Wednesday, February 15, 2012

வானவில் 76:: ஆசிரியை கொலை, சாரு, BJP அமைச்சர் வீடியோ- சர்ச்சைகள்

சென்ற வாரம் "சர்ச்சை வாரம்" ஆக காட்சி அளித்தது ! சாரு Vs எஸ். ரா சர்ச்சை, பள்ளி ஆசிரியை கொலை, கர்நாடகா அமைச்சர்கள் செக்ஸ் வீடியோ என எத்தனை சர்ச்சைகள் !

இதில் சில சர்ச்சைகள் குறித்த என் கருத்தை பதிவு செய்கிறேன்.

சாரு Vs எஸ். ராமகிருஷ்ணன் சர்ச்சை

எஸ். ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு ரஜினி வந்ததும், அழைப்பிதழில் ரஜினி படம் பெரிதாக போட்டதும், ரஜினி கடைசியாக பேசியதும் குறித்து விமர்சிக்கிறார் சாரு. இவரையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க கூடாது என்றாலும் சில விஷயங்களில் சும்மா இருப்பதும் தவறு என்பதால் சொல்ல வேண்டியிருக்கிறது

நடிகர் விழாவிற்கு வருவதே தவறு என்றால் குஷ்பூ, ஜோதிர்மயி என சாரு புத்தக வெளியீட்டுக்கு நடிகைகளை அழைத்தது எப்படி என்றால், " அவர்களை அழைத்தது மனுஷ்யபுத்திரன்; நானல்ல" என்கிறார் சாரு. புத்தக வெளியீட்டுக்கு நடிகைகள் வரக்கூடாது என சொல்லும் அளவு கூடவா அவருக்கு வாய்ஸ் இல்லை? விஷயம் இதுவல்ல; அந்த நடிகைகளை அழைத்தது சாருவாக இருக்கும் அல்லது வேறு யார் அந்த யோசனை சொன்னாலும், வழிந்து கொண்டே சரி என்றிருப்பார் என்பது அவரையும், அவர் எழுதியதை கொஞ்சம் படித்தவர்களால் கூட சொல்ல முடியும்.

ரஜினி கடைசியாக பேசியதில் என்ன தவறு? கலைஞர் போன்றவர்கள் விழாவில் பேசினால், நன்றியுரை கூட முன்பே பேசி விடுவார்கள். எஸ். ரா வை விட ரஜினி பிரபலம் என்பதில் என்ன சந்தேகம்? உடல் நலக்குறைவுக்கு பின் வரும் ரஜினியை பார்க்க கணிசமான ரஜினி ரசிகர்கள் வருவது இயல்பே. அவர்களில் பத்து சதவீதம் பேருக்கு எஸ். ராவின் இலக்கியம் சென்று சேர்ந்தால் போதுமே !

சாரு குதிப்பதன் காரணம் வேறு. சேட்டிங்கில் பெண்ணுடன் அசிங்கமாக பேசி மாட்டி கொண்டதில் இருந்து அவரை பெரும்பாலான பெருந்தலைகள் ஒதுக்கி விட்டனர். அவரது எக்சைல் நாவல் வெளியீட்டு விழாவின் போது "இனி நமக்கு என்ன இமேஜ் வேண்டி கிடக்கு? நம்மை மதிச்சு கூப்பிடுறதே பெரிசு "என்றோ, அல்லது இணையம் பரிச்சயம் இல்லாததால் இவரின் சேட்டிங் லீலைகள் தெரியாமலோ "வாலி, இந்திரா பார்த்தசாரதி" என்கிற எண்பது ப்ளஸ் வயதுள்ள இருவர் தான் கலந்து கொண்டனர். அவ்வளவு பெரிய மேடையில் ஈ ஆடியது, சாருவை அனைவரும் புறக்கணிப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஆனால் எஸ். ராவுக்கு இவ்வளவு வி. ஐ. பி ஆதரவா என குதிக்கிறார் இவர் ! எக்சைல் சில ஆயிரம் புத்தகம் விற்பதால் பெரிய ஆள் ஆகி விட முடியாது. ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை வைத்தே அவர் மரியாதை காப்பற்றப்படும். சாரு மரியாதை இழந்து ரொம்ப காலமாகிறது !

