Friday, May 4, 2012

காந்திகிராமம், திண்டுக்கல் பயணம் நிறைவு பகுதி

பயண கட்டுரை முதல் பகுதி: சிறுமலை+திராட்சை தோட்டம் இங்கே

***
திண்டுக்கலுக்கு மிக அருகில் உள்ள ஊர் காந்தி கிராமம்



இந்த "மாதிரி கிராமம்" சிறுமலை அடிவாரத்தில், இரு ஓடைகளின் நடுவே, இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது.


காந்தியடிகளின் கிராமிய பொருளாதாரக் கருத்துக்களைப் பரப்பும் எண்ணத்தில் டாக்டர்.டி.எஸ்.சௌந்திரம் அம்மையார் 1947 ஆம் வருடம் காந்தி கிராமத்தை உருவாக்கினார். இதனை துவக்க அருகிலுள்ள சின்னாளபட்டி மக்கள் இடம் தந்து உதவினர். முதலில் இங்கு துவக்கப்பட்டது ஒரு தொடக்க பள்ளி. இன்று கல்லூரி, பல்கழை கழகம் என 200 ஏக்கர் பரப்பில் விரிவடைந்துள்ளது !

திண்டுக்கல்லில் விவசாயமே பிரதானம். மேலும் சில கம்பனிகளும் உள்ளது. நாகா, மார்டின் மில்ஸ் மற்றும் சௌந்தர ராஜா மில்ஸ் ஆகியவை இங்குள்ள பெரிய நிறுவனங்கள்.

" திண்டு + கல் " என்பது தான் திண்டுக்கல் ஆனது. இங்கு ஒரு பெரிய மலை உள்ளது. அதை தான் "திண்டு" "கல்" என்கின்றனர். இங்கு திப்பு சுல்தான் கோட்டை இருந்துள்ளது. இப்போது மலை மேல் ஒரு கோவில் மட்டுமே உள்ளது

சௌந்தர ராஜா மில்ஸ் ஓனர் பற்றி அந்த ஊர் காரர் சொன்ன தகவல் குஜாலானது. இவர் நடிகை கே. ஆர் விஜயாவுக்கு அந்த காலத்திலேயே ஏரோபிளேன் வாங்கி தந்தாராம். இதை சொல்லிட்டு "ஒரு நாளைக்கே கே. ஆர் விஜயாவுக்கு ஏரோபிளேன் வாங்கி தந்தவர்ன்னு ஊர் முழுக்க அவர் பிரபலம் சார்" என்றார் !

ஏரோபிளேன் வாங்கி தந்தவர் தன் அலுவலகத்தில் வைத்திருக்கும் ஏரோபிளேன்

***********
திராட்சை தோட்டங்கள் பார்த்து விட்டு திரும்பும் வழியில் ஞாயிறன்று பகலில் பள்ளி மாணவர்கள் நிறைய பேரை வைத்து கொண்டு ஒரு இளைஞர், கோவிலில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அனைவரும் ஒரே வகுப்பு மாணவர் போலலாமல் வெவ்வேறு வயதை சேர்ந்தவர்களாய் இருந்தனர். விடுமுறை நாள் பகலில் டிவி பார்க்காமல், கிரிகெட் விளையாடாமல் அப்படி என்ன செய்கிறார்கள் என கேட்டபோது கார்த்திக் என்கிற இளைஞர் அந்த ஊர் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஞாயிறும் பொது அறிவு வகுப்பு நடத்துகிறார் என்றும், ஆர்வம் உள்ளவர்கள் ஐ. ஏ.எஸ் படிக்க தூண்டுதலாக இதை செய்கிறார் என்றும் கூறினர். மின் வாரியத்தில் பணியாற்றிய கார்த்திக்கின் தந்தை பணியில் இருக்கும் போதே இறந்ததால் அவர் வேலை மகன் கார்த்திக்கு கிடைத்துள்ளது. மின் வாரியத்தில் வேலை செய்தவாறே, பகுதி நேரமாக மாணவர்களுக்கு இலவச பொது அறிவு வகுப்பு நடத்துகிறார் கார்த்திக். இப்படியும் இளைஞர்கள் உள்ளார்களே என்று மிக மகிழ்வாக இருந்தது
*****************
சின்னாள பட்டி நிஜமாகவே புடவைக்கு மிக புகழ் வாய்ந்த ஊர்.



இங்கு புடவை நெய்ய பட்டு கிடைக்கிறது. அவற்றை பார்க்கும் வாய்ப்பு இம்முறை கிடைக்க வில்லை.

ஆட்டு கூட்டம் ஒன்று இங்கே ரோடில் சென்றது அழகான காட்சியாய் இருந்தது.

