். இதனை சொர்க்க பரிகாரம் என்பர். இதில் மும்முறை வளம் வருவோருக்கு மறுபிறவி என்பது இல்லை என்பது ஐதீகம்.

கோயிலின் முன்பு புல்வெளி மிக அழகாக பராமரிக்கப்படுகிறது  



நந்தி காதில் ரகசியம் சொன்னா பலிக்குமாம். இவர் ரகசியம் சொல்றாரா? போஸ் குடுக்குறாரா??

கைலாச நாதர் கோவிலின் அழகான புல்வெளியையும் கோயில் வெளி View-வும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.



                                             ************
சற்று சிதிலமடைந்த நிலையில் உள்ள சிலைகள்:





இந்திய தொல்லியல் துறை இக்கோவிலை பழங்கால நினைவு சின்னமாக அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு கோவிலுக்கு வெளியே பாருங்கள்



கோவிலின் உட்புறம்

பழமை வாய்ந்த இந்த கோவிலின் உட்புறத்தை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம் :



*****
நாங்கள் சென்ற அன்று கோவில் உள்ள தெருவில் ஒரு மரணம் நடந்து விட்டது என்பதால் கோவில் கருவறை திறக்கப்படவில்லை. இதனால் எங்களால் சாமி பார்க்க முடிய வில்லை. ( தெருவில் ஒரு மரணம் நிகழ்ந்தால், உடல் எடுக்கப்படும் வரை கோவிலில் சாமி பார்க்க முடியாது என்பது இப்போது தான் எனக்கு தெரியும். இது எல்லா ஊரிலும் உள்ள வழக்கமாமே!)

இந்த புகழ் பெற்ற சாமி சந்நிதானம் பற்றிய, நேரடி அனுபவம் அறிய வேண்டுமெனில் சக பதிவர் துளசி கோபால் இந்த கோவில் சென்று வந்து எழுதிய அனுபவத்தை வாசியுங்கள். 

***********
கோவிலுக்கு வெளியே பழங்கால பொருட்கள் நிறைய விற்பனை செய்தனர். பூட்டு, செப்பு பாத்திரம் போன்றவை ..ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கில் விலை சொன்னதால் நாங்கள் எதுவும் வாங்க வில்லை.

பழங்கால பூட்டுகள்

************************
பாண்டவ தூத பெருமாள்

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக கிருஷ்ணன் தூது சென்ற இடம் உள்ளதல்லவா? அப்படி தூது சென்ற போது துரியோதனன் கண்ணனுக்கு மூங்கிலால் ஆன இருக்கை செய்து கீழே மல்லர்களை ஒளித்து வைக்கிறான். அதில் அமரும் கண்ணன் இருக்கை இடிந்து விழ மல்லர்களை அழித்து விட்டு துரியோதனனுக்கு விஸ்வரூபம் எடுத்து தன் திருவுருவை காண்பிக்கிறார் .

இந்த சம்பவத்தை குறிக்கும் கோயில் தான் இந்த பாண்டவ தூத பெருமாள் கோயில் !!

உள்ளே முப்பதடியில் பெரிய பெருமாள் சிலை உள்ளது. இதற்கு வேஷ்டியே சாத்த முடியாதாம். சாத்தினால், கிழிந்து அதனை எடுக்கவே சிரமப்பட வேண்டுமாம் !!

வைகுண்ட ஏகாதசி சமயம் தான் முழு சிலையும் பார்க்க முடியும் என்றும் மற்ற நேரம் முகம் இந்த சிலையின் மட்டுமே பார்க்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.

பாண்டவ தூத பெருமாள் கோயில்

ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் செல்ல வேண்டிய கோயில் என்று உள்ளது. இதன் விபரம் தினமலர் வெப்சைட்டில் இருக்கும். அதனை இங்கே வாசிக்கலாம்.

அந்த விதத்தில் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ் நாள் முழுதும் இயலும் போதெல்லாம் செல்ல வேண்டிய கோயில் இந்த பாண்டவ தூத பெருமாள் கோயில் !!

*********
இந்த பாண்டவ தூத பெருமாள் கோயில் அருகிலேயே உள்ள மற்றொரு கோயில் குபேரன் கோயில்

குபேரன் கோயில்

நாங்கள் போன போது காலை பதினொன்றரை மணிக்கே பூட்டி விட்டனர். இதுவும் மிக விசேஷமான கோயில் தான். இன்னொரு சந்தர்ப்பத்தில் முடிந்தால் பார்க்க வேண்டும் !
                                                                     *********

Mrs. அய்யா சாமி பட்டு புடவை வாங்கிய கடையை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். ஏறக்குறைய ஏழெட்டு கடைகளை பார்த்த பின் " இங்கு தான் பட்டும் நல்லா இருக்கு; விலையும் ஓகே" என பட்டு புடவை வாங்கினார். (சென்னை முதல் காஞ்சிபுரம் வரை நாங்கள் நடத்திய மினி வாக்கெடுப்பில் கூட இந்த கடைக்கு தான் நிறைய பேர் வாக்களித்தனர். அதுக்காக நாலு கடை பாக்காம புடவை வாங்க முடியுமா என்ன? )

அண்ணா கூட்டுறவு சொசைட்டி என்னும் இந்த கடை காந்தி சாலையில் உள்ளது. அதன் தொலை பேசி எண்ணுடன் கூடிய புகைப்படம் இதோ:

                                 

கடையிலிருக்கும் ஓவிய டிசைன்கள்   

வெளியிலிருக்கும் கண்ணாடி கதவு கூட என்னா டிசைன் பாத்தீங்களா? 