ஒரு இலக்கிய விழாவிற்கு கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் வருவது அந்த எழுத்தாளரையும் விழாவையும் பெருமை படவைக்கும் விஷயம். விழா நிகழ்வை இப்படியும் நினைக்கலாம். சாரு போல கோணலாகவும் பேசலாம். பார்க்கும் பார்வையில் தான் கோளாறே தவிர வேறொன்றும் இல்லை.

மகாபாரதத்தில் தருமன் மற்றும் துரியோதனன் உலகை சுற்றி பார்த்தனர். தருமன் " அருமையான உலகம்; மக்கள் நல்லவர்கள்" என்றான். துரியோதனனோ " எல்லா பசங்களும் அயோக்கியன்" என்றான். இந்த விஷயத்தில் எஸ். ரா தருமனா என தெரியலை. ஆனால் "துரியோதனன்" யார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை !

பள்ளி ஆசிரியை கொலை

நானும் ஒரு ஆசிரியனாக இருந்திருக்கிறேன். இன்றும் ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் மிக நெருங்கி பழகுகிறேன். இந்த விஷயத்தில் இரு பக்க கஷ்டங்களும் நிச்சயம் அறிந்தவன் நான்.

இரண்டு பதிவு எழுதுமளவு விஷயம் மனதில் உள்ளது. இப்போது சுருக்கமாக ...

அந்த ஆசிரியை மரணம் மிக மிக மிக வேதனையானது. தந்தையும் உடன் இல்லாத நிலையில் அவரின் இரு பெண்களை நினைத்தால் மனது மிக வலிக்கிறது. ஆனால் அந்த மாணவனின் கோபமும், வெறியும் எத்தனையோ மாணவர்கள் மனதில் உள்ளது என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

ஆசிரியரால் கற்பழித்து கொலை செய்யப்பட பெண், ஆசிரியர் அடித்து கண் பார்வை போன மாணவி, திருடினாள் என்கிற சந்தேகத்தில் பெண்ணை நிர்வாணமாக்கிய ஆசிரியை இவை அனைத்தும் கடந்த ஓராண்டில் தமிழகத்தில் நடந்த சம்பவங்களே ! தவிர பாட சுமை தாங்காமல் இறக்கும் மாணவர்கள் தான் எத்தனை பேர் ! இந்த சம்பவங்களில் எழாத கூக்குரல் இப்போது ஓங்கி ஒலிக்கிறது.

இந்த மரணம், அந்த ஆசிரியையின் தியாகம் ஆசிரியர்களுக்கு ஒரு பயத்தை தரட்டும். இனியாவது ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பு கொடுத்து நடத்தட்டும்.

வருடம்தோறும் அந்த ஆசிரியை இறந்த நாளை நினைவு நாளாக கொண்டாடினாலும் தவறில்லை. இன்னொரு ஆசிரியை/ ஆசிரியர் மாணவனால் தாக்க படகூடாது என்று சொல்லும் அதே நேரம், இன்னொரு மாணவன் ஆசிரியரால் இறக்க கூடாது. அவமான படக்கூடாது. அந்த உறுதிமொழியை ஆசிரியர்கள் தரவேண்டும். தருவார்களா?

கர்நாடகா செக்ஸ் வீடியோ

செக்ஸ் வீடியோ பார்த்தால் தப்பா, யாராவது பார்க்காமல் இருக்காங்களா என இந்த கொடுமையை சப்போர்ட் செய்பவர்களும் இருக்கிறார்கள். செக்ஸ் வைத்து கொள்வது கூட தான் தவறில்லை. அதற்காக அந்த ஆண் + பெண் அமைச்சர் சட்டசபையில் செக்ஸ் வைத்து கொள்ள முடியுமா?

வீடியோ பார்த்தது தப்பில்லை. மக்கள் பிரச்னையை பேச வாக்களித்து, தேர்ந்தெடுக்க, அதை மறந்து விட்டு, அந்த நேரம் இப்படி வீடியோ பார்த்தது தப்பு தான். பீ.ஜே.பி இன்னும் அந்த அமைச்சர்களை சப்போர்ட் செய்வது, அதற்கும் காங்கிரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதையே காட்டுகிறது.

சில வேலைகளை சில இடத்தில் தான் செய்ய முடியும். வேறு இடத்தில் செய்தால் அசிங்கமாகிடும். இதற்கு மேல் விளக்கினால் மதியம் நீங்கள் சாப்பிட முடியாது !

