Thursday, February 2, 2012

சொந்த காசில் அரசு பள்ளி விழா நடத்தும் பெரியவர்கள் -நெகிழ்ச்சி ரிப்போர்ட்

புழுதிவாக்கம் அரசு பள்ளிக்கு அவ்வப்போது சில உதவிகள் நாங்கள் செய்து வருவது நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். இதே பள்ளிக்கு எழுபது வயதுக்கும் மேற்பட்ட இரு பெரியவர்கள் தங்கள் சொந்த பணத்தில் ஒவ்வொரு வருடமும் பல போட்டிகள் நடத்தி பரிசுகள் தருகிறார்கள். இந்த வருடம் அந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. நெகிழ்வான இந்த விழா குறித்த படங்களையும் தகவல்களையும் உங்களுடன் பகிர்கிறேன்

பேச்சு போட்டியில் பேசும் பெண் ஒருவர் 
விழா அழைப்பிதழ் இதோ. கோல போட்டி, பேச்சு போட்டி,.ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, மாறுவேட போட்டி என எத்தனை வகை போட்டிகள் பாருங்கள் !! விழா இரு வாரம் ஞாயிறு அன்று நடக்கிறது !


********
முதல் நாள் காலை ஏழு மணிகெல்லாம் கோல போட்டி துவங்கி விட்டது. ஏராளமான குழந்தைகள் இதில் பங்கேற்க பள்ளியே வண்ண மயமான கோலங்களால் நிரம்பி விட்டது. இந்த போட்டியின் போது எடுத்த சில படங்கள் இதோ








கோல போட்டியை பார்வையிட்டு நடுவர்கள் மார்க் போடுகிறார்கள் 

*************************************

இதற்கடுத்து ஓவிய போட்டி நடந்தது. மூன்று அறைகளில் அந்த போட்டி நடந்தது, அப்போது எடுத்த வீடியோ இதோ. சில நல்ல ஓவியங்கள் மட்டும் க்ளோஸ் அப்பில் காண்பித்திருப்பேன்



ஓவிய போட்டியின் போது ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் பெயரை தப்பாக எழுதினான். நந்த குமார் என்ற தன் பெயரை Nanbakumar என்று எழுதி தந்தான். கேட்டால் சரியாய் நந்த குமார் என்கிறான். எழுதும் போது தான் தவறு. அவனை உட்கார வைத்து அவன் பெயரை அவனுக்கே புரிய வைக்க பத்து நிமிடம் ஆனது. இதுவரை எந்த ஆசிரியரும் இதை சுட்டி காட்ட வில்லை என்கிறான். இனியாவது தன் பெயரை ஒழுங்காய் எழுதுவான் என நம்புகிறேன்.

***************
இதன் பின் பேச்சு போட்டிகள் நடந்தன. அரசு பள்ளி மாணவர்கள் அதிகமாக கலந்து கொண்டாலும் பிற பள்ளி மாணவர்களும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். எனவே மற்ற பள்ளி மாணவர்களும் பேசினர். ஆங்கில போட்டியில் பிற பள்ளி மாணவர்கள் நன்கு பேசினர் எனினும் அரசு பள்ளி மாணவர்கள் பலர் இதில் கலந்து கொண்டு தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசியது நிறைவாய் இருந்தது.

விழாவிற்கு முக்கிய காரணியான மகாராசன் அவர்கள் மனைவி சென்ற மாதம் தான் இயற்கை எய்தினார். இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடத்தும் விழா என்பதால் இந்த ஆண்டும் நிறுத்தாமல் நடத்தி விட்டார். இவர் தமிழ் இலக்கிய மன்றம் என்கிற அமைப்பு வைத்துள்ளார். இதில் மாதா மாதம் பள்ளியில் ஞாயிறு மாலையில் சிறு விழா நடத்துகிறார் இதில் கவிஞர்கள் கலந்து கொள்ளும் கவியரங்கமும், பேச்சரங்கமும் நடக்கிறது. பள்ளி மாணவர்களும் பங்கேற்று தங்கள் திறமையை வளர்த்து கொள்ள இது உதவுகிறது. இதனை மாதா மாதம் தன் சொந்த செலவிலேயே நடத்துகிறார் திரு. மகாராசன்
விழாவை பல ஆண்டுகளாக நடத்தும் மகாராசன் பேசுகிறார் 
ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் நடக்கும் இந்த விழாவிற்கு திரு. முத்து ரெட்டி அவர்கள் தான் பரிசுகள் ஸ்பான்சர் செய்கிறார். மிக வயதானாலும் அவர் அனைத்து போட்டிகளையும் ஆர்வத்துடன் பார்த்தார். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களிடையே அருமையாக பேசினார்

