Sunday, February 26, 2012

காதலில் சொதப்புவது எப்படி- விமர்சனம்

காதலில் சொதப்புவது எப்படி- டிரைய்லரிலேயே நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். கல்லூரி + யூத் காதல் சப்ஜக்ட் - இன்றைக்கு தியேட்டருக்கு அதிகமாய் வரும் இளைஞர் கூட்டத்தை டார்கெட் செய்து எடுக்கப்பட்டது.

கதை: காதலர்களுக்கு இடையே இருக்கும் ஈகோ- சண்டை, பிரிவு, பின் இணைதல் இது தான் கதை. கூடவே நண்பர்களின் காதல் மட்டுமல்லாது அவர்கள் பெற்றோர் காதல் வரை அலசி ஒரு காதல் என்சைகிலோ பீடியா ஆக்க முயற்சித்துள்ளனர்.

படத்தில் ரசித்த விஷயங்கள் :

பத்து வருடத்துக்கு முன் கல்லூரி மாணவனாக பாய்ஸில் நடிக்க ஆரம்பித்த சித்தார்த் இன்னும் கல்லூரி மாணவனுக்கு துளி நெருடல் இன்றி பொருந்துகிறார். இந்த பாத்திரம் அவருக்கு டெய்லர் மேட்.


காதலியுடனான சண்டை பற்றி "உன்கிட்டே மட்டும் தான் சொல்றேன்; வேற யார்கிட்டே சொல்ல முடியும்" என சொல்லியவாறே எல்லா நண்பர்களிட மும், எல்லா இடங்களிலும் புலம்பும் ஹீரோ (இது எங்கேயும் நடக்கும் சமாச்சாரம் தான் !)

" பொம்பளைங்க பார்வை, சுவத்தில மாட்டின அழகான பெயிண்டிங் மாதிரி; யார் பார்த்தாலும், அது தன்னையே பாக்குற மாதிரி இருக்கும்" - டயலாக்

பஸ்ஸில் நடக்கும் ராகிங். "மேலே பல்பு மாட்ட தெரியுமா?" " தெரியும்" "மேலே பல்பு மாட்டிக்கிட்டே கீழே சைக்கிளுக்கு காத்தடி" (இதை செய்யும் ஒரு நபர் அழகா செய்றார்..இயக்குனரின் ராகிங் அனுபவம் தெரியுது )

ஹீரோவின் நண்பனுக்கு சிறு வயது பிளாஸ்பாக் என காட்டுகிறார்கள். டிராமாவில் ஒரு பெண் அவனுடன் ஜோடியா நடிக்க மாட்டேன்னு சொல்லி விட்டு ஓடியதாக காட்ட,  கடந்த கால எபிசோடில், நிகழ் காலத்திலிருந்து போய் சித்தார்த் பேசுவதாக காட்டுவது கியூட் ஐடியா.


அமலா பாலின் ஹேர் ஸ்டைல் ரொம்ப வித்யாசமா இருந்தது. தலையை முழுக்க பின்னிட்டு நாலைந்து முடி எப்போதும் முன்னே எடுத்து விட்டிருப்பது அந்த கேரக்டருக்கு எதோ ஒரு விதத்தில் தனி தன்மை கொடுத்துடுது

ஒரு பெண் " பாய் பிரண்ட மாத்திட்டேன்" என சாதாரணமாக சொல்ல, உடனே வரும் டயலாக் : " என்னடி Puppy-ய மாத்திட்டேன்கிற மாதிரி இவ்ளோ அசால்ட்டா சொல்ற ?"

அமலா பாலின் அம்மா -அப்பா சண்டை + சேர்தல் வெரி இன்டரஸ்டிங். அதிலும் சுரேஷ் தன் மகள் மூலமே, மனைவிக்கு லவ் லெட்டர் அனுப்புவது அழகு.

