Thursday, February 16, 2012

காஞ்சி பயண கட்டுரை நிறைவு பகுதி

காஞ்சியின் மிக புகழ் பெற்ற கோயில்களில் ஒன்று வரதராஜ பெருமாள். சிவன் கோவில்கள் முழுக்க ஒரு பக்கம் இருக்க அதை சிவ காஞ்சி எனவும், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பிற விஷ்ணு கோயில்கள் வேறு பக்கம் இருக்க, அதை விஷ்ணு காஞ்சி என்றும் அழைக்கிறார்கள்.


வரதராஜ பெருமாள் கோயிலில் சரியான கூட்டம். சில மணி நேரங்கள் நின்று தான் தரிசனம் பார்க்க வேண்டியிருந்தது. அப்போது எங்கள் அருகில் ஒரு பாட்டியும், ஒரு பத்து வயது சிறுமியும் நின்றிருந்தனர். மிக அழகாக எப்போதும் சிரித்தவாறே இருந்த அந்த பெண் ஒரு மாற்று திறனாளி. கால் போலியோவில் பாதிக்கப்பட்ட மாதிரி இருந்தது. பெயர் என்ன என கேட்க சிரித்தவாறே " மதுர கவி" என்றாள். செம புத்திசாலி. சென்னையி சேர்த்த இவள் பல முறை இந்த கோவில் வந்ததாக சொல்லி, எங்களுக்கு பல தகவல்கள் சொன்னாள். அவர் பாட்டி சிறிது நேரத்தில் கியூவில் நிற்காமல் "அவளால் அதிக நேரம் நிற்க முடியாது" என கோவில் நிர்வாகிகளிடம் சொல்லி அழைத்து சென்று விட்டார். அந்த சிறுமியின் சிரிப்பும் முகமும் இன்னும் கண்ணில் நிற்கிறது !





இங்கு தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி மிகவும் விசேஷம். இதனை தொட்டு வணங்கினால் பல்லி மேலே விழுந்தால் வரும் தோஷம் வராது என்று நம்பிக்கை. ஏற்கனவே அன்று நிறைய கோயில்கள் சென்று விட்டதாலும் மிக மிக அதிக கூட்டம் இருந்தாலும் எங்கள் பெண் கியூவில் நிற்க முடியாது, கிளம்பலாம் என கூறி விட்டாள். இதனால் இந்த இடம் பார்க்காமல் கிளம்பினோம்.

இங்குள்ள குளத்தில் தண்ணீருக்கு உள்ளே ஒரு நாலு கால் மண்டபம் அமைத்து அதன் உள்ளே அத்திவரதர் சிலை உள்ளது. இந்த அத்தி வரதர் அறுபது வருடத்துக்கு ஒரு முறை தான் வெளியே வருவாராம் ! அப்படி வெளியே வரும் போது ஒரு மாதம் அவரை கோவிலில் வைத்திருப்பார்களாம். அந்த ஒரு மாதம் கூட்டம் குவியும் என்று சொல்கிறார்கள். என் மாமியார் தன் சிறு வயதில் அப்படி போய் அத்தி வரதரை பார்த்ததாக சொன்னார்.

கோயிலில் எடுத்த வீடியோ பாருங்கள்:





****
இங்கு ஒரு கல் மண்டபம் உள்ளது. இதற்கு உள்ளே செல்ல தனியே " இரண்டு ரூபாய்" டிக்கட் வாங்குகிறார்கள். அழகான கல் சங்கிலி பார்த்து வியந்தோம். இந்த மண்டபத்தில் எடுத்த வீடியோ மற்றும் படங்கள் இதோ:




டூரிஸ்டுகளுக்கு கைட் மாதிரி இருக்கும் பெரியவர் கல் மண்டபம் குறித்து விளக்குகிறார்










கல் சங்கிலி
குளத்தில் ஒரு குடும்பம் (கணவன், மனைவி, இரு குழந்தைகள்) அமர்ந்து  பேசி கொண்டிருந்தனர். குளத்தில் ஏகப்பட்ட மீன்கள் ! அந்த தந்தை மீன்களை பிடிக்க முயற்சித்தார். முடிய வில்லை. அந்த வீடியோ பாருங்கள்