விழாவிற்கு  தன் செலவில்   பரிசுகள் வழங்கும் முத்து ரெட்டி பேசுகிறார் 
ஆங்கில பேச்சு போட்டியை கேட்கும் நடுவர்கள் 

பேச்சு போட்டியை கேட்கும் மக்கள் 
*************
இதற்கடுத்த ஞாயிறு அன்று தமிழ் பேச்சு போட்டி, பாட்டு போட்டி . மாறுவேட போட்டி ஆகியவையும் பரிசளிப்பும் நடந்தன. அப்போது எடுத்த படங்கள் சில இதோ:

பாட்டு போட்டியில் பங்கேற்க காத்திருக்கும் சிறுவர்கள் :





பேச்சு போட்டியில் பேசும் மாணவி ஒருவர் 


பேச்சு போட்டியில் பேசும்  மாணவன்   


விழா காண வந்த கூட்டம் 

பாட்டு போட்டி 

மாறு வேட போட்டிக்கு ஆர்வத்துடன் பேர் தரும் மாணவர்கள் 

மாறு வேட போட்டி 

மாறு வேட போட்டிக்கு குடுகுடுப்பை வேடத்தில் வந்த மாணவன்

****************
மொத்தத்தில் ரிட்டயர்ட் ஆன காலத்தை மிக பயனுள்ள வகையில் மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் செலவிடும் இந்த பெரியவர்களின் சேவை பாராட்டுக்குரியது  !

தொடர்புடைய பதிவுகள்:


அரசு பள்ளியில் நெகிழ்வான நிகழ்ச்சி

அரசு பள்ளியில் நான் பேசியது என்ன

புழுதிவாக்கம் பள்ளியில் அதிரடியாய் ஒரு விழா

காக்னிசன்ட் நிறுவனம் செய்யும் சேவை

40 comments:

  1. Anonymous8:07:00 AM

    கண்டிப்பாக நீங்கள் உங்கள் சமூக சேவையின் மூலம் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே தெரிகிறீர்கள். தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்ற பொன்மொழிக்கேற்ப வாழ்கிறீர்கள். வாழ்த்துக்கள் அண்ணே.

    ReplyDelete
  2. படங்களும் பகிர்வும் சிறப்பு. (வீடியோ பார்க்கிறேன்.) குழந்தைகளோடு நேரம் செலவிடுவது இனிமையான ஒன்று. அவர்களது திறமைகளை ஊக்குவிக்கும் பெரியவர்களுக்கு வணக்கங்கள். உங்களுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  3. .// இதுவரை எந்த ஆசிரியரும் இதை சுட்டி காட்ட வில்லை என்கிறான்//

    சந்தோஷப்பட பதிவில் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் இதுதான் மனதை உறுத்துகிறது :((

    ReplyDelete
  4. சிறப்பான பதிவு. விழா ஏற்பாடு செய்து இத்தனை வருடங்கள் தொடர்ந்து நடத்தி வரும் பெரியவர்களுக்கு எனது வணக்கங்கள்.

    உங்களது இந்த சமூக சேவைக்கு எனது வாழ்த்துக்கள்,மோகன்குமார்.

    ReplyDelete
  5. சிறப்பான பதிவு பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. ஊருக்கு ஒருத்தர் இதுபோல் வேண்டும்...
    நந்தகுமார்- ஆசிரியரின் தரத்தை வெளிப்படுத்தியது. உங்களின் அக்கறையையும்...

    ReplyDelete
  7. அருமையான இடுகை மோகன். பல அரசுப் பள்ளிகளிகளின் நிலை இதுதான்.

    போன வருடம் இதே போல என் நண்பர் தஞ்சாவூர்க்கவிராயர் படித்த தஞ்சைக்கு அருகிலுள்ள மேல உளூர் எனும் கிராமத்து துவக்கப்பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு விழாவுக்கான செலவை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.

    அந்த ஆசிரியர்களின்-குழந்தைகளின் அன்பும் நெகிழ்ச்சியும் எங்களைக் கண்கலங்க வைத்தது.

    ReplyDelete
  8. நல்ல விஷயங்கள். இவ்வளவு ஆர்வத்துடன் செய்யும் பெரியவர்களைக் கண்டால் ஆச்சர்யமாக இருக்கீறது.