பெண்கள் அழுகை உலக பிரசித்தி பெற்றது. அதனை பெண்களே ரசிக்கும் படி என்னமா காட்டியிருக்கிறார் இயக்குனர் ! புல் க்ளோஸ் அப்பில் அமலா பால் முகம் சாதரணமாக காட்டி விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அவர் அழ ஆரம்பிப்பதையும், அருவி கொட்டுவதையும் மாறி மாறி காட்டுகிறார். பின்னணியில் சித்தார்த் வாய்ஸ் " டேம் உடைச்சிகிச்சு" என்று சொல்லும் போது சிரித்து மாளலை.

காதலிக்கும் பெண் " அண்ணா" என கூப்பிடும் காட்சி. இதனை சுவாரஸ்யமா காட்சி படுத்திருக்காங்க. கல்லூரிகளில் இது மாதிரி நிறையவே நடக்கும். " அண்ணா" வில் ஆரம்பித்து பின் காதலிக்க ஆரம்பிப்பதை என் கல்லூரி நாள் முதல் இன்று வரை பார்த்து வருகிறேன் (இதனாலேயே பெண்கள்  " அண்ணா" எனும்போது அலர்ஜியா இருக்கும். நண்பனா இருந்து காதலுக்கு போவது நார்மல்; அண்ணாவிலிருந்து காதலன் ஆவது அப் நார்மல். பெட்டர் டு அவாய்ட் அப் நார்மல். )

எல்லா பெண்களிடமும் அறை வாங்கும் ஹீரோவின் குண்டு நண்பன் பாத்திரம் சற்றே மிகை படுத்தல் எனினும் (போற வர்ற பொண்ணுங்க எல்லாம் காரணமே இல்லாம இவரை அறையிற மாதிரி காட்டுறாங்க), மனுஷன் முக பாவங்களில் அசத்துகிறார். நன்கு சிரிக்க வைக்கிறார். நிச்சயம் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வாய்ப்புண்டு.

படத்தில் சண்டையே இல்லை என்பது ஆறுதல். (அதுக்கு பதிலா தான் ஹீரோ- ஹீரோயின் எப்போதும் வாய் சண்டை போட்டு கிட்டே இருக்காங்களே !)

ஹீரோயின் மட்டுமல்லாது, பூஜா ( SS மியூசிக் - Compere ) மற்றும் " அண்ணா " என கூப்பிடும் பெண் இப்படி பல பெண்கள் அழகா காட்டியது மனசுக்கு நிறைவா இருக்கு :))

படம் சொல்லும் செய்தி " மேட் பார் ஈச் அதர்" ஜோடின்னு யாரும் கிடையாது. மத்தவங்க குறையை பெருசு படுத்தாம, அதை அப்படியே ஏத்துக்கிட்டு அட்ஜஸ்ட் செஞ்சு போனா, அது தான் " மேட் பார் ஈச் அதர்" ஜோடி !

படம் நெடுக நம்மை ரசித்து சிரிக்க வைக்கும் வசனங்களும், சிறு சிறு சம்பவங்களும் இறைந்து கிடக்கின்றன. படத்தை நம்மை பார்க்க வைப்பதும், ரசிக்க வைப்பதும் இவை தான்.

இனி சொதப்பல்கள் என்னென்ன என பார்ப்போம் :

ஹீரோ படம் முழுதும் நம்மை பார்த்து பேசுவது எரிச்சல். படத்தின் பின் பாதியில் பூஜாவிடம் தன் கதையை சொல்வதாக காட்டுகிறார்கள். இப்படி யாராவது நண்பரிடம் சொல்லும் பிளாஸ்பாக் ஆக கொண்டு போயிருக்கலாம். நம்மிடமே தொடர்ந்து பேசும் போது " இது சினிமா " என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி முக்கிய பாத்திரங்களுடன் ஒன்ற முடியாமல் செய்கிறது

பாடல்கள் அதிகம் இம்ப்ரெஸ் பண்ணலை . இத்தகைய படங்களுக்கு, பாடல்களில் பட்டையை கிளப்பி இருக்க வேண்டாமா?