இரண்டு மணி நேரத்தில் இங்கு பட்டு புடவை எடுத்துட்டோம்னா பாத்துக்குங்களேன் :)))

நிற்க. நாங்கள் வாங்கிய பட்டு புடவை புகை படம் போடவோ, விலை சொல்லவோ கூடாது என ஹவுஸ் பாஸ் கட்டளை இட்டிருப்பதால், அந்த கேள்விக்கு மட்டும் பின்னூட்டத்தில் பதில் கிடைக்காது :))

அடுத்த (நிறைவு) பகுதியில் :

வரதராஜ பெருமாள் கோவில்
சிறப்பு வாய்ந்த தங்க பல்லி வெள்ளி பல்லி
சென்னை டு காஞ்சிபுரம் ரயிலில் செல்ல கால அட்டவணை

பட்டு புடவை நெய்யும் காட்சி வீடியோ

(அடுத்த பதிவுடன் காஞ்சி பயண கட்டுரை முடிவடையும் )

29 comments:

  1. பேருந்து நிலையத்திலிருந்து ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்லும் தூரம்தான் ஏறக்குறைய கைலாசநாதர் கோவிலுக்கும். மற்ற கோவில்களெல்லாம் அருகருகே இருப்பதனாலேயே இந்த கோவிலுக்கு வரும் கூட்டம் கம்மி என்று நினைக்கிறேன்.

    சிவராத்திரி அன்றுதான் இந்த கோவிலில் கூட்டம் அலைமோதும். அந்த ஒரு நாளைத் தவிர உள்ளூர்வாசிகள் கூட அதிகம் கைலாசநாதர் கோவிலுக்கு செல்வதில்லை.

    பாண்டவ பெருமாள், குபேரன் கோவில்களுக்கு இதுவரை சென்றதில்லை. பிரதோஷம் அன்று குபேரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கும் என்று நினைக்கிறேன். ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் பார்த்ததாக ஞாபகம்.

    கடைகளில் எடுப்பதை விட சொசைட்டியில் எடுத்தால் சற்று விலை குறைவாக இருக்கும் என்பது உண்மை. அதை விட நெசவாளர்களிடம் நேரடியாக வாங்கினால் இன்னும் குறைவாக இருக்கும்.

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. பூட்டுகள் வித்தியாசமா இருக்கு.. பகிர்வும் அருமை.

    ReplyDelete
  4. //மற்ற நேரம் முகம் இந்த சிலையின் மட்டுமே பார்க்க முடியும் என்றும் சொல்கிறார்கள். //

    முகத்தை இடமாற்றணும்!

    நிற்க,

    இந்த பாண்டவதூதன், குபேரன் எல்லாம் நாங்க பார்க்கலையே:(

    கைலாஸநாதரை தரிசனம் செஞ்சுட்டு வரதராஜனைப் பார்க்க ஓடிட்டோம்:(

    (அடுத்த முறைக்கு ரிசர்வ்டு)

    பட்டுப்புடவை ஸ்ரீவிநாயகா ஸில்க்ஸில் எடுத்தோம்.

    அடுத்த விஸிட் நீங்க சொன்ன கடையையும் 'எட்டி'பார்க்கணும்:-)))))

    ReplyDelete
  5. கைலாசநாதர்,குபேரன் கோவில் பற்றிய தகவல்கள் அருமை.

    வீடியோ படங்கள் சிறப்பாக இருக்கு.

    பட்டு கூட்டுறவு சங்க கடையில் புடவை வாங்கியது நல்ல விஷயம்.தரம் நன்றாக இருக்கும்.தனியார் கடைகளில் நிறைய ஏமாற்றுகிறார்கள்.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு. மீன் பூட்டு அழகாயிருக்கே....

    ReplyDelete
  7. பல தகவல்களை அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  8. நாங்களும் உங்களுடன் வாரா வாரம் காஞ்சீபுரம் பயணித்தது போன்ற ஒரு உணர்வு. அடுத்த வாரம் இறுதிப் பகுதி என்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது :-(

    ReplyDelete
  9. பூட்டு - அருமையாக இருக்கு...

    தகவல்கள் அருமை... எப்போதாவது காஞ்சி சென்றால் உபயோகப்படும்....

    தொடர்கிறேன்....

    ReplyDelete
  10. படங்களும் தகவல்களும் நன்று. வீடியோ பகிர்வும் அருமை, குறிப்பாகப் பின்னணியில் கேட்கும் குருவிகளின் சங்கீதமும்.