    //அவனை உட்கார வைத்து அவன் பெயரை அவனுக்கே புரிய வைக்க பத்து நிமிடம் ஆனது//

    கஆங்கில எழுத்து, "d" யாக, அதன் "mirror reflection"ஆன “b” யை நினைக்கிறான்போல. எனில், இது கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  9. பகிர்வு ரொம்ப நல்லாருக்கு. படங்களும் அருமை. குறிப்பாகக் கோலங்கள்.

    ReplyDelete
  10. பாராட்டுக்களும் வாழ்த்துகளும்....

    ReplyDelete
  11. சிறப்பான பகிர்வு.
    இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தி வரும் அந்த பெரியவர்களுக்கு என் வணக்கங்கள்.

    குழந்தைகளின் ஓவியங்கள் அருமை...பொங்கல் விழா, பாரத் மாதா.... போன்றவை.

    கோலங்களும் அழகாய் இருந்தது..

    ReplyDelete
  12. படங்களும் பகிர்வும் சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு மோகன்.

    பெரியவர்கள் இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்....

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. நல்லதொரு விழா, வாழ்த்துக்கள். குழந்தைகளுக்கு "b" மற்றும் "d" யில் எந்த பக்கம் சுழிப்பது என்ற குழப்பம் வருவது இயல்பே.

    எனக்கு ஒரு ஆசிரியர் மாணவர் ஜோக் ஞாபகம் வருகிறது. ஒரு மாணவன் "சிடி" என்று முடியும் எல்லா வார்த்தைகளையும் "கிடி" என்றே படித்துக் கொண்டிருந்தான். கடுப்பான அப்பா, ஆசிரியரிடம் சென்று என்ன சார் எல்லா "சிடி" என்றும் முடியும் வார்த்தைகளையும் "கிடி" என்றே உச்சரிக்கிறான். எலெக்ட்ரிசிடிய எலெக்ரிடிகிடி அப்படின்னும் யுனிவெர்சிடிய யுனிவெர்கிடின்னும் சொல்றான், நீங்க சொல்லி திருத்த மாட்டீங்களா? அப்படின்னு கேட்டார். அதுக்கு அந்த ஆசிரியர் "என்னங்க பன்றது அவனோட கெபாகிடியே அவ்வளவுதாங்க" என்று சொன்னார்.

    ReplyDelete
  16. >>விழாவிற்கு முக்கிய காரணியான மகாராசன் அவர்கள் மனைவி சென்ற மாதம் தான் இயற்கை எய்தினார். இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடத்தும் விழா என்பதால் இந்த ஆண்டும் நிறுத்தாமல் நடத்தி விட்டார்.

    மகாராசன் நன்னா இருக்கணும்!! (pun intended)

    ReplyDelete
  17. விழா காண வந்த அய்யாசாமி எங்கே ?

    ReplyDelete
  18. நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் ! நன்றி சார் !

    ReplyDelete
  19. ஆரூர் மூனா செந்தில் said...

    கண்டிப்பாக நீங்கள் உங்கள் சமூக சேவையின் மூலம் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே தெரிகிறீர்கள்.

    **
    நன்றி செந்தில்.

    ReplyDelete
  20. ராமலக்ஷ்மி said...

    படங்களும் பகிர்வும் சிறப்பு. (வீடியோ பார்க்கிறேன்.) குழந்தைகளோடு நேரம் செலவிடுவது இனிமையான ஒன்று.
    *******
    நன்றி ராமலட்சுமி. நீங்கள் சொல்வது உண்மை தான். குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது மிக இனிமையானது

    ReplyDelete
  21. ர‌கு said...

    .// இதுவரை எந்த ஆசிரியரும் இதை சுட்டி காட்ட வில்லை என்கிறான்//

    சந்தோஷப்பட பதிவில் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் இதுதான் மனதை உறுத்துகிறது :((

    ***
    உண்மைதான் ரகு. எனக்கும் அது உறுத்தவே செய்தது

    ReplyDelete
  22. RAMVI said...

    சிறப்பான பதிவு. விழா ஏற்பாடு செய்து இத்தனை வருடங்கள் தொடர்ந்து நடத்தி வரும் பெரியவர்களுக்கு எனது வணக்கங்கள்.

    **
    நன்றி ராம்வி

    ReplyDelete
  23. K.s.s.Rajh said...

    சிறப்பான பதிவு பாராட்டுக்கள்
    **********
    நன்றி ராஜா

    ReplyDelete
  24. குடந்தை அன்புமணி said...


    ஊருக்கு ஒருத்தர் இதுபோல் வேண்டும்...
    நந்தகுமார்- ஆசிரியரின் தரத்தை வெளிப்படுத்தியது. உங்களின் அக்கறையையும்...
    ***

    நன்றி குடந்தை அன்புமணி

    ReplyDelete
  25. சுந்தர்ஜி said...