 சின்னாள பட்டி பேருந்து நிறுத்தமும், ஆட்டு கூட்டமும் இந்த வீடியோவில் காணலாம்
 

 

**********
சின்னாளபட்டி அருகே ஒரு பாட்டியிடம் கொய்யா பழம் வாங்கினோம். பாட்டியின் காதை பார்த்ததும் காமிரா கைகள் துறுதுறு வென போட்டோ எடுத்தது. அருகில் நின்ற பெண்கள், " ஏய் இங்கே பாரு ..பாட்டியை போட்டோ பிடிக்கிறதை" என்றதும் பாட்டி முகத்தில் ஏகத்துக்கும் வெட்கம் !


***
அம்பாத்துரை பக்கத்தில் ஆத்தூர் என்று ஊர் இருந்தது. சேலம் பக்கம் அல்லவா ஆத்தூர் இருக்கும் என்று கேட்டால், ஆத்தூர் மட்டும் மூன்று உள்ளதாக கூறி அதிர வைத்தார் அங்குள்ளவர். சேலம் அருகில் ஒரு ஆத்தூரும், திண்டுக்கல் அருகே ஒரு ஆத்தூரும், இவை தவிர இன்னொரு ஆத்தூரும் உண்டாம் ! சரி தான் !

திண்டுக்கல் அருகே செல்லும் போதோ, கொடைக்கானல் செல்ல கோடை ரோடுக்கு செல்லும் போதோ அங்கு மிக அருகில் இருக்கும் இந்த சிறுமலையையும் அதனை சுற்றி உள்ள திராட்சை உள்ளிட்ட அழகான தோட்டங்களையும் ஒரு முறை கண்டு வாருங்கள் !

***
கட்டுரை அதீதம் ஏப்ரல் 13 இதழில் வெளியானது.

***
இன்று பிறந்த நாள் கொண்டாடும் எமது ஹவுஸ்பாஸை வாழ்த்தி வணங்குகிறேன் !

20 comments:

  1. காந்திகிராம, சின்னாள பட்டி புகழ் கஸ்தூரிபா ஆஸ்பத்திரி பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் சார்....

    இந்த ஆஸ்பத்திரி சின்னாளபட்டியில் இருந்தாலும் காந்திகிராமம் என்றே சொல்வாங்க. சுற்று வட்டார கிராம மக்கள் பிரசவத்திற்கு ரொம்பவே ராசியான மருத்துவமனை. ஆத்தூர், வத்திலகுண்டு, தாண்டிக்குடி, திண்டுக்கலை சுற்றியுள்ள கிராம மக்கள் தேடி வரும் மருத்துவமனை.
    இன்றும் இங்கு கௌசல்யா என்ற மருத்துவர் டீனாக உள்ளார். வயதானவர். அவர் ஆஸ்பத்திரியை மிகச் சிறப்பாக நிர்வகித்து வருகிறார். இங்கேயே மருத்துவ செவிலியர் படிப்பு உள்ளது. நிறைய மாணவிகள் படித்து அங்கேயே ட்ரைனிங் முடித்து சிறந்த செவிலியர்களாக உருவாக்கி உள்ளார். இங்கு ஊனமுற்றவர்கள், போலியோ அட்டாக் ஆனவர்களுகாக மாற்று செயற்கை கால் பொருத்தும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனடைந்தவர்கள் ஏராளம். அரவிந்த் கண் மருத்துவமனையின் கிளை இங்கு செயல்பட்டு வருகிறது. இதனால் சுற்று வட்டார மக்கள் மதுரைக்கு செல்லாமல் இங்கேயே சிகிச்சை மேற்கொள்ள முடிகிறது

    ReplyDelete
  2. சௌந்தர பாண்டியன் மில்ஸ் ஓனர் பற்றி அந்த ஊர் காரர் சொன்ன தகவல் குஜாலானது./////

    ஒரு திருத்தம்:
    சௌந்தர ராஜா மில்ஸ் என திருத்தவும்.

    சௌந்தர பாண்டியன் அல்ல..

    ReplyDelete
  3. இங்கு துவக்கப்பட்டது ஒரு தொடக்க பள்ளி. இன்று கல்லூரி, பல்கழை கழகம் என 200 ஏக்கர் பரப்பில் விரிவடைந்துள்ளது !////

    தம்பித்தொட்டம் மேல்நிலைப் பள்ளியும் காந்திகிராம நிர்வாகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளி, சின்னாளபட்டி பிரிவுக்கும், காந்திகிராமத்திற்கும் இடையே அழகர் தோப்பு என்ற இடத்திற்கு கொஞ்சம் உட்புறமாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  4. சின்னாளபட்டியில் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வரத ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் கோவிலில் பதினாறு அடி உயர ஆஞ்சநேயர் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