மின்தடை

தஞ்சை சென்று வந்தேன். வழியெங்கும் உள்ள ஊர்களில் தினம் எட்டு மணி நேரம் மின்தடை. இதை விட மோசமான சூழல் தமிழகத்தில் இதுவரை இருந்ததில்லை. அரியலூரில் இறங்கி தஞ்சைக்கு பஸ் மாறும் போது, ரயில் நிலையத்தில் கும்மிருட்டு. தினம் இரவு கரண்ட் இருக்காதாம் !  நூற்றுகணக்கான மக்கள் இருளில் செடி கொடிகள், புதர்கள் நடுவே செல்கின்றனர். என்றைக்கு என்ன அசம்பாவிதம் நடக்குமோ தெரிய வில்லை.

எனக்கென்னவோ கூடங்குளம் மின்சாரம் எவ்வளவு அவசியம் என உணர்த்தத்தான் இவ்வளவு நேரம் மின்தடை செய்கிறார்களோ என தோன்றுகிறது !

ஆனந்த் கார்னர்

Be good enough to fogive someone, but not stupid enough to trust them again.

சூப்பர் சிங்கர் கார்னர்

இந்த வாரம் "டெடிகேஷன் ரவுண்ட்". விஜய் டிவியில் எந்த ஷோவில் யார் அழுதாலும், ஸ்லோ மோஷனில் அழ விட்டு, மியூசிக் எல்லாம் போட்டு அழுகையை விரிவாக காட்டுவார்கள். இருந்தாலும் இந்த வார டெடிகேஷன் ரவுண்ட்டில் சில நேரங்களில் அய்யாசாமிக்கு அழுகை வந்து விட்டது. மனைவியும் மகளும் பார்க்கா வண்ணம் கண்ணை துடைத்து கொண்டார்.

கிரிக்கெட் கார்னர்


மூன்று நாடுகள் பங்கேற்கும் ஒரு நாள் தொடரில் டெஸ்ட் மேட்சை விட பரவாயில்லாமல் இந்தியா ஆடுது. நேற்று காதலர் தினத்தன்று நடந்த மேட்ச்சில் சச்சின் நூறாவது செஞ்சுரி அடித்து எல்லாருக்கும் வாலண்டைன் டே கிப்ட் தருவார் என எண்ணி ஏமாந்தேன். சச்சினின் சிறந்த செஞ்சுரிகள் குறித்த பதிவை நூறாவது செஞ்சுரி அடித்த பின் தான் வெளியிடனும் என காத்திருந்து காத்திருந்து கிழவன் ஆகி வருகிறேன் !

37 comments:

  1. தானாய் கிடைக்கும் புகழுக்காக உழைக்காமல் இப்படி அவ்வப்போது ஸ்டன்ட் அடித்து, கீழ்த்தரமாக பேசுவதுதான் சில இலக்கியவாதிகளின் பொழப்பாகி விட்டது. ரஜினியை காரணம் இன்றி சீண்டி உள்ளார் இந்த மனிதர். அதனால் அவருக்குதான் அவமானம்.

    ReplyDelete
  2. ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வரலாம் ...சச்சின் 100??

    ReplyDelete
  3. வானவில் 76 வர்ணமையமாக இருக்கு.

    //ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை வைத்தே அவர் மரியாதை காப்பற்றப்படும். //
    மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க.

    பள்ளி ஆசிரியர் கொலை- வேதனையான விஷயம்.
    இந்த காலத்தில் குழ்ந்தைகளை உருட்டல் மிரட்டல் இல்லாமல் மிக நிதானமாகத்தான் கையாள வேண்டியிருக்கு.

    உங்களுக்காகவாவது சசின் சீக்கிரமாக ஒரு நூறு அடிக்க வேண்டும்..

    ReplyDelete
  4. //சச்சினின் சிறந்த செஞ்சுரிகள் குறித்த பதிவை நூறாவது செஞ்சுரி அடித்த பின் தான் வெளியிடனும் என காத்திருந்து காத்திருந்து கிழவன் ஆகி வருகிறேன் ! //

    Read this article please
    யார் சொன்னால் விலகுவார் சச்சின்? : கிரிக்கெட் விமர்சகரின் கருத்தால் பரபரப்பு

    ReplyDelete
  5. வானவில் அனைத்தும் கலந்த கலவை...

    ReplyDelete
  6. நாட்டு நடப்புகளை அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  7. ஆசிரியை கொலை தரும் பாடங்கள் பல. இதுவரைக்கும் மாணவர்களின் தற்கொலைகள் தந்துகொண்டிருந்ததைவிடவும், அழுத்தமான பாடம் இது!!