கல்லூரி கதை என்றாலும் ஆசிரியர்கள் (ஒரு சிறு காட்சி தவிர) வேறு எங்குமே காணும் ! இப்படி ஆசிரியர்களே இல்லாத கல்லூரி எங்கு இருக்குன்னு தெரியலை !

கிளைமாக்ஸ் ரொம்ப சுமார். எந்த பன்ச்சும் இன்றி, இன்னொரு ஹீரோ- ஹீரோயின் சண்டையுடன், சற்று சினிமாட்டிக் ஆக அனைவரும் கை தட்ட முடிகிறது. நிச்சயம் கொஞ்சம் பெட்டர் கிளைமாக்ஸ் யோசிச்சிருக்கலாம். 
***
மொத்தத்தில்: 

மிக இளைஞரான இந்த இயக்குனர், குறைந்த பட்ஜெட்டில், 35 நாளில் இப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். ஹீரோவே படத்தின் தயாரிப்பாளரில் ஒருவர் என்பதால், படத்தின் பெரிய செலவு ஹீரோயின் அமலா பால் சம்பளம் மட்டும் தான் இருந்திருக்கும். 15 நாள் ஓடினாலே படம் லாபம் பார்த்திடும் என நினைக்கிறேன். இவர் மூலம் நிறைய இளைஞர்களுக்கு தமிழ் சினிமா இயக்குனர் வாய்ப்பு கிடைக்க இந்த படம் ஒரு காரணமாக அமையலாம்.

வாழ்த்துகள் இயக்குனர் பாலாஜி !

காதலில் சொதப்புவதை நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் !

23 comments:

  1. ஞாயித்து கிழமை காலைல விமர்சனம் போடுறது தப்பாய்யா?

    வீக் எண்ட் படத்துக்கு போகணும்னு நினைக்கிறவங்களுக்கு உதவும்கிற நல்லெண்ணத்தில் போட்டா, நிறைய பேர் பாத்துட்டு போயிடுறாங்க. யாருமே போணி பண்ண மாட்டேன்குறாங்க :))

    ReplyDelete
  2. விமர்சனம் சூப்பரா இருக்கு சகோ..படம் பார்க்க வேண்டும்.நன்றி.
    சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

    ReplyDelete
  3. //காதலில் சொதப்புவதை நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் !//

    பார்த்தேன்....

    நல்ல விமர்சனம் மோகன்.... :)

    நடுநடுவே எழுதிய சில விஷயங்கள், ஹவுஸ்பாஸ் படிப்பார்கள் என்ற நினைப்பே இல்லாமல் எழுதியது போல இருந்தது! :))))

    ReplyDelete
  4. Vimarsanam arumai! Ungal aathanga comment- :-))

    ReplyDelete
  5. Kumaran said...
    விமர்சனம் சூப்பரா இருக்கு சகோ..படம் பார்க்க வேண்டும்.நன்றி.

    **

    நன்றி குமரன்

    ReplyDelete
  6. வெங்கட் நாகராஜ் said...

    பார்த்தேன்....

    நடுநடுவே எழுதிய சில விஷயங்கள், ஹவுஸ்பாஸ் படிப்பார்கள் என்ற நினைப்பே இல்லாமல் எழுதியது போல இருந்தது! :))))



    **
    அட நீங்களும் படம் பாத்துடீங்களா? ஏன் விமர்சனம் எழுதுவதில்லை?

    இன்னிக்கு ஞாயிறு என்பதால் அவங்க இணையம் பக்கம் வர மாட்டாங்க என்ற தைரியத்தில் எழுதியது. மேலும் இந்த கமன்ட் எல்லாம் அவ்வப்போது அவங்களிடமே சொல்லி (வாங்கி கட்டி கொண்டது) தானே ? :))

    ReplyDelete
  7. middleclassmadhavi said...
    Vimarsanam arumai! Ungal aathanga comment- :-))
    **
    நன்றி மாதவி. ஆதங்க கமன்ட் போட்டதால் தான் நீங்களே கமன்ட் போட்டுருக்கீங்க :))

    ReplyDelete
  8. படம் நெடுக நம்மை ரசித்து சிரிக்க வைக்கும் வசனங்களும், சிறு சிறு சம்பவங்களும் இறைந்து கிடக்கின்றன. படத்தை நம்மை பார்க்க வைப்பதும், ரசிக்க வைப்பதும் இவை தான்.