    ReplyDelete
  5. அம்பாதுரையிலும் ஒரு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அம்பாத்துரை டூ செம்பட்டி ரோட்டில் மேலக்கோட்டை பிரிவில் இந்த கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் ஆஞ்சநேயர் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே இக்கோவில் அமைந்திருப்பதே ஆகும்.
    வரத ஆஞ்சநேயர் கோவில் அமைக்கப்பெற்று சுமார் பத்து பதினைந்து வருடங்களே ஆகிறது.
    அதற்கு முன் சின்னாளபட்டி மக்கள் அனைவரும் படையெடுக்கும் கோவில் அம்பாதுரை கோவிலுக்கு.
    விசேஷ நாட்களில் ஏதோ சினிமா விட்டு மக்கள் கூட்டமாக செல்வது போல மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு செல்வதை என் வீட்டிலிருந்து பார்த்திருக்கிறேன்.
    நானும் எனது நண்பர்களும் இன்றும் ஒன்று கூடினால் அம்பாதுரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதை வழக்கமாகவே கொண்டுள்ளோம். ரொம்ப விஷேச ஆஞ்சநேயர் அவர்.

    ReplyDelete
  6. உங்கள் காந்திகிராம, திண்டுக்கல் பயண அனுபவ பதிவால் எங்கள் ஊர் பற்றி ஒரு பதிவிடலாம் என தோன்றுகிறது.

    பதிவர் சங்கவி "எனது ஊர்" என்ற தொடர் பதிவுக்கு அழைத்தது இப்போது ஞாபகம் வருகிறது.

    விரைவில் பதிவிடுகிறேன் சார்.

    ReplyDelete
  7. சின்னாள பட்டி நிஜமாகவே புடவைக்கு மிக புகழ் வாய்ந்த ஊர். ///

    இப்போ சூரத் போன்ற நகரங்களில் இருந்து பிளைன் கலர் சாரிஸ் வாங்கிவந்து விதவிதமான எம்பிராய்டரி, ஜமிக்கி வேலைப்பாடுகள் செய்து சேலையை உருவாக்குவதே பிராதானமாக உள்ளது. விலையும் ரொம்பவே குறைவு.

    ReplyDelete
  8. மிக்க நன்றி பிரகாஷ், உங்கள் ஊரை பற்றி நான் தவற விட்ட விஷயங்களை பகிர்ந்தமைக்கு.

    சௌந்தர ராஜா மில்ஸ் மாற்றி விடுகிறேன்

    நீங்கள் அவசியம் உங்கள் ஊர் பற்றி எழுதுங்கள் ,இன்னும் நிறைய தகவல் கிடைக்கும்

    ReplyDelete
  9. Anonymous11:37:00 AM

    >>இன்று பிறந்த நாள் கொண்டாடும் எமது ஹவுஸ்பாஸை வாழ்த்தி வணங்குகிறேன் !

    அப்படிப் போடுங்க அருவாளை... அய்யாசாமி பிழைக்கத் தெரிந்தவர் தான்...

    ReplyDelete
  10. படங்களும் தகவல்களும் அருமை.மீதி பகுதிகளையும் விரைவில் படித்து விடுகிறேன்.

    அய்யாசாமியோட ஹவுஸ் பாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நன்றாக இருக்கிறது, படங்களும், கட்டுரையும். வாழ்த்துகள் திரு மோகன்குமார்.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  12. // சின்னாளபட்டி அருகே ஒரு பாட்டியிடம் கொய்யா பழம் வாங்கினோம். பாட்டியின் காதை பார்த்ததும் காமிரா கைகள் துறுதுறு வென போட்டோ எடுத்தது. //

    பாத்து சார்.. அந்தப் பாம்படம் எக்குத் தப்பா காணாம போயிட்டா உங்கள சந்தேகப் படப் போறாங்க..!!

    ReplyDelete
  13. நன்றி ராம்வி

    ReplyDelete
  14. ஹிஹி நன்றி பாலஹனுமான்

    ReplyDelete
  15. மகிழ்ச்சி நன்றி பவள சங்கரி

    ReplyDelete
  16. மாதவா: ரைட்டு நன்றி

    ReplyDelete
  17. தம்பி எனக்கு மேலும் உங்க ஊரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசை. நானும் உங்க ஊர் பக்கம்தேன்!

    மொட்டையாண்டி பழனி பக்கம். உங்களை நான் இந்தியா வரும் போது சந்திப்பேன்--உங்களுக்கு நேரம் காலம் இருந்தால்.

    ReplyDelete
  18. நம்பள்கி said...

    உங்களை நான் இந்தியா வரும் போது சந்திப்பேன்--உங்களுக்கு நேரம் காலம் இருந்தால்.
    **********
    நிச்சயம் சந்திக்கலாம். சென்னை வரும்போது சொல்லுங்கள் சந்திப்போம் நன்றி

    ReplyDelete
  19. உங்கள் பயணம் தொடரட்டும்.

    மேடத்திற்கு எங்கள் வாழ்த்தையும் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  20. இனிய பயணக் கட்டுரை. பாம்படப் பாட்டி படம் அருமை.... :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...