    மற்ற ரெண்டு சர்ச்சைகளும் சம்பந்தப்பட்டவர்களின் தனிமனித ஒழுக்கங்களைப் பறைசாற்றுகின்றன!!

    //ஸ்லோ மோஷனில் அழ விட்டு, மியூசிக் எல்லாம் போட்டு அழுகையை விரிவாக காட்டுவார்கள்/
    இந்த வியாபார புத்தி.... :-((((

    //...அய்யாசாமிக்கு அழுகை வந்து விட்டது. //
    இதத்தான் விஜய் டிவி எதிர்ப்பார்க்கீறது!! :-(

    ReplyDelete
  8. //சாரு Vs எஸ். ராமகிருஷ்ணன் சர்ச்சை//

    நமக்கு சுஜாதா போதும் :) இதில் கடைசி 2 பத்திகள் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். குறிப்பாக “துரியோதனன்”.

    //பள்ளி ஆசிரியை கொலை//

    நம் கல்வி முறையில் பெருமளவு மாற்றம் வேண்டும் மோகன். புரிந்து படிப்பதைவிட, மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதுதான் மாணவர்களுக்கு தரும் முதல் ப்ரஷர். இந்த சிறு புள்ளிதான் இப்போது பூதாகாரமாக வெடித்துள்ளது.

    //சில வேலைகளை சில இடத்தில் தான் செய்ய முடியும். வேறு இடத்தில் செய்தால் அசிங்கமாகிடும். இதற்கு மேல் விளக்கினால் மதியம் நீங்கள் சாப்பிட முடியாது !//

    கூல் டவுன், கூல் டவுன்.... நீங்க இவ்வளவு டென்ஷனா எழுதி இதுவரை பார்த்ததில்லை

    //மின்தடை//

    ”அந்த காலத்துல நாங்கல்லாம் ஃபேனே இல்லாம இருந்தோம் தெரியுமா”ன்னு இனிமே சொல்லமுடியாதுன்னு போன வாரம்தான் பாட்டிகிட்ட சொல்லியிருந்தேன்

    //சூப்பர் சிங்கர் கார்னர்//

    நோ கமெண்ட்ஸ்!

    //சச்சின் நூறாவது செஞ்சுரி//

    He'll get his 100th century against Australia in Australia....I've been praying for this..

    ReplyDelete
  9. //எனக்கென்னவோ கூடங்குளம் மின்சாரம் எவ்வளவு அவசியம் என உணர்த்தத்தான் இவ்வளவு நேரம் மின்தடை செய்கிறார்களோ என தோன்றுகிறது !//

    நல்ல கோணம். இருக்கலாம்.

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு.... சர்ச்சைகள் ..... என்ன சொல்வது மோகன்...

    அரசியல்வாதிகள் செயல்கள் மோசமாகத்தான் இருக்கின்றன... இந்த வாரம் ஜெய்ப்பூரில் கூட ஒரு நிகழ்வு இப்படித்தான் இருந்தது...

    சூப்பர் சிங்கர் - மட்டுமல்ல - பெரும்பாலான நிகழ்ச்சிகளில் அழுவது அதிகமாகிவிட்டது... :(

    ReplyDelete
  11. //சாரு மரியாதை இழந்து ரொம்ப காலமாகிறது // சரியா சொன்னீங்க. இவரு மட்டும் உண்மையைச் சொல்கிறேன் என்று சினிமாவை கிழிப்பாராம். அது இவரின் அறச் சீற்றமாம். அதையே தானே மிஷ்கினும் செய்தார். மிஷ்கின் இவருடைய நாவலை ஒரே வரியில் சரோஜா தேவி புத்தகம் என்று சொன்னார். ஆனால் அதே மிஷ்கின் ஜெ.மோ வின் அறம் புத்தக வெளியீட்டில் அதிலுள்ள அனைத்துக் கதைகளையும் பாராட்டினாரே.

    சாருவின் தகுதிக்கு அளவுக்கு மீறியே அவருக்கு அங்கீகாரம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதோடு அவர் திருப்தியடைய வேண்டும். எழுதியதையே மறுபடி மறுபடி எழுதி வேறு பெயர்களில் விற்று காசாக்குவதை ஒரு வாசகன் சுலபமாக கண்டு பிடித்து விடுவான். இதையும் தற்போது சாரு "அது அப்படித்தான் இருக்கும்" என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.