    நல்ல விமர்சனம்

    ReplyDelete
  9. நாங்க டிக்கெட் புக் பண்ணிட்டு உடம்பு சரியில்லைன்னு போகல:((

    அடுத்த வாரம் பார்க்கனும்..

    ReplyDelete
  10. நல்ல விமர்சனம். ஒருமுறை பார்க்கலாம்....

    மற்றபடி கதைனு பெரிதா சொல்லிக்கற மாதிரி இல்லை....பாதிப் படத்திலிருந்து படம் எப்போ முடியும்னு தான் இருந்தது.

    ReplyDelete
  11. அருமை அன்பரே அமலாபாலின் அப்பா காதல் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தது

    ReplyDelete
  12. படம் பெயரே 'காதலில் சொதப்புவது எப்படி'யா? interesting.

    ReplyDelete
  13. // நிறைய பேர் பாத்துட்டு போயிடுறாங்க. யாருமே போணி பண்ண மாட்டேன்குறாங்க //

    Sorry boss.. we have time just to read it (how bigger it might be) but lack time to comment

    :-)

    ReplyDelete
  14. நன்றி ரிஷபன் சார் !

    ReplyDelete
  15. வித்யா said...
    நாங்க டிக்கெட் புக் பண்ணிட்டு உடம்பு சரியில்லைன்னு போகல:((
    **
    அப்படியா வித்யா? அப்ப டிக்கெட்டை என்ன பண்ணுவீங்க? வேஸ்ட் ஆகிடும் இல்ல?

    ReplyDelete
  16. கோவை2தில்லி said...

    பாதிப் படத்திலிருந்து படம் எப்போ முடியும்னு தான் இருந்தது.

    **
    நீங்க சொல்றது ஓரளவு உண்மை தான். பின் பாதி காதலர்கள் ஊடலிலேயே போனதால் கொஞ்சம் போர் அடிச்சது

    ReplyDelete
  17. PREM.S said...

    அருமை அன்பரே அமலாபாலின் அப்பா காதல் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தது
    ***
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரேம்.

    ReplyDelete
  18. அப்பாதுரை said...

    படம் பெயரே 'காதலில் சொதப்புவது எப்படி'யா? interesting.

    **
    அப்பாதுரை. தமிழ் படங்களை தொடர்ந்து கவனிப்பதே இல்லையா? கடந்த ரெண்டு வாரமா இந்த படம் தான் சென்சேஷன்

    ReplyDelete
  19. மாதவா: பரவாயில்லை. சும்மா ஜாலிக்கு தான் அப்படி கமன்ட் போட்டேன். நன்றி

    ReplyDelete
  20. நல்ல விமர்சனம் ! படம் பார்க்க வேண்டும் நண்பரே !

    ReplyDelete
  21. திண்டுக்கல் தனபாலன் said...
    நல்ல விமர்சனம் ! படம் பார்க்க வேண்டும் நண்பரே !
    **
    நன்றி தனபாலன் சார் ! படம் பாருங்கள் !

    ReplyDelete
  22. \\அதிலும் சுரேஷ் தன் மகள் மூலமே, மனைவிக்கு லவ் லெட்டர் அனுப்புவது அழகு.\\ அட சுரே ஷா அது...... ஆமாம், அடையாளமே தெரியாம மாறிட்டார்...!!

    ReplyDelete
  23. ஹிந்தியாவே முடிவு செய்.
    தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

    -------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...