"ஆஸ்டின் இல்லம்" சுஜாதாவின் குறுநாவல். பொதுவாய் சுஜாதா கதைகளில் மெசேஜ் இருக்காது என்பார்கள். அதில் பாதி உண்மை. பாதி பொய். சுஜாதா மெசேஜ் சொல்ல வேண்டும் என வலிந்து முனைவதில்லை. சில கதைகளில் நல்லதோர் மெசேஜ் இயல்பாய் இருக்கும். ஆஸ்டின் இல்லம் அப்படி இயல்பாய் மெசேஜ் அமைய பெற்ற கதை.
ஆஸ்டின் இல்லம் என்கிற பெயர் கொண்ட வீட்டில் ஒரு பெரிய கூட்டு குடும்பம் ஒன்றாக வசிக்கிறது. அந்த வீட்டின் ஓனர் " பெரியப்பா". அவரது சொந்தங்கள் பலவும் அந்த வீட்டிலும் அந்த சிறு தெருவிலும் (தெருவின் பல வீடுகளுக்கு பெரியப்பா தான் ஓனர் !) வசிக்கிறார்கள்.
ஆஸ்டின் இல்லத்தில் உள்ள முகுந்தன் என்பவருக்கு இரு மகன்கள். முதல் மகன் நிகில் அமெரிக்கா செல்ல ஆயத்தமாக இருக்கிறான்.
இவன் மணமுடிக்க ஒரு பெண் பார்த்து வைத்துள்ளனர். அடுத்த மகன் நந்து தான் கதையின் மைய இழை. பல திறமைகள் கொண்ட இந்த சிறுவனுக்கு உடல் நிலை சரியில்லை என டாக்டரிடம் செல்கிறார்கள். அவர் இவனை பல டெஸ்டுகளுக்கு உட்படுத்தி விட்டு அவனுக்கு எலும்பு சார்ந்த பெரிய நோய் வந்திருப்பதாகவும், இன்னும் சில வருடங்கள் தான் உயிரோடு இருப்பான் என்றும் கூறுகிறார்.
நந்துவின் தந்தையும், தாயும் மனம் உடைகிறார்கள். இன்னொரு மகனோ இவ்வளவு குழப்பம் இடையேயும் தான் அமெரிக்கா சென்றே ஆகணும் என போய் விடுகிறான்.
பெரியப்பாவின் பழைய கதை ஒன்று தெரிய வருகிறது. இந்த இடமே பெரியப்பா வேறு ஒரு ஆளை ஏமாற்றி வாங்கியதாகவும், பின் அவர் மனைவியை இவர் "சின்ன வீடாக" வைத்து கொண்டதாகவும் செய்திகள். இந்த பாவத்தால் தான் இப்படி நடக்கிறது என்றும் வீட்டை விட்டு போக வேண்டும் என்றும் நினைக்கிறார்கள் நந்துவின் பெற்றோர். அனைவரும்
இது பற்றி கேள்வி கேட்பதால் வயதான பெரியப்பா மனமுடைந்து இறக்கிறார்.
கதையின் கடைசி பக்கத்தில் நந்துவிற்கு அந்த நோய் வந்ததற்கான காரணத்தை சொல்கிறார் டாக்டர். " சொத்து கை மாறிட கூடாதுன்னு சொந்ததுக்குள்ளேயே தொடர்ந்து கல்யாணம் பண்ணது தான் இந்த நோய் வர காரணம்; நீங்க நினைக்கிற மாதிரி பாவம், புண்ணியம் ஒண்ணும் கிடையாது " என டாக்டர் சொல்வதுடன் கதை முடிகிறது.
கதையின் முதல் அத்தியாயத்தில், அந்த குடும்பத்தில் இருந்து ஏராளமான பாத்திரங்கள் அறிமுகம் ஆகும் போது நமக்கே சற்று குழப்பமாக உள்ளது. ஆனால் போக போக கதை மீது நாட்டம் வந்து பாத்திரங்கள் அதிக முக்கிய துவம் இன்றி ஆகி விடுகிறார்கள்.
வெளிநாடு போகணும் என நிற்கும் அந்த அண்ணன் , மற்றும் அவனுடன் ஈஷி கொண்டே இருக்கும் அவன் வருங்கால மனைவி ..இரண்டும் நம்மை கோபப்பட வைக்கும் பாத்திரங்கள். சுஜாதா இவர்கள் மட்டுமல்ல மனிதர்கள் அனைவரும் "selfish " தான் என போகிற போக்கில் சொல்லி போகிறார்.
பெரியப்பா பாத்திரம் மிக புதிரானது. ஆஸ்டின் இல்லத்தின் நிஜ ஓனரை பெரியப்பா கொலை கூட செய்திருக்கலாம் என பேசிக்கொள்கிறார்கள். அவ்வளவு விலை உள்ள சொத்தை ஏன் ஆயிரம் ரூபாய்க்கு அவர் விற்க வேண்டும் என கேட்கும் போது பெரியப்பா சரியான பதில் சொல்லாமல் நழுவுகிறார்.
சுஜாதா அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் தான்: " எந்த பெரிய சொத்துக்கு பின்னும் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது“
ஆஸ்டின் இல்லம் "Must read " என்று சொல்ல மாட்டேன். ஆனால் சுஜாதாவின் தீவிர ரசிகர்கள் நிச்சயம் வாசிக்கலாம்
புத்தகம் பெயர்: ஆஸ்டின் இல்லம்
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூபாய் 30
திண்ணை 29 ஜனவரி 2012 தேதியிட்ட இதழில் வெளியானது
நல்ல பகிர்வு. இந்தப்புத்தகம் வாங்கி வைத்திருக்கிறேன். விரைவில் வாசிக்கிறேன்.
