இந்த வார - ரிலீஸ் சிங்கம் - 2
ஒரு படம் வெற்றியானால் அதே மாதிரி இன்னும் 4 படம் எடுக்கிற நாட்டில் - அதே படத்தை மறுபடி எடுக்கிறார்கள் ! டிரைலர் பார்த்தால் பழைய சிங்கம் படத்தை பார்க்கிற மாதிரியே இருக்கு !
முதல் பார்ட் வெளியிட்ட போது - டிரைலரில் - அனுஷ்கா முகம் சுழித்து கண் அடிக்கிற மாதிரி ஒரு காட்சி ஒளி பரப்பினர். இதிலும் அதே போல் முகம் சுழித்து சிரிக்கிறார் அனுஷ்கா !
திரை அரங்கம் போய் பார்க்கும் எண்ணம் நிச்சயமாய் டிரைலர் பார்த்தால் வரவே இல்லை !
மொபைல் தரும் இன்னல்கள்
புதிது புதிதாக வரும் கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கையை எளிதாக்குவது ஒருபுறம் என்றால், பல சிக்கல்களையும் அவை தந்து விடுகின்றன. குறிப்பாக மொபைல் போன் - நாம் அழைப்போர் எங்கிருந்தாலும் பேச முடியும் என்ற வசதியை தந்தாலும், அது தரும் பிரச்சனைகளை ஒரு பயணத்தில் அறிய முடிந்தது.
என் அருகே அமர்ந்திருந்தவர் போனில் பேசி கொண்டிருந்தார்:
" மூணு தடவை போன் பண்ணிட்டேன். ஏன் எடுக்கலை? "
" சைலன்ட்டில் போட்டிருந்தியா? நடுவில ஒரு தடவை பண்ணப்போ Engaged-ஆ இருந்தது? "
" உங்க அம்மா போன் பண்ணா சத்தம் கேட்கும்; நான் பண்ணா - போன் சைலண்ட்டா இருக்குமா? எப்படிடி அது? சொல்லு; பேசாம இருந்தா என்ன அர்த்தம் ? சொல்லு "
எனக்கு அந்த இருவரையும் நினைத்தால் வருத்தமாய் தான் இருந்தது. எத்தனை சந்தேகங்களையும், சண்டைகளையும் மொபைல் வர வைத்து விடுகிறது !
அழகு கார்னர்
ஆலியா பட் - ஹிந்தி நடிகை - அழகு கார்னரில் வெளியிட வேண்டுமென்பது மகளின் "நேயர் விருப்பம் "
படித்ததில் பிடித்தது : எதிர் நீச்சலடி !
ஒரு பெரிய அரசியல் தலைவர் - அவர் அடைந்த தோல்விகளை படித்தால் கண்ணை கட்டுது. ஒரு மனுஷன் இம்புட்டு அடியா வாங்குவார் !
1831-ல் வியாபாரத்தில் நஷ்டம் தோல்வி;
1832-ல் சட்டசபை தேர்தலில் தோல்வி;
1835-ல் காதலி மரணம் ;
1836-ல் நரம்பு சம்பந்தமான நோயால் பாதிக்கப்படுகிறார்
1838-ல் தேர்தலில் தோல்வி;
1848-ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி;
1855-ல் செனட் தேர்தலில் தோல்வி;
1856-ல் துணை அதிபர் தேர்தலில் மீண்டும் தோல்வி;
1861-ல் தேர்தலில் வென்று அமெர்க்க ஜனாதிபதியாகிறார் ஆபிரஹாம் லிங்கன் !
இன்று உலகம் அவர் 30 ஆண்டுகளாக அடைந்த தொடர் தோல்விகள் எதையும் நினைவில் கொள்ள வில்லை பாருங்கள் ! வெற்றியாளராக மட்டுமே அவர் அறியப்படுகிறார் !
அய்யாசாமி கார்னர்
மனிதருக்கு ஒவ்வொரு சீசனில் ஒரு கிறுக்கு பிடிக்கும். இப்போ மீட்டிங் கிறுக்கு பிடித்து அலைகிறார். மீட்டிங் - என்றால் வெறுமனே கலந்து கொள்ளும் மீட்டிங் அல்ல ! இவர் பேசுகிற அல்லது ஆர்கனைஸ் செய்கிற மீட்டிங். நெக்ஸ்ட் இரு வாரம் - கம்பனி லா - குவிஸ் - 2 - நடத்த ஒப்பு கொண்டுள்ளார். இதனால் புக்கும் கையுமாய் திரிகிறார்
வீட்டில் வெறுத்து போய் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க !
என்னா பாட்டுடே !