கோயிலில் சாமி பார்க்க மேலே போகும் போது மிக குறுகலான படிகள். செங்குத்தான படிகள் முழுதும் கூட்டத்தை பாருங்கள்


வரதராஜர் கோயில் பிரசாதங்கள் செம அருமை. புளி சாதம் மற்றும் சர்க்கரை பொங்கல் மிக அற்புதம். பொதுவாய் ஒன்று மட்டும் ஆளுக்கு கொஞ்சம் சாப்பிடுவோம். இங்கு ஆளுக்கு ஒன்று வாங்கி சாப்பிடும் அளவு அருமையாக இருந்தது.
***
வரதராஜ பெருமாள் கோவில் அருகே தான் அறிஞர் அண்ணா பிறந்த இல்லம் தற்போது நினைவிடமாக உள்ளது. பார்க்க எண்ணினோம். மாலை ஐந்து மணிக்கு மூடி விடுவார்களாம. பார்க்க முடியலை


***
காஞ்சி செல்ல எளிய வழிகள்:


ரயிலில்: எனக்கு தெரிந்து இது தான் மிக எளிய மற்றும் செலவு குறைந்த வழி. சென்னை பீச்சில் இருந்து திருமால்பூருக்கு தினம் ஐந்து ரயில்கள் செல்கின்றன. அவற்றின் நேரம் (கிண்டியில்) இதோ:

Guindy to Kanchipuram:


7.30 AM

10.08

11.11

18.26

19.44

20.45

இவை அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். அது ஒன்று தான் குறை. ஆனால் கையில் நல்ல புத்தகம் அலது பேச்சு துணைக்கு நல்ல தோழமை இருந்தால் செல்லும் இரண்டு மணி நேரம் எளிதாக போய் விடும். காஞ்சிபுரம் ஸ்டேஷன் திருமால்பூருக்கு முந்தைய ஸ்டேஷன்.


இதே போல் திரும்ப வரும்போதும் காஞ்சிபுரத்தில் இருந்து ரயிலில் வந்து விடலாம். ரயில் நேரம் இதோ:

Kanchipuram to Guindy:

5.30 AM

7.20

8.05

10.30

13.55

17.25

****
ரோடு வழி சென்றால்: கார் அல்லது பஸ் எதுவாய் இருந்தாலும் : போரூர், ஸ்ரீ பெரும்புதூர் வழியே செல்வது தான் சுருக்கு வழி. தி. நகரில் இருந்து தினம் அரை மணி அல்லது ஒரு மணிக்கு ஒரு ஏ. சி பஸ் காஞ்சிபுரம் செல்கிறது. இது ஒன்னரை மணி நேரத்தில் காஞ்சி அடைகிறது

டிக்கட் விலை ஒரு ஆளுக்கு ரூ. 150 போல் என அறிகிறேன்.


இதே ரயிலில் டிக்கட் விலை எவ்வளவு தெரியுமா? ஒரு ஆளுக்கு வெறும் 14 ரூபாய் தான் !

14 ரூபாயில், எந்த சிரமும் இன்றி, அரட்டை அடித்தவாறு பயண களைப்பு தெரியாமல் செல்ல ரயிலே நல்ல வழி என நினைக்கிறேன்

**
காஞ்சிபுரம் பயணம் நாங்கள் எதிர் பார்த்ததை விட மிக அருமையாக  இருந்தது. இன்னும் ஒரு முறையாவது காஞ்சி சென்று பார்க்க தவறிய இடங்களை பார்க்கும் ஆவல் உள்ளது.
***
இந்த தொடரை தொடர்ந்து வாசித்த தங்கள் அனைவருக்கும் நன்றி !

***
டிஸ்கி: எனது அம்மா உடல்நிலை மிக பாதிக்கப்பட்டு தஞ்சையில் மருத்துவ மனையில் உள்ளார். பிழைப்பது மிக சிரமமே. ஒரு வாரமாக தஞ்சைக்கும் சென்னைக்கும் அலைந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு பிரார்த்தனையில் நம்பிக்கை இருந்தால் அந்த நல்ல ஆத்மா சிரம படாமல் மரணத்தை தழுவ வேண்டி கொள்ளுங்கள்.