ReplyDeleteஅருமையான விமர்சனம். இந்த விமர்சனத்துக்காகவே நான் புத்தகத்தை வாங்கலாம் என்றிருக்கிறேன் அண்ணே.
ReplyDeleteம்ம்ம். சில சமயங்களில் இது சுஜாதாவோடது இல்லன்னு தோணினாலும், அந்த ஃப்ளோ நம்மளை கட்டிப்போட்டுடுது.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி..புத்தகம் வாசிக்க முயற்சி செய்கிறேன்.
ReplyDeleteபுத்தக விமர்சனம் நன்றாக இருக்கு.இந்த நாவல் படித்ததாக ஞாபகம் இல்லை. உடனே வாங்கி படிக்க வேண்டும். நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteஇன்னும் வாசிக்க ஆரம்பிக்கவில்லை. பெயரை பார்த்தவுடன் த்ரில்லரா இருக்கும்னு நினைச்சேன் :(
ReplyDeleteநல்ல விமர்சனம்...
ReplyDeleteதலைவரின் இந்தப் புத்தகம் படித்ததாய் நினைவில்லை....
நல்ல விமர்சனம்.
ReplyDeleteநன்றி.
அஸ்டின் "இல்லம்", மலை "மாளிகை", பாரதி இருந்த "வீடு"
ReplyDeleteதலைக்கு இருப்பிடம் மீது காதல் போல் உள்ளது?
இந்த நாவல் படித்ததாக ஞாபகம் இல்லை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல விமர்ச்சனம்... படிக்க வேண்டிய புத்தகங்கள் லிஸ்டில் இதையும் சேர்த்தாச்சு...
ReplyDeleteராமலக்ஷ்மி said...
ReplyDeleteநல்ல பகிர்வு. இந்தப்புத்தகம் வாங்கி வைத்திருக்கிறேன். விரைவில் வாசிக்கிறேன்.
***
நன்றி ராமலட்சுமி. வாசியுங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்
ஆரூர் மூனா செந்தில் said...
ReplyDeleteஅருமையான விமர்சனம். இந்த விமர்சனத்துக்காகவே நான் புத்தகத்தை வாங்கலாம் என்றிருக்கிறேன் அண்ணே.
***
நன்றி செந்தில்.
வித்யா said...
ReplyDeleteம்ம்ம். சில சமயங்களில் இது சுஜாதாவோடது இல்லன்னு தோணினாலும், அந்த ஃப்ளோ நம்மளை கட்டிப்போட்டுடுது.
***
நன்றி வித்யா
Kumaran said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..புத்தகம் வாசிக்க முயற்சி செய்கிறேன்.
***
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமரன்
RAMVI said...
ReplyDeleteபுத்தக விமர்சனம் நன்றாக இருக்கு.இந்த நாவல் படித்ததாக ஞாபகம் இல்லை. உடனே வாங்கி படிக்க வேண்டும். நன்றி பகிர்வுக்கு.
***
மகிழ்ச்சி. நன்றி ராம்வி
ரகு said...
ReplyDeleteஇன்னும் வாசிக்க ஆரம்பிக்கவில்லை. பெயரை பார்த்தவுடன் த்ரில்லரா இருக்கும்னு நினைச்சேன் :(
**
வாசியுங்கள் ரகு ! நன்றி !
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநல்ல விமர்சனம்...
தலைவரின் இந்தப் புத்தகம் படித்ததாய் நினைவில்லை....
***
நன்றி வெங்கட்
Rathnavel Natarajan said...
ReplyDeleteநல்ல விமர்சனம்.
நன்றி.
***
நன்றி ஐயா
ஒரு வாசகன் said...
ReplyDeleteஅஸ்டின் "இல்லம்", மலை "மாளிகை", பாரதி இருந்த "வீடு"
தலைக்கு இருப்பிடம் மீது காதல் போல் உள்ளது?
**
ஆமா வாசகன். நீங்க சொன்ன பின் தான் யோசிக்கிறேன். நன்றி
Kanchana Radhakrishnan said...
ReplyDeleteஇந்த நாவல் படித்ததாக ஞாபகம் இல்லை. பகிர்வுக்கு நன்றி.
***
நன்றி காஞ்சனா மேடம்
சங்கவி said...
ReplyDeleteநல்ல விமர்ச்சனம்... படிக்க வேண்டிய புத்தகங்கள் லிஸ்டில் இதையும் சேர்த்தாச்சு...
***
நன்றி சங்கவி. மகிழ்ச்சி
ஆஸ்டின் இல்லம் இந்தியா டுடே இதழில் தொடர்கதையாக வந்த குறுநாவல் இது. ஓர் சிறுவனின் கடைசி தினங்களை சுருக்கமாக உருக்கமாகச் சொல்லும் கதை.
ReplyDeleteகுறு நாவல் குறித்த மற்ற தகவலுக்கு நன்றி பால ஹனுமான்
ReplyDeleteஅவருடைய நாவல்கள் எத்தனை முறை படித்தாலும் அலுக்காத படைப்புக்கள் ! நன்றி நண்பரே !
ReplyDelete