    ReplyDelete
  11. அருமையான படைப்புகளை வழங்கி வரும் உங்களுக்கு பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றி !

    ReplyDelete
  12. நன்றாக எழுதியுள்ளீர்கள் சார்.

    தொடரட்டும் உங்கள் பயனமும் பதிவும்!

    ReplyDelete
  13. இந்த மாதிரி பழைய வாசனை வீசும் கோவில்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும்!
    நந்தியின் காதில் ரகசியம் சொல்பவர் அய்யாசாமிதானே!
    பழைய பூட்டுகள் கவர்கின்றன.
    //மற்ற நேரம் முகம் இந்த சிலையின் மட்டுமே பார்க்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.//
    முகம் மட்டும்?

    ReplyDelete
  14. ரகு said:

    //கடைகளில் எடுப்பதை விட சொசைட்டியில் எடுத்தால் சற்று விலை குறைவாக இருக்கும் என்பது உண்மை. அதை விட நெசவாளர்களிடம் நேரடியாக வாங்கினால் இன்னும் குறைவாக இருக்கும்.//

    ஆம் நான் கூட நெசவாளர்களிடம் நேரடியாக வாங்க தான் நினைத்தேன். சரியான reference இல்லாததால் வாங்கலை

    ReplyDelete
  15. இராஜராஜேஸ்வரி said...
    அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

    ***

    நன்றி ராஜ ராஜேஸ்வரி

    ReplyDelete
  16. அமைதிச்சாரல் said...
    பூட்டுகள் வித்தியாசமா இருக்கு.. பகிர்வும் அருமை

    ****

    நன்றி அமைதி சாரல்

    ReplyDelete
  17. நன்றி துளசி கோபால் மேடம். அடுத்த முறை அந்த கோயில்கள் பாருங்கள்

    ReplyDelete
  18. RAMVI said...
    கைலாசநாதர்,குபேரன் கோவில் பற்றிய தகவல்கள் அருமை.

    வீடியோ படங்கள் சிறப்பாக இருக்கு.

    ***

    நன்றி ராம்வி மேடம்

    ReplyDelete
  19. கோவை2தில்லி said...
    நல்ல பகிர்வு. மீன் பூட்டு அழகாயிருக்கே....

    ***

    நன்றி கோவை2தில்லி மேடம்

    ReplyDelete
  20. K.s.s.Rajh said...
    பல தகவல்களை அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி பாஸ்

    ***

    நன்றி ராஜா

    ReplyDelete
  21. BalHanuman said...
    நாங்களும் உங்களுடன் வாரா வாரம் காஞ்சீபுரம் பயணித்தது போன்ற ஒரு உணர்வு. அடுத்த வாரம் இறுதிப் பகுதி என்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது :-(

    **
    மகிழ்ச்சி BalHanuman. குறிப்பாய் இந்த தொடர் முடிவது வருத்தம் தருகிறது என்று நீங்கள் எழுதியது வாசிக்க நெகிழ்வாய் இருந்தது

    ReplyDelete
  22. வெங்கட் நாகராஜ் said...
    பூட்டு - அருமையாக இருக்கு...

    தகவல்கள் அருமை... எப்போதாவது காஞ்சி சென்றால் உபயோகப்படும்..

    ***
    உங்க வீட்டம்மாவுக்கும் (கோவை2தில்லி )அந்த பூட்டு பிடிச்சிடுச்சு ; ரெண்டு பேருக்கும் சேம் டேஸ்ட் போல..

    ReplyDelete
  23. ராமலக்ஷ்மி said...
    படங்களும் தகவல்களும் நன்று. வீடியோ பகிர்வும் அருமை, குறிப்பாகப் பின்னணியில் கேட்கும் குருவிகளின் சங்கீதமும்.

    **

    மகிழ்ச்சி நன்றி ராமலக்ஷ்மி

    ReplyDelete
  24. Rathnavel Natarajan said...
    அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    **

    நன்றி ஐயா

    ReplyDelete
  25. திண்டுக்கல் தனபாலன் said...
    அருமையான படைப்புகளை வழங்கி வரும் உங்களுக்கு பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றி !

    **

    மகிழ்ச்சி நன்றி தனபாலன்

    ReplyDelete
  26. அமைதி அப்பா said...
    நன்றாக எழுதியுள்ளீர்கள் சார்.

    தொடரட்டும் உங்கள் பயனமும் பதிவும்!

    ***

    நன்றி சார்

    ReplyDelete
  27. ஸ்ரீராம். நன்றி அது அய்யா சாமி தான்

    தவறு ! நன்கு கவனித்து சொல்லி உள்ளீர்கள் மாற்றி விடுகிறேன் !

    ReplyDelete
  28. இஎண்டி டாக்டர் காத டெஸ்ட் பண்ற மாதிரி நந்திகிட்ட பேசறீங்க? பயப்படாம கிட்டப் போங்க. முட்டாது:))))

    ReplyDelete
  29. தகவல்கள் அருமை... எப்போதாவது காஞ்சி சென்றால் உபயோகப்படும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...