    பிரெஞ்ச் இலக்கியக் கூட்டத்தில் இவர் ஆங்கிலம் கற்றது டெபானெர் புத்தகம் படித்துதான் என்று சொன்னால் அதை கேட்டவர்கள் பின் பக்கம் சிரித்திருப்பார்கள். இவர் அதையும் இவரைப் புகழ்வதாக எடுத்துக் கொண்டு காமெடி பீஸாகி இருப்பார். விழா ஏற்பாட்டாளர்களும் அடுத்த முறை யாரைக் கூப்பிட வேண்டாம் என்ற லிஸ்ட்டில் இன்னொரு பெயரை ஏற்றியிருப்பார்கள்.

    ReplyDelete
  12. pl read this also
    http://veeluthukal.blogspot.in/2012/02/blog-post_13.html

    talking about saru is not good.

    ReplyDelete
  13. pl read this also
    http://veeluthukal.blogspot.in/2012/02/blog-post_13.html

    talking about saru is not good.

    ReplyDelete
  14. pl read this also
    http://veeluthukal.blogspot.in/2012/02/blog-post_13.html

    talking about saru is not good.

    ReplyDelete
  15. /எனக்கென்னவோ கூடங்குளம் மின்சாரம் எவ்வளவு அவசியம் என உணர்த்தத்தான் இவ்வளவு நேரம் மின்தடை செய்கிறார்களோ என தோன்றுகிறது !/

    I also felt the same sometime back.

    ReplyDelete
  16. //எனக்கென்னவோ கூடங்குளம் மின்சாரம் எவ்வளவு அவசியம் என உணர்த்தத்தான் இவ்வளவு நேரம் மின்தடை செய்கிறார்களோ என தோன்றுகிறது !//

    I also felt the same...

    ReplyDelete
  17. கடந்த வார நிகழ்வுகளை நடு நிலையோடு
    அலசிச் செல்லும் விதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. வானவில் பளிச்ன்னு தெரியுது.

    **********

    சாரு, எஸ்.ரா. நமக்கு ரொம்ப தூரம்.

    ****************

    //பள்ளி ஆசிரியை கொலை //

    மிக நல்லா சொல்லியிருக்கீங்க. இதுல பெற்றோரின் பங்கை சேர்க்காமல் விட்டுவிட்டீர்கள்.
    ஆசிரியரை விட பெற்றோரால் அவமானப் படுத்தப்படும் மாணவர்கள் தான் அதிகம்.
    இந்த மாதிரி சம்பவம் இனி நடக்காமல் இருக்க புதிய வழிமுறைகளை கண்டறிய அனைவரும் பாடுபட வேண்டும்.
    கல்வி விஷயத்தில் இன்னும் நிறைய தூரம் நாம் செல்ல வேண்டும் என்பதே என் கருத்து.

    //புரிந்து படிப்பதைவிட, மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.//

    நண்பர் ரகுவின் கருத்து சரியே.



    ************

    //எனக்கென்னவோ கூடங்குளம் மின்சாரம் எவ்வளவு அவசியம் என உணர்த்தத்தான் இவ்வளவு நேரம் மின்தடை செய்கிறார்களோ என தோன்றுகிறது !//

    அட இப்படி வேற இருக்கா?!

    *************
    அமைச்சரின் உதவியாளர் கைது மற்றும்

    திருச்சி அருகே யார் முந்திப் போவது என்கிற சச்சரவில் லாரியை ரோட்டில் இறங்கி நின்று மறைத்த பஸ் டிரைவர் மீது லாரியை ஏற்றிக் கொன்றது போன்றவைகளும் கடந்த வாரத்தில் கவனிக்கப்பட வேண்டியவைகளில் சில!

    ReplyDelete
  19. //பள்ளி ஆசிரியை கொலை//

    pathetic:((

    S.RA, Charu - Sorry not my area:)))

    ReplyDelete
  20. //இதற்கு மேல் விளக்கினால் மதியம் நீங்கள் சாப்பிட முடியாது //

    இதற்கு மேல் விளக்க முடியாது. :-)

    ReplyDelete
  21. சிவகுமார்: நன்றி சச்சின் செஞ்சுரி நிச்சயம் அடிப்பார். சீக்கிரம் அடிக்கணும் என்பது தான் நம் விருப்பம்
    **

    ReplyDelete
  22. RAMVI said...

    வானவில் 76 வர்ணமையமாக இருக்கு.

    உங்களுக்காகவாவது சசின் சீக்கிரமாக ஒரு நூறு அடிக்க வேண்டும்..