இதனால் இணையம் பக்கம் வருவதும், பதிவுகளும் அடுத்த ஓரிரு வாரத்துக்கு என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் பின்னூட்டங்களை நான் உடனே பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு உடனே பதில் தர முடியாது மன்னிக்கவும்!  

தங்கள் புரிதலுக்கு நன்றி !

31 comments:

  1. தங்கள் அம்மாவுக்காக எங்களது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  2. தங்களது அம்மாவிற்காக எங்களது பிரார்த்தனைகள்....

    ReplyDelete
  3. உங்கள் அம்மாவின் உடல் நலம் தேற பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  4. தங்களது அம்மாவிற்காக எங்களது பிரார்த்தனைகள்....

    ReplyDelete
  5. அத்தி வரதர் நாற்பது வருடத்திற்கொரு முறை வெளியில் நிறுவப் பட்டு, தரிசனம் தருவார்.
    1980ல் இது நடந்தது.. மீண்டும் 2020ல் நடக்கும் ?
    ---- இவை இரண்டும் நான் முன்பொருமுறை கேள்விப் பட்டதாக ஞாபகம்.

    Just broswed this on web and got following links. Both says it happened in 1979. It lasts for 48 days..
    1) http://in.answers.yahoo.com/question/index?qid=20110217222912AAccoLU

    2) http://www.kanchivaradarajartemple.com/etemple2.html

    ---------------
    Hope Athivaradhar gives comfort to your Mother & zero downs the pain...

    ReplyDelete
  6. நண்பரே,

    அத்திகிரி அருளாளன் தங்கள் அன்னையைக் காப்பான். கலங்க வேண்டாம். தங்களின் காஞ்சிபுரக் கட்டுரை அருமை.

    ஸ்ரீ....

    ReplyDelete
  7. அம்மா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  8. உங்க அம்மாவிற்காக என் வேண்டுதல்களை ஐயப்பனிடம் வைக்கிறேன்.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  9. அன்புள்ள மோகன் குமார்,

    உங்கள் அம்மாவுக்காக எங்களது பிரார்த்தனைகள்....

    ReplyDelete
  10. எங்கள் ஊரை பற்றி எழுதி உள்ளீர்கள் ...மிக்க நன்றி... தங்களது அம்மாவிற்காக எங்களது பிரார்த்தனைகள்....

    ReplyDelete
  11. அடியார் படுதுயர் ஆயினவெல்லாம் நிலம்தரும் செய்யும் நம் குலதனம் இராமானுசன் அன்னைக்கு நல்லனவெல்லாம் செய்வர்.கவலைவேண்டாம்.

    ReplyDelete
  12. அம்மாவிற்கு அனைத்தும் நல்லபடியாக இருக்கணும் என்று எம்பெருமாளை வேண்டிக் கொள்கின்றேன்.

    எல்லாம் அவன் செயல்!!!!

    நீங்கள் மனவலிமையுடன் இருக்கணும். எது நடந்தாலும் நல்லதுக்கே!

    என்றும் அன்புடன்
    துளசி

    ReplyDelete
  13. உங்கள் அம்மாவுக்காக வேண்டிக்கொள்கிறேன்...

    ReplyDelete
  14. அம்மா பக்கத்தில் இருங்கள் மோகன். அவர்களுக்காக என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  15. அம்மாவிற்காக பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  16. காஞ்சி புரம் கோவில் பத்தின தெளிவான பதிவு...அப்புறம் அம்மாவின் உடல் நிலை தேற அந்த காஞ்சி விஷ்ணு அருள் புரியட்டும்.இல்லையெனில் அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்

    ReplyDelete
  17. அம்மாவிற்கு எனது பிராத்தனைகளும் அண்ணா...

    ReplyDelete
  18. நல்லதையே நினைப்போம். அம்மா குணமாகி வர என்னுடைய பிராத்தனைகள்.