சினிமாவில் பாடல்கள் தேவையா என்று அவ்வப்போது தோன்றவே செய்யும் ஆயினும் இது போன்ற பாட்டுகள் தான், அவை தேவை என அழுத்தம் திருத்தமாய் சொல்கின்றன. ஒரே பாட்டில் ஒரு கதையின் போக்கே மாறி விடும் ! என்ன அற்புதமான காட்சியமைப்பு..!
அற்புதமாய் ஆட தெரிந்த பிரபு தேவா, அருமையாய் முகபாவம் காட்ட கூடிய காஜல், இனிய மெட்டு, அழகிய இரு குரல்கள் என எல்லா பக்கமும் சிக்சர் அடிக்கும் பாட்டு.
இப்பாடலின் நடனத்துக்கு பிரபு தேவாவிற்கு தேசிய விருது கிடைத்தது...
" இந்த உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு... " .......................
பதிவர் பக்கம்
பதிவுலகின் மிக மூத்த பதிவர்களில் ஒருவர் பழனி கந்தசாமி. நடுவில் ஒரு பிரச்சனையில் மனம் வருந்தி சில காலம் எழுதாமல் நிறுத்தி விட்டார். பின் நண்பர்கள் வேண்டுகோளை ஏற்று மீண்டும் எழுத ஆரம்பித்தார்
அண்மையில் ப்ளாக் பைத்தியம் பற்றி அவர் எழுதிய பதிவை வாசியுங்கள் ! மிக உண்மையாய் எழுதியுள்ளார். பதிவர்கள் இதனை வாசிக்கும்போது, இந்த வியாதி தனக்கு எந்த அளவில் இருக்கு என யோசிக்கலாம் !

இப்போ மீட்டிங்க் மேனியா பிடிச்சுட்டுதா!? எதாவது ஒரு மேனியா உங்க மேனியை பிடிச்சுட்டு இருக்கும் போல இருக்கு!!
ReplyDeleteநானும் அந்த பதிவ படிச்சேன் சூப்பர் \\\\\\\
ReplyDeleteமொபைல்லால் பயன் இருந்தாலும் அதனால் ஆபத்து அதிகமானது என்பதே உண்மை
ஆமாம் மோகன்-ஜி ! நான் கூட அந்த ட்ரைலர் பார்த்தப்ப அதேதான் நினைச்சேன், ஒரு வேளை நாம மட்டும்தான் அப்படி நினைக்கறோமோ அப்படின்னு நினைச்சிட்டன்! நன்றி !
ReplyDeleteஎல்லாமே அருமை...
ReplyDeleteசிங்கம்-2 டிரைலர் நானும் பார்த்தேன்...
சுவையான பகிர்வு! திரு பழனி கந்தசாமியின் அந்த பதிவு படித்து ரசித்தேன்! நன்றி!
ReplyDeleteவெண்ணிலவே.. பாடல், இசை, காட்சி அமைப்பு, நடனம் என எல்லாவற்றிலும் அசத்தலானது!
ReplyDeleteநம்ம அனுஷ்காதானே மோகன்... பரவாயில்லை விடுங்க...
ReplyDelete'தோல்வி நிலையென நினைத்தால்' பாடல் நினைவுக்கு வருகிறது லிங்கன் நியூஸ் படித்தால்!
பிரபு தேவா டான்ஸ்...
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி மகிழ்ச்சி !
ReplyDeleteசிங்கம் 2 - இந்த அளவு கேவலமான ட்ரைலர் பார்த்ததே இல்லை! ட்ரைலரெ இப்படின்னா படத்தை நினைச்சாவே பயமா இருக்கு!
ReplyDelete@ mohan kumar - singam 2 parkka vendam-nu annadha sollittar-pa.. oru payalum poga kudadhu theatre pakkam.. ama.. nee paesu thala :)
ReplyDelete@ bandhu - confirm-a nee thoppai or thalai vali kosti aalu thaan :)
ReplyDelete//திரை அரங்கம் போய் பார்க்கும் எண்ணம் நிச்சயமாய் டிரைலர் பார்த்தால் வரவே இல்லை !//
ReplyDeleteTrailer is irritating :(..
நாங்க எல்லாம் குடம் தண்ணி ஊத்தி விட்டுட்டோம்.அங்க தண்ணீ தெளிச்சுதான விட்டாங்க!!!
ReplyDeleteபடம் வந்தபோது சக்கைபோடு போட்ட பாடல். எத்தனை தடவை பார்த்திருப்போம்.
ReplyDeleteவெண்ணிலவே பாடல் நானும் ரசிக்கும் பாடல்.....
ReplyDeleteஅய்யாசாமி - :)