    ***
    நன்றி ராம்வி

    ReplyDelete
  23. Madhavan Srinivasagopalan said...

    //சச்சினின் சிறந்த செஞ்சுரிகள் குறித்த பதிவை நூறாவது செஞ்சுரி அடித்த பின் தான் வெளியிடனும் என காத்திருந்து காத்திருந்து கிழவன் ஆகி வருகிறேன் ! //

    Read this article please
    யார் சொன்னால் விலகுவார் சச்சின்? : கிரிக்கெட் விமர்சகரின் கருத்தால் பரபரப்பு

    ***
    வாசித்தேன். நன்றி மாதவா

    ReplyDelete
  24. சங்கவி said...

    வானவில் அனைத்தும் கலந்த கலவை...

    **
    நன்றி சங்கவி

    ReplyDelete
  25. Sankar Gurusamy said...

    நாட்டு நடப்புகளை அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

    **

    நன்றி சங்கர் குருசாமி

    ReplyDelete
  26. ஹுஸைனம்மா said...

    ஆசிரியை கொலை தரும் பாடங்கள் பல. இதுவரைக்கும் மாணவர்களின் தற்கொலைகள் தந்துகொண்டிருந்ததைவிடவும், அழுத்தமான பாடம் இது!!

    மற்ற ரெண்டு சர்ச்சைகளும் சம்பந்தப்பட்டவர்களின் தனிமனித ஒழுக்கங்களைப் பறைசாற்றுகின்றன!!
    **

    மிக சரியாக சொன்னீர்கள் நன்றி

    ReplyDelete
  27. ரகு: விரிவான அலசலுக்கு மிக மிக நன்றி

    ReplyDelete
  28. ராமலக்ஷ்மி said...

    //எனக்கென்னவோ கூடங்குளம் மின்சாரம் எவ்வளவு அவசியம் என உணர்த்தத்தான் இவ்வளவு நேரம் மின்தடை செய்கிறார்களோ என தோன்றுகிறது !//

    நல்ல கோணம். இருக்கலாம்.

    **
    நன்றி ராமலட்சுமி . நிறைய Controversy-ஆன சமாச்சாரம் இந்த பதிவில் இருந்ததால் நீங்கள் பின்னூட்டமே இட மாட்டீர்கள் என நினைத்தேன்

    ReplyDelete
  29. வெங்கட் நாகராஜ் said...

    நல்ல பகிர்வு....

    **

    நன்றி வெங்கட்.

    ReplyDelete
  30. விரிவான கமண்டுக்கு மிக நன்றி அமர பாரதி. உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன்

    ReplyDelete
  31. மதுரை சரவணன் said...

    pl read this also
    http://veeluthukal.blogspot.in/2012/02/blog-post_13.html

    talking about saru is not good.

    **
    நீங்கள் சுட்டிய பதிவை வாசிக்கிறேன். நன்றி சரவணன்

    ReplyDelete
  32. ஜமீல் said...

    //எனக்கென்னவோ கூடங்குளம் மின்சாரம் எவ்வளவு அவசியம் என உணர்த்தத்தான் இவ்வளவு நேரம் மின்தடை செய்கிறார்களோ என தோன்றுகிறது !//

    I also felt the same...

    ***
    நன்றி ஜமீல்

    ReplyDelete
  33. Ramani said...

    கடந்த வார நிகழ்வுகளை நடு நிலையோடு
    அலசிச் செல்லும் விதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    *********
    நன்றி ரமணி

    ReplyDelete
  34. அமைதி அப்பா said...
    வானவில் பளிச்ன்னு தெரியுது.

    **********
    விரிவான கருத்துகளுக்கு நன்றி அமைதி அப்பா

    ReplyDelete
  35. வித்யா said...
    //பள்ளி ஆசிரியை கொலை//

    pathetic:((

    S.RA, Charu - Sorry not my area:)))

    *******
    நன்றி வித்யா.

    ReplyDelete
  36. சரவணகுமரன் said...

    //இதற்கு மேல் விளக்கினால் மதியம் நீங்கள் சாப்பிட முடியாது //

    இதற்கு மேல் விளக்க முடியாது. :-)
    ***
    நன்றி சரவணகுமரன்.

    ReplyDelete
  37. பல விசயங்களை பற்றி நல்ல அலசல்கள் ! அருமை ! வாழ்த்துக்கள் ! நன்றி சார் !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...