    முடிந்தால் மருத்துவமனை பெயர் விபரங்களை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நன்றி.

    ReplyDelete
  19. காஞ்சிபுரம் பயணம் மிக அருமையாக முடிந்தது.
    கவலைப்படாதீர்கள்,வரதராஜன் தங்கள் அம்மாவை காப்பார், அம்மாவிற்காக என் பிராத்தனைகள்.

    ReplyDelete
  20. தங்கள் அம்மாவுக்காக எங்களது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  21. உங்கள் அம்மாவுக்காக வேண்டிக்கொள்கிறேன்

    Balasubramanian

    ReplyDelete
  22. தங்கள் அம்மாவிற்காக எங்களது பிரார்த்தனைகள்.....

    இந்த நேரத்தில் அம்மாவுடனே இருங்கள்....

    ReplyDelete
  23. மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  24. உங்கள் அம்மாவிற்காக எங்கள் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  25. Friends,

    Thanks for all your prayers.

    Mother is still in critical condition. We are in Tanjore now.

    Doctors have said that she will not cross today, but she is fine compared to y'day !

    But it seems she will not survive this time. When is the question.

    It is a painful time.

    Thanks for all ur prayers and kind words.

    ReplyDelete
  26. It seems she will survive for few days but one week may be the maximum, this is my feeling. Might be wrong also.

    ReplyDelete
  27. அம்மாவிற்காக எங்களது பிரார்த்தனை தொடரும்!

    ReplyDelete
  28. அம்மாவுக்கு எல்லாவற்றையும் சிரமமில்லாததாக இருக்க என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  29. நண்பர்களே,

    அம்மா உடல் நிலை சீராக இல்லை. தஞ்சை மருத்துவ மனை ஒன்றில் ICU-வில் தான் கடந்த பத்து நாளாக உள்ளார். இந்த பத்து நாளில் இரு முறை டாக்டர்கள் " பிழைக்க மாட்டார்; உடனே சொந்தங்களுக்கு சொல்லி விடுங்கள் " என கூறி, வெவ்வேறு ஊரிலிருக்கும் அவர் பிள்ளைகள் குடும்பத்துடன் சென்று, இரண்டு முறையும் சில நாட்கள் அருகில் இருந்து விட்டு திரும்பி விட்டோம். அண்ணன் ஒருவரும் மருத்துவரான அக்காவும் தொடர்ந்து பார்த்து கொள்கிறார்கள்

    Life Supporting system -நிறுத்தப்பட்டால் அடுத்த சில மணிகளில் இறந்து விடுவார் எனினும், அந்த முடிவை எடுக்க யாருக்கும் மனம் வரவில்லை.

    உடல்நிலை ஒவ்வொரு நாளும் இறங்குமுகமாகவும், ஏறுமுகமாகவும் உள்ளது. சிறுநீரகங்கள் பழுதடைந்து விட்டதால், டயாலிசிஸ் சிகிச்சை தரப்படுகிறது.

    நான் குடும்பத்துடன் சென்னை திரும்பி விட்டேன். அம்மா ஆஸ்பத்திரியில் இருக்கும் வரை, வார இறுதிகளில் மேலும் ஓரிரு நாள் விடுப்பு எடுத்து கொண்டு மூன்று நாள் தஞ்சையில் இருக்கிற மாதிரி சென்று வர உள்ளேன்.

    தங்கள் அனைவரின் அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் நன்றி !

    ReplyDelete
  30. அடுத்து அத்திவரதர் எப்போது வெளி வருவாராம்? (மாதவன் பின்னூட்டத்தில் அறிந்து கொண்டேன்)

    மின்வண்டிக் கட்டணத்துக்கும், பேருந்துக் கட்டணத்துக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்?!

    அம்மா பற்றிய வரிகளைப் படித்ததும் மனம் கனத்து விட்டது.இப்போது எப்படி இருக்கிறார்கள்?

    ReplyDelete
  31. Good to know about my native place! So many places i didnt feel as you felt! Thanks for writing!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...