    போன வருடம் இதே போல என் நண்பர் தஞ்சாவூர்க்கவிராயர் படித்த தஞ்சைக்கு அருகிலுள்ள மேல உளூர் எனும் கிராமத்து துவக்கப்பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு விழாவுக்கான செலவை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். அந்த ஆசிரியர்களின்-குழந்தைகளின் அன்பும் நெகிழ்ச்சியும் எங்களைக் கண்கலங்க வைத்தது.

    ***
    மிகுந்த மகிழ்ச்சி சுந்தர்ஜி. உங்கள் + நண்பரின் சேவை மகிழ்ச்சியை தருகிறது. நன்றி

    ReplyDelete
  26. ஹுஸைனம்மா said...

    //அவனை உட்கார வைத்து அவன் பெயரை அவனுக்கே புரிய வைக்க பத்து நிமிடம் ஆனது//

    கஆங்கில எழுத்து, "d" யாக, அதன் "mirror reflection"ஆன “b” யை நினைக்கிறான்போல. எனில், இது கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயம் என்று தோன்றுகிறது.


    **
    மிக சரியாக சொன்னீர்கள் ஹுஸைனம்மா. எனக்கு இது முதலில் தோன்ற வில்லை. வீட்டில் வந்து மனைவியிடம் சொன்னபோது அவர் தான் சொன்னார். b-க்கும், d- க்கும் குழம்புகிறான். இது வேறு பிரச்சனையாக இருக்கலாம் ( தாரே ஜமீன் பர் படத்தில் வரும் குழந்தை போல் dysleksia- ஆக இருக்குமோ என !) ஆம் எனில் அதை கவனித்து சரி செய்ய வேண்டியது இன்னும் முக்கியம் !

    ReplyDelete
  27. அமைதிச்சாரல் said...

    பகிர்வு ரொம்ப நல்லாருக்கு. படங்களும் அருமை. குறிப்பாகக் கோலங்கள்.

    **
    நன்றி அமைதி சாரல்

    ReplyDelete
  28. வித்யா said...

    பாராட்டுக்களும் வாழ்த்துகளும்....

    *******

    நன்றி வித்யா

    ReplyDelete
  29. கோவை2தில்லி said...

    சிறப்பான பகிர்வு.
    *********
    நன்றி கோவை டு தில்லி மேடம்

    ReplyDelete
  30. Kanchana Radhakrishnan said...

    படங்களும் பகிர்வும் சிறப்பு. பாராட்டுகள்.
    *****

    நன்றி காஞ்சனா மேடம்

    ReplyDelete
  31. வெங்கட் நாகராஜ் said...

    நல்ல பகிர்வு மோகன்.

    பெரியவர்கள் இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்....
    ***

    ஆம் வெங்கட் நன்றி

    ReplyDelete
  32. அமர பாரதி: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  33. BalHanuman said...

    விழா காண வந்த அய்யாசாமி எங்கே ?

    **
    அவர் தானே போட்டோ எடுத்தது.. அதான் இல்லை. மேலும் அவருக்கு Publicity பிடிக்காது (எவ்ளோ பெரிய பொய் !!)

    ReplyDelete
  34. திண்டுக்கல் தனபாலன் said...

    நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் ! நன்றி சார் !

    ***
    மகிழ்ச்சி நன்றி தனபாலன்

    ReplyDelete
  35. இயற்கை காட்சிகள், பொங்கல் படங்கள் என குழந்தைகளின் கற்பனை வளமும், ஈடுபாட்டுடன் வரையும் அழகும் வெளிப்பட்டுள்ளன வீடியோவில்:)! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  36. மிக மகிழ்ச்சி ! நன்றி ராமலட்சுமி

    ReplyDelete
  37. nikilavaiththa periyavar.. sirappaana pukaippadangkaludan nikalvai kondu vantha ungkalukkum vaalththukal... nanba mohan vaalka..

    ReplyDelete
  38. நல்ல பகிர்வு!

    ஓய்வுக் காலத்தை எப்படி இந்த சமூகத்திற்கு பிரயோசனமாக மாற்றலாம் என்பதற்கு உதாரணமான செயல்களை செய்து வருகிறார்கள். இந்த பெரியவர்களின் சேவை பாராட்டுக்குரியது!

    ReplyDelete
  39. பெரியவர்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.
    அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  40. என்னோட ஸ்கூல் பத்தி உங்க பதிவு மூலமாதான் அப்பப்போ தெரிஞ்சுக்கறேன